Tuesday, August 17, 2010

கொலம்பியா பணிகள் விமானம் விபத்து: ஒருவர் மரணம்;119 பேர் காயம்

Virakesari.
கொலம்பியாவின் கரிபியன் தீவில் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 119 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது ஒருவர் மாரடைப்பினால் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் தவிர, ஏனைய பயணிகள் யாவரும் உயிர் தப்பியது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் உள்ள பொகாடோ நகருக்கு போயிங் 737 ஜெட் லைனர் என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 131 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 6 பேர் விமான ஊழியர்கள்.

அதிகாலை இந்த விமானம் கொலம்பியாவில் சான் ஆண்ட்ரஸ் தீவில் உள்ள விமான நிலையத்தில் திடீரென தரை இறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் தாறுமாறாக ஓடியது.

முன்னதாக தரை இறங்கும்போது விழுந்த வேகத்தில் 3 துண்டாகs சிதறியது. அப்போது விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்தது. இதைப்பார்த்த விமான நிலைய தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த பயங்கர விபத்தில் ஒரு பயணி மட்டும், அதுவும் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் அமர் பெர்னாண்டஸ் டிபரேட்டோ (68).

ஆனால் விமானத்தில் பயணம் செய்த 130 பேர் அதிசயமாக உயிர் பிழைத்தனர். அவர்களில் 119 பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர். 5 பேருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கொலம்பிய விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதும் விமானி சான் ஆண்ட்ரசில் விமானத்தை தரை இறக்கியுள்ளார். ஏற்கனவே மின்னல் தாக்கியிருந்ததால் தரை இறங்கியபோது விமானம் 3 துண்டாக உடைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

1 comment: