Monday, January 28, 2013

விஸ்வரூபம்+முஸ்லிம்=???? (சுவைக்க ஒரு சூடான பகுதி)


இது முஸ்லிம்களுக்கான பதிவு. நீண்டதொரு வாதம், கலந்துரையாடல், கருத்து மோதலின் பின் தான் நான் இதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்னும் மன நிலையில் நான் இதை எழுதவில்லை என்பதையும் முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய மேதை எல்லாம் இல்லை. சாதாரண மனிதன். இது என் சிறிய மூளையில் உதித்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.

விடயத்துக்கு வருவோம். இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் விஸ்வரூபம் திரைப்படமும் அதன் பின்னணியில் முஸ்லிம்களின் செயற்பாடுகளும். முதலில் முஸ்லிம்கள் பற்றி பேசுவோம் பிறகு கமல் பற்றிப் பேசலாம்.
சினிமாவுக்கு முஸ்லிம்கள் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறார்கள் என்பது எனக்கு இது வரை விளங்கவில்லை? இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்காய் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவம்? இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் சினிமா இன்று மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ஒரு ஊடகமாய் மாறி இருக்கிறது. அதனூடாக நச்சுக் கருத்துக்களை பரப்ப முடியும் என்பதே. உண்மைதான் ஆனால் இஸ்லாத்தில் சினிமா என்பது எனக்குத் தெரிந்த அளவில் ஹராமான (தடை செய்யப்பட்ட ) விடயமாகும். அது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட பின்னர் அதை பற்றி பெரிதாக நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இறைவன் "அந்தப் பக்கம் நீ போகாதே அது உன்னை காயப் படுத்தும்" என்று தடுத்து விட்டான். ஆனால் நாம் அங்கு போய் இருந்து கொண்டு "நான் சினிமா பார்க்க வேண்டும் ஆனால் என்னை காயப் படுத்தக் கூடாது" என்று கோஷமிடுவது முஸ்லிம்களுக்குரிய பண்பாகாது. இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்குள் நீங்கள் செல்லவே இயலாத போது அதை சீற்படுத்தவா முயற்சிக்கிறீர்கள்?

விளங்கிக் கொள்வதற்காக ஒரு சிறிய உதாரணம் பன்றி இறைச்சி உண்பது ஹராம் (தடை). பன்றி தடை என்றால் அதற்குள் நாம் சென்று இல்லை பன்றி தக்பீர் சொல்லி அறுக்கப் பட வேண்டும் என்று விவாதிப்பது/போராடுவது எந்த வகையில் நியாயமாகும். உனக்குத் தடை என்றால் நீ அங்கு செல்லவே கூடாது என்பது தானே முறை. இதை ஏன் நீங்கள் உணரவில்லை?

சினிமா, ஆடல், பாடல், இசை இவை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை. அதற்குள் நாம் சென்று எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்து.நமக்கு சம்மந்தம் இல்லாத இடத்துக்குள் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். ஒரு 3 மணி நேர திரை விளையாடல் பார்த்து ஒரு மார்க்கத்தை ஒருவன் விளங்க முற்பட்டால் அவனுக்குப் பெயர் முட்டாள்.

ஒரு சினிமாவுக்காக நீங்கள் நடத்திய போராட்டத்தால் அள்ளாஹ்வின் நாமமும், அவன் தூதரின் நாமமும், புனித இஸ்லாத்தின் நாமமும், எத்தனை தடவைகள் எவ்வளவு எழுத்துக்களால் காயப் பட்டிருக்கிறது என்பதை அறியவில்லையா நீங்கள்? மார்க்கம் தடை செய்த ஒரு விடயத்துக்காய் நீங்கள் நேசிக்கின்ற மார்கத்துக்கு நீங்களே அவப் பெயரை ஏற்படுத்தி விட்டீர்கள் போல் தெரிகிறது. முஸ்லிம் சகோதர்களே இது ஒரு சிறந்த அணுகு முறையாய் இருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.

(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.(4:140)

கமல் ஹாசன் இஸ்லாத்தை அவமதின்றாரா? முஸ்லிம்கள் மனதை வேதனைப் பட வைகிறாரா? அவருடன் நீங்கள் சேர்ந்து இருக்க வேண்டாம். நட்பு பாராட்ட வேண்டாம். அவர் அக்கருத்தில் இருந்து நீங்கி உங்களிடம் மன்னிப்புக் கேட்டு திருந்தும் வரை.. இதுதான் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்னுடைய பார்வையில்..

ஆகவே யார் இம்மார்கத்தை அள்ளாஹ்வை அவனுடைய தூதரை பரிகாசிக்கின்றனரோ அவர்களை அவன் பார்த்துக் கொள்ளுவான். நீங்கலாக எதையும் செய்ய முயன்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இன உறவுகளுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காதீர்கள்.

எமது சகோதரர்கள் முக நூலிலும், ட்விட்டர் என்னும் சமூக இணையத்தளங்களிலும் பிடித்த சண்டைகள் பரிமாறப்பட்ட கருத்துக்கள் மனித மொழிகளில் இருந்தே அகற்றப் படவேண்டிய சொற்களாக இருந்தது.(இக் கட்டுரைக்கான அவசியத்தை உணர்ந்ததுக்கான காரணம் இதுதான்)


கலைஞர்களே
உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றவன் கழுத்தை நசுக்கக் கூடாது. அது சிறந்த படைப்பாகவும் இருக்க முடியாது. கமல் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை மனிதன் என்பதை தவிர. நான் சினிமாவை நேசிப்பவனும் அல்ல. ஆனால் இப் பிரச்சினைக்கேள்ளாம் உங்களுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. இனி வரும் காலங்களிலாவது உங்கள் கலைப் படைப்பு யாரையும் துன்புருத்தாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இஸ்லாத்தை முழுமையாப் படியுங்கள்.

மாற்று மத சகோதரர்களே
முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை விளங்க முயற்சிக்காதீர்கள். அது சரியான நடைமுறையும் அல்ல. இஸ்லாத்தை விளங்க குர்ஆன், நபி மொழிகளைப் படியுங்கள். யாரிடமோ உள்ள குறைக்காக அவன் பின்பற்றும் மார்க்க சட்டங்களை, நல்ல மனிதர்களை, அவன் நம்புகின்ற இறைவனை உங்கள் சண்டையில் பலி கொடுக்காதீர்கள்.

இறுதியாக, என்னிடம் கூடுதலானவர்கள் கேட்ட விடயம் நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? எதிர்கிறாயா? உங்கள் எல்லோருக்கும் என் பதில் "நான் குழப்பங்களை தூண்டும் சினிமாவின் எதிரி".

பின் குறிப்பு : இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்கள் ஏதும் நான் சொல்லி இருந்தால் உடனடியாக சுட்டிக் காட்டவும்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

12 comments:

  1. மிகச் சரியான கருத்துக்கள், நான் இதை முற்று முழுதாக ஏற்றுக்கொள்கிறேன், 'காய்ந்த புண்ணை சுரண்டச் சுரண்ட புண் பெரிதாகுமே தவிற குறையா'

    ReplyDelete
    Replies
    1. நன்றி.அப்படியே முஸ்லிம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரச்சினைகள் தவிர்க்கப் படலாம்.

      Delete
  2. நாம் வேண்டுமானால் திரைப்படம் பார்க்காமல் இருக்கலாம், அனால் நமது இன உறவுகளை பார்க்க வேண்டாம் என்று சொல்ல முடியாது. விஸ்வரூபம் போன்ற திரைப்படங்களை மாற்று மத சகோதரர்கள் பார்க்கும் பொழுது நாம் அவர் கண்களுக்கு திவிரவாதிகலாகத்தான் தெரிவோம். இந்த சினிமா சின்ன குழந்தைகளையும் அப்படி நினைக்க தூண்டி விடும். இது ஒன்னும் சிறிய நாயகர் நடித்த படம் அல்ல, மிகப்பெரிய கலை மகன் நடித்த படம்... அதன் பாதிப்பு மிக மிக அதிகம்...

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது நாம் நடத்திக் கொண்டிருக்கும் செயல்களில் மட்டும் எப்படி நினைத்திருக்கிறார்கள் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. இஸ்லாத்தில் தடுக்கப் பட்ட விடயங்களுக்குள் முஸ்லிம்களே தலையிடுவதுதான் மிகப் பெரிய வேதனை.

      Delete
  3. .


    என் தமிழகமே..... இந்த ஒற்றுமையை உடைத்து விடாதே.....

    எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளே..... இந்த ஒற்றுமையை உடைத்து விடாதே.....

    கமலை ஆதரிப்பவர்களும், ஒரு படத்தில் என்ன இருந்தால் நமக்கென்ன ? வெறும் படம்தானே என்று சொல்பவர்களும் இதை கொஞ்சம் படியுங்கள்....!!!

    பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அனைத்து சங்பரிவார அமைப்புகளுக்கு இஸ்லாமை எதிர்த்து பிரச்சாரம் செய்து மதக்கலவரங்களை தூண்டி விட இந்த படம் ஊன்றுகோலாக அமைந்துவிடக்கூடாது என்பது தான் எங்களது ஐயமே தவிர... கமல்ஹாசன் எங்களுக்கு எதிரி அல்ல....

    ஏற்கனவே துப்பாக்கி படத்தை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்து வருவது உலகறிந்த விஷயம், ஒரு முறை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு பி.ஜே.பி பிரமுகர் பேசுகையில், வார்த்தைக்கு வார்த்தை முஸ்லிம்கள் "ஸ்லீப்பர் செல்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு என்ன காரணம் ? தீவிரவாதி என்கிற அடையாளம் போய் இப்போது "ஸ்லீப்பர் செல்களாம்"

    துப்பாக்கி படம் கொடுத்த பெயர் ஸ்லீப்பர் செல்கள்.....

    விஸ்வரூபம் படத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்கும் புதிய அடையாளம் "தமிழ் ஜிஹாதி"

    அமைதிப்பூங்காவான தமிழகத்தில் இனி இதை வைத்து ஆர்.எஸ்.எஸ் சும், பி.ஜே.பியும் தங்கள் பிரச்சாரங்களில் மத வெறியை தூண்டுவார்கள். அது உங்களுக்கு சந்தோஷமா ? அது இந்த நாட்டுக்கும் நாட்டின் சட்ட ஒழுங்கிற்கும் நல்லதா ? இது எப்படி உங்களுக்கு புரியாமல் போனது ? என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.

    இத்தனை ஆண்டுகாலம் நாம் வாழ்ந்த வாழ்க்கை எங்கே ? நம் ஒற்றுமை எங்கே ?

    சமூக ஒற்றுமையில் இந்தியாவிற்கு முதன்மை மாநிலமாக விளங்கிய என் தமிழகமே இப்பொழுது எங்கே போனது உனது ஒற்றுமை ?

    நம் நாட்டின் ஒற்றுமையை விட, சட்டம் ஒழுங்கை விட ஒரு சினிமா உங்களுக்கு முக்கியமாக போய்விட்டதா ? எங்களது இரத்தத்தை உரிய காவிக்கூட்டம் தயாரான நிலையில் நீயும் அதை ஆதரிக்கிறாயா ?

    என் தமிழகமே.... முஸ்லிம்களின் இரத்தத்தை உறிஞ்சும் இரத்த காட்டேரி நரேந்திரமோடிக்கும், உனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டதா ?

    பதில் சொல் என் தமிழகமே....

    நன்றி : யாசர் அரபாத் & துளசி ஹசன்

    ReplyDelete
  4. தம்பி நீங்க சொன்ன எல்லா காரணங்களையும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் முல்லா ஒமர் தமிழ் நாட்டில் ஒரு வருடம் ஒழிந்து இருந்ததாகவும் அவருக்கு நாங்கள் அடைக்கலம் கொடுப்பது போலவும் காட்டிருக்கிறார். அதையும் நாங்க போருத்துக்கிடனுமா. ஆப்கானிஸ்தான் பற்றி படம் எடுத்தா அங்கே நிறுத்திக்கிட வேண்டியதுதானே சகோதரா. கொஞ்சம் மனசாட்சி தொட்டு பேசுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் தமிழ் நாடு பற்றிப் பேசவில்லை முஸ்லிம்கள் பற்றிப் பேசுகிறேன். முஸ்லிம்கள் சினிமா பக்கமே செல்லக் கூடாது என்கிறேன். அது புரியவில்லையா உங்களுக்கு?

      Delete
    2. நாம் போகாமல் இருப்போம். மற்றவர்கள் இத்திரைப்படத்தை பார்த்து விட்டு நம்மை தீவிரவாதிகளாக பார்க்கட்டும். நல்ல எண்ணம் சகோதரா.

      Delete
    3. ஏற்கனவே துப்பாக்கி படத்தை வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்து வருவது உலகறிந்த விஷயம், ஒரு முறை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு பி.ஜே.பி பிரமுகர் பேசுகையில், வார்த்தைக்கு வார்த்தை முஸ்லிம்கள் "ஸ்லீப்பர் செல்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு என்ன காரணம் ? தீவிரவாதி என்கிற அடையாளம் போய் இப்போது "ஸ்லீப்பர் செல்களாம்"

      துப்பாக்கி படம் கொடுத்த பெயர் ஸ்லீப்பர் செல்கள்.....

      விஸ்வரூபம் படத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்கும் புதிய அடையாளம் "தமிழ் ஜிஹாதி"

      Delete
  5. சகோதரர்களே நீங்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவில்லை. இந்த வீடியோவை பாருங்கள் நான் பேசிக்கொண்டிருப்பதை விட அது பல தகவல்களை உங்களுக்குச் சொல்லும்.

    VIDEO

    ReplyDelete
    Replies
    1. http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_2919.html?utm_source=dlvr.it&utm_medium=twitter

      Delete
  6. நான் மீண்டும் சொல்கிறேன் நான் சினிமாவை ஆதரிப்பவன் அல்ல. நான் படத்தின் தடை குறித்தோ அதை சட்டபூர்வமாக அணுகியவர்கள் குறித்தோ எதுவும் சொல்ல முன் வரவில்லை. இந்தக் கட்டுரையின் அவசியம் உணரப் பட்ட நோக்கத்தை நான் மேலே குறிப்பிட்டிருந்தாலும் இங்கும் ஒரு முறை சொல்லி விடுகிறேன். இணையத்தில் நமது சில வாலிபர்களின் உரையாடலை பார்க்க முடிந்தது. விடயங்களை தெளிவு படுத்த தெரியாமலும் பேசும் முறை அறியாமலும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை நான் அவதானித்தேன். மார்க்கத்தில் அனுமதிக்கப் படாத சினிமாவுக்காக ஒரு உலகப் போர் நடப்பதைப் போன்று இவர்களின் சண்டை தேவையற்றது எனக் கருதியே இதைப் பகிர்ந்தேன். நான் எந்த சினிமாவுக்கும் ஆதரவானவன் அல்ல.

    நச்சுக் கருத்துக்களை வெளியிடும் எந்த விடயமும் பூமியை தீண்டக் கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் அவை தொடர்பாக சரியான தெளிவுபடுத்தல்கள் கொடுக்கப் பட வேண்டும்.

    ReplyDelete