Friday, January 06, 2012

என்னைக் கொன்று விடு..


சுவாசமாய் நினைத்து
உன்னை சுவைத்து
சுடுபட்டுப் போன நாட்கள்
போதும் அன்பே..

காதல் தீயில்
கருகிப்போன இதயத்துக்கு
மருந்து போட்டே நகர்கிறது
என் மற்றைய வினாடிகள்..

தொடரும் நிழல் போன்று
உன் நினைவும்..
உளி செதுக்கிய சிற்பமாய்
உன் நாமமும்..
என்னோடு ஒட்டிக்கொண்டன.

பாலைவனத்தில் பட்டமரமாய்
உன்னை சுமந்து கொண்டு
பரிதவித்து நிற்கிறேன்..

கொடிய வறட்சியிலும்
நீ என்னுள் வற்றிப் போகவில்லை.
என் கொடிய நிமிடங்களிலும்
நான் உன்னை கழட்டி ஏறியவில்லை.

ஒருமுறை நிதர்சனமான
மரண வலியையும்,
ஒவ்வொரு வினாடியிலும்
தந்து சென்றவள் நீ..

பெண்ணே!
உன்னிடம் ஒரே விண்ணப்பம்?

என் கண்களின் ஈரம்
வற்றிப்போவதற்க்குள்
என்னைக் கொன்று விடு..


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

7 comments:

  1. காதல் தோல்வியருக்கு இந்த கவிதை ஆறுதலளிக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  2. #வே.சுப்ரமணியன். said...
    காதல் தோல்வியருக்கு இந்த கவிதை ஆறுதலளிக்கும் என நம்புகிறேன்.#
    ஆறுதல் அளித்தால் எனக்கும் சந்தோசம்தான்.

    நன்றி உங்கள் கருத்துரைக்கு தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  3. நண்பா.. கலக்கிட்டாய் மச்சான்... உன் பயணம் தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. #Minhaj KM said...
    நண்பா.. கலக்கிட்டாய் மச்சான்... உன் பயணம் தொடர வாழ்த்துக்கள்...#
    எல்லா புகழும் இறைவனுக்கே.

    நன்றி நண்பா உன் வாழ்த்துக்களுக்கு. தொடர்ந்து உன் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

    ReplyDelete
  5. இது பயங்கரமான காதல் வலி கவிதையாயிருக்கே..

    என்னைக்கேட்டால்.. இறந்துவிடுமளவுக்கு காதலில் ஒன்னுமேயில்லை அவ்வளவுதான்..

    ReplyDelete
  6. #Riyas said...
    இது பயங்கரமான காதல் வலி கவிதையாயிருக்கே..
    என்னைக்கேட்டால்.. இறந்துவிடுமளவுக்கு காதலில்
    ஒன்னுமேயில்லை அவ்வளவுதான்..

    உண்மைதான் இது ஒரு நண்பருக்காக எழுதியது அவர் திருப்திக்காக

    நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்தும் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    ReplyDelete
  7. வலிகளின் வேதனையோடு ஓர் கவிதை அருமை வாழ்த்துகள்

    ReplyDelete