இந்தியா, இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண கிரிக்கட் போட்டிகள் இன்று தம்புள்ள ரன்கிரி சர்வதேச விளையாட்டுத் மைதானத்தில் ஆரம்பமாகின்றன.
இன்றைய முதலாவது போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து கிரிக்கட் அணிகள் பங்கேற்கின்றன.
பகல் இரவாக இடம்பெறும் இந்த போட்டி, பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார, தமது அணி போட்டிகளில் வெற்றி பெற முழு அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment