Thursday, August 05, 2010

' சம்சுங் ' இன் ' கலெக்சி டெப் '

Virakesari.
பிரபல இலத்திரனியல் உபகரண மற்றும் கையடக்கத்தொலைபேசி நிறுவனமான ' சம்சுங் ' புதிய டெப்லட் கணனியொன்றை வெளியிடவுள்ளது.

அந் நிறுவனம் தான் வெளியிடவுள்ள டெப்லட் கணனிக்கு ' கலெக்சி டெப் ' என பெயரிட்டுள்ளது.

இக் கணனியின் உத்தியோகபூர்வ அறிமுகம் இம் மாதம் 11ம் திகதி இடம்பெறுமெனவும் இவ்வருட 2ம் காலண்டு நிறைவுக்குள் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கணனியானது கூகுளின் அண்ட்ரொயிட் ' புரோயா ' இயங்குதளத்தினை கொண்டதாகும்.

7 அங்குல தொடுந்திரை மற்றும் 1.2GHz சம்சுங் ' ஹம்மிங் பேர்ட் ' புரசஸரை கொண்டுள்ளது.

16 ஜிபி உள்ளக சேமிப்பு வசதியை கொண்ட இக் கணனியில் பிளேஷ் உடன் கூடிய 3.2 மெகா பிக்ஸல் கமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வீடியோ காண்பிரண்ஸ் மற்றும் ' வை-பை ' வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

வளர்ந்துவரும் கணனிச் சந்தையில் ' டெப்லட்' கணனிகளின்' ஆதிக்கம் அதிகமாகவுள்ளதாகவும் இதன் விற்பனை வீதமானது நோட் புக் கணனிகளின் விற்பனையை பின் தள்ளியுள்ளதாகவும் சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அப்பிள் நிறுவனம் ' ஐ பேட் ' எனப்படும் தனது டெப்லட் கணனிகளை உலகளாவியரீதியில் 3.7 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந் நிறுவனத்தின் ' கலெக்சி ' வகை கையடக்கத் தொலைபேசிகள் மிகவும் பிரபலமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment