Saturday, December 31, 2011

கொண்டாடவா புது வருடம்? (புதுவருட சிந்தனை )


ஏன் புது வருஷம்? எல்லாமே புதுசா மாறுமா அப்பா? இல்லடா கண்ணா... வருஷம் மட்டும் தான் மாறும்.
காலைல கடைக்கு சாப்பிட போன எனக்கு, காதில் விழுந்த மகன் அப்பா சம்பாஷனை. பையன் படு உசார் போல.. இப்பவே இப்படி யோசிக்கிறான் எண்டு நினச்சிட்டு வந்து, இத வச்சே நம்ம ஒரு மெசேஜ் சொன்ன என்ன எண்டு யோசிச்சன். விடுங்க பாஸ் நம்ம சுட்டது பையனுக்கு தெரியவா போகுது.

நானும் மாறப் போறது இல்ல, நீங்களும் மாறப் போறது இல்ல, வருஷம் மட்டும் மாறிக்கிட்டே போகுது. அதுவும் பெரிய மாற்றம் எதுவும் இல்ல 2011 இல் கடைசியில் இருக்கும் 1 இரண்டாக (2) மாறப் போகிறது. அவ்வளவுதான். இதில் என்ன சந்தோசம் என்பது மட்டும் புரியாப் புதிர்தான். அது சரி, அது தெரிஞ்சாதான் நான் ஏன் இப்படி புலம்ப போறேன்?

வருஷ தொடக்கத்தில் நல்லது ஒன்றை எடுத்து, தீயது ஒன்றை விட்டு விட வேண்டுமாம். யார் சொன்னது எண்டு ஆராய்ச்சி நடத்த நேரமில்லை. சாரி பாஸ். ஆனா இங்க என்ன நடக்குது? வருஷ ஆரம்பமே தீமைக்குதான் வழிவகுக்குது. உடன்பாடு இல்லாதவர்கள் நம்ம பாப்பைய்யா கிட்ட வேணும்னா பட்டிமன்றம் நடத்த சொல்லி முடிவெடுப்பம். இப்போ கொஞ்சம் முழுமையா வாசிச்சி பாருங்கோ.

வீண்விரயம், பொழுதுபோக்கு, மது, மாது, கேலிக் கூத்துகள்.... நன்மைகளா இவைகள்?

நம்ம கவிஞன் ஒருவன் அழகா சொன்னான் மத்தவன சந்தோசப்படுத்தி பாரு... நிறைவான சந்தோசம் அதுதான் எண்டு அவன் பேரு..... மறந்து போச்சு விடுங்க. நமக்கு அவன் பெயரும் மறந்து போச்சு அவன் சொன்னதும் மறந்து போச்சு.
நீங்களே சொல்லுங்க நீங்க எத்துன பேர் மாற்றுதிரனாளிகள்/ அனாதைகள்/ ஏழைகள் கூட உங்க கொண்டாட்டங்கள பகிர்ந்து கொண்டீங்க? நம்ம சந்தோசங்கள் நம்மளோட மட்டும் முடிஞ்சிட்டா அதுல எந்த திருப்தியும் இல்ல நம் சந்தோசம் மத்தவர்களுக்கும் பகிரப்படனும். அதுதான் உண்மையான சந்தோசம்.

பண்டிகை காலங்களில் வீண் விரயம் தான் அதிகம். எதற்கு? 2 நிமிட சந்தோசத்துக்காக 20 கோடிகள் செலவழிக்கப் படுகின்றன. காலங்கள்/ வருடங்கள் பல மாறிய போதும் நாம் மட்டும் மாறவே இல்லை. இன்றைய உலகம் இருப்பவனுக்கு கொடுக்கிறதே தவிர இல்லாதவனை நினைத்துகூட பார்ப்பதில்லை. சற்று யோசிப்போம்.

புது வருடம் பிறப்பது நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு கடந்த வருட தவறுகளை திருத்தி வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத்தானே தவிர கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல. நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்ன செய்வது எந் நேரமும் உண்மைகள் இனிப்பதில்லை.

அப்புறம் இன்னொரு முக்கியமான விடயம்.... நம்மை விட்டு எதுவும் பிரியும் போது கவலை கொள்ளும் நாம் ஒரு ஆண்டு பிரிந்து மறு ஆண்டு தொடங்கும் போது ஏன் கொண்டாடுகிறோம்? உறவும் பிரிவும் ஒன்றாய் வரும் போது இச் சமூகம் உறவுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. இழப்பின் வலியை விட உறவின் அணைப்பு சிறந்தது.

பிறக்கும் புது வருடத்தில் சந்தோசங்கள் மலர இறைவனை வேண்டுகிறேன். வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post Comment

Friday, December 30, 2011

உன்னைப் பிரியமாட்டேன்!!


கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்.
என் இரவின் கனாக்களிலும்
நீதான் வரவேண்டுமென்று..

இதயத்துக்குள் நினைவுகளாய்
நிரம்பிவிட்ட உன் ஞாபங்கள்..

அத்துணை அணுவிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து
என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.

அழகிய நினைவுகளும் நீ,
அழகிய நிகழ்வுகளும் நீ,
அழகிய எதிர்காலமும் நீ..

என் காதோரமாய்
கைபேசியில்
நீ பேசுகையில்..

உலகையே
மறந்து போகிறேன்
உன்னை மட்டும்
நினைத்தவனாய்..

கூட்டமாய் நீ வருகையில்
கண்களால்
உன்னோடு கதை பேசி..

மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன்
கண்களை மட்டும் அசைத்தவனாய்..

எந் நேரமும்
உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க
மனம் துடிக்கும் துடிப்பு,
உன்னை காணாமல்
நான் தவிக்கும் தவிப்பு..

நினைப்பு, தவிப்பு, துடிப்பு.
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு
இந்த காதல்..

போராட்டம் நிறைந்த
வாழ்வெனும் கடலில்,
மூச்சுப்பிடித்து சுழியோடி..
நான் கண்டெடுத்த காதல் என்ற
சிற்பிக்குள்,
எனக்கு கிடைத்த முத்து நீ.

பெண்ணே,
மூச்சே நின்றாலும்
உன்னைப் பிரியபோவதில்லை.

Post Comment

Wednesday, December 14, 2011

புரண்டு போன பூமி.


அன்று,
உழைப்பவனின் உழைப்பை
மதிப்பிடத்தான்
பணம்.

இன்று,
உறவுகளின் பாச
அளவீட்டுக் கருவியை
மாறிப் போனது
இந்தப் பிணம்.

முயற்சிக்கு முன்னுரிமை
இருந்தது
அன்று.
அதிஷ்டத்துக்குள் பூமி
மூழ்கிப்போனதால்,
முயற்சிப்பவன் எல்லாம்
மூச்சடைகிறான்
இன்று.

உறவுகளுக்கும்,
உயிரோட்டமில்லை.
முயற்சிக்கும்,
முன்னுரிமையில்லை.

உறவுகளில்
உயிரோட்டம் இருந்தால்,
(இன்று)தாயை
தள்ளிவைக்கமாட்டான் பிள்ளை.

முயற்சியே
முதல் என்றால்,
என்றோ முன்னேரியிருப்பான்.
மீனவனுடன் விவசாயி??

அசாத்தியத்தை
சாத்தியமாக்கி விட்ட உலகம்,
சாத்தியத்தை இன்று
அசாத்தியம் என்கிறது.

தீ
சுட்ட காய வலியை விட,
உலகை நினைத்து எழுதும்
வரியோடு வலிக்கிறது
என் இதயம்.

காகிதத்தில்
கவி கிறுக்குகிறேன்,
கண்டு கொள்பவர்
யாருமில்லை.

குரலை எழுப்பி
கூச்சலிடுகிறேன்,
கேட்பவரும்
அருகிலில்லை.

என் இயலாமையை மறைத்து,
உங்களிடம் ஒப்படைக்கிறேன்?
இவ் வரிகளையும் இவ்வுலகையும்.

புரண்டு போன பூமியை
நிமிர்த்த முயற்சிப்பீர்கள்
என்ற நம்பிக்கையில்.

Post Comment

Monday, December 12, 2011

விதியை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது. (என் டயரி)

இது ஒரு புதிய பகுதி. சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் பதிவு செய்யவும்.

நீங்க யோசிக்கிற மாதிரி பெரிய ஒரு விடயமும் நான் சொல்ல போறதில்லைங்க. அப்புறம் எதுக்கு அவ்வளவு பெரிய பில்ட்அப்? என்று யோசிக்கிறது தெரியுது கய்ஸ். நேத்து பேஞ்ச மழைல முளைச்ச காளான்கள் எல்லாம்( ஐயோ உங்கள சொல்லலபா ) பெரிசு பெரிசா பில்ட்அப் கொடுக்கும் போது நானும் கொஞ்சம் ட்ரை பண்ணிட்டு போறேன், மன்னிச்சு விட்டுடுங்கப்பா. ஓ! நான் இன்னும் என்ன விஷயம் எண்டு சொல்லவே இல்ல. அதாங்க ஒரு வாரத்தில் நான் அனுபவிச்ச அனுபவங்களை உங்ககிட்ட பகிர்ந்துகொள்ளலாமே எண்டு நினைக்கிறன். எனக்கு தெரியும் மத்தவங்க டைரி படிக்கிறது எவ்வளவு இண்டரெஸ்ட் எண்டு.(நாங்களும் படிச்சி இருக்கம் இல்ல).

போன மண்டே- மொக்கடே.
இப்படிதான் ஒரு கவிதை போட்டேன், அப்படியே அத ஷேர் பண்ணுவம் எண்டு கிளம்பினா நம்ம பசங்க பிச்சி எடுத்துட்டாங்க. ஒரே மொக்கடேயா போச்சு. பேஸ்புக்ல ஷேர் பண்ணினதுதான் தாமதம் வழமை போலவே பப்ளிக்ல மானம் போய்டிசுங்க. சரி அத சமாளிச்சிட்டு ட்விட்டர் லாகின் பண்ணினா கேள்வி கேட்டே கொண்டுடானுங்க. சபா இந்த இன்டர்நெட் வேணா எண்டு வெளிய போனா எப்பவோ ஒரு நண்பன் கிட்ட அன்ச்ட்டோபப்ல் சீடி வாங்கினயாம் எண்டு அவன் புடிச்சி அர உசிர எடுத்துட்டான். அவன்கிட்ட இருந்து தப்பி ஒரு அறுவைக் கப்பலிடம்மாட்டி அவன் மீதி உசுர எடுத்துட்டான். எவன் மூஞ்சில முளிச்சமோ எண்டு திரும்ப வீட்டுக்கு வந்து சேர்ந்து நம்ம பாவோரிட் கிரிக்கெட் கேம் விளையாடிட்டு படிக்கலாமே எண்டு கொப்பிய தூக்கி கோன்சொளிடேட் பினான்சியல் படிச்சு முடிச்சேன். அப்புறம் என்ன சாப்பாடு, தூக்கம் இடையிடையே பேஸ்புக், ட்விட்டர். (அனுபவம்- விடிவு ஒழுங்கா இல்லாட்டி பொழுதும் ஒழுங்கா இரியாது போல)

போன டியூஸ்டே- அன்லக்டே
கைக்கு எட்டுறது வாய்க்கு எட்டல்ல அப்படின்னு படிசிருபீங்க. ருசிச்சிருக்கிரீன்களா? மொத்த நாளும் அப்படியே தான் பசங்களா இருந்திச்சி. என்ன கொடும சார்? இது எண்டு தோனுதிள்ள படிகிறே உங்களுக்கே இப்படின்னா....... ஒரு சின்ன எக்சம்ப்ல் "வாக் இன்ரவியு உடனே கிளம்பி வா மச்சான்" எண்டு ஒரு பிரெண்ட் கால் பண்ணினான். பர பரக்க கிளம்பி பறந்து சென்றேன். என்ன நடந்திருக்கும் அதான் முதலே சொல்லிட்டேனே..... "சாரி நாங்க ஆல்ரெடி செலக்ட் பண்ணிட்டோம்" அப்படின்னு சிரிச்சிட்டு ஒரு பொண்ணு (என்ன பொண்ணுடா அவ? ) சொன்னா. வெறித்த பார்வையை பிரெண்ட்க்கு வீசிட்டு வெளிய வந்தன். நீங்களே சொல்லுங்க அதுக்கு அப்புறம் எப்படிங்க??? (என் நிலம நம்ம தனுஷ் நிலமதான்).ரியலி டஎர்ட் எண்டு ட்வீட் பண்ணிட்டு வந்து படுத்தவன்தான் இரவு சாப்பாட்டுக்கு தான் எழும்பினேன். அப்புறம் ஒரு சின்ன ஸ்டடி, பேஸ்புக், ட்விட்டர் மறுபடியும் தூக்கம். (அனுபவம்- ஒழுங்கா விடிஞ்சாலும் லக் வேணும்)

போன வெனிஸ்டே-திருப்திடே
ச்சே, இந்த கிழமையில வந்த 2 நாளும் நல்லாவே இல்ல. இண்டைகாவது நல்ல இருக்கணும் எண்டு எழும்பவே மழை.வெளிய போற ஐடியா சுத்தமா போச்சு.என் நண்பன் முரு அடிக்கடி ஒரு விடயத்தை சொல்லுவான். "மழைக்கும் காப்பிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம உறவு" எண்டு அத அண்டு நான் ரசிச்சி குடிச்ச காப்பில உணர்ந்தேன். படிக்கலாம் எண்டு பிளான் பண்ணும் போது தான் ஞாபகம் வந்தது, இண்டைக்கு முதல்ல மிச்சம் இருக்கிற ஆர்டிகல பதிவா போடலாம் எண்டு. சோ அத போட்டு முடிச்சிட்டு ஷேர் பண்ணிட்டு (நம்ம பசங்க ஏனோ அத கண்டுக்கல்ல) பிளான் பண்ணின மாதிரியே படிக்கக் குந்தியாச்சு. ஈவினிங் வரைக்கும் டைம் போனதே தெரியேல்ல.அப்படி என்ன படிச்சான் எண்டு கேகுறீங்களா performance management எண்டு ஒரு சப்ஜெக்ட் அதான் டைம் போனதே தெரியேல்ல. மனசுக்கு ஏதோ திருப்தியா இருந்திச்சி. அப்புறம் என்ன வழமையான விடயங்கள் இடையில் ஒரு கவிதை. (அனுபவம்- தீமையிலும் நன்மை உண்டு )

போன தேஷ்டே- வேஸ்ட்டே.
காலைல எழும்பினதும் என் lecturer என்ன கிளாஸ்க்கு வரசொல்லி கால் வந்திச்சி. ஆஹா இது வழமை தான். சில நேரங்களில் என் உதவி(அவருக்கு உதவி எனக்கு ஆப்பு) அவருக்கு தேவைப்படும் போது கூப்பிடுவார். சரி எண்டு கிளம்பினேன். அப்படியே என் புக்ஸ்சையும் எடுத்துக்கொண்டேன். அங்கு இருந்த சின்னச் சின்ன வொர்க்ஸ் முடிந்ததன் பின்னர் லைப்ரரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது இன்று நண்பன் ஒருவனின் பர்த்டே. உடனே அவனுக்கு ஒரு கால் அண்ட் விஷ். அப்புறம் என்ன ஸ்டடியா ஹி ஹி ஹி பார்ட்டிபா. இப்படிதான் என் பர்த்டேவோ பிரன்ட் பர்த்டேவோ அந்த நாள் வேஸ்ட்டா போய்டும். அண்டு KFC வந்த ஒரு கேர்ள்ல கூட என் பிரெண்ட்ஸ் விட்டுவைக்க இல்ல(நக்கல் அடிச்சாங்க எண்டு சொல்லவந்தன் அண்ட் நான் ரொம்ப நல்லவன்). (அனுபவம்- நம்ம நல்லா இருக்க நினைச்சாலும் காலம் விடாது )

போன பிரைடே- சேட்டே.
எனக்கு மட்டும் வீகென்ட் ஒரு நாள் முன்னாடி வந்துடும் பசங்களா (அதுக்காக நான் வெட்டிப்பயல் எண்டு நினச்சிடாதீங்க நாங்களும் ஒரு நாளைக்கு பிஸியா இருப்போம் ) ஒரு கவிதை பகிர்வு வழமை போலவே ஆதரவுகள்.... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அப்படின்னு ஆரம்பிக்கலாம்ண்டு நினச்சேன் பட் முடியேல்ல. என்ன பண்றது நம்ம பிளான் பண்ற மாதிரியா எல்லாம் நடக்குது. மோர்னிங் யூசோலா போய்ச்சு. ஈவினிங் ஒரு கால், நம்ம பர்த்டே பாய் அச்சிடேன்ட். அப்புறம் என்ன? ஹொஸ்பிடல் அழுகை ஒரே சோகமயமா போச்சு. பயபுள்ள புளசிட்டான் 3 மந்த்க்கு நடக்கத்தான் முடியாது.
(அனுபவம்- விதியை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது )

போன வீகென்ட்- என்ஜாய்மென்ட்.
இது எப்பவும் போல ரொம்ப ஜோலியா போச்சு. மயக்கம் என்ன படம் பார்த்தேன். தனுஷ்ட இடத்துல நாம இருந்திருக்கலாமோ? எண்டு தோணிச்சி நடிப்புக்காக இருந்தாலும் அப்படி ஒரு வைப் அமைந்தது தனுஷ் லக். மிக நீண்ட நாளைக்குப் பிறகு கத்தார் நண்பருடன் பேச கிடைத்தது. அவன் அறுத்தானோ/ நான் அறுத்தனோ தெரியேல்ல இரண்டுமணிநேர பேச்சுவார்த்தை.... ஆஹா சொல்ல மறந்துட்டன் girlfriend எண்டால் லப்டப் கொடுக்குற காலம் இது. ஒரு உயிர் நண்பனுக்கு கதை சொல்லும் காலம் இது. (என்னை போல நொந்த நண்பர்களுக்காக) இப்படி ஜோலியா முடிந்தது இந்த வாரம். பட் நம்ம அச்சிடேன்ட் பாய் மட்டும் என்ன டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருந்தான். அவனுக்காக இடையிடையே ஹொஸ்பிடல் விசிட். (அனுபவம்-பெண் என்றால் பேயும் இரங்கும் பாவம் மனிசன் என்ன செய்வான்?)

Post Comment

Friday, December 09, 2011

கருவி ஒன்றை கண்டுபிடி!

(சூரியன் fm இன் ரீங்காரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதப்பட்டு 23 /11 /2011 அன்று வாசிக்கப்பட்ட கவிதை)


கரைந்து விட்டது
நேற்றைய பொழுதுகள்.
கருகிக்கொண்டிருக்கிறது
இன்றைய நிஜங்கள்.
முன்நோக்கி நகர்கிறது
நாளைய நிகழ்வுகள்.

உலகம் இயங்கும் வேகத்திற்கு,
ராகட் கூட இரண்டாம் பட்சம்தான்.

உலகின் சுழலுக்கு ஈடுகொடுத்து,
பசுமை நினைவுகளை
எனக்குப் படம் போட்டுக் காட்ட,
கண்டுபிடி ஒரு கருவி.

இழந்தது எனக்கு
வேண்டும்,
மீண்டும்...

என் காதோரம் கதை சொல்லும் பாட்டி,
நான் தூங்கிய தாய்மடி,
பசுமையான பாடசாலை நாட்கள்,
பழகிப் பிரிந்துபோன நண்பர்கள்,
பாசமாய் அரவணைத்த உறவுகள்......
இவ்வாறு இழந்தவை ஏராளம்.

"எமக்குக் கிடைக்கும் அனைத்தும்
எம்மை விட்டுப் பிரியும்
" எனும் வாழ்வின்
நியதி உடைத்தெறிய,
கருவி ஒன்றைக் கண்டுபிடி.

உன் புதிதான கருவி பிறக்கட்டும்.
இழந்ததால் வலி சுமக்கும் உள்ளங்கள்,
வலி நீங்கட்டும்.

இழந்ததை மீண்டும் இயக்க
கருவி ஒன்றைக் கண்டுபிடி.


Post Comment

Wednesday, December 07, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்? IV

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)

பகுதி-I
பகுதி-II
பகுதி-III


பெண்களைப் பற்றி பேச ஆரம்பித்தாலே முடியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. இத் தொடரை இதனுடன் முடிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கிருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இந்த பகுதியை எழுதுகின்றேன். பெண்கள் பற்றிய நிறைய விடயங்களை எமது முதல் பதிவுகளில் அலசிவிட்டடதால் நேரடியாக விடயத்துக்கு வருவோம்.

பெண்கள் விடும் தவறுகள் எவ்வாறு அந்த சமூகத்தை பாதிக்கிறது?

முதலில் பெண்களும், ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம், பெண்களுக்கு இருக்கும் தாய்மை பற்றி. இந்த தாய்மை குழந்தைகளை சுமப்பதற்கு மட்டும் அல்ல, அவர்களை சரியான வழியில் வளர்பதற்கும்தான்.
ஆகவே ஒரு மனிதனே பின்னாளில் ஒரு சமூகமாகிறான் என்பது விதி. இதை வைத்து பார்க்கும் போது அம்மனிதனை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் தாய் (ஒப்பிடுகையில் கூடுதலான பொறுப்பு தாய்க்கே உண்டு.) அதாவது பெண் அங்கு சரியாக இருக்கும் போதுதான் அந்த பிள்ளையும் சரியான வழியில் வளர்க்கப்படுகிறான்.
ஒரு பிள்ளையின் முதல் பள்ளிக்கூடம் தாய்மடி எனும் கருத்தையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். சமூகத்தில் அவன் ஒரு நிலையை அடையும் போது தன் தாயால் இவன் தவறான முறையில் வழிநடத்தப்பட்டிருந்தால் அங்கு பிரச்சினைகள் மிகக் கூடுதலாக காணப்படும். இந்த விடயத்தில் தாய்மார்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும். இது ஒன்றே போதும் பெண்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதற்கு.

ஆனாலும் நாம் இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டி காட்ட விரும்புகின்றோம்.
அதாவது பெண்கள் பொதுவாகவே தங்கள் பக்கம் யாரையும் மயக்கி விட கூடியவர்கள். அந்த வகையில் மணமுடித்த சில ஆண்கள் மனைவியிடம் மயங்கி போவதுமுண்டு. அதாவது மனைவிமார்களின் பேச்சை கேட்டு நடக்கும் ஆண்களும் உண்டு. (இது இயற்கை.) இப்படியான நேரத்தில் மனைவிமார்கள் தவறானவர்களாக இருந்து அவர்கள் சொல் படி இந்த கணவன் வழிநடத்தப்படும் போது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக தோன்றுகின்றன. இதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.ஆகவே பெண் என்பவள் ஆணை விட சமூகத்தில் அதிகம் முக்கியம் பெறுகிறாள்.(ஆண்களை வளர்ப்பதும் பெண்கள்தானே). இதனால்தான் பெண் என்பவள் சமூகத்தின் கண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். ஆகவே பெண்கள் எப்போதும் சரியான வழிநடத்தலில் சரியான வழியில் இருக்க வேண்டும்.

பெண்கள் எப்பவும் எந்த நேரத்திலும் நிதானம் உள்ளவர்களாவும் சரியான முறையிலும் இருக்க வேண்டும் என்ற செய்தியோடு நாம் இந்த தொடரில் பேசிய விடயங்கள் பெண்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பை வேண்டியவனாக விடை பெறுகிறேன்.என்னால் முடிந்த அளவு விடயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்துக்களே. வாழ்த்தி வரவேற்பதா? அல்லது தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார். நீங்கள்...?(முற்றும்)

Post Comment

Monday, December 05, 2011

மரணித்து விட்டது மனிதம்



காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?

எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?

நான்?
நீங்கள்?
நம் குடும்பம்?
மனித உயிர்?
பணம்?
பாசம்?
ஆசை?
காதல்?
இதில் எது நிலையானது?

வானம்?
அதில் தோன்றும் நிலவு?
கடலை பிழக்கும் சூரியன்?
ஓயாமல் அடிக்கும் அலை?
அந்த அலை தந்த நுரை?
இதில் எதை சொல்ல முடியும்
நிலையானது என்று?

பணத்தை நோக்கி ஒரு கூட்டம்,
பாசத்தை நோக்கி ஒரு கூட்டம்,
அறிவை தேடி ஒரு கூட்டம்,
ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்..

இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது
நம் வாழ்வும் வாழ்நாளும்...

வாழப் பிறந்துவிட்ட மனிதனுக்கு
மரணம் மட்டுமே நிதர்சனம்.
மற்றவையெல்லாம் மாயமாய்
மறைந்து போகும் அதிசயம்.

என் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குச் சொல்லும் சேதி
தெரியுமா உங்களுக்கு?

"மரணத்தை சந்திக்க
நீ ஒரு வருடம்
முன் வந்து விட்டாய்" என்பதுதான்.

மாற்றம் மட்டும் அல்ல,
மரணமும் மாற்றா முடியாததுதான்...

நம் ஓடும் பாதையின் முடிவு மரணம்.
அதை மறந்து விட்டதால்தான்,
இன்று மரணித்து விட்டது மனிதம்.

மரணத்தை நினைப்போம்,
மனிதத்தை வளர்ப்போம்.

Post Comment