Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.வாழ்க்கை என்ற புத்தகத்தில் வருடப் பக்கங்கள் புரட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் காலம் அப் பக்கத்தை புரட்டும் போது நாம் அந்தப் பக்கத்தை முழுமையாக படித்து முடித்து விட்டோமா? என்பது தான், இன்று நாம் புது வருடத்தை வரவேற்பதற்கு மிகவும் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு வருடத்தை நம் வாழ்கையின் பயணத்தில் இழந்து விட்டோமே என யாரும் வருத்தப் படுவதில்லை. அவற்றில் நாம் திட்டமிட்டிருந்த விடயங்களை செய்து முடித்தோமா எனவும் சிந்திப்பதில்லை. இப்படியே நம் வாழ்க்கை நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்கிறது/விலகிச் செல்கிறது.

நாம் இந்த ஆண்டுக்கு விடை கொடுக்க இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ள நிலையில் உங்களுக்கு நாம் சொல்வது என்னவென்றால் இந்த வருடத்தில் உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை சற்று சிந்தியுங்கள். நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பின் அவற்றை தொடர்ந்து கடைப்பிடியுங்கள். தீயவைகள் உங்களுக்குள் ஆட்கொண்டிருப்பின் அவற்றை விட்டு திருந்தி வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி பென்ஜமின் பிராங்லின்(Benjamin Franklin) கூறிய ஒரு கருத்தை இவ் விடத்தில் நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம். அதாவது "நீங்கள் எப் பொழுதும் உங்கள் தீய செயல்களுடன் போராடிக் கொண்டேயிருங்கள், உங்கள் அயலவர்களுடன் சமாதானத்தையே பேணுங்கள், இவை இரண்டையும் ஒன்றினைத்து பிறக்கும் புது வருடத்தில் ஒரு சிறந்த மனிதனாக மாறுங்கள்" என்பதாகும்.

எனவே எம்மை விட்டு கடந்து செல்ல இருக்கின்ற வருடத்துக்கு நாம் விடை கொடுத்தாலும் அந்த வருடம் நம்மில் ஏற்படுத்திய தாக்கம் சில வேளை மறக்க முடியாத நிகழ்வுகளாக இருக்கலாம். இவை வாழ்க்கையின் நிதர்சனமே.
எனவே நடந்ததை விட்டு விடுங்கள் இனி இருப்பதை பற்றி பிடியங்கள்.

மனிதர்களிடயே மனிதத்தை, அன்பை, பாசத்தை, நட்பை, காதலை, வளருங்கள். மன்னிப்பை பரிசளியுங்கள், மகிழ்சியை இலவசமாக்குங்கள், மற்றவரின் உணர்சிகளுக்கும் சற்று மதிப்புகொடுங்கள். வாழக்கை சுபீட்சம் நிறைந்ததாக மாறும்.

எனவே பிறக்க இருக்கும் புது வருடம் உங்கள் அனைவருடைய வாழ்கையிலும் சந்தோசமும், சுபீட்சமும், சமாதானமும், நிறைந்ததாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்.

உலகெங்கும் உள்ள எமது இணைய பார்வையாளர்கள் அனைவரும் சந்தேசமான, இனிமையான, நிறைவான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post Comment

Friday, December 17, 2010

ஒரு இதயத்தின் இருதி குமுறல்......

அம்மா...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் அதிசயமே..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் ஆசானே..........
என் இதயமே..........
என் உயிரே..........

உனக்காக நான் எழுதும் ஒரு முடிவின் முற்றுறை, நீ வாழ வேண்டும் பல்லாண்டு..............

அம்மா........,
நீ தந்த நினைவுகளை மறக்கவில்லை நான்,
என் இனிய பருவமாம் இளம் பருவத்தை தவிர,
நீ தந்த முத்தம் எனக்கு நினைவில்லை,
நீ என்னை கட்டித் தழுவியதும் நினைவில்லை,
ஆனால் நினைவிருக்கறது நீ எனக்காக தந்த உன் பாசம்.

அம்மா..........,
எனக்குள் உன்னை விதைத்தாய்,
ஆனால் இன்று நான் ஒரு தனி மரம்,
இன்று என்னில் நீயில்லை,
ஆனால் நினைவாய் இருக்கிறாய்,
என் இதய கூட்டுக்குள் பத்திரமாய்,
என்றும் இருப்பாய்...

அம்மா.........,
நான் உனக்காக வரையும் இந்த கடைசிக்கண்ணீர் மடல்,
உன் கை வந்து சேரும் முன்,
என் உயிர் பிரிந்திருக்கும் என் உடலை விட்டு,
என் உடல் சேர்ந்திருக்கும் என் தாய் மண்ணோடு,
மன்னித்து விடு என்னை, மறைத்தற்காய் அல்ல, தாமதித்ததுக்காய்

அம்மா.........,
உன்னோடு நான் பிரியாமல் வாழ்ந்த 15 வருடங்கள்
என் வாழ் நாளில் நான் கண்ட
சுவர்கங்கள்..........

அம்மா.........,
நான் உன்னை சிரிக்கவைத்தது,
நீ என்னை ரசிக்க வைத்தது
நான் உன்னை வெறுப்பேற்றியது,
நீ என்னை திட்டியது
எல்லாம் ஒரு இரவின் கண்ணீரோடு கரைந்து விடுகிறதம்மா..........
அன்று நீ எனக்கு அடித்தது இன்று இனிக்கிறது,
ஆனால், உன் நினைவு என் இதயத்தில் காயங்களாகி வலிக்குதம்மா..........

அம்மா...................,
நீ எனக்கு செய்தது ஏராளம், இருந்தும் இன்னொன்றும் செய்து விடு,
இறைவனிடம் மன்றாடு என் மண்ணரை வாழ்கை அமைதி பெற......

அம்மா..............,
நீ இக்கடிதம் கண்டவுடன் நீ அழும் சத்தம் இங்கு
என் காதினில் இடியாய் இடிக்கிறது......
நீ அழக்கூடாது, இது என் அன்புக்கட்டளை,
உனக்கு நான் இடும் கடைசி கட்டளை......

அம்மா............
எனக்கு பயமாய் இருக்கிறது இன்று, மரணத்தை நினைத்து அல்ல
நான் இல்லாத உன்னை நினைத்து.
எனக்கு முதலில் பயம் ஏற்பட காரணமும் நீதான்
உனை தாக்கிய மின்னலில் தான் முதலில் அதிர்ந்தேன் நான்,
இன்றும் எனக்கு பயம் தான் மின்னல் என்றால்.

அம்மா...............,
இன்னும் எவ்வளவோ எழுத வேண்டும் உனக்கு ஆனால்,
நேரம் இடமளிக்கவில்லை.
உலகம் விடை கொடுக்கிறது எனக்கு, நான் இவ்வுலகில்
வாழத்தகுதியில்லையென்று.

அம்மா............,
என் மரணப் படுக்கையிலும் உன் நினைவு மட்டும் தான்,
எனக்கு யாருமில்லை உனை தவிர
சொல்லி விடு என் ஸலாத்தை நம் சொந்தங்களிடம், பந்தங்களிடம் மற்றும்
எனை தேடி வரும் என் நண்பர்களிடமும்.....

அழாதே அம்மா........,
நான் அன்று பிறந்தவுடன் நீ பூத்த புன்னகை, இன்று மறையக்கூடாது உன்னில்
நான் உனை விட்டு பிரிந்தவுடன்.....
இது என் கடைசி ஆசை கூட
எனக்கு நீ விடையளிக்க வேண்டும் கண்ணீரோடு அல்ல,
புன்னகையோடு
இப்படிக்கு
உன் பாசமகன்

Post Comment

Tuesday, December 14, 2010

என் இனியவளே!!!என் இனியவளே,
என் இதயத்தின் இருப்பிடமே,
கற்பனைக் கவிகொண்டு
கரைகிறேன் உன்னுல்...

என் சிந்தனையின் சிநேகிதி நீதான்,
என் எழுத்துக்களின் இருப்பிடம் நீதான்,
காவியங்கள் பாடும் ஓவியம் நீதான்,
காகிதத்தில் தீட்டிய கவியும் நீதான்...

இளம் பூக்களின் மென்மை உன் தேகம்,
பசும் பாலின் நிறம் உன் வண்ணம்,
ஒளி புகா ஒரு இருட்டுக் கல்லரை உன் கூந்தல்,
நான் தடுக்கி விழுந்த கற்கள் உன் கண்கள்...

யார் இவள்????? - எனக்காய்,
நிலவின் உருவாய்,
பூமிக்கு வந்த மகள்...

சிக்கனச் சிற்பி,
சிறப்பாய் செதுக்கிய,
சிறந்த சிற்பம் இவள்...

கற்பனையில் மனைவியாய்,
கனவுகளில் நாயகியாய்,
தற் காலத்தில் காதலியாய்,
கரைந்து விட்டால் என் உயிருக்குள்....

கற்பனையும் கனவும் நிஜமாகும் காலம்,
இசையோடு உறவாடும் கவி போல..
இரு இதயம் இனிதாய் இணையும்...
இனி வரும் காவியம் நம்மை பாடும்.

Post Comment

Thursday, December 09, 2010

போர்க்களம்...மனிதத் தசைகளின் மயானம்
இரத்த கங்கையின் பிறப்பிடம்
போர்க்களம்

மனித தேகத்தின் இலவசக் கடை
யாருமே காணமுடியாத விடை
போர்க்களம்

போர்ச் சிற்பி செதுக்கிய சிற்பம்
இம் மண்ணிலே இதுவரை மறையாத துக்கம்
போர்க்களம்

கழுகும் நரியும் கனிவாய் அழைக்கப்படும்
காலத்தின் விருந்துபசாரம்
போர்க்களம்

தாயின் பாசமும் தாரையின் காதலும்
கலக்கும் ஒரு கலவைக் காவியம்
போர்க்களம்

வெறி கொண்ட வெற்றியின் வீர முழக்கம்
இசையாய் கேட்கும் இதயராகம்
போர்க்களம்

மரண தேவியின் காதலன்
மரித்த உடல்களின் காவலன்
போர்க்களம்

சில மனித நரிகளின் தந்திரம்
பல மனித பேய்களின் உறைவிடம்
போர்க்களம்

அழிக்க வேண்டிய அரவம்
அகற்ற வேண்டிய நரகம்
போர்க்களம்

Post Comment

Sunday, December 05, 2010

அதிசயப் பிறவி...அவமானமும் அடக்கமும் ஒட்டி உறவாடியது
என்னோடு
பரிதாபம் எனும் கண்கள் என்னை
பார்க்காத நாட்களே இல்லை

நிலவின் அழகை ரசிக்க கூட நிமிர்த்த வில்லை
என் பூமி பார்த்த தலையை
வானம் பார்த்தே பல வருடம் ஆயிற்று

மூன்று தசாப்தங்கள் கழிந்ததாம்
நான் பிறந்து நேற்றுடன்
யாரோ சொன்னார்கள்
இன்று என் காதுடன்

முன் வீட்டு முருகேஷ் அண்ணாவின் குழந்தை
என்னை பார்த்துதான் சோறுன்பான்
வெள்ளாடை அணிந்த நான் பேய் என்ற கிலியில்
அவனுக்குத் தெரியாது நான் ஒரு துணையற்ற கிளி என்று

கணவன் இறந்த நாளோடு
கருகி விட்டது என் இதயமும்
மனிதரில் நான் தான் அதிசயப் பிறவி
இதயமே மரித்தும் உயிர்வாழும் ஒரு ஈனப்பிறவி

கருகிய இதயத்தின் சாம்பலோடு
கரைத்து விட்டேன்
என் உடல் கொண்ட உணர்சிகளையும்
கண்ணீர் என்ற கடலில்..

அம்மாவோடு வாழ்ந்த 8 வருடங்கள்
அவள் இல்லாமல் வலியோடு வாழ்ந்த 10 வருடங்கள்
காதலோடு வாழ்ந்த 5 வருடங்கள்
மனைவியாய் வாழ்ந்த 2 வருடங்கள்
கடந்து-இன்று
தனிமையுடன் வாழும் 5 வருடம்
தொடர்கிறது..

நான் சிரித்து பல வருடம் ஆயிற்று
இப்போது சிரிக்கிறேன் என்பதை விட
நடிக்கிறேன்

பெண் என்ற பாத்திரத்தில்
விதவை எனும் சிறப்பு வேடம் எனக்கு

வலியை நீக்க ஒரு வழியில்லை
என் வாழ்வில்
வலியின் வரிசையில் எனக்கே முதலிடம்

உளி தாங்காத சிற்பம் இல்லை
வலி இல்லாமல் வாழ்கையில்லை..

விதியின் விதிமுறைக்கு நான் மட்டும்
விளக்கப்பட்டவளா?
தொடர்கிறது என் வாழ்வு
ஓயாமல் வீசும் தென்றல் போல.....

Post Comment

Thursday, December 02, 2010

அறிந்ததுன்டா நீங்கள் (சனத்தொகை-I)மிகவும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எமது தளம் உங்களுக்காக பகிர கொண்டு வந்திருக்கும் தகவல் 2005ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு தகவலாகும்... சில தனிப்பட்ட வேளைகள் காரணமாக எம்மால் இந்த தகவலை உரிய நேரத்துக்கு வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொண்டு அதற்கான மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு விடயத்துக்குள் நுழைவோம்.

அதாவது உலகின் சனத்தொகை பற்றி நாம் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். இச் சனத் தொகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமான இரு விடயங்கள் சம்பந்தமாக நாம் இங்கு ஒரு பார்வையை செலுத்துகின்றோம். காரணம் இன்று உலகம் எதிர் நோக்கும் சவால்களில் மிகவும் முக்கியமான ஒரு சாவாலாக இந்த சனத் தொகை காணப்படுகிறது.

அதற்காக நாம் இங்கு ஒன்றும் தீர்வுகள் எதுவும் முன்வைக்கப் போவதில்லை.. காரணம் இயற்கையோடு விளையாடும் சக்தி யாருக்குமில்லை..இயற்கையின் மாறுபாடுகளுக்கு நாம் தீர்மானம் எடுத்து அதை மாற்ற நினைக்கும் போது மீண்டும் ஒரு பாரிய சவாலுக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்பது தான் அதன் யதார்தம்.

எங்களுடைய நோக்கம் பயனுள்ள தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

பிறப்பு

எனவே நாம் இங்கு கொண்டு வந்திருக்கும் விடயம் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தியகபூர்வ அறிக்கையின் படி ஒரு வருடத்தில் பிறப்பு அதிகமாகவுள்ள நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்... (நினைவில் நிறுத்துங்கள் மொத்த சனத் தொகை அல்ல. தரப்பட்டுள்ள நாடுகளில் ஒரு வருடத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை)

(எண்ணிக்கை மில்லியன்களில்
உ-ம்:- இந்தியா 24.1 மில்லியன்)

1. இந்தியா 24.1
2. சீனா 16.7
3. நைஜீரியா 5.3
4. இந்தனேஷியா 5.0
5. பாக்கிஸ்தான் 4.4
6. பங்களாதேஷ் 4.3
7. அமெரிக்கா 4.1
8. பிரேஸில் 3.1
9. கொங்கோ 2.7
10.எத்தியோப்பியா 2.7

(இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் 2005ம் ஆண்டு திரட்டப்பட்டதாயினும் அதன் பிறகு இது வரை இப்படியொரு தகவல் உத்தியகபூர்வமாக வெளியிடப்படவில்லை)

இங்கு மற்றுமொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் அதவாது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டப் பிராந்தியத்தின் நாடுகளாகும்.....
(தொடரும்...)

Post Comment

Friday, November 12, 2010

என் உயிர் திறப்பேன்....
மடியில் கிடந்த மலரின் கூந்தல் வருடி,
காமக் கண்களால் கடலை உற்று நோக்கி,
கவி பாடிக் கொண்டிருந்தான் கடல் அன்னையை
கபிலன் எனும் மலரின் காதலன்.

"காதல் கொண்டது என்னையா? கடலையா?"
மலரின் இதழ் சற்று விரிந்தது
"உன்னைத்தான்டி என் செல்லம்,
கடல் என்ன கடல்????
உனக்காகவே என் உயிருடன் உடல்"

"கோபத்தால் சிவந்து விட்டதா உன் தேகம்
இதோ உனக்காய் என் கவியின் பாகம்."

கபிலனின் கற்பனை கடல்
சுனாமியாய் மாறியது...

"என்ன சூரியன் செத்து விட்டதா?
இன்னும் விடியவில்லை
ஓ.. உன் கருங் கூந்தல் கொண்டு என் கண்னை மறைத்தாயா?

பகலில் இப்படியொரு பளிச்சிடும் மின்னலா?
ஓ.. சிரித்துச் சென்றது நீயா?

சிவப்பு ரோஜாக்கள் எதுவும் சிவப்பாயில்லையே
ஓ.. உன் செவ்விதழ்களை பார்த்து விட்டேனோ?

இன்று எதுவும் சிக்கனமாயில்லை
உன் சிற்றிடைக்கு முன்னால்...

அருவிகள் வளைவும் அழகாயில்லையே
உன் வளைவுகளை ரசித்த என் கண்களுக்கு

பாலின் வென்மை பறி போயிட்டு போல
ஓ.. உன் பாதங்களுக்கடியில் ஒழிந்து கொண்டதோ...

சுவர்கத்தில் வாழ்கிறேனா? என்று தோன்றுகிறது
என் தேவதை நீ என் அருகில் வாழ்வதால்..."

கபிலனின் கவிகள் அவள் வெட்கத்தை தட்டிவிட விட
"போதும் போதும் உங்கள் புகழ்ச்சி" என்று அவன் வாயடைத்தால்

வாயடைத்த கரங்களுக்கு முத்தம் ஒன்றை
பரிசாய்க் கொடுத்த கபிலன்
கேட்டான் "எங்கே எனக்கான உன் கவி?"

"சுவாசமாய் நீ மாறி என்னுல் சென்றால்
உன்னை வெளியே வர விடாமல் தடுத்து
என் உயிர் திறப்பேன்
எனக்குள் உன்னை பூட்டிக் கொண்டு"
என்று சொல்லி அவனின் மார்பில் முகம்
புதைத்தாள் மலர்

கண்களில் கருகி உதிரும் கண்ணீரோடு
முத்தமிட்டான் அவள் நெற்றியில்

பல கோடி ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்வில்
அவனின் கரம் பிடித்தால்
கண்களை மூடிக் கொண்டு...

கடல் தேவியின் வாழ்த்தோடு
காதல் என்ற உடலுக்குள்
ஈருயிர் இணைந்தது...

Post Comment

Thursday, November 04, 2010

அறிந்ததுண்டா நீங்கள்??????

இன்றய இந்தப் பகுதியில் மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சியில் களம் இறங்கியிருக்கிறோம். இந்த தகவல்கள் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திறட்டப்பட்ட தாயினும் சற்று வித்தியாசமான தகவல் என்பதால் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

என்ன அந்த தகவல் என்று யோசிக்கிறீங்களா???????

ஆமாங்க இந்தப் பகுதியில் நாம் உங்களோடு பகிர நினைக்கும் விடயம்
உலகில் அதிகளாவான பணக்காரர்களை(பில்லியனர்ஸ்) உள்ளடக்கியிருக்கும் நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்..

வாங்க பார்க்கலாம்....
எண்ணிக்கைகள் ஒவ்வொறு தலை வீதம் எண்ணிக்கையிடப்பட்டுள்ளன.
(உ-ம் அமெரிக்காவில் 269 நபர்கள்)

1.அமெரிக்கா 269
2.ஜப்பான் 29
3.ஜெர்மனி 28
4.இத்தாலி 17
5.கனடா 16
6.சுவிர்ஸ்லாந்து 15
7.பிரான்ஸ் 15
8.ஹொங்கொங் 14
9.மெக்ஸிகோ 13
10.பிரித்தானியா 12

இங்கு தரப்பட்டுள்ள தரவுகளின் நிலமைகள் தற்போது மாறியிருக்கலாம்..இவை அனைத்தும் 2005 ஆண்டு தரவுகளின் அடிப்படையில் இனைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதி உங்களுக்கு ஒரு வித்தியாசமான தரவாகவும் அதே நேரம் பயனுடையதாகவும் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம்.

மற்றுமொறு முறை இன்னும் சற்று வித்தியாசமான விடயத்துடன் உங்களை சந்திப்போம். நன்றி.

Post Comment

Monday, October 25, 2010

இவளின் உடலைச் சுமக்க...


நாற்கம்பிக்குள் அடைக்கப்பட்ட
பறவைகளின் வாழ் நாள் போல்,
ஏக்கங்களாகிப்போனது என் வாழ்நாளும்.
என்னை தனியாய் விட்டு நீ பிரிந்து சென்ற நாள் முதல்...

கண்ணை மூடித்தூங்கும் வேளையிலும்,
இருண்ட கனவுக்குள் ஒளிரும் தீபமாய் உன் முகம்.

என்னைப் பார்த்து நீ முதல் பூத்த புன்முறுவல் மறைந்து,
பிரியும் வேளை நீ நடிப்பாய் சிரித்த அந்த ரணங்களின் வினாடிகள்,
சூடாய் ஒட்டிக் கொண்டது என் கண்களில்....,
பச்சை மரத்தானிபோல் பதிந்து போனது என் மனதில்.

நீ விளையாடிய மணல்வெளிகள்,
நீ தூங்கிய அறைகள்,
நீ வாழ்ந்த இடங்கள்,
இவற்றை பார்க்கும் வேளை
ஊசி கொண்டு குத்துகின்றன,
என் ஒவ்வொரு நொடி பார்வையும்
என் கண்களை..

நீ செய்த குறும்புகள்,
நீ சிரித்த சிரிப்புகள்,
நீ அழுத நாட்கள்,
என் நிழல் போன்று என்னைத் தொடர்கிறது,
என் ஒவ்வொரு அசைவிலும்...

நம் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும்
உன் கனீரென்ற குரல்,
இடியாய் அழைக்கிறது என்னை
அம்மா அம்மா என்று....

அறையில் தூங்குகிறாய் என்று
அமைதியாய் தூங்கியவள் நான்-இன்று
நீ இல்லாத உன் அறையை
வெறித்த பார்வையுடன் பார்த்து
வலியால் விழியில் நீர் வடிய
விடிகிறது என் தூங்காத இரவுகள்....

கணவனை கடைக்கனுப்பிவிட்டு
என் உயிரையும் நினைவுகளையும்
உன்னிடம் அனுப்பி விட்டு
என்னுடல் மட்டும் தனியாய் ஊஞ்சலாடுகிறது
நான் ஆடும் ஊஞ்சலுடன்...

தொலைபேசியில் நீ தொலைவில் இருந்து
அழைக்கும் நாட்களுக்காக,
காத்துக்கிடக்கிறேன் உன் குரல் கேட்க,
நான் அனைத்தையும் தொலைத்து விட்டு.

போகாதே என்று தடுத்த வேளை என் எதிர்காலம்
அதுதான் என்று என் வாயடைத்தாய்.
அன்று மூடிய என் வாய் இது வரை துறக்கவில்லை..

பக்கத்தில் இருந்து பாசத்தை காட்டுவாய்
என்று எண்ணியிருந்தேன் நான்,
ஆனால் பல மைல்
கடந்து சென்று பணத்தை காட்டுகிறாய்...

பணத்தின் தேவையை உணர்ந்த உனக்கு
பாசத்தின் அருமை புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை..

உன் வாழ்கை இனிதாய் மலர
என் இறைவனிடம் வேண்டுகிறேன்..

வேதனையின் உச்சம் பிரசவம்,
பிரசவத்தின் வலி பெரிதாயில்லை.
நீ பிரிந்த வலி நிமிடங்களுக்கு முன்னால்.....

இந்த பரிதாப தாயின் உயிர் பிரிவதற்குள்
வந்து விடு "இவளின் உடலைச் சுமக்க..."

Post Comment

Thursday, October 14, 2010

அறிந்ததுன்டா நீங்கள்?????


மிகவும் நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் இந்தப் பகுதியினூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அறியாத சில விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்...

இந்தப் பதிப்பின் மூலம் உங்களுக்கு நாம் கொண்டு வரும் தகவல்... இந்தப் பூமியில் முதல் 10 இடங்களைப் பிடித்த கூடுதலான நிலப் பரப்பை கொண்டுள்ள நாடுகள் பற்றியதாகும்...

(மில்லியன் சதுர கிலோ மீட்டறில் அளவுகள் தரப்பபடுகிறது)

1. ரஷ்யா 17.1
2. கனடா 10.0
3. சீனா 9.3
4. அமெரிக்கா 9.2
5. பிரேஸில் 8.5
6. அவுஸ்திரேலியா 7.6
7. இந்தியா 3.0
8. ஆர்ஜென்டீனா 2.7
9. கஜகஸ்தான் 2.7
10. அல்ஜீரியா 2.4

இவைகள் தான் உலகில் முதல் 10 பெரிய நாடுகள்... இந்த தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்ற நிலையில் மிகவும் மற்றுமொறு தகவலுடன் உங்களை சந்திப்போம் என்ற நம்பிக்கையோடும் விடைபெறுகிறோம்...

Post Comment

Saturday, October 09, 2010

பள்ளித் தோழர்களே....நம் பார்வைகள் சந்தித்து பல வருடங்கள் உருண்டோடிட்டு.
இருந்தும் பத்திரமாய் சிறைவைத்திருக்கிறேன்,
உங்கள் நினைவு ஏடுகளையும், நினைவுகளையும்.

அன்று இருந்த நான் இன்றில்லை,
நீங்களும் இன்று அவ்வாறில்லை.
நாலு பக்க வகுப்பறைச் சுவருக்குள்ளயே
நசுக்கப்பட்டு விட்டது நம் நட்பு.

பட்சிகள் கூட்டம் போல் பாசத்தால் இனைந்து,
பட்டாம் பூச்சிகள் போல் கவலையின்றி திரிந்து,
நாம் இட்ட சண்டைகள், கனவுகள்,
ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், போராட்டங்கள்,
விளையாட்டுக்கள், சேட்டைகள்,
இன்று எதுவுமே அற்று மௌனியாகிவிட்டோம்.
ஆளுக்கொரு திசையில்,
கூட்டுக்குள் இருந்து கலைக்கப்பட்ட
பறவைகள் கூட்டம் போல்....

பாலை வனத்தில் மழைத் தூரல் போன்று,
அவ்வப்போது சிலரைப் பார்பதுன்டு-ஆனால்
எல்லோரும் ஒரே நேரத்தில்?????
எழுதும் கவியின் வரியோடு கரைகிறது
என் கண்ணீரும்.

பிரியமாட்டோம், பிரியமாட்டோம்
என்று சொல்லியே பிரிந்து போனோம்.
நம்மை விட்டுப் பிரிந்த,
ஒவ்வொரு வினாடிகளிளும்.

நம் வகுப்பறை சொல்லும் நம் கதைகளை,
நம் மைதானம் சொல்லும் நம் சேட்டைகளை,
நம் பாடசாலை சொல்லும் நம் சாதனைகளை,
நம்மால் எதுவும் சொல்ல முடியவில்லை,
நம் தனிமைக்கு.

சிலர் தொலைபேசியில்,
சிலர் தொழில்நுட்பத்தில்,
சிலர் இணையத்தில்,
என்று ஏதோ நட்புடன் இருக்க
பலர் தொலைந்தே விட்டோம்,
முகவரிகள் அற்று.

தொலைந்தவர்களைத் தேடிய பயணமும்,
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது......
மிக நீண்ட காலமாய்.

தெருக்கலில் பள்ளி மாணவர்கள்
சிறகடித்துச் செல்லும் வேளை,
வழிகின்ற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,
சேர்ந்து நடக்கிறேன் சில நிமிடம்..
காற்றோடு கலந்து விட்ட என் சுவாசம் போல்.

நம்மை மட்டும் பேச அனுமதித்த நூலகம்,
காதல் கவிதை எழுதும் கரும்பலகை,
நம் மேளவாத்தியங்களான மேசைகள்,
நம் உணவகசாலை ஓட்டக் குடிசை,
எந் நேரமும் இசைக் கச்சேரி நடக்கும் நம் வகுப்பறை,
நம் சேட்டையில் முதலிடம் பிடித்த வகுப்புத் தோழிகள்,
இவைகள் தான் இன்று என் இருன்ட கனவுக்குள்,
ஒளிரும் தீபங்கள்....

என் வாழ்கைப் பயணத்தில்
பசுமை நிறைந்த வீதிகள்
நம் பாடசாலை நாட்கள்.

இன்று திரும்பிப் பார்க்கிறேன்,
என் பக்கத்தில் சுடர்விட்டவர்கள்.
வானில் தெரியும் நட்சத்திரங்கள் போல்
சுடர்கிறீர்கள்,
என்னை விட்டு வெகு தூரம் சென்று.

நம் காலை உணவோடு கலக்கும்
பாசம், நட்பு, காதல், மகிழ்ச்சி
எனும் சுயையூட்டிகள்
இன்று காணவே முடிவதில்லை கடுகளவு கூட.

ஏதேதோ பேசினோம்,
ஏதேதோ எழுதினோம்,
பாடம் படித்தோம்,
வாழ்வையும் படித்தோம்,

பள்ளித் தோழர்களே....
தவிக்கும் எண்ணங்களின் தவிப்பனைக்க,
துவண்ட தோழர்களுக்கு தோள் கொடுக்க,
பகை கொண்ட நெஞ்சங்களுக்கு அன்பை பரிசளிக்க,
இணையில்லா நட்புடன் மீண்டும் இனைய,
வருவீர்களா? நம் வகுப்பறைக்கு.
உங்கள் வாழ்கையில் ஒரு மணி நேரமாவது...

ஏக்கம் நிறைந்த பார்வையுடன் காத்திருக்கிறேன்,
நினைவுகள் என்னில் நிலைநிற்க.
வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...


Post Comment

Wednesday, September 29, 2010

போதும்.......ஆறுதலாய் 4 வரி உரைப்பாய்,
அவ்வப்போது தட்டிக் கொடுப்பாய்,
ஆகாயமாய் உயர்ந்து நிற்பாய்,
நட்பினால் அரவனைப்பாய்,
இன்று அடங்கிப் போனாய், அத்தனையும்
இழந்து விட்டு.

கனவோடு வாழ்ந்தவனல்லவா நீ...
கண்டாயா? வாழ்கை தந்த வடுக்களை.
வாழ்வெனும் தேவன் உன்னை
அடிமையாக்கி பல திங்களாயிற்று.
யாரிடமும் இல்லை உன் அடிமை விலங்கை
திறக்கும் சாவி.

கஷ்டப்படுகிறாய்,
காலம் திறக்கட்டும் உன் விலங்கை,
அது வரை காத்திரு நம்பிக்கையுடன்.
நம்பிக்கைதான் வாழ்வாம்
யாரோ சொன்னார்கள்.

ஒழிந்திருந்து ஒப்பாரியா?
நடத்து நடத்து.. நாடகமே வாழ்வாகிப் போன
உலகில் உன் நிஜமும்,
கொஞ்சம் கலக்கட்டும்...

வரண்ட பாலை வனத்தில் கண்ணீரா?
ஹா ஹா ஹா நீ நின்ற இடத்தை
குனிந்து பார்.
உன் வலியின் கண்ணீர் கூட வற்றியிருக்கும்
வரட்சியின் கொடுமையால்.

வாழப் போகிறேன் என்று தானே விடைபெற்றாய்.
வாழ்ந்தாயா?
ம்ம்ம் வாழ்ந்திருப்பாய்.
சில இருப்போடும், பழ இழப்போடும்

என்ன? கவியின் கடுமை சுடுகிறதா உன்னை..
இதெல்லாம் ஒரு சூடா உன் வாழ்வில்...

அறிந்து கொள் ஒரு வரி.
உன் அறிவைத் திறக்கும் ஒரு வரி.
போதும் என்று நினை,
உனக்கான பொழுது விடிந்து வெகு நேரமாயிற்று

தடுமாறுகிறாயா?
பிடித்துக் கொள் என் தோள்களை...
எப்போதும் அது உனக்குத்தான்,
நீ என் தோழன் ஆனாதால்.........

Post Comment

Saturday, September 25, 2010

வாழ்கை....!!!!!


உன் உருவம் காட்டும் கண்ணாடி போன்றது
உன் வாழ்கை
நீ எதை காட்டுகிறாயோ அதையே அது உனக்கு
பிரதிபலிக்கும்

நீ அறைகூவும் எதிரொலி போன்றது உன்
வாழ்கை
நீ என்ன சொல்லி அழைக்கிறாயே அதுவும்
அதையே சொல்லி உன்னை அழைக்கும்

உன் வாழ்கையின் அத்திவாரம் உன் தன்நம்பிக்கை
அதை நீ உறுதியாக இட்டுக்கொண்டால்
உன் கட்டிடம் நிலைநிற்கும்

உன் வாழ்கையின் மூச்சு உன் முயற்சி
அதை நீ நிறுத்திவிட்டால்
உன் வாழ்கை முடிவடைந்து விடும்

உன் வாழ்கையின் ஆரம்பம் உன் வெற்றி
அதை நீ பெற்றுக்கொண்டால் அமைதி அடைந்து கொள்
அது உனக்கு மேலும் ஒரு ஆரம்பமாயிருக்கும்

உன் வாழ்கையின் ஏணி தோல்வி
அதை நீ பெறா விட்டால்
உன்னால் மேற் செல்வது கடினமாகிவிடும்

உன் வாழ்கையின் இதயம் நல்ல குணம்
அதை நீ சுத்தப்படுத்தா விட்டால்
உன்னில் நோய் உறுவாகிவிடும்

உன் வாழ்கையின் உணவு பணம்
அதிகமாய் சாப்பிட்டால்
அது உனக்கு நஞ்சாக மாறிவிடும்

உன் வாழ்கையின் முகம் உன் காதல்
அதை நீ இழந்து விட்டால்
உன் உருவம் மதிப்பற்றதாகி விடும்

உன் வாழ்கையின் போதை அதுவே உனது மமதை
நீ அதை அருந்தி விட்டால்
உன் வாழ்வு தள்ளாடிவிடும்

உன் வாழ்கையின் வழிகாட்டி உன் ஆசான்
நீ அதை சரியாக தெரிவு செய்யாவிட்டால்
உன் திசை மாறிவிடும்

உன் வாழ்கையின் வெளிச்சம் உன் நண்பர்கள்
அதை நீ அனைத்து விட்டால்
உன் வாழ்கை இருளடைந்து விடும்

உன் வாழ்கையின் அமைதி உன் செல்வம்
உரிய முறையில் பயன்படுத்தாவிட்டால்
அதுவே உன்னை ஆபத்தை நோக்கி நகர்த்தும்

உன் வாழ்கையின் நஞ்சு பொறாமை
அது துளி உட்சென்றாலும்
உன் வாழ்வு முற்றுப் பெற்று விடும்

உன் வாழ்வின் சுவர்க்கம் உன் பெற்றோர்
அவர்களை நீ பிரிந்து விட்டால்
சுகமும் உன்னை விட்டுப் பிரிந்து விடும்

உன் வாழ்வின் போர்வை உன் மனைவி
அவளை நீ நிராகரித்தால்
உன் மானம் சென்று விடும்

உன் வாழ்வின் மேகம் உன் சொந்தம்
அவர்கள் இல்லாவிட்டால்
உன் பூமி மழையின்றி வரண்டுவிடம்

உன் வாழ்கையை எரிக்கும் நெருப்பு சந்தேகம்
அதற்கு நீ விரகூட்டினால்
உன் வாழ்வின் சாம்பலையும் கருக்கிவிடும்

உன் வழ்கையின் திருப்தி நிம்மதி
அதை நீ பெறாவிட்டால்
உன் வாழ்வு அற்தமற்றதாகிவிடும்

உன் வாழ்கையின் நோய் உன் கோபம்
அதை நீ சுகப்படுத்தா விட்டால்
அது உன்னை நோகடித்து விடும்

உன் வாழ்கையின் எல்லை இன்பம்
அதை நீ பெற்றுக் கொள்
அதுவே உன் வாழ்கையின் கவசம்

உன் வாழ்கையின் யதார்த்தம் துன்பம்
அதை நீ ஏற்காவிட்டால்
உன் மனிதம் மங்கிவிடும்

உன் வாழ்வின் முடிவு உன் மரணம்
அது உனக்கு நிகழ்ந்து விட்டால்
இச் சமூகம் உன்னை மறந்து விடும்

ஆகவே.......
ஒரு வெறும் தரை போன்றது உன் வாழ்கை
அதை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாயோ
அதன் விளைச்சல் உனக்குத்தான்
உனக்கு மட்டும்தான்

இன்று நன்மையை விதை தோழனே
நல்ல அறுவடையை பெறு
நாளை உன்னை வரவேற்கிறது
நேற்று உனக்கு விடை கொடுக்கிறது

இழந்ததை விட்டு விடு
இனி இருப்பதை பற்றிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்வு
அன்றுதான் என் கவிக்கும் சாவு

Post Comment

Wednesday, September 08, 2010

அறிந்ததுன்டா நீங்கள்???இன்றய இந்தப் பகுதியில் மற்றுமொரு விடயத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். கடந்த பதிப்பில் கடல் உள்ளாச பயணங்கள் சம்மந்தமான பதிவினை இனைத்திருந்தோம். அந்தப் பகுதிக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு இவ் விடத்தில் நன்றிகளை கூறிக் கொள்கிறோம்.
சரிங்க நம்ம விடயத்துக்குள் நுழைவோம். இந்தப் பகுதியில் உங்களுக்காக மீண்டும் நீருடன் சம்மந்தப்ட்ட தகவல்களைத்தான் கொண்டு வந்திருக்கிறோம். என்ன யோசனை இவன் நீரைவிட்டு வெளியே வரமாட்டான் என்று தானே. நான் என்னதான் பன்ன முடியும் நம்ம உலகில் அதிகமாக இடம் பிடித்திருப்பது நீர்தானே. அது தான் நீர் பற்றிய தகவல்களும் அதிமாய் இருக்கின்றன.

இன்றய இப் பகுதியில் உலகின் மிக நீளமான முதல் 10 இடங்களைப் பிடித்த நதிகளைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். வாங்க போகலாம்.

1.நைல் நதி(Nile) 6693Km
2.அமேசன் நதி(Amazon) 6436Km
3.யன்கேட்ஸ் நதி(Yangtze) 6378Km
4.ஹுஅன்ஹி நதி(Huang He) 5463Km
5.ஒப்லரடிய்ஸ் நதி(Ob-lrtysh) 5410Km
6.அமுர் நதி(Amur) 4415Km
7.லீனா நதி(Lena) 4399Km
8.கொங்கோ நதி(Congo) 4373Km
9.மெசிலிஎன்ஸி நதி(Mackenzie) 4241Km
10.மீகொங் நதி(Mekong) 4183Km

இவை தான் இந்தப் பகுதியினூடாக நாம் உங்களுக்கு இப்போது கொண்டு வந்திருக்கும் தகவல்கள். அந்த நதிகளில் தோன்றும் link கை பயன்படுத்தி அவை சம்மந்தமாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
சரிங்க இன்றய நம்ம இந்தப் பகுதியில் இருந்து நீங்க பயன் அடைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெருகிறோம். மற்றுமொறு வித்தியமாசமான தலைப்புடன் மீண்டும் சந்திப்போம்.

Post Comment

Sunday, September 05, 2010

உயர்ந்தது நட்பா? (சுவைக்க ஒரு சூடான பகுதி

இது என்ன புதுசா ஒரு குழப்பம்? ஏன் இப்படி ஒரு கேள்வி? இதில் என்ன சந்தேகம்? என்று சொன்னாங்க சில பேர். நான் இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்டபோது. ஆனா இதில் என்ன விஷேசம் என்றால் நான் கேட்ட கேள்விக்கு யாருமே விடை சொல்லவில்லை என்பது தான். அவர்கள் மாறி என்னிடம் கேள்வி கேட்டார்களே தவிர பதில்???????? சரிங்க இப்ப உங்ககிட்ட கேட்கிறேன் உயர்ந்தது நட்பா? தொடர்ந்து படிப்பதற்கு முதல் விடையை உங்க மனதுக்கு சொல்லிட்டு படிங்க.

ஆம் உயர்வானது நட்புத்தான் என்று நாம் எத்தனையோ விடயங்களில் கேள்விப் பட்டிருக்கிறோம். சினிமா, கதை ,கவிதை என்று நட்பை விபரிக்காத உபயோகப்படுத்தாத இடமேயில்லை எனலாம். நட்பு என்றால் என்ன என்ற கேள்வி நம்ம மனதில் எப்பயாவது தோன்றியதுண்டா? கொஞ்சம் யோசிங்க. அப்படி உங்களுக்கு தோன்றியிருந்தால் நீங்கள் இதை படித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனெனில் விடை உங்களுக்கு கிடைச்சிருக்கும். சரிங்க நம்ம விஷயத்துக்குள் நுழைவோம்.

நட்பு என்றால் என்ன?
எச் சந்தர்பத்திலோ அல்லது எந்த சூழ்நிலைகளிலோ ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இன்னொரு தனிமனிதனுடனோ அல்லது ஒரு குழுவிடனோ எதிர்பார்ப்புகள் இன்றி ஏற்படும் அன்பு தான் இந்த நட்பு என்று நாம் சுருங்கச் சொன்னாலும் இதற்கு ஒரு பொதுவான வரைவிலக்கனம் யாராலும் கொடுக்கப்படவில்லை. (எல்லாவற்றினதும் ஆழத்தை அறிந்த புலவர்களால் கவிஞர்களால் நட்பின் ஆழத்தை மட்டும் அறியமுடியவில்லை.) நட்பை பலவாறாக புகழ்ந்தவர்கள்தான் அதிகம். அது புனிதமானது என்று சொன்னவர்கள்தான் அதிகம். அது இல்லை என்றால் ஒன்றுமில்லை என்று சொன்னவர்கள்தான் அதிகம். நட்பை யாரும் குறைகூறியோ அல்லது கேவளப்படுத்தி பேசியோ நாம் கூடுதலாக கேட்டிருக்க முடியாது. எனவே இதெல்லாம் வைத்து பார்க்கும் போது நட்பு உயர்வானதுதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. நாம் இந்த நட்பை பற்றி இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன காரணம்? நிறைய இருக்கலாம். அது சிலவேளை சாதகமாகவும் சில வேளை பாதகமாகவும் இருக்கலாம். எந்த ஒரு விடயத்திலும் இரண்டு வாதங்கள் முன் மொழியப்படும் போது நட்பில் மட்டும் ஒரே வாதம் அதுதான் நட்பு வாதம் ஒரே கொள்கை அது தான் நட்புக் கொள்கை என்று நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை.

ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ அனைவருக்கும் நட்பு என்பது பொக்கிஷமாகவே விளங்குகிறது.

இருந்தாலும் இந்த நட்பால் சங்கடப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நட்பு எனும் கருவி கொண்டு நம்மை வீழ்த்தி விட ஒரு கூட்டம் நம் பின்னாலயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஏன் சிலவேளை இது உங்கள் வாழ்கையிலும் நடந்திருக்கலாம். நாமே சில சமயம் சம்மந்தப்பட்டிருக்கலாம்.
எனவே நட்பு என்பது இரண்டு விடயங்களுக்கு வழி வகுத்து நிற்கிறது.
1. நல் வழி
2. தீய வழி

நல் வழிக்கும் தீய வழிக்கும் வழி சமைக்கும் நட்பை உயர்வானது என்று சொல்லலாமா? என்ற கேள்வி என் மனதில் ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்குதுங்க. அதற்கு நான் கண்ட பதில் தான் இந்த தலைப்புக்கே காரணம். என் வாழ்விலும் நட்பு நாலா திசைகளிலும் விளையாடித்தாங்க இருக்கு. சரி என் சொந்த விஷயங்களை ஓரம் கட்டி பொதுவான விஷயத்துக்கு வருவோம்.

நான் நின்ற ஒரு பஸ் தரிப்பிடம்.... அங்கு நின்றவர்களிடம் என் வினாவைத் தொடுத்தேன்.

'தம்பி இந்த காலத்துல எவனையும் நம்ப முடியாது. நம்ம கூடவே இருந்து ஆட்டயப் போட்டிட்டு போய்யிடுவாங்க..'(ரொம்ப அடி வாங்கியிருப்பாரோ???) என்று ஆரம்பித்தார் அண்ணா ஒருவர்.

'நீங்க என்ன சார் சொல்ரீங்க நண்பன் என்டு நினைச்சி வீட்ல விட்டா என் அக்காவையே இழுத்துட்டு ஓடிட்டான்'(நீங்க ரொம்ப பாவம் சார்) என்றான் இன்னொருவன்.

'ஆமா சார் இந்த காலத்துல நண்பர்கள்ட கூட நடிச்சுதான் பழக வேண்டியிருக்கு'(இது என்னடா புதுக் கதை) என்று அவர்களுடன் ஒத்துப் போனான் இன்னொருத்தன்.

'நட்பில்லாமல் வாழ முடியுமா???'(சரியான கேள்வி) என்று விவாதம் தொடங்கினால் ஒரு யுவதி அவளின் தோழிகளோடு.

'நண்பர்கள் கூட அளவாக பழகினா நல்லம் தானே'(இது என்ன அரிசியா அளவு பார்த்து வாங்க) என்று அறிவுரை கூறினால் அங்கிருந்த ஒரு வயதான அம்மா.

'தம்பி இன்றய காலத்துப் பசங்களுக்கு நட்பின் கருவே தெரியல' (அப்ப உங்களுக்குத் தெரியுமா????) என்றார் இன்னொரு வயதான தாத்தா.

எனக்கும் அவர் மேல கொஞ்சம் கோபம் தான் இருந்தும் அவரின் கருத்து எனக்கும் சற்று நியாயம் என்று பட்டது. அதனால் எதுவும் பேசாமல் அவர்கள் சொன்ன செய்திகளோடு பஸ் ஏறினேன் நானும் ஒரு முடிவுடன்.

என்ன பார்க்கிறீங்க இத நீங்களும் கேட்டு இருக்கலாம் அல்லது பேசியிருக்கலாம். எனவே இன்றய காலத்தில் நட்பு அந்த தாத்தா சொன்ன மாதிரி அதன் தன்மையை பெருமதியை இழந்துள்ளதா?

இப்ப நம் முன்னாடி 2 கேள்விகள் இருக்குதுங்க.
1. நல் வழிக்கும் தீய வழிக்கும் வழி வகுக்கும் ஒரு விடயத்தை உயர்வானது என்று சொல்ல முடியுமா?
2. நட்பு தற்காலத்தில் அதன் தன்மையை இழந்துள்ளதா?

இவை இரண்டுக்கும் கிடைக்கும் பதில் தான் இந்த எழுத்துக்களின் நிலமையை புரட்டிப் போடப் போகிறது.


முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் இரண்டாம் கேள்விக்கு பதில் கொடுப்பது சற்று சிறப்பாய் இருக்கும் என நினைக்கிறேன். அதாவது நட்பு இன்றய காலத்தில் அதன் தன்மையை இழந்துள்ளதா? இக் கேள்விக்கு விடை கொடுப்பதற்கு முன் சற்று ஒரு விடயத்தை தெளிவு படுத்த வேண்டியது என் கடமை கூட. அதென்ன தற்காலத்தில்? அப்போ அன்றய காலத்தில் நட்பு நட்பாக இருந்ததா? என்ற ஒரு சிந்தனை உங்க மனதில் வரலாம். நம்ம ஒரு பழ மொழி கேள்விப்பட்டிருப்போம் அதாவது உயிர் காப்பான் தோழன். இது பழ மொழி மட்டுமல்ல பழய வரலாறு கூட. இதற்கு மேலும் அந்த காலத்தைப் பற்றி நான் விபரிக்க தேவையில்லை. எனவே அந்தக் காலத்தில் நட்பு நட்பாகத்தான் இருந்தது என்பதற்கு நிறைய வாதிடலாம். அக் காலத்தில் நவீனம் இருக்கவில்லை ஆனால் நாகரீகம் இருந்தது உண்மையான நட்பு இருந்தது. இன்றய காலத்தில் அது சற்று கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு நமக்கு விடை கிடைக்க வேண்டும் என்றால் நாம் நட்பின் அதாவது உண்மையான நட்பின் தன்மைகளை அறிந்து கொண்டால் நான் என்ன நீங்களே சொல்வீர்கள் நட்பு இன்றய காலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை.

முதலில் அதைப் பற்றி பேசலாம் வாங்க

1. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
2. ஏதிர்பார்புகள் அற்றதாய் இருக்க வேண்டும்.
3. நம்பிக்கை காணப்பட வேண்டும்.
4. கருத்து மோதல்கள் காணப்பட வேண்டும்.
5. மரியாதையுடன் கலந்த மகிழ்சி இருக்க வேண்டும்.
6. மற்றவனின் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்
7. எந்த நேரத்திலும் உதவும் மனநிலை இருக்க வேண்டும்.

எனவே இது அடிப்படையாக இருக்க வேண்டிய பண்புகள். இவற்றில் ஒன்றை இழந்தாலும் அது நட்பின் தன்மையை இழந்து விடும். இதில் எல்லாம் சரி அது என்ன கருத்து மோதல்கள் இருக்க வேண்டும் என்று யோசிக்கிரீங்களா? ஆமாங்க நிச்சயமாய் நட்புக்குள் இது காணப்பட வேண்டும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்கள். இவர்களுக்கு இடையில் இருப்பது நட்பா? காதலா? என்று எவ்வாறு அறிவது? காதல் என்றால் அங்கே கருத்து முரண்பாடுகள் குறைவாகவும் நண்பர்கள் என்றால் மிக அதிகமாகவும் காணப்பபடும்(பொதுவாக). எனவே இதுவும் அடிப்படை பண்புகளில் ஒன்றுதான்.

இப்ப யோசிங்க இன்றய காலத்தில் நட்பு அதன் தன்மையை இழந்துள்ளதா? இல்லையா? நிச்சயமாக இழந்துள்ளது. அடிப்படை தன்மைகளில் முதலாவது தன்மையிலயே நம் நட்பு நின்று விடுகிறது. இக் காலத்தில் சுயநலம் அற்றவர்களை பார்க்கவே முடியாது. எனவே நட்பு இன்றய காலங்களில் அதன் தன்மையை இழந்து வருகிறது என்பது தான் நிஜம்.

இன்றய நவீன உலகத்தில் நண்பர்கள் தேடுவது என்பது பெரிய விடயமே இல்லை.(Facebook, twitter etc....) ஆனால் அவ்வாறு நாம் தேடிய நண்பர்கள் நட்பின் தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்களா? அல்லது நாம் அவர்களுடன் நட்பின் தன்மை வரையறை கொண்டு பழகுகிறோமா??? என்றால் 1% மட்டுமே அல்லது அதனிலும் குறைவு. அன்று நண்பனுக்கு ஆபத்தான நிலைகளில் உயிரைக் கொடுக்கவும் உதவி செய்யவும் துணிந்த நட்பு இன்று வெறுமனே கேலிக்கும் அரட்டை அடித்தலுக்கும் நேரத்தை வீண் விரயமாக்குவதற்கும் தான் பயன்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தேவையென்றால் பேசலாம் இல்லை என்றால் bye என்று சொல்லும் நண்பர்கள் தான் இன்று அதிகம். நண்பன் தன் உதவி தேடி வருகிறான் என்று அறிந்தால் ஒழிந்து கொள்ளும் நண்பர்கள்தான் இன்று அதிகம்.

எதிர்பாற்பற்றது நட்பு. ஆனால் இன்று சில தேவைகள் முடிய வேண்டும் என்பதற்காகவே சிலருடன் நட்பு. ஆகவே அன்றய கால கட்டத்தில் நட்பின் தன்மை மாறுபட்டதோ இல்லையோ அது எனக்குத் தெரியாது அக் காலத்தில் நான் வாழவும் இல்லை. ஆனால் இக் காலத்தில் நிச்சயமாக மாறியிருக்கிறது. வெறும் வாய்ப் பேச்சால் மட்டும் அலங்கரிப்படக் கூடிய ஒரு உயிரற்ற பொருள்தான் இன்று என்னுடைய பார்வையில் நட்பு. இதனால் தான் நட்பு இன்று தீய விடயங்களுக்கும் வழி வகுக்கிறுது.


நல் வழிக்கும் தீய வழிக்கும் இடம் கொடுக்கும் நட்பை உயர்வானது என்று சொல்லலாமா? ரொம்ப சிக்கலில் மாட்டிக் கொண்டேன் இந்தக் கேள்வியை என் நண்பர்களிடம் கேட்டு. நட்பு நல்ல விடயம் தானே அது ஏன் தீய வழிக்கு வழி சமைக்கிறது? அவர்களுக்கு விளங்கப்படுத்தியே என் வாய் அடைத்துவிட்டது. நட்பு என்ற களத்தைப் பயன்படுத்தி தீயவர்கள் இலகுவாக உங்களை ஆட்கொள்ள முடியும் என்று நான் உறுதிப்படுத்திய போது சற்று யோசித்து விடை சொன்னார்கள்.

சிலர் 'ஆம் அது நல்ல வழிக்கு வழி காட்டுகிறது நாம் ஏன் தீயதை பார்க்க வேண்டும் நல்லதை மட்டும் யோசிக்கலாமே'( ரொம்ப பெரிய மனசு சார்)என்றார்கள். இன்னும் சிலர் 'இல்லை நட்பை பயன்படுத்தி தீயவைகள் நடை பெருகின்ற போது அதை உயர்ந்தது என்று கூறமுடியாது'(அட பாவிகளா) என்றார்கள். மிகுதிப் பேர் 'வாழப் போகும் கொஞ்ச நாளில் இந்த ஆராய்சி ஏன் உமக்கு'(நல்ல பதில்) என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.

சரிங்க இப்ப நம்ம முடிவெடுக்க வேண்டிய தருணம் அதற்கு முதல் இந்த விடயத்துக்கு நான் முடிவெடுத்த முறையை விளக்குவது என் கடமை கூட. நட்பில்லாமல் ஏதாவது வேறு ஒரு விடயத்தை உதாரணமாக எடுத்து நான் பல பேரிடம் வினவினேன். இந்த விடயத்தில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. இதை நாம் உயர்வானது என்று சொல்ல முடியுமா எனக் கேட்டபோது இல்லை என்ற பதிலே உயர்ந்து நின்றது. இல்லை என்று பதில் சொன்னவர்களிடம் நட்பு பற்றி கேட்ட போது தடுமாறினார்கள். அப்போ நட்புக்கு மட்டும் நீதி தேவையில்லையா? என்ற தீர்மானத்தில்..... நன்மையும் தீமையும் இருக்கும் ஒரு விடயத்தை நிச்சயமாக உயர்வானது என்று சொல்ல முடியாது நட்பாய் இருந்தாலும் சரி. நன்மையுடன் தீமை கலக்கும் அடுத்த நிமிடமே அது கலங்கப்பட்டு விடுகிறது. எனவே நட்பை புனிதமானது என்றோ உயர்வானது என்றோ கூற முடியாது.(என்ன செய்வது சில உண்மைகளை சொல்லித்தான் ஆக வேண்டும்).

ஒரு சராசரி மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனிடம் நற்பண்பும் தீயபண்பும் இருக்கிறது. இவன் செய்யும் அத்தனை நல்ல விடயங்களையும் இவனால் விடப்படும் தவறு தகர்த்து இவனை இச் சமூகத்துக்கு கெட்டவன் என அடையாளப்படுத்தி விடும். இது போன்றுதான் இன்றய நட்பின் நிலமையும். நட்பில் புனிதம் இருந்தாலும் தூய்மை இருந்தாலும் இன்றய காலகட்டத்தில் நட்பினால் ஏற்படும் தீய செயல்கள் அதிகமாய் காணப்படுவதாலும் சமூகத்தில் ஏற்பட்ட நட்பை பற்றிய தவறான செய்திகள் காரணமாகவும் நட்பில் இன்று தீயவிதமான பார்வைகளே படிந்துள்ளன.

அது என்ன தீய செயல்கள் அதிகமாய் காணப்படுகிறது என்ற கேள்விகள் உங்க மனதில் ஓடலாம். சற்று விளக்குவது என் கடமை.

ஒரு வீதியோரத்தை தெரிவு செய்யுங்கள். அது நண்பர்கள் கூடும் ஒரு பிரதேசமாக இருகட்டும். அங்கு ஒரு 10 நிமிடம் நின்று வேடிக்கை பாருங்கள். அந்த நண்பர்கள் வட்டாரம் செய்யும் கேலிக்கைகளால் அவர்கள் மீது சமூகம் வீசும் பார்வை காவலிகள், தெருப் பொருக்கிகள், என்றெல்லாம் தவறான கூற்றுக்கள். அவர்கள் மீதும் படிந்து நட்பின் மீதும் படிந்து விடுகிறது. என்ன பார்க்கிரீங்க யாரோ செய்யும் பிழைக்கு நட்பு எப்படி பொருப்பெடுக்கும் என்று? தானே. விளங்குது உங்க தவிப்பு என்ன செய்வது சமூகத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்த தவறான எண்ணம் குடி கொண்டு விட்டதால் நாமும் அதனுடன் ஒட்டி ஓட வேண்டியிருக்கு என்பது தான் யதார்த்தம்.ஆகவே ஒரு விடயத்தை பின்பற்றுகின்ற மனிதர்களை வைத்து அந்த விடயத்தை கணக்கிடும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று இவ் விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியதும் எனது கடமை தான். இப்படித்தாங்க பிரச்சினைகள் தோற்றமெடுக்க ஆரம்பிக்கும்.

எனவே இவற்றை தடுக்கும் பொருப்பை நாம் சம்மந்தப்பட்ட அந்த நண்பர்களிடமே கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வோம். ஆனால் ஒரு விடயம் எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம் தான் நன்மைகளை தீமைகள் அழித்து விடும் என்ற எண்ணக் கரு. எனவே அதனடிப்படையிலும் தீமையுடன் கலந்திருக்கும் நட்பை உயர்வானது என்று சொல்ல முடியாது. இன்றய கால கட்டத்தில் வாழ்தப்படும் நட்பை விட தூற்றப்படும் நட்புகளே கூடுதலாக காணப்படுகிறது என்று நான் சொல்வதை விட நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் தகவல்களும் நடைபெறும் சம்மவங்களும் போதுமானது. ஆக மொத்ததில் நட்பை உயர்வானது என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் தீர்வு அது இன்றய அனைத்து நண்பர்களின் கையிலும் தான் தங்கி உள்ளது. அவர்கள் மாறும் வரை நட்பு மாறப் போவதில்லை.

இருதியாக நாம் முடிவுக்கு வரலாம். அது என்ன? நட்பு இன்றய காலகட்டத்தில் அதன் தன்மையை இழந்து வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை விட தீமைகள் அதிகமாகி அதன் புனிதத் தன்மையை இழந்துள்ளது.

எனவே 'தீய விடயங்களுக்கும் வழிசமைக்கும் அதே நேரத்தில் தன் புனிதத்தையும் இழந்துள்ள நட்பை உயர்வானது என்று இன்றய காலத்தில் கூறமுடியாது.'

சந்தர்பங்கள் சூழ்நிலைகள்தான் நட்பை இவ்வாறு மாற்றியிருக்கிறது என்று எவறாவது சொன்னால் நான் அவருடன் வாதிடத் தயார் 'ஆம் அந்த சந்தர்பத்தை ஏற்படுத்தியது நாம் தான்' என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை.

ஆனால் இந்த நட்பு இன்றும் சற்று வாழக் காரணம் சில நண்பர்கள் இன்றும் நட்பின் தன்மையை இழக்காததுதான். நாம் அனைவரும் அதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த நட்புக்கு இருக்கும் ஒரு விஷேட தன்மையை சொல்லி இந்த தொடரை முடிக்கிறேன்.
அதாவது உறவுகளில் எந்த உறவுக்கும் இல்லாத ஒரு விஷேசம்.

தாய், தந்தை, கணவன், மனைவி, காதலி, காதலன், சகோதரன், சகோதரி இவ்வாறு எந்த உறவுக்குள்ளும் நட்பை இனைக்கலாம். இனைத்தால் அந்த உறவின் தன்மையை அது பாதிக்காது. உதாரணமாக சகோதரியுடன் நட்பை இனைத்தால் இந்த சகோதரத்துவம் பாதிக்காது அதே நேரம் அதே சகோதரியுடன் காதலி என்ற உறவையோ அல்லது மனைவி என்ற உறவையோ சேர்க்க முடியாது.

அப்படிப்பட்டது நட்பு. இன்று அதன் தன்மையை இழந்து நிற்கிறது காரணம் நாம். எனவே நட்பை நட்பாக மதிக்க நாம் அனைவரும் முன் வரவேண்டும். வெறும் கேலிக்கும் கூத்துக்கும் மட்டும் நட்பை பயன்படுத்தாமல் சாதனைகளுக்கும் சாதிப்பதற்கும் பயன் படுத்த வேண்டும்.

நட்பை உயர்த்த நட்புடன் ஒன்றினைவோம்.

இது என் தனிப்பட்ட கருத்துதான். வாழ்தி வரவேற்பதா? தற்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார்.... நீங்கள்?????????;


Post Comment

Thursday, September 02, 2010

பள்ளிப் பருவக் காதல்............


மறக்க முடியாத நினைவில்
அனைவரும் மறக்கத் துடிக்கும்
ஒரு நினைவு.......

ஈறாரு வயதினிலே இயல்பான
மனிதர்களுக்கு துளிர்விடுகிறது
இந்த இயல்பான காதல்

கண்களில் தொடங்கி கடிதத்தில் வளர்ந்து
நண்பர்களின் தைரியத்தில் கிளைவிட்டு
ஆலமரமாய் வளர்ந்தாலும் சில வேளை
வெட்டி வீசவும் படுகிறது...

வெற்றியோ தோல்வியோ....
இதன் நினைவு மட்டும் எப்போதும்
இனித்துக் கொண்டேயிருக்கும்
மறுபடி வாழ்ந்து பார்க்க
மனம் ஏங்கும் இந்தக் காதலுடன்...

நான்கு பக்க சுவருக்குள்
நண்பர்களுடன் இருக்கும் போதே
கண்களால் மட்டமே பேசும்
இந்தக் கள்ளக் காதல்.

ஒவ்வொரு நாளும் அவள் செல்லும் வழிபார்த்து
காத்திருந்து அவள் பார்வை பட்டவுடன்
தனியாக சிரித்து 10 அடி பின்னால் பாடசாலை செல்ல
பாதைகளும் என்னை கிண்டல் செய்யும்

வகுப்பறையில் அவள் திரும்பும் தருணம்
எதிர்பார்த்து பாடங்களை புறக்கனித்து
கிடந்த காலங்கள்..... இன்று நினைக்கும் போது
மெய் சிலிர்கிறது

இடைவேளை நேரங்களில் இடைவிடாமல்
அவள் பின்னால் சென்று வாங்கிய
கிண்டல்கள், அவமானங்கள் இன்று
இவை எல்லாம் கானல்நீராய் கரைந்து விட்டது

பாடசாலை விட்டவுடன் மீண்டும் பாதுகாவலன்
வேளையை பொருப்பெடுத்து அவள் வீடு வரை சென்று
வழியனுப்பி மீண்டும் வீடு திரும்பி வாங்கிய
கால் வலிகள் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது

விருப்பப் பாடங்களையும் விரும்பியவளுக்காக
தியாகம் செய்து அவளைப் பார்பதற்காகவே
தவம் கிடந்த நாட்கள் எல்லாம் இன்று மாறிவிட்டது

பகுதி நேர வகுப்புக்களிலும் அவள் செல்லும்
வகுப்புகளுக்கு மட்டுமே சென்ற கால்கள்
வீட்டுப் பயிற்சி கூட செய்யாமல் அவளுக்காக
மட்டுமே கடிதம் எழுதிய கைகள்
அவள் பெயரை மட்டுமே எப்பொழுதும்
உச்சரிக்கும் என் நாவு
அவளைப் பற்றிய எண்ணத்திலே இயங்கிய
என் இதயம்
இன்று அவள் இல்லாத என்னை கேலி செய்கின்றன......

அவளை ஒரு நொடி பார்பதற்காக
அவள் வீடிருக்கும் வீதியில் 4மணி நேரம்
காத்திருந்த காலங்கள்
அவளின் அப்பாவை கண்டு பயந்து
நடுங்கிய நிமிடங்கள்
அவளுடன் பேசுவதற்காக தொலைபேசி
எடுத்து அவளின் அம்மாவிடம்
மாட்டிக் கொண்டு திக்கித் திணரிய தருணங்கள்
அவளின் புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல்
மறைத்து வைத்து அழகு பார்த்த வினாடிகள்
அவளைப் பார்த்து எழுதிய கிருக்கல் கவிதைகள்
அவளுக்காக என் நண்பர்களுடன்
போட்ட முட்டாள்தனமான சன்டைகள்
அவள் நினைவோடு மட்டும் கனவில்
வாழ்ந்த இரவுகள்
இவை யாவும் இன்று என்னை விட்டு மறைந்து விட்டன.....

ஆனால் அவளின் பூ முகம் மட்டும்
என் நெஞ்சை விட்டு மறையவுமில்லை
நான் மறக்கவுமில்லை
அவளைப் பிரிந்து
சென்ற போது என்னுல் ஏற்பட்ட
இழப்பில்லாவலியுடன்

என் முதல் காதலும் அதுதான்
என் முடிவான காதலும் அதுதான்

என் பசுமை நினைவாக மாறி விட்ட
அந்த நாட்கள் என் மரணத்திலும்
மறக்காது............................

Post Comment

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஆரையம்பதி மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கை.

Kattankudi Web Community.
அன்மைக் காலமாக ஆரையம்பதி பிரதேசத்தில் காத்தான்குடி முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பல்வேறு விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு நாம் மிக வேதனையும், கவலையும் அடைகின்றோம்.

ஆரையம்பதிப் பிரதேசத்தில் அன்மையில் நடாத்தப்பட்ட காத்தான்குடி மக்களுக்கெதிரான அடையாள உண்னாவிரதம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த துண்டுப் பிரசுரங்கள் அனைத்துமே எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்று தமிழ் சகோதரர்களும்; ஒருவரை ஒருவர் புரிந்து இன ஐக்கியத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்துவரும் இன்றைய சூழ் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரோக்கியமானதாக அமையாது என நாம் கருதுகின்றோம்.

கடந்த கால போர்ச் சூழலில் தமிழ் சகோதரர்கள் அனுபவித்தது போன்று காத்தான்குடி முஸ்லிம்களும் மன்முனைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களும் பல்வேறு இழப்புக்களையும், துயர்களையும் சந்தித்தவர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

காத்தான்குடிப் பள்ளிவாயல் படுகொலை, காத்தான்குடி முஸ்லிம்கள் ஹஜ் இருந்து வரும்போது அம்பலாந்துறையில் வைத்துக் கடத்தப்பட்டமை, சிகரம், கீச்சான்பள்ளம், ஒல்லிக்குளம், மன்முனை, பாலமுனை, காங்கேயனோடை கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து மீளக் குடியமர்ந்தமை போன்ற பல்வேறு விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்வேறு காணிகள் இன்னும் அடாத்தனமாக பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருவதையும் அவை அரச காணிகள் என்று அரச அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுவதை நாம் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்நிலையில் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து இன ஐக்கியம், நல்லுறவு, ஒற்றுமை என்பவற்றைக் கருத்திற் கொண்டு இரண்டு சமூகங்களும் வாழ்ந்து வரும் இன்றைய சூழ் நிலையில் காங்கேயனோடை வீட்டுத்திட்டத்தை காரணம் காட்டி தமிழ் முஸ்லிம் உறவுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்காக நிர்மானிக்கப்படவுள்ள ஈரான் நாட்டின் உதவியிலான வீட்டுத்திட்டத்தை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தம் மற்றும் சுனாமி போன்;ற அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள ஏழை மக்களுக்கு முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் இவ்வீட்டுத் திட்டத்தை அமைத்து அதே பிரதேசத்திலுள்ளவர்களுக்கு அவ்வீடுகளை வழங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவித்து, மன்முனைப்பற்று பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனங்களை புண்படுத்த வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே, எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு பிரதேசங்களிலும் இருக்கின்ற சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றாக கூடி கலந்தாலோசித்து அப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

காத்தான்குடி முஸ்லிம்களுக்கு எதிரான தேவையற்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து பொது மக்களிடையே காணப்படும் சமூக நல்லுறவை சீர்குலைக்க வேண்டாமென தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

அல்-ஹாஜ். எஸ்.எச்.எம். இஸ்மாயில்
தலைவர்

அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். ஸபீல் (நளீமி)
செயலாளர்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி

Post Comment

ஆட்ட சதியில் ஈடுபட்டவீரர்களுக்கு தடை விதிக்க முடியாது: இம்ரான்கான்.


Virakesari.
பாகிஸ்தான் வீரர்கள் ஆட்ட சதியில் ஈடுபட்டது குறித்து அந்நாட்டு முன்னாள் அணி தலைவர் இம்ரான்கான் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆட்ட சதியில், போட்டிக்;கும் வேறுபாடு உண்டு. ஒரு வீரர் வேண்டுமென்றே நோபால் வீசுவதால் ஆட்டத்தின் முடிவு பாதிக்காது.

பாகிஸ்தான் வீரர்கள் ஆட்ட சதியில் ஈடுபட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post Comment

இரு கால்களுடன் ஜனவரியில் பிறந்த ஆடு இன்னமும் உயிருடன்!


Virakesari.
சீனாவின் சாண்டொங் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று இன்று வரை உயிர் வாழ்ந்து வருவது அனைவரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

எனினும் இதன் நீண்ட ஆயுட்காலம் தொடர்பாக அமெரிக்காவைச்ச் சேர்ந்த விலங்கியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஆட்டுக் குட்டியானது சாண்டொங் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமானதாகும்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவ்விவசாயி இக்குட்டி பிறந்தவுடன் இதன் உருவத்தைக் கண்டு இதன் ஆயுட்காலம் தொடர்பாக தாம் சந்தேகம் கொண்டதாகவும் எனவே இதனை தாம் குப்பையில் வீசிவிட எண்ணியிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

"இது தற்போது குட்டியாக இருப்பதால் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனாலும் இது 125 பவுண்ட்ஸ் எடை வரை வளரக் கூடியது. எனவே எதிர்காலத்தில் இந்தப் பாரத்தினை இவ்விரு கால்களினால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது" என விலங்கியல் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதற்கான நிரந்தரத் தீர்வு செயற்கையாக மேலும் இரு கால்களைப் பொருத்துவதே எனவும் ஆலோசனை தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக இவ்வாறு அதிசயத்துடன் பிறக்கும் ஜீவராசிகள் பிறந்த ஓரிரு தினங்களில் இறந்து விடுவதுண்டு. ஆனால் இந்த ஆட்டுக் குட்டிக்கு ஆயுசு கெட்டித் தான் போலும். கடந்த எட்டு மாதங்களாக உயிருடன் இருக்கின்றதே...!

Post Comment

ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்'.

Virakesari.
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

தற்போது கூகுள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்குப் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியானது ' ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' என அழைக்கப்படுகின்றது.

இது பாவனையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளும் மின்னஞ்சல்களை அதன் முக்கியத்துவ அடிப்படையில் வேறுபடுத்துவதாகும்..

இதன் போது பாவனையாளரின் இன்பொக்ஸ் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

முக்கியமான மின்னஞ்சல்கள் 'இம்போர்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' பிரிவுக்குள் உள்ளடக்கப்படும். மற்றைய மின்னஞ்சல்கள் அடுத்தடுத்த பிரிவுகளுக்குள் சேர்க்கப்படும்.

இம்மின்னஞ்சல்களை வேறுபடுத்துவதற்காக ஜிமெயில் சில விசேட சமிக்ஞைகளை உபயோகப்படுத்துகின்றது.

நாம் அதிகமாக எவரிடமிருந்து மின்னஞ்சல்களினை பெறுகின்றோம் மற்றும் பதிலளிக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்பாடு நடைபெறுகின்றது.

மேலும் மின்னஞ்சல் கணக்கில் காணப்படும் '+' பட்டன் மூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களையும் ' - ' பட்டன் மூலம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் குறிப்பிட்டுக் கொள்வதன் மூலமும் மின்னஞ்சல்களை வேறுபடுத்திக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகத் தனது ஜிமெயில் பாவனையாளருக்கு அறிமுகப்படுத்திவரும் 3ஆவது நவீன வசதி இதுவாகும்.

தொடர்புகளை நிர்வகிக்கும் ( கொன்டாக்ட் வசதி) வசதி, அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி என்பனவே அவையாகும்.

(காணொளி இணைப்பு)

Post Comment

பார்வையிழந்தோருக்காக செயற்கை கார்னியா கண்டுபிடிப்பு.


Virakesari.
பார்வையற்றோருக்கு புது நம்பிக்கையூட்டும் வகையில், புதிய செயற்கை கார்னியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைப் பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஸ்வீடன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கண் பார்வைக்கு மிக முக்கியமானது கார்னியா எனப்படும் கருவிழி. அது பாதிக்கப்பட்டார் பார்வை பறிபோகும். இந்த நிலையில் இந்த கார்னியாவை செயற்கையாக உருவாக்கி மூன்று நாட்டு விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்து, பார்வையற்றோருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரான ஒட்டாவா மருத்துவமனை ஆய்வுக் கழக டாக்டர் கிரிபித் கூறுகையில், செயற்கை கல்லோஜனை பயன்படுத்தி இந்த செயற்கை கார்னியாவை உருவாக்கியுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த செயற்கை கார்னியாவை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்து ஆய்வு செய்தோம்.

அதில் ஆய்வுக்குட்பட்டோருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த செயற்கை கார்னியாவை கண்ணில் பொருத்துவதன் மூலம் பாதிப்புக்குள்ளான பகுதியில் செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு பார்வை திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது.

கிட்டத்தட்ட கான்டாக்ட் லென்ஸ் போல இந்த செயற்கை கார்னியா பொருத்தப்படுகிறது என்றார்.

Post Comment

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் இனி தங்கும் காலம் குறைவு.


Virakesari.
ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும், வேகமாக அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தினரை திரும்பப் பெறுவதில் அதிபர் ஒபாமா தீவிரமாக இருக்கிறார்.

அமெரிக்க அதிபராக இருந்த புஷ், 2003ஆம் ஆண்டு படைகளை அனுப்பி சதாம் உசேனுக்கு எதிராக போர் தொடுத்தார். அது முதல் கொண்டு அமெரிக்க படைகள் ஈராக்கில் தங்கி விட்டன.

தற்போதைய அதிபர் ஒபாமா தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்க படைகளை வாபஸ் பெற போவதாக தெரிவித்திருந்தார். இவரது வாக்குறுதி படி ஈராக்கிலிருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டு விடும் என, ஒபாமா அரசு உறுதி அளித்துள்ளது.

இந்த வாக்குறுதியின் ஒரு கட்டமாக நேற்று முதல், ஈராக்கில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதை அமெரிக்க படைகள் நிறுத்தி கொண்டன.

தற்போது ஈராக்கில் தங்கியுள்ள அமெரிக்கப் படைகள், ஈராக் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுவார்கள்.இதனிடையே ஈராக்கில் பணி முடித்து டெக்சாஸ் மாநில முகாமுக்கு திரும்பிய ராணு வீரர்களிடையே ஒபாமா நேற்று உரையாற்றினார்.

Post Comment

Wednesday, September 01, 2010

என்னைத் தருகிறேன்......


என் கனவில் தோன்றும் உன்
விம்பத்தை பற்ற நினைக்கிறேன்
கானல் நீராய் கரைந்து விடுகிறாய்
என் ஒவ்வொரு காலைப் பொழுதிலும்

மிகவும் மகிழ்வானவன் நீ என்று
சொல்கிறார்கள் என்னை நோக்கி
உனக்குத் தெரியாது பெண்னே......
நீ இல்லாத வாழ்வில் நான் வாங்கும்
வலிகள்.....

சிலர் தூற்றுகின்றனர் நீ கூடுதலாக
சிரிக்கிறாய் என்று
அவர்களுக்குத் தெரியாது-என்
மனக் கண்கள் அதே அளவு அழுகிறது என்று

என் சிரிப்புக்குள் ஒழிந்திருக்கும்
வலி கொண்ட அழுகை இதுவரை
புரியவில்லை என் தாய்க்கு கூட.........

என் வாழ்வில் காலங்கள் பல கருகியும்
கண்ணீரோடு காத்துக் கிடக்கிறேன்-என்
காதலை ஏற்றுக் கொண்டு நீ வருவாய் என.......
என் உடம்பினுல் மறைந்த மனதுடன்
மறைந்து விட்டது நீ வரவேண்டும் என்ற
ஆதங்கமும்.......

வீதியோரம் கால் கடுக்க நான் காத்திருக்க
வசந்தகால தென்றலாய் நீ என்னை கடக்க
ஒழிந்திருந்து உனை உற்று நோக்கிய தருணங்கள்
இன்று என் வாழ்வில் வெறும் நினைவுகளாய் மட்டுமே
பகிர்ந்து கொள்ள நீ இல்லாமல்........

உன்னை கண்ட நொடியிலயே தொலைந்த
என் உயிரை தொலைதூரம் சென்று தேடுகிறேன்
தொலைந்த இடத்தை விட்டு விட்டு........

என் உடம்பு தேடுகிறது என் உயிரை
நீ வந்து விடு அல்லது உயிரை தந்து விடு
இனியும் போலியாக வாழ இல்லை பிணமாக வாழ
என்னால் முடியாது....

மறக்க நினைக்கிறது உன்னை என் மனம்
முடியாமல் நனைகிறது என் கண்களுடன்
இதயமும்...
உன்னை நினைத்து இதயம் துடிக்க
இரத்த ஓட்டத்திலும் உன் நினைவு
கலந்துவிட்டது
என் உயிரோடு மட்டுமல்ல உணர்வோடும்
கலந்நு விட்டாய் நீ
பிரிக்க இல்லை எரிக்க கூட முடியாது
என்னில் இருந்து உன் நினைவை....

இதயத்தில் இரத்தம் சொட்ட
விழியில் நீர் கசிய
வலிகள் அனைத்தையும் வாங்கியாக
வலி தாங்கியாக
காத்துக் கிடக்கிறேன் ஒரு வரண்ட
பூமியில்..........


பசுமை கொண்ட மழையாக
நீ என்னை சேறுவாய் என
ஒரு சேதி சொல்
இப்போதே 'என்னைத் தருகிறேன்'
உன் வரவுக்காக.

Post Comment

நடுவரின் தீர்ப்பு மறுபரிசீலனை: பி.சி.சி.ஐ. மறுப்பு

Virakesari.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை (யு.டி.ஆர்.எஸ்) முறைக்கு இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இந்தியா வருகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மொகாலியிலும் (அக்., 1 முதல் 5), இரண்டாவது டெஸ்ட் பெங்களுர்விலும் (அக்., 9 முதல் 13) நடக்கிறது. இதற்கு பின் ஒருநாள் போட்டிகள் கொச்சி (அக்,17), விசாகப்பட்டினம் (அக்., 20), கோவாவில் (அக்., 24) நடக்கிறது.

இத்தொடர் குறித்து பி.சி.சி.ஐ., முக்கிய தலைமை அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், எதிர்வரும் அவுஸ்திரேலிய தொடரில் யு.டி.ஆர்.எஸ்., முறை நடைமுறைப் படுத்தும் எண்ணம் இல்லை. இதனை நாங்கள் ஐ.சி.சி.,யிடம் முன்னதாகவே தெரிவித்து விட்டோம். தவிர, உலகக் கிண்ண தொடர் என்பது ஐ.சி.சி., நடத்துவது. இதில் யு.டி.ஆர்.எஸ்., முறையை கொண்டுவருவது என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது, என்றார்.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில்,டெஸ்ட் போட்டிகளில் யு.டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்ததால் ஏற்பட்ட பலன் எல்லோருக்கும் தெரியும். தற்போது இதை எதிர்வரும் உலகக் கிண்ண தொடரிலும் அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளோம், என்றார் ,

Post Comment

பேஸ்புக் போட்டியாக டயஸ்போரா.பேஸ்புக் நாம் அனைவரும் அறிந்ததும் எம்மில் பலர் உபயோகித்து வருவதுமான ஒரு சமூக வலைப் பின்னல் தளம்.

இந்நிலையில் பேஸ்புக்கிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் புதிய சமூக வலைப்பின்னல் தளமொன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இத்தளமானது ' டயஸ்போரா ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி தளத்தினை உருவாக்குவதற்காக நியூயோர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 200,000 அமெரிக்க டொலர் பணத்தினைத் திரட்டினர்.

பேஸ்புக்கின் உருவாக்குனர் மார்க் ஸுக்கர்பேர்க்கும் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தார் என்பது மேலதிகத் தகவலாகும்.

இத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களை நோக்குமிடத்து பேஸ்புக்கின் அடிப்படை அம்சங்களான மல்டிமீடியா செயாரிங், ஸ்டேடஸ் அப்டேட், செட்டிங் வசதி என்பவற்றைக் கொண்டுள்ளது.

இதனுடன் வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினையும், இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதியினையும் கொண்டமையவுள்ளது.

இதன் சிறப்பம்சம் இது ' ஓப்பன் சோர்ஸ் ' என்பதுதான். இதன் காரணமாக, இத்தளத்தின் பாவனையாளர்கள் தங்களின் அனைத்து விதமான தகவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் தாங்களே நிர்வகிக்க முடியும்.

Post Comment

வயது 14; உயரம் 6 அடி 9 அங்குலம் : அசத்துகிறார் பிரேஸில் சிறுமி!


Virakesari.
"எனது உயரமே எனக்குச் சாதமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார்.

14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா? 6 அடி 9 அங்குலம்.

அடேயப்பா... ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?

சாதகமான சூழலை மட்டுமல்ல, சில வேளைகளில் பாதகமாகவும் தனது உயரம் அமைந்து விடுகின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

அதாவது அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி கவலைப்படுகின்றார் எலிசினி.

'மாடலிங்கி'ல் நாட்டம் கொண்டுள்ள இவர், பிரேஸிலில் இடம்பெறப் போகும் மணப்பெண் அலங்காரப் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

14 வயதிலேயே இந்த உயரம் என்றால்...பருவமடைந்து, இளம்பெண்ணாகும் போது இவரது உயரம் எப்படி இருக்கப் போகின்றதோ? திருமணம் என்று வரும் போது இவருக்கேற்ற மணவாளனைத் தேடுவதில் இவரது பெற்றோர் என்ன சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை.

Post Comment

டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் வெளியீடுVirakesari.
கடலில் மூழ்கிப் போய் விட்ட டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் கிடைத்துள்ளன. மிகத் துல்லியமான இந்தப் படங்கள் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

உலக மக்களால் மறக்க முடியாத பெயர் டைட்டானிக். 1912ம் ஆண்டு 1500பேருக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் அன்டார்க்டிக் கடலில் சென்று கொண்டிருந்த உலகின் புகழ் பெற்ற சொகுசுக் கப்பலான டைட்டானிக், பெரிய ஐஸ் மலையில் மோதி கடலில் மூழ்கியது.

அதுதான் பிரமாண்டமான டைட்டானிக்கின் முதல் சொகுசுப் பயணமாகும். கடலில் மூழ்கியதில் அதில் இருந்த அத்தனை பேருமே ஜல சமாதி அடைந்தனர்.

மூழ்கிப் போய்விட்ட கப்பலை இதுவரை மீட்க முடியவில்லை. அவ்வப்போது டைட்டானிக்கை அடையும் அகழ்வுப் பணிகள் நடந்தபடி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் புதைந்து கிடக்கிறது.

தற்போது கனடாவைச் சேர்ந்த ஒரு குழு டைட்டானிக் குறித்த புதிய புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு சிலிர்க்க வைத்துள்ளது. இதுவரை இல்லாத மிகத் துல்லியமாக உள்ளன இந்தப் படங்கள். ரோபோட் மூலம் இந்தப் புகைப்

படங்கள் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28-ம்தேதி இந்தப் படங்களை பிரீமியர் எக்ஸிபிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் டைட்டானிக் கப்பலின் முகப்புப் பகுதியின் மேல் பகுதி தெளிவாக தெரிகிறது. முகப்புப் பகுதியின் மேல் பகுதியில் உள்ள தடுப்புக் கம்பி உள்ளிட்டவை அப்படியே இருக்கிறது. கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நங்கூரம்கூட அப்படியே காணப்படுகிறது.

இமேஜிங் டெக்னாலஜி மற்றும் சோனார் சாதனங்கள் மூலம் இந்தப் புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்துள்ளது கனடிய குழு. டைட்டானிக் கண்டுபிடிப்பு முயற்சியில் முதல் முறையாக இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை கனடிய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்திடம்தான் புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலின் உரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலிலிருந்து எதையாவது கண்டுபிடித்தால் அதை இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கடல் பகுதியில் டேனியல் என்ற புயல் வீசிக் கொண்டிருப்பதால், வானிலை மோசமடைந்துள்ளது. இதனால் ஆய்வுக் குழு கனடாவில் உள்ள நியூபவுன்லேன்ட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளது. கடல் அமைதி அடைந்ததும் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் படத்தை எடுத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும்கூட படத்தை எடுப்பதற்கு முன்பு நேரடியாக அகழ்வாராய்ச்சியில் இறங்கி டைட்டானிக்கின் மேல் பக்கம் உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுத்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டுதான் டைட்டானிக் குறித்த அகழ்வாராய்ச்சி நடந்தது.Post Comment

Tuesday, August 31, 2010

உன்னைத் திருத்து.


இரக்கமில்லா இரவில் தன்னந்தனியாய்
நடு வீதியில் நானிருக்க
நாணமில்லா நளினத்துடன் நடைபயின்றால்
நங்கையொருத்தி நானிருந்த திசைபார்த்து.....

அவளின் அழகான சிரிப்பில் ஆபத்தை உணர்தியது
என் மனம் சற்று ஒதுங்கினேன்.
வெறுப்புடன் நானிருக்க வெட்கமில்லா
வாய்ப் பேச்சால் என் எண்ணம் கலைத்தால்
'சார் காலையில சாப்பிட்டது ஏதாவது help பண்னுங்க?'

மனிதம் மங்காத என்னில் மனிதாபிமானத்தோடு
50 ருபாய் கொடுத்தது என் கரங்கள்
விசாரனைக் கேள்வி தொடுத்தது என் நாவு
யார் நீ? இந் நேரம் என்ன செய்கிறாய்?

மறு நிமிடம் நனைந்தது அவள் கண்கள்
சற்று தடுமாறியது என் இதயம்...

வெட்கமில்லாமல் சொன்னால் அவள் ஒரு
விடுதியில்லா விபச்சாரி என்று
ஏன் இப்படி? எதற்கு இந்த தொழில்?
மீண்டும் கேள்வி தொடுக்கப்பட்டது
என்னில் இருந்து.......

சொன்னால் செய்தி ...........
அவளின் சோகச் செய்தி...........

இறைவன் ஒருவன் இருந்திருந்தால்
அம்மா என்னை அரவனைத்திருந்தால்
என் அப்பா உழைத்திருந்தால்
காதலன் கரம் பிடித்திருந்தால்
கணவன் காப்பாற்றியிருந்தால்
இச் சமூகம் சாக்கடையாய் மாறாமல் இருந்திருந்தால்
என் வாழ்வும் மலர்ந்திருக்கும் என்றது அவள் நாவு

என் வார்தை வழுவிழக்க
என் உடம்பு படபடக்க
என் மனம் குழம்பி அழுதது
இப்படியும் ஒரு பிரச்சைனையா என்று
விடைகொடுத்தேன் சற்று பரிதாபத்துடன்

வலிகள் நிறைந்ததுதான் வாழ்கை என்று
சொன்ன நான் சோகத்தில் மூழ்கினேன்
சமுதாயத்தின் சில சாக்கடைகளை எண்ணி

என்ன செய்யலாம் என்ற யோசனையில் தத்தளித்த போது
'திருடுற கூட்டம் திட்டம் போட்டுத் திருடிக் கொண்டே இருக்குது
அதை தடுக்குற கூட்டம் சட்டம் போட்டுத் தடுத்துக் கொண்டேயிருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'என்ற
ஒரு கவிஞனின் வரி எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தது

'உன்னைத் திருத்து உலகம் தானாய் திருந்தும்'
என்ற எண்ணக் கருக்குள் அடங்கிப் போனேன்
என் எழுத்துக்களுடன்...........

Post Comment

புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்Virakesari.
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது.

முன்னைய தரவரிசை பட்டியலின் படி இலங்கை அணி ஆறாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த தொடரில் பெற்றுக்கொண்ட வெற்றிகளை அடுத்தே இலங்கை அணி, தரவரிசையில் முன்னேற்றம் பெற்றுள்ளது.

இந்த புதிய தரவரிசைப்படி தொடர்ந்தும் அவுஸ்ரேலியா முதலாவது இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. நான்காம் இடத்தில் தென்னாபிரிக்க அணியும், 5 ஆம், 6 ஆம் இடங்களில் முறையே இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.

ஆறாம் இடத்தில் பாக்கிஸ்தானும் ஏழாம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பெற்றுள்ளன. இதேவேளை டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்க அணியும், மூன்றாம் இடத்தில் இலங்கை அணியும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

4 ஆம், 5 ஆம் மற்றும் ஆறாம் இடங்களில் முறையே, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான் ஆகிய அணிகள் பிடித்துள்ளன.

Post Comment

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்.Virakesari.
உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

Post Comment

ஒசாமா பின்லேடன் ஜோர்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்ட சி.ஐ.ஏ ஏஜென்ட்: காஸ்ட்ரோVirakesari.
ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அவரால் சிஐஏ ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன். இது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

லிதுவேனியாவைச் சேர்ந்த எழுத்தாளர் காஸ்ட்ரோவை சந்தித்தார். அப்போது உடன் இருந்த பத்திரிக்கையாளர்களிடம் காஸ்ட்ரோ பேசுகையில்,

சிஐஏவால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்தான் பின் லேடன். ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவே பின் லேடனை விலைக்கு வாங்கியது சிஐஏ. உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் புஷ்ஷின் பிரதான எண்ணம். அதற்கு வசதியாக அவர்கள் லேடனை பயன்படுத்திக் கொண்டார்.

தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை பின்லேடன் அறிவிப்பார். அவரைத் தொடர்ந்து புஷ் எச்சரிக்கும் வகையில் பேசுவார். இரண்டுமே திட்டமிட்ட நாடகங்கள். புஷ்ஷுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவர் லேடன். புஷ்ஷுக்குக் கீழ்ப்பட்டவராகவே அவர் இருந்து வந்தார்.

லேடன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்பது ஆப்கன் போர் ரகசியம் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன என்றார் காஸ்ட்ரோ.

84 வயதாகும் காஸ்ட்ரோ சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். தற்போது அவர் நலமடைந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கும் போக ஆரம்பித்துள்ளார். வழக்கமான முறையில் செயல்பட ஆரம்பித்தது முதல் பரபரப்பு பேச்சாக பேசி வருகிறார் காஸ்ட்ரோ.

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அணு ஆயுத யுத்தம் வரும் என்று சமீபத்தில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஒசாமா பின்லேடன்,அமெரிக்காவின் ஏஜென்ட் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post Comment

Monday, August 30, 2010

நரகத்தை கண்டதுன்டா?????


நாடிழந்து, நகரிழந்து, நடைபினமாய்
நாற்பக்க கம்பிவேலிக்குள் நடமாடுகிறது
ஒரு நாதியில்லாக் கூட்டம்.

ஒடுங்கியிருந்த என் கற்பனையை உடைக்கிறது
அவர்களின் நினைவு
உறங்கிக் கிடந்த என் கரங்களை தட்டி எழுப்பியது
அவர்கள் வாங்கும் வலிகள்.

நரகத்தை கண்டதுன்டா பூமியில்
சென்று பாருங்கள் அகதிமுகாம்களில்...........

முகம் இருந்தும் முண்டமாக,
கண் இருந்தும் குருடனாக,
காது இருந்தும் செவிடனாக,
வாய் இருந்தும் ஊமையாக,
கை,கால் இருந்தும் இயக்கமற்றவர்களாக,
இதயம் இருந்தும் இரத்த ஓட்டமற்றவர்களாக,
மொத்ததில் உயிர் இருந்தும் பிணமாக,
கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்
அகதி எனும் அழியாப் பெயருடன்............

யார் இவர்கள்??????????
சுதந்திரக் கூடு எனும் பெயரில்
மனிதமே அற்ற சிறைக்கூட்டில்
அமுக்கப்பட்ட வாயில்லாப் பூச்சிகள்.
சொந்த மண்னை விட்டு, வீட்டை விட்டு
ஊரை விட்டு, நாட்டை விட்டு
துரத்தியடிக்கப்பட்டவர்கள்.

தீவிரவாதம் எனும் கொடுர நெருப்பில்
காய வைத்து தீக்கிரையாக்கப்பட்டவர்கள்.

வெந்த மனதுடன், வழிந்தோடும் கண்ணீரோடு,
உடுத்த உடையுடன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு
இரத்தம் படிந்த ஓர் இரவில் போர் எனும் மிகக் கொடிய
இரக்கமற்ற அரக்கனால் தூக்கியெறியப்பட்டவர்கள்

உறவுகளை இழந்த வலி
உடைமைகளை தொலைத்த சோகம்
இன்றும் தெரிகிறது ஏக்கமும், எதிர்பார்ப்புகளும்
நிறைந்த இவர்களின் இரு கண்களிலும்


ஒரு நேரச் சாப்பாட்டை 9 பிள்ளைகளுக்கு
3 வேளை பிரித்துக் கொடுக்கும் ஒரு தாயின்
அபல நிலையை கண்ட நிமிடம் என் இதயம்
நின்று மறுபடி துடிப்பதை உணர்கிறேன்
எதுவும் செய்ய முடியாத கோழையாக.....

குழந்தைகள் குமுறி அழுகின்றன
சிறுவர்கள் சீரழிந்து நிற்கின்றனர்
வாலிபர்கள் வழுவிழந்து வாயடைத்து விட்டனர்
பெண்கள் தங்களை வெறும் பொம்மைகளாக்கி கொண்டனர்
முதியவர்கள் முழுமதியையும் இழந்து விட்டனர்
இந்த நரகத்தில்.......

இது கடவுளின் விதியா? இல்லை
மனிதனின் சதியா? என்று இன்றும்
பட்டி மன்றம் நடத்துகிறது
பகுத்தறிவில்லாக் கூட்டம் ஒன்று

அரசியல் இலாபங்களுக்காக
மேடைகளில் விருந்தாக்கப் படுகிறது
இவர்களின் அவல நிலை

அன்பால் அரவனைக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்
இன்று அகதி முகாம்களில் அங்கலாய்கின்றனர்.

மனிதர்களே!!!! மனிதம் உள்ளவர்களே!!!!!
மண்டியிடுகிறேன் உங்கள் முன்
என் அகதிக் கைதிகளுக்காக
அரவனையுங்கள் அவர்களையும் உங்கள்
அன்பாலும் பண்பாலும் உதவிக் கரம் கொண்டு....
24 மணி நேர ஒரு நாளில் சிந்தியுங்கள்
1 வினாடியாவது இந்த அரவனப்பற்றவர்களைப் பற்றி

தூக்கி வீசுங்கள் உங்கள் பகைமையை
போர் எனும் கொடிய அரக்கனை அனைவரும் சேர்ந்து
தீக்கிரையாக்குங்கள்
மனிதத்தை வளருங்கள், மன்னிப்பை பரிசளியுங்கள
மடிந்து போகும் வாழ்வில் மற்றவர்களுக்கும் சற்று மதிப்பளியுங்கள்

இனியும் வேண்டாம் இன்னொரு அகதிக் கூடம்
இதுதான் இந்த இயலாத எழுத்தாளனின் ஆக்ரோஷம்............


Post Comment

சூதாட்ட சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்கள்


Virakesari.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலண்டனில் வெளிவரும் பத்திரிகையான நியூஸ் ஆப் த வேல்ட் அதிரடி செய்தியை வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், லார்ட்ஸ் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்றே நோபால்களை வீசியதாகவும் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தான் அணியை சேர்ந்த 7 முக்கிய வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பான வீடியோ ஆதாரமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் அணி தலைவர் சல்மான் பட், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமீர் உள்ளிட்ட 7 வீரர்களிடம் ஸ்காட்லாந்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி உள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது

Post Comment

மோனலிசா ஒவியத்தின் புன்னகையின் இரசியம் அறியப்பட்டுள்ளது


Virakesari.
உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.

இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.

மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Post Comment

Sunday, August 29, 2010

'யூ டியூபில் இணையத்தள தியட்டர்' சேவை ஆரம்பம்


virakesari.
உலக மக்களை காணொளி வலைப்பின்னல் மூலம் கவர்ந்த இணையத்தள சேவையான 'யூ டியூப் யூகே'(YouTube UK )'யூ டியூப் தியேட்டர் ' என்ற சேவையை ஆரம்பித்துள்ளது.

இதில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக உள்ளது. இந்த சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைவாக பல திரைப்படங்களை யூ டியூப் இல் வெளியிடும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் ஹொலிவூட்,பொலிவூட் மற்றும் காட்டூன்களை இலவசமாக பார்வையிடலாம்.

Post Comment

இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்

Virakesari.
இந்தோனேசியாவின் தீவுப் பகுதியான சுமாத்ராவில் உள்ள எரிமலைக்குழம்பிலிருந்து பெருமளவிலான அக்கினிக் குழம்புகள் வெளியேறுவதன் காரணமாக 1000 இற்கும் அதிகமான இந்தோனேசிய மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

‘சினபங் என்ற இவ் எரிமலை 1,500 மீற்றர் உயரத்திற்கு நேற்று நடுநிசியில் வெடித்துள்ளது.400 வருடங்களுக்கு பிறகே சினபங் எரிமலை வெடித்துள்ளது’ என இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவர்நிலையம் தெரிவித்தது.

தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் இது குறித்து தெரிவிக்கையில்,

‘ எரிமலை வெடிப்பு முன்னெச்சரிக்கை அளவானது அதிகரித்தவண்ணம் உள்ளது. எரிமலையிலிருந்து வெளியேறும் புகையின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலை ஆபத்தானதாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.

Post Comment

பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள கட்டி

Virakesari.
ஆர்ஜென்டினாவில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்தில் உள்ள லோமாஸ்டி ஷமோரா என்ற நகரை சேர்ந்த 54 வயதான பெண்மணியின் வயிற்றிலிருந்தே இவ்வாறு பாரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

இவர் 18 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது வயிறு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

ஆர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் எர்ஸ் என்ற இடத்தில் உள்ள வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டார். 'ஸ்கேன்' செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் ஒரு கட்டி வளர்ந்திருப்பது தெரிய வந்தது. உடனே அவருக்கு டாக்டர்கள் சத்திர சிகிச்சை செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த சத்திரசிகிச்சை முடிவில் அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது.

இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனித உடலில் இருந்து இதுவரை அதிக பட்சமாக 4.3 கிலோ எடையுள்ள நோய்க் கட்டிதான் அகற்றப்பட்டுள்ளது. இது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு மிகப்பெரியது என 34 வருட அனுபவம் வாய்ந்த டாக்டர் ஆஸ்கார் லோபெஷ் தெரிவித்துள்ளார்.

Post Comment

காலடிச் சத்தம்....தென்றலாய் வந்து
வசந்தமாய் வீசி
புயலாய் உறுவெடுத்து

என் வாழ்வை-நீ
வருத்திவிட்டுப் போனாலும்
என் விழி மூடிய ஒவ்வொரு இரவிலும்

கனவின் கருவாய் ஒலிக்கிறது
நீ வருகிறாய் என்ற உன் காலடிச் சத்தம்.

Post Comment

டில்சானின் சதத்துடன் இலங்கை இறுதி போட்டியில் வெற்றி


Virakesari.
டில்சானின் அதிரடி சதத்தின் மூலம் முக்கோணத் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களல் அபார வெற்றிப் பெற்றது.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

புள்ளிகள் அடிப்படையில் இலங்கை, இந்தியா முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய-இலங்கை அணிகளுக்கிடையே போட்டியில் இலங்கை இலகுவாக வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் சங்ககர முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டில்சானும், ஜயவர்தனவும் சிறப்பான இனைப்பாட்டத்தை ஏற்படுத்தினர். முதல் ஓவரை பிரவின் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டம் பெறப்பட்டது. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன்பின் இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். இதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது, 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக விளையாடிய தில்சான் அரைசதம் அடித்தார், அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றார்.

மறுமுனையில் இருந்த ஜயவர்தன 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கை மூலம் ஜயவர்தன தனது ஒரு நாள் போட்டியில் 9000 ஓட்டங்களை கடந்தார். ஜயவர்தன இந்த ஓட்ட எண்ணிக்கையை கடந்ததன் மூலம் 9000 ஓட்டங்களை பெற்ற மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய தரங்க 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய சங்ககார டில்சானுடன் இனைந்து சிறப்பான இனைப்பாட்டத்தை ஏற்படுத்தினார்.

இந்நேரத்தில் டில்சான் 100 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தனது ஒரு நாள் போட்டியில் 8 ஆவது சதத்தைப் பெற்றார்.

மறுமுனையில் இருந்த சங்ககார 71 ஓட்டங்களை பெற்று தனது ஒருநாள் போட்டியில் 58 ஆவது அரைச் சதத்தைப் பெற்றார்.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய இடை நிலை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கு இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது. இந்நிய அணியின் பந்து வீச்சில் பட்டேல் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 300 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் செவாக் 28 ஓட்டங்களையும், கார்திக் ஓட்டம் எதுவும் பெறாதும், ஹோலி 37 ஓட்டங்களையும், யுவராஜ் 26 ஓட்டங்களையும், ரெய்னா 29 ஓட்டங்களையும், தோனி 67 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

எனவே இந்திய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பந்து வீச்சில் பெரேரா மற்றும் ரன்தீவ் தலா 03 விக்கெட்டுகளையும், மாலிங்க 2 விக்கெட்டுகளையும் மெத்தியுஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் அடிப்படையில் முக்கோணத் தொடர் இலங்கை வசமானது.

Post Comment

சீனாவின் நவீன 'ஸ்ட்ரட்லிங் பஸ்'

Virakesari.
போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது.

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Post Comment

அமெ.தூதரகம் மீது இன்று பாகிஸ்தானில் துப்பாக்கித் தாக்குதல்

Virakesari.
பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகத்தை குறிவைத்து இன்று மர்ம நபர்கள் துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்டனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் கூடிய அந்தப் பகுதியில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், திடீரென அமெரிக்கத் துணை தூதரகத்தைச் நோக்கி சுட்டனர்.

தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

4 மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ம நபர்களைப் பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பெஷாவர் நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Post Comment

Saturday, August 28, 2010

வழி மேல் விழி வைக்கிறேன்காவியம் படைக்க நீ வருவாய்
என நினைத்தேன்.
காலத்தின் சோகத்தில் கலங்குகிறாய்
என்றரிந்து துடித்தேன்.

மறைவு என்பது சூரியனின்
மரணம் இல்லை காதலா,
மீண்டும் கிழக்கில் பிறக்கும்
என் நம்பி நடடா என் காவலா.

குடும்பங்களை, நண்பர்களை பிரிந்த
வலியின் வடு தெரிகிறது உன் கண்ணில்....
"காலங்கலே மாறும் உலகில் என் கவலை மட்டும்
நிரந்தரமில்லை" என்ற நினைப்பு உன் நெஞ்சில்...

நாளை உன்னை எதிர்பார்கிறது,
தளர்வில்லா தன் நம்பிக்கை உன்னை தாங்கிப் பிடிக்கிறது,
உன்னை நினைத்து என் பேனா காகிதத்தில் அழுகிறது,
உன் வலி கொண்ட அழுகை என் நெஞ்சை துளைக்கிறது.

நடைபிணமாய் நீ வெளிநாட்டில்,
உன் நினைவாய் உன் குடும்பம் உள்நாட்டில்,
நாதியற்று நானும் நம் நாட்டில்,
வெறித்த பார்வையோடு விடியாத இரவில்...

தொலைபேசியில் தொல்லை கொடுத்தவன்
என்று சொன்ன எனக்கு
இன்று தொலைபேசி கேட்கிறது
"இனி தொல்லை கொடுப்பவன் யார் உனக்கு????"

காலத்தின் நிர்பந்தத்தால் கடல் கடந்து சென்று
கஷ்டப்படுகிறாய் போர்வை போர்திய போலிப் புண்னகையோடு.
விடியலை எதிர்பார்த்து வெறுத்துப் போன உன் விழிகளுக்கு
விருந்தாகிறது சில இரவு நேரவிளக்குகள் மட்டுமே உன் வாழ்வோடு.

உன் பயணச் சேதி கேட்டுத் திகைத்தவள் நான்
இன்றும் திரும்பவில்லை இயல்பு வாழ்கைக்கு.
அடிமையாகிப் போனது என் அத்தனை நினைவுகளும்
நீ பிரிந்து சென்ற அந்த விமான ஓசைக்கு...

உன்னைப் பற்றிய கனவில் வாழ்ந்த நான்,
இப்போது உன்னை எண்ணி கற்பனையில் வாழ்கிறேன்.
விடிய விடிய பேசிய இரவுகள் எல்லாம்
இன்று என் விழிகள் நனைத்தே விடிகிறது.

நலமா? என்று கேட்டு கொச்சைப் படுத்தவில்லை
உன் உணர்வுகளை நான்
உன் வாழ்வைத் தேடி நீ சென்ற பயணம்
வசந்தமாய் மலர 5வேளை வேண்டுகின்றேன் நான்

நம் காதலை, பாசத்தை, நேசத்தை,
கருனையை, அன்பை, நட்பையெல்லாம்
விட்டு பிரிக்கப் பட்டிருக்கிறாய்,
பொருளாதாரம் எனும் பிசாசால்.

அரபிக் கடலோடும், வரண்ட பாலைவனத்தோடும்
பொருமை அடைந்து கொள் சில காலம்.
'பிரிவுகள் நிரந்தரமில்லை' என்ற வலியின்
வரியோடு அமைதி அடைகிறேன் நான் மிகுதி நேரம்.

கலங்காதே என் கண்ணாளனே....
நம் காதல் கைப்பிடிக்கும்.
காலங்கள் கை கூடும்.
வசந்தம் வழி சமைக்கும்.
உறவுகளும் உன்னோடினையும்.
வருங்காலம் உன்னை வாழ்த்தும்.

என் பெண்மையின் மென்மையை உணர்த்தியவனே.....
உன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழி வைக்கிறேன்
தாயைப் பிரிந்து ஏங்கும் ஒரு கைக்குழந்தை போல....

Post Comment

Friday, August 27, 2010

அறிந்ததுன்டா நீங்கள்????நாம் இந்தப் பகுதியினூடாக உங்களை சந்திப்பது இது 3வது தடவை. ஏற்கனவே கடல் மற்றும் சுத்தம் சம்மந்தமான தகவல்களை பகிர்ந்த நாம் இன்று சற்று வித்தியாசமாக மனிதர்களின் உல்லாசப் பிரயாணங்களுக்கு முக்கியம் கொடுத்திருக்கிறோம். இந்த தகவல்கள் உங்களுக்கு மிகவும் தேவையுடயதாக இருக்கும்.

பிரயாணங்கள் எனும் போது அவை பல காலகட்டங்களில் பல விதமாக மேற்கொள்ளப்பட்டாலும் காலத்தால் அழியாமல் இன்று வரைக்கும் நிலைத்து நிற்பது ஒரு பிரயாணம் மாத்திரமே(கொஞ்சம் யோசிங்க). தரையில் மேற்கொள்ளப்படுகின்ற பிரயாணங்கள் மாறலாம் ஆனால் ஆகாயம் கடல் மார்க்கம் என்பன மாறுபடாது. இவற்றில் மிகவும் பழமை வாய்ந்தது கடல் பிரயாணங்கள்.

ஆமாங்க இந்தப் பகுதியில் நாம் உங்களுக்காக பகிரப்போகும் விடயம் மக்களால் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக நடைமுறைப் படுத்தப்படும் உள்ளாச கடல் பிரயாணங்கள் பற்றித்தான். ஆம் மக்கள் தங்கள் உள்ளாச கடல் பிரயாணங்களுக்காக தேர்ந்தெடுக்கும் இடங்களில் முதல் பத்து இடங்கள் பற்றிய தகவல்கள் தான் நாம் இன்று உங்களுக்காக கொண்டுவந்திருக்கும் தகவல்

வாங்க போகலாம்......

1. கரீபியன்(Caribbean)
2. அலஸ்கா(Alaska)
3. தென் அமெரிக்கா(South America)
4. பெல்டிக் கடல்(The Baltic Sea)
5. பணாமா கால்வாய்(Panama Canal)
6. ஹவாய் தீவுகள்(Hawaii)
7. மேடிட்டேரியன்(Mediterranean)
8. கெல்பேஜஸ் தீவுகள்(The Galpages islands)
9. த டிஸ்னி எக்ஸ்பீரியன்ஸ்(The disney Experience)
10. தகிட்டி,ஆவுஸ்திரேலியா,ஆசியா,நியுஸிலாந்து(Tahiti, Australiya, Asia, Newzeland)

இந்தப் பெயர்களில் தோன்றும் link கை கிளிக் செய்வதன் மூலம் அந்த இடங்கள் பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவைதான் அந்த முதல் பத்து இடங்களைப் பிடித்த இடங்கள். இது தான் நாம் இன்றைக்கு உங்களுக்கு சொன்ன தகவல்கள். அடுத்த பகுதியில் மற்றுமொரு சுவையான தலைப்புடன் சந்திப்போம்.

Post Comment