Wednesday, August 25, 2010

ஆரையம்பதி-காத்தான்குடி எல்லைப் பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்துக்கும் பாதகமின்றித் தீர்வு

Kattankudi Web Community.
கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக்களும் கெளரவத்துடன் வாழும் நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் வள நிலையத்தினை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நெக்டப் திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபா செலவில் மேற்படி நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சமூக ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே சமூக ஒற்றுமை மேம்பாட்டை பாதிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது. இதில் விழிப்பாக அனைவரும் நடந்துகொள்ளவேண்டும். சமூக வன்முறைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆரையம்பதி, காத்தான்குடி எல்லைப் பிரச்சினை சுமார் 60 வருடங்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் பிரச்சினையாகும். இந்த எல்லைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளேன். எந்தவொரு சமூகத்துக்கும் பாதக மில்லாமலும் இரு சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் தீர்த்து வைக்கப்படுமென அவர் தெரிவித்தார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment