Wednesday, August 18, 2010

காத்தான்குடியில் மின்சாரம் துண்டிப்பு

Kattankudi Web Community.
காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கும் காத்தான்குடி உப மின் விநியோக நிலையத்தின் பிரதான மின் வயர் தீப்பற்றியதில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17.8.2010) மாலை 8 மணியளவில் காத்தான்குடி உப மின் விநியோக நிலையத்திலுள்ள மின் வயர் தீப்பற்றியதில் காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் காங்கேயனோடை ஆகிய பிரதேசங்களிலுள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சிலரின் நாசகார செயலினால் இம் மின் வயர் தீப்பற்றியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

தீயை அணைத்த போதிலும் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதை சரி செய்யும் முயற்சியில் இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு
வருவதாக இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் பொறியியலாளர் ஏ.எல். மாஹீர் தெரிவித்தார்.

ரமழான் நோன்பின் இரவு நேர தொழுகைகளில் ஈடுபட்டு வரும் பள்ளிவாயல்கள் சிலவற்றிலும் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment