
Virakesari.
"டுவிட்டர்` அல்லது "பேஸ் புக்கில்` செய்திகள் வெளியிட, இங்கிலாந்து வீரர்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் "டுவிட்டர்`, "பேஸ் புக்` போன்ற இணையதள சேவை, சமீபத்தில் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவில் சச்சின், சேவக் போன்ற முக்கிய வீரர்கள் இதில் இணைந்துள்ளனர்.
இதேபோல, இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் அஜீம் ரபிக். இவர் சமீபத்தில் "டுவிட்டரில்` வெளியிட்ட செய்தியில், தனது பயிற்சியாளரை "ஒன்றுக்கும் உதவாதவர்` என கடும் வார்த்தையால் திட்டியிருந்தார். இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்ட இவர், அபராதம் மற்றும் ஒருமாத தடையை எதிர்நோக்கியுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் பீட்டர்சன், ஆண்டர்சன், சுவான், ஸ்டீவன் பின் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் "டிரசிங் ரூமில்` மற்றும் களத்தில் நடக்கும் முக்கிய விஷயங்கள், "டுவிட்டரில்` வெளியாக வாய்ப்புள்ளது என அணி நிர்வாகம் நினைக்கிறது.
இதுகுறித்து "டெய்லி மெயில்` என்ற பத்திரிகையில் வெளியான செய்தியில், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு இணைந்து, 2010-11ல் வீரர்களுக்கு புதிய ஒப்பந்த விதியை அறிமுகம் செய்கிறது. இதன் படி கிரிக்கெட் தொடர்கள் நடந்து கொண்டிருக்கும் போது, வீரர்கள் "டுவிட்டர்`, "பேஸ் புக்` போன்றவற்றில் தகவல்களை பரிமாறிக்கொள்ள தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கு அணியின் கேப்டன் ஸ்டிராஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment