Saturday, August 14, 2010

மாலிங்க மெத்தியுஸ் அதிரடி பந்து வீச்சில் இலங்கைக்கு இலகு வெற்றி


Virakesari.

நியுசிலாந்துடனான முக்கோணத் தொடரின் இரண்டாவது போட்டியில் மாலிங்க மற்றும் மெத்தியுஸ் பந்து வீச்சில் இலங்கை இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒரு நாள் போட்டித் தொடர் தம்புளை மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.

நியுசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குப்டில் மெத்தியுஸின் முதல் பந்து வீச்சிலேயே ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்து சென்றார். தொடர்ந்து களத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய வொட்லின் 55 ஓட்டங்களை பெற மறுபுறத்தில் களமிறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது ஆட்டமிழந்தனர்.

அணி தலைவர் டெய்லர் 16 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 24 ஓட்டங்களையும், மெக்லம் 36 ஓட்டங்களையும் மில்ஸ் 11 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மாலிங்க மற்றும் மெத்தியுஸ் அதிரடியாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளையும், ஹேரத் 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.

193 எனும் இலகு வெற்றிலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.5 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்சான் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுபுரத்தில் இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தங்க அணி தலைவர் சங்ககாரவுடன் இனைந்து சிறப்பான இனைப்பாட்டத்தை ஏற்றபடுத்தினர். இருவரும் இனைப்பாட்டமாக 85 ஓட்டங்களை பெற்றிந்த போது சங்ககார 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜயவர்த்தன 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இடைநிலை வீரராக களமிறங்கிய சமரவீர மற்றும் தரங் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

தரங்க 70 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய மெத்தியுஸ் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழக்க குலசேகர 7 ஓட்டங்களுடனும், ஹேரத் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

சமர வீர 36 ஓட்டங்களுடனும், கப்புகெதர 13 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்த போது இலங்கை அணி வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் மில்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக தரங்க தெரிவுசெய்யப்பட்டதோடு இலங்கை அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment