Thursday, September 02, 2010

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஆரையம்பதி மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை.

Kattankudi Web Community.
அன்மைக் காலமாக ஆரையம்பதி பிரதேசத்தில் காத்தான்குடி முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பல்வேறு விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு நாம் மிக வேதனையும், கவலையும் அடைகின்றோம்.

ஆரையம்பதிப் பிரதேசத்தில் அன்மையில் நடாத்தப்பட்ட காத்தான்குடி மக்களுக்கெதிரான அடையாள உண்னாவிரதம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த துண்டுப் பிரசுரங்கள் அனைத்துமே எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்று தமிழ் சகோதரர்களும்; ஒருவரை ஒருவர் புரிந்து இன ஐக்கியத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்துவரும் இன்றைய சூழ் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக அமையாது என நாம் கருதுகின்றோம்.

கடந்த கால போர்ச் சூழலில் தமிழ் சகோதரர்கள் அனுபவித்தது போன்று காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களும் பல்வேறு இழப்புக்களையும், துயர்களையும் சந்தித்தவர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

காத்தான்குடிப் பள்ளிவாயல் படுகொலை, காத்தான்குடி முஸ்லிம்கள் ஹஜ் இருந்து வரும்போது அம்பலாந்துறையில் வைத்துக் கடத்தப்பட்டமை, சிகரம், கீச்சான்பள்ளம், ஒல்லிக்குளம், மன்முனை, பாலமுனை, காங்கேயனோடை கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து மீளக் குடியமர்ந்தமை போன்ற பல்வேறு விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்வேறு காணிகள் இன்னும் அடாத்தனமாக பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருவதையும் அவை அரச காணிகள் என்று அரச அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுவதை நாம் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்நிலையில் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து இன ஐக்கியம், நல்லுறவு, ஒற்றுமை என்பவற்றைக் கருத்திற் கொண்டு இரண்டு சமூகங்களும் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையில் காங்கேயனோடை வீட்டுத்திட்டத்தை காரணம் காட்டி தமிழ் முஸ்லிம் உறவுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்காக நிர்மானிக்கப்படவுள்ள ஈரான் நாட்டின் உதவியிலான வீட்டுத்திட்டத்தை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தம் மற்றும் சுனாமி போன்;ற அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள ஏழை மக்களுக்கு முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் இவ்வீட்டுத் திட்டத்தை அமைத்து அதே பிரதேசத்திலுள்ளவர்களுக்கு அவ்வீடுகளை வழங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவித்து, மன்முனைப்பற்று பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனங்களை புண்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே, எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு பிரதேசங்களிலும் இருக்கின்ற சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றாக கூடி கலந்தாலோசித்து அப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்கு எதிரான தேவையற்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து பொது மக்களிடையே காணப்படும் சமூக நல்லுறவை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

அல்-ஹாஜ். எஸ்.எச்.எம். இஸ்மாயில்
தலைவர்

அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். ஸபீல் (நளீமி)
செயலாளர்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி

Post Comment

Friday, August 27, 2010

காத்தான்குடியில் காலாவதியான பொருட்கள் கண்டு பிடிப்பு.

Virakesari.
காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த பெருந்தொகையான காலாவதியான பொருட்களை காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வியாழக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

பொது மக்கள் சிலர் வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொதுச்சுகாதர வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான பசீர் மற்றும் றஹ்மத்துல்லா ஆகியோர் ஸத்தனத்திற்கு சென்று இப்பொருட்களை கண்டெடுத்து கைப்பற்றியுள்ளனர்.

காலாவதியான பெருந்தொபை;பொருட்களான சிறுவர்களுக்கான பிஸ்கட் வகைகள் மற்றும் கேக், பால்மா பக்கட்டுக்கள் மற்றும் சில மருந்துப்பொருட்கள் என்பவற்றை இதன் போது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் மினி கோப் சிற்றியின் முகாமையாளின் வீட்டிலேயே இக்காலாவதியான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Post Comment

Thursday, August 26, 2010

காத்தான்குடி விவசாயிக்கு தேசிய மகுடம்

Kattankudi Web Community.
THE CEYLON CHAMBER OF COMMERCE இன் NATIONAL AGRIBUSINESS COUNCIL இனால் நடாத்தப்பட்ட 2010ம் ஆண்டிற்கான AG-BIZ2010 கண்காட்சிக்கு இணைவாக நடைபெறும் விவசாய பெருமக்களுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் நிகழ்வு கடந்த 22.08.2010 அன்று பி.ப.3.00மணிக்கு சிறிமாவோ பண்டார நாயக்க நாபகார்த்த மாணாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 2010க்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய விருதுக்கான போட்டியில் முதலாவது இடத்தினை எமது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் ஷரீப் பெற்றுக்கொண்டார்.

இதற்கான சான்றிதழையும், விஷேட விருதிணையும் விவசாய பிரதி அமைச்சர் கௌரவ J.புஷ்பகுமார அவர்கள் வழங்கி வைத்தார்.

காத்தான்குடி பாலமுனை கிராமத்தில் பொறியியலாளர் M.M. பளுலுல் ஹக் அவர்களின் முழுமையான பங்களிப்புடனும் ஆலோசனைகளுடனும் மேற்கொள்ளப்பட்டு வரும் ”றையான் பார்ம்” செயற்த்திட்டத்திற்கூடாகவே இக்கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இச்செயற் திட்டத்தின் பிரதான இயக்குனர்களாக சகோதரர் ஷரீப் அவர்களும் சகோதரர் றிபாய்தீன் அவர்களும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Comment

Wednesday, August 25, 2010

ஆரையம்பதி-காத்தான்குடி எல்லைப் பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்துக்கும் பாதகமின்றித் தீர்வு

Kattankudi Web Community.
கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக்களும் கெளரவத்துடன் வாழும் நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் வள நிலையத்தினை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நெக்டப் திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபா செலவில் மேற்படி நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சமூக ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே சமூக ஒற்றுமை மேம்பாட்டை பாதிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது. இதில் விழிப்பாக அனைவரும் நடந்துகொள்ளவேண்டும். சமூக வன்முறைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆரையம்பதி, காத்தான்குடி எல்லைப் பிரச்சினை சுமார் 60 வருடங்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் பிரச்சினையாகும். இந்த எல்லைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளேன். எந்தவொரு சமூகத்துக்கும் பாதக மில்லாமலும் இரு சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் தீர்த்து வைக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

Post Comment

Tuesday, August 24, 2010

காத்தான்குடி படுகொலைகளுக்காக சம்பந்தன் மன்னிப்புக் கோருகிறார்

Kattankudi Web Community.
காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட் டிருந்த 103 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப் பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ் லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

இது ஒரு தவறுதான். 20 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருவதில் எமக்கு எவ்வித தயக்க மும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை. அப்படியான ஒன்றாகத்தான் இப்படு கொலை உள்ளது.

Post Comment

Sunday, August 22, 2010

மட்டக்களப்பு நகரில் பாரிய டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம்

Kattankudi Web Community (Photo also attached).

மட்டக்களப்பு நகரில் 21.8.2010 பாரிய டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானம் என்பன இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு பொலிசார் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை மட்டக்களப்பு சுகாதார அலுவலகம் மட்டக்களப்பு சிறைச்சாலை என்பன இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தனர்.

டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம் மட்டக்களப்பு மாநகர சபை முனபாக ஆரம்பமாகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைவரை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை மேயர் மற்றும் பிரதி மேயர் பதில் ஆணையாளர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் தாதி மாணவர்கள் இவ்விலப்புனர்வு ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.

Post Comment

Saturday, August 21, 2010

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கையிலுள்ள வதிவிட பிரதி நிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

Kattankudi Web Community (Photo also attached)

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கையிலுள்ள வதிவிட பிரதி நிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (20.8.2010) மாலை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்கள் சம்மேளனக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பு சம்மேளன காரியாலயத்தில் அதன் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் இன்று மாலை 4.30மணிக்கு இடம்பெற்றது.


சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி அலி நறாக்கி மற்றும் அதன் வெளிக்கள இணைப்பாளர் திருமதி டினின் முறான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

யுத்தத்திற்கு பின்னரான தற்போதய நிலை மற்றும் காணிப்பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகள் பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகளிடம் இச்சந்திப்பின் போது கேட்டறிந்து கொண்டனர்.

காத்தான்குடி மக்களுக்குள்ள காணிப்பிரச்சினையுடன் குப்பைகள் கொட்டுவதிலுள்ள பிரச்சினை மற்றும் அன்மைக்காலமாக எதிர் நோக்கும் சிக்கல்கள் என்பவற்றையும் சம்மேளன பிரதி நிதிகள் இதன்போது தெனிவாக எடுத்துக்கூறினர்.

மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள காணி தொடர்பான பிரச்சினைகளை புள்ளிவிபரங்களுடன் அறிந்துகொண்டு அது தொடர்பாக அரசாங்கத்துடனும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இந்த விடயங்களை ஆராய்ந்து வெளிக்கொண்டு வருவதே தமது முதல்கட்ட நடவடிக்கை என பிரதி வதிவிட பிரதிநிதி அலி நராஜ் தெரிவித்தார்.

சம்மேளன தலைவர் இஸ்மாயில் ஹாஜியார்ருடன் சம்மேளன செயலாளர் சபீல் நழீமி மற்றும் அதன் அவசர குழு உறுப்பினர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.

Post Comment

Thursday, August 19, 2010

காத்தான்குடி இமாம்கள் முஅல்லிம்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு உலர் உணவு

Kattankudi Web Community (photo also attached)
இலங்கைக்கான குவைத் நாட்டின் முன்னால் தூதுவரின் துணைவியார் பத்ரியா இஜ்ஜி அவர்களிடம் சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்த வேண்டுகோளிற்கமைய காத்தான்குடி இமாம்கள் முஅல்லிம்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு உலர் உணவு நேற்று (18.08.2010) வழங்கப்பட்டது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஊடாக இந்த உலர் உணவு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் அனாதைகள் இல்ல மஸ்ஜித்தில் நேற்று மாலை 5.00 மணிக்கு இடம் பெற்ற இந் நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் மௌலவி வாஜித் உட்பட பிரதி அமைச்சரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Post Comment

Wednesday, August 18, 2010

சவூதி - டுபாய் பேரீச்சம்பழங்கள் கிழக்கில் விநியோகம்


Virakesari.
நோன்பு திறப்பதற்கு வசதியாக, சவூதி அரேபியா மற்றும் டுபாய் அரசாங்கங்கள் வழங்கிய பேரீச்சம்பழங்கள் கிழக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனக் காரியாலயத்தில் வைத்து பிரதேச பள்ளிவாயல்களுக்கான விநியோக வைபவம் நடை பெற்றது.

இதன்போது, சம்மேளனத் தலைவர் இஸ்மாயில் மற்றும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் சபீல் மற்றும் பொருளாளர் பசீர் ஆகியோர் பேரீச்சம்பழப்பெட்டியை பள்ளிவாயல் நிர்வாகத்திடம் வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.

பள்ளிவாயல் சம்மேளனத்தினூடாக காத்தான்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள் கிராமங்களிலுமுள்ள பள்ளிவாயல்களுக்கு பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டன.

Post Comment

காத்தான்குடியில் மின்சாரம் துண்டிப்பு

Kattankudi Web Community.
காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கும் காத்தான்குடி உப மின் விநியோக நிலையத்தின் பிரதான மின் வயர் தீப்பற்றியதில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17.8.2010) மாலை 8 மணியளவில் காத்தான்குடி உப மின் விநியோக நிலையத்திலுள்ள மின் வயர் தீப்பற்றியதில் காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் காங்கேயனோடை ஆகிய பிரதேசங்களிலுள்ள பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சிலரின் நாசகார செயலினால் இம் மின் வயர் தீப்பற்றியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

தீயை அணைத்த போதிலும் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதை சரி செய்யும் முயற்சியில் இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு
வருவதாக இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் பொறியியலாளர் ஏ.எல். மாஹீர் தெரிவித்தார்.

ரமழான் நோன்பின் இரவு நேர தொழுகைகளில் ஈடுபட்டு வரும் பள்ளிவாயல்கள் சிலவற்றிலும் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Post Comment

Friday, August 13, 2010

மட்டு. முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு நோற்க வசதி

Virakesari.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மட்டு. சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ. கீத் சிறிபண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு நோற்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் தொழுகையில் ஈடுபடுவதற்குமான விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post Comment

Wednesday, August 11, 2010

ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு


Kattankudi Web Community.
ஹிஜ்ரி 1431 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.27 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கிறது.அவ்வாறு தலைப்பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 0112432110, 0112434651, 0115234044, 0777366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post Comment

Thursday, August 05, 2010

மட்டக்களப்பில் அம்பியிட்டிய சுமணரத்தின தேரோ சாகும் வரையிலான உண்ணாவிரதம்

Kattankudi Web Communty.

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராம பௌத்த விகாரையையும் உடனடியாக புனரமைத்து தருமாறு கேட்டு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பியிட்டிய சுமணரத்தின தேரோ இன்று (5.8.2010 வியாழக்கிழமை) காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை 6 மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இவரது உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளை புனரமைத்து தருமாறு அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டும் கோரிக்கைள் விடுத்தும் இன்னும் அரசாங்கம் அவற்றை செய்யாததால் நான் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தெரிவித்தார்.

இவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Post Comment

Tuesday, August 03, 2010

காத்தான்குடியில் இன்று ஷுஹதாக்கள் நினைவு தினம்

Kattankudi Web Community


காத்தான்குடியில் இன்று (3.8.2010) ஷுஹதாக்கள் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

03.08.1990 அன்று காத்தான்குடி 01 மீரா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாயலில் இஷா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள், LTTE பயங்கரவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தினம் ஷுஹதாக்களின் நினைவாக ஷுஹதாக்கள் தினமாக வருடாந்தம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

20வது ஆண்டு ஷுஹதாக்கள் தினத்தையொட்டி இன்று காலை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாயலில் குர்ஆன் ஓதுதல் மற்றும் பிராத்தனை என்பன இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் ஷுஹதாக்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் மீரா பள்ளிவாயலினால் நேற்று மாலை வழங்கப்பட்டன.

Post Comment

Monday, August 02, 2010

காத்தான்குடி நகர சபை-ஆரையம்பதி பிரதேச சபை பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசர கலந்துரையாடல்

Kattankudi Web Community.


காத்தான்குடி நகர சபைக்கும் ஆரையம்பதி பிரதேச சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இப்பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பது என இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ‘தமிழ்மிரர்’ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அவரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையானது ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அத்திமீறி அதிக்கம் செலுத்திவருவதாக குற்றம் சுமத்தி ஆரையம்பதி, பிரதேச சபை தலைவி திருமதி கிரிஸ்டினா சாந்தன் உட்பட பலர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இக்குற்றச்சாட்டை காத்தான்குடி நகர சபை மறுத்து வருகின்றது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே அவசர கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றது. இந்த அவசர கூட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, மாகாண சபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மற்றும் கே.எல்.எம்.பரீட் ஆரையம்பதி பிரதேச சபை தலைவி மற்றும் உறுப்பினர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மிக விரையில் இது பிரதேசங்களின் எல்லைகளை நில அளவை திணைக்களத்தின் உதவியோடு நிர்ணயிப்பது. அதன் பிற்பாடு விரும்பியோ விரும்பாமலே எல்லை நிர்ணயத்தை ஏற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு ஏனைய பிரச்சினைகளை இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் சுமுகமான முறையில் தீர்ப்பது என தீர்மானிக்கப்பட்டதாக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த அவசர கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை கலந்து கொள்ளவில்லை.

Post Comment

Friday, July 30, 2010

மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் கிறிஸ்ட்டினா தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

Kattankudi Web Community.


மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் கிறிஸ்ட்டினா தலைமையில் இன்று காலை (30.7.2010) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மன்முனைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை அத்து மீறும் நடவடிக்கையினை கண்டித்து மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் பொது மக்கள் சிலரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.


காத்தான்குடி நகர சபை மன்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் அத்து மீறி பல்வேறு காணி சுவீகரிப்பு நடவடிக்கைளை மேற்டிகாண்டு வருவதாக இவர்கள் குற்றம் சாட்டு கினறனர். இது தொடர்பான மஜரொன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கையளித்துள்ளனா.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வையிடம் கேட்ட போது அவ்வாறான அத்து மீறல்கள் எதையும் நாம் மேற்கொள்ள வில்லையெனவும் எமது காணியிலேயே அபிவிருத்தி நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் எங்களது காணியை இவர்களின் காணியென பொய்யாக உரிமைகூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Post Comment

Monday, July 26, 2010

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பள்ளிவாயல் றஹ்மானி ஹஸரத்தினால் திறப்பு

Kattankudi Web Community

மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலின் தலைவரும் மட்டக்களப்பு மஸ்லிம் வர்த்தகர் சங்கத் தலைவருமான பிலால் ஹாஜியாரின் வேண்டு கோளின் பேரில் கொழும்பிலுள்ள தனவந்தர் யாஸீன் பாய் என்பவரின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட இப்பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தினால் திறந்து வைக்கப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டது.


இவ்வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளன பிரதி நிதிகள், உலமாக்கள் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கித்சிறி பண்டார உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள மஸ்லிம் கைதிகள் தொழுவதற்கென இப்பள்ளவாயல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆறு இலட்சம் ரூபா செலவில் இப்பள்ளிவாயல் நிர்மானிக்கப்பட்டுட்டுள்ளதாக பிலால் ஹாஜியார் தெரிவித்தார்.

Post Comment

Friday, July 16, 2010

களுவாஞ்சிக்குடி வங்கியில் முப்பது லட்சம் கொள்ளை

நன்றி:Kattankudi

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று பிற்பகல் அரச வங்கியொன்றிற்கு மற்று மொரு அரச வங்கியிலிருந்து அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 30 லட்சம் பணம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்குரிய பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட வங்கி அதிகாரிகள் இருவர் சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள இலங்கை வங்கிக் கிளையிலிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருக்கையில் எதிர் கொண்’ட மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் துப்பாக்கி தாரிகளினால் வழி மறித்து பணம் பறித்துச் செல்லப்டப்டுள்ளதாக இச் சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

இச் சம்பவத்தையடுத்து களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொலிசார் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை மேற் கொண்டிருந்தாலும் இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைதாகவில்லை. சந்தேக நபர்களும் எவரும் கைதாகவில்லை என பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 20 வருடங்களின் பின்னர் வங்கிக் கொள்ளையொன்று இடம்பெற்ற சம்பவம் இது என கருதப்பட்டாலும் வடக்கு கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது வங்கிக் கொள்ளைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post Comment

Thursday, July 15, 2010

காத்தான்குடி புதிய வைத்தியசாலை திறப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் நோர்வே நாட்டு செஞ்சிலுவை சங்கத்தின்
உதவியோடு புதிய வைத்தியசாலை ஒன்று நவீன வசதிகளுடன் கட்டி நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைத்தியசாலை கடந்த 26.12.2004 இல் ஏறடபட்ட சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந் நிகழவில் நோர்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நாயகம்,மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த பல பிரமுகர்களும் சுகாதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நோர்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நாயகம் போர்ச் பிறவுண்டி, மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர், இலங்கை செங்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் வசந்தராசா, காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவின் உப தலைவர் ராபி, காத்தான்குடி வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நசுறுதீன் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்வைபவம் இலங்கை செஞ்சிலுசை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் அப்துல்லா தலைமையில் நடை பெற்றது.இந்த வைத்தியசாலை நிர்மாணிப்பு பணிக்காக 616 மில்லியன் ருபா செலவிடப்பட்டதும் சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயம்.

Post Comment

Wednesday, July 14, 2010

மட்டு. - கல்முனைப் பாதையில் பாரிய போக்குவரத்துத் தடை


virakesari

மட்டக்களப்பு –கல்முனை நெடுஞ்சாலையில் பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. பாதையின் நடுவே பாரிய பாரந்தூக்கும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்துள்ளமையே இதற்குக் காரணம் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாதை அபிவிருத்திப் பணிகளுக்காக காத்தான்குடியில் 39 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வரவேற்பு நுழைவாயிலை உடைத்துக் கொண்டிருந்தபோதே மேற்படி இயந்திரம் உடைந்து விழுந்துள்ளது.

இதனால் பாரிய வாகனப் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனை - மட்டக்களப்பு பாதையில் மாற்று வழி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post Comment