Monday, December 05, 2011

மரணித்து விட்டது மனிதம்



காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?

எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?

நான்?
நீங்கள்?
நம் குடும்பம்?
மனித உயிர்?
பணம்?
பாசம்?
ஆசை?
காதல்?
இதில் எது நிலையானது?

வானம்?
அதில் தோன்றும் நிலவு?
கடலை பிழக்கும் சூரியன்?
ஓயாமல் அடிக்கும் அலை?
அந்த அலை தந்த நுரை?
இதில் எதை சொல்ல முடியும்
நிலையானது என்று?

பணத்தை நோக்கி ஒரு கூட்டம்,
பாசத்தை நோக்கி ஒரு கூட்டம்,
அறிவை தேடி ஒரு கூட்டம்,
ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்..

இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது
நம் வாழ்வும் வாழ்நாளும்...

வாழப் பிறந்துவிட்ட மனிதனுக்கு
மரணம் மட்டுமே நிதர்சனம்.
மற்றவையெல்லாம் மாயமாய்
மறைந்து போகும் அதிசயம்.

என் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குச் சொல்லும் சேதி
தெரியுமா உங்களுக்கு?

"மரணத்தை சந்திக்க
நீ ஒரு வருடம்
முன் வந்து விட்டாய்" என்பதுதான்.

மாற்றம் மட்டும் அல்ல,
மரணமும் மாற்றா முடியாததுதான்...

நம் ஓடும் பாதையின் முடிவு மரணம்.
அதை மறந்து விட்டதால்தான்,
இன்று மரணித்து விட்டது மனிதம்.

மரணத்தை நினைப்போம்,
மனிதத்தை வளர்ப்போம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

4 comments:

  1. //"மரணத்தை சந்திக்க
    நீ ஒரு வருடம்
    முன் வந்து விட்டாய்" என்பதுதான்.//
    உண்மையை உணர்த்தும் வரிகள். மிக அருமை. தொடருங்கள். நன்றி

    ReplyDelete
  2. மரணத்தை சந்திக்க
    நீ ஒரு வருடம்
    முன் வந்து விட்டாய்" nice

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்
    #shamil#
    #mohammed izzath#
    #வே.சுப்ரமணியன்#

    தொடர்ந்தும் உங்கள் விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்கிறேன்.

    ReplyDelete