Saturday, August 07, 2010

மெக்சிகோவுடன் நட்பு ஆட்டம் :ஸ்பெயின் அணியில் இருந்து இனியஸ்டா,டார்ரஸ் நீக்கம்

Virakesari.

மெக்சிகோவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் ஸ்பெயின் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஸ்பெயின் அணியில் இருந்து ஆன்டரஸ் இனியஸ்டா,பெர்னான்டோ டார்ரஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

உலக சாம்பியன் ஸ்பெயின் எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி நடை பெறும் ஒரு நட்பு ஆட்டத்தில் மெக்சிகோ அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான ஸ்பெயின் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கிண்ணத்தில் வெற்றி கோல் அடித்த ஆன்ட்ரஸ் இனியஸ்டா,லிவர்பூல் ஸ்டிரைக்கர் பெர்னான்டோ டார்ரஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் இருவரும் உடல் தகுதியடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணியில் 7 பார்சிலோனா வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.அந்த அணியின் விக்டர் வால்டெஸ்,கார்லஸ் புயால்,ஜெரார்டு பிக்கு,செர்ஜியோ பெஸ்குயிட்ஸ்,சேவி,பெட்ரோ,டேவிட் வில்லா ஆகியோர் ஸ்பெயின் அணியில் இடம் பெற்றுள்ளனர்.ஸ்பெயினிடம் இருந்து மெக்சிகோ விடுதலை பெற்று 200 ஆண்டுகள் நிறைவடைவதையட்டி இந்த போட்டி நடைபெறுகின்றது.

எதிர்வரும் ஓகஸ்ட் 14ஆம் திகதி ஸ்பானீஷ் சூப்பர் சூப்பர் கப் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதில் முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா செவிலா அணியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடிக்கிடையே மெக்சிகோ அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்திற்கு 7 பார்சிலோனா வீரர்களை தேசிய அணியின் பயிற்சியாளர் வின்செனட் டெல்போஸ்க் தேர்வு செய்ததற்கு அந்த அணி அதிருப்தி தெரிவித்துள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment