Friday, June 24, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-II

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)
பகுதி-I

அதன் பிறகு பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க பாராட்டப்படக்கூடிய விடயம் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தப் பெண் வளர வளர கூட பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன என்பது தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம்.

அப்படி என்ன பிரச்சினைகள் என நீங்கள் என்னிடம் கேட்க முடியும் நான் வாழ்கையில் சந்தித்த சில அனுபவங்களை இங்கு சுட்டிக்காட்டவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

ஒரு கணவன் மனைவிக்கிடையில் நடந்த பிரச்சினை இது.

அதாவது அவர்களுக்குத் திருமணமாகி 1 வருடத்தின் பின் குழந்தை கிடைத்தது. அவர்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தவிர அவர்களுடன் யாரும் இல்லை இப்போது அக் குழந்தை. பிரச்சினை என்னவென்றால் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இப்போது குழந்தையை பராமரிப்பது யார்? என்ற பிரச்சினை தோற்றமெடுக்கிறது. கணவன் சொன்னான், நான் மட்டும் வேலைக்குச் செல்கிறேன் நீ குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இரு என்று. ஆனால் மனைவி அதை நிராகரித்தால். குழந்தையை, நாம் குழந்தை பராமரிக்கும் ஒரு இடத்தில் கொடுத்து விட்டு வேலைக்குச் செல்லாம் என்றால். கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை. நீதான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றான். பிரச்சினை தொடர்ந்தது. இன்று அவர்களின் முடிவு விவாகரத்து.

அந்த பெண்ணிடம், நான் இது பற்றி நேரடியாக பேசியதற்கு ஆண்கள் மட்டும்தானா வேலைக்குச் செல்ல வேண்டும்? பெண்கள் செல்லக் கூடாதா? பெண்கள் தான் குழந்தை வளர்க்க வேண்டும் என்று சட்டமா இருக்கிறது? என்றெல்லாம் நிறைய கேள்விகள். நீங்களே சொல்லுங்கள் இதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

பெண்கள் இவ்விடத்தில் சரியான அணுகுமுறையுடன் இவ்விடயத்தை நோக்க வேண்டும். அதாவது பெண் என்பவள்தான் 10மாதம் குழந்தையை சுமந்து பெற்றெடுக்க கூடியவளாக இருக்கின்றால். குழந்தைகளுக்கு உணவளிக்க கூடிய விடயங்களும் அவளையே சார்ந்து நிற்கின்றது.ஒரு ஆணின் குழந்தை வளர்ப்புக்கும் பெண்ணின் வளர்ப்புக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.(அம்மாவின் அன்புக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை என்பதும் நாம் அறிந்த விடயமே).

நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இதை ஆண்களோ அல்லது இச் சமூகமோ பெண்கள் மீது திணிக்கவில்லை. இது இயற்கை நிர்ணயித்த ஒரு விடயம் ஆகவே குழந்தைப் பராமரிப்பு என்பது இயற்கையாகவே பெண்களால் மட்டுமே முடியுமான ஒரு விடயம். அதை வைத்து பெண்ணிலை வாதம் பேசுவது முறையான ஒரு விடயமல்ல. இது மிகப் பெரிய முட்டாள் தனமாகும். ஒரு உதாரணத்தையே என்னால் இங்கு சுட்டிக்காட்ட முடிந்தது. காரணம் நேரமின்மை.

பெண்களின் வெற்றிகளை கொண்டாடும் நாம் அவர்கள்விடும் தவறுகள் சம்மந்தமாகவும் பேச வேண்டியிருக்கிறது.

இவ்வாறான பல பிரச்சினைகள் எம்மத்தியில் பெண்ணிலை வாதம் என்ற பெயரில் தொடுக்கப்பட்டு அதன் மூலமாக பாரிய விளைவுகளை சந்தித்திருக்கின்றோம். எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது பெண்கள் அவர்களுக்கு கொடுக்கப்ட்ட சுதந்திரத்தை தவறான முறையில் புரிந்து கொண்டார்களா? என்று ஒரு கேள்வி எழுகிறது.

அதாவது பெண்களுக்கு இச் சமூகம் அன்று பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அவர்களால் தவறான முறையில் பாவிக்கப்படுகிறதா?

(தொடரும்...)

Post Comment

Thursday, June 23, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-I

நம்முடைய வாழ்கையில் நாம் சந்திக்கின்ற விடயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. எத்தனையோ பிரச்சினைகள் எத்தனையோ சந்தோசங்கள் என நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

பூமி என்ற கோளம் பலவகையான விடயங்களை அதற்குள் உள்ளடக்கியிருக்கிறது. எத்தனையோ அதிசயங்கள்,அபூர்வங்கள் எல்லாம் இந்தப் பூமிக்கு மேலும்/கீழும்,உள்ளேயும்/வெளியேயும் இருந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் இந்தப் பூமியின் மேல் வாழும் மனிதன்தான் இந்த பூமியின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணமானவனாக இருக்கிறான். பிரிக்கப்பட்டே எல்லாவிடயங்களும் இங்கு நோக்கப்படுவதால் நாமும் அதனுடன் ஒட்டி உறவாட வேண்டியுள்ளது. அதுதான் நிதர்சனமும். ஆகவே மனிதனை அடிப்படையாக 2 வகையாக பிரிக்கமுடியும். ஆண்கள்,பெண்கள் என்பதுதான் அவை.

இந்தக் கட்டுரையின் சாராம்சம் பெண்கள் பற்றியதாகவே அமையப் போகிறது. அதுவும் ஒரு வித்தியாசமான பார்வையை செலுத்தப் போகிறது. அதாவது பெண் என்பவள் இன்று அவளுடைய பாதையில் இருந்து விலகிச்செல்கிறால் எனும் ஒரு கருத்து நம்மிடையே நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. இது என்னால் மட்டுமல்ல உங்களால் மட்டுமல்ல இன்று சர்வ சாதாரணமாக நாம் பாவிக்கும் வார்தைகளில் ஒன்றாகிப் போனது. இது பற்றிய ஒரு பார்வையை தான் நாம் இங்கு செலுத்த இருக்கின்றோம்.

ஆரம்ப கட்டங்களில் பெண் என்பவள் வீட்டுக்குள் அடங்கியிருக்கின்ற ஒரு பொருளாகவே அடையாளப்படுத்தப்பட்டாள். அவளுடைய சகல உரிமைகளும் மறுக்கப்ட்டு இந்த சமூகம் அவளை ஒரு அடிமையாகவே நடத்தியது என்றால் அது மிகையாகாது.

அதன் பிறகு பெண்களுக்கு அவர்களுடைய உரிமைகள் கொடுக்கப்பட்டு அவளும் இச் சமூகத்தில் ஒரு மனித இனமாக மதிக்கப்பட்டாள். அவளுடைய வாழ்கை முறை பற்றி குரல் கொடுக்காத சமூக அமைப்புக்களே இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு பெண்கள் உரிமைகள் பற்றி பல மேடைப் பேச்சுக்கள், விவாதங்கள், கருத்துக்கள், புத்தகங்கள் என ஒரு சமூகப் புரட்சியே நடந்தேறியது. ஏன் ஐ.நா சபை கூட பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க சட்டங்களளை இயற்றி அவர்களுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கியது.

அதன் பிறகு பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க பாராட்டப்படக்கூடிய விடயம் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தப் பெண் வளர வளர கூட பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன என்பது தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். (தொடரும்...)

Post Comment

Thursday, June 09, 2011

உன்னைக் காதலிப்பதால்....அருக்கப்பட்ட தொப்புள் கொடிக்குள்ளயே
அடங்கிவிடுகிறதா தாயின் பாசம்?
மறக்கப்பட்ட உன் நினைவுக்குள்
மங்கிவிடுமா என் காதல்??

உருகி உருகி மெழுகாவேன்,
அதிலும் உனக்கே உயிராவேன்.
உனக்காய் நானும் இருளாவேன்,
அதல் நீ காணும் கனவும் நானாவேன்.

இன்று என் நினைவில்....
நீ சிரித்துச் செல்லும் நொடிகளில்
என்னை சீரழித்துச் செல்கிறாய்.
நீ உதிர்த்துச் செல்லும் மௌனங்களில்
ஆயிரம் கவி சொல்லிச் செல்கிறாய்.

நீ பிரிந்த நிமிடம் எனக்கு சுடவில்லை.
காரணம் நீ வாழ்ந்த நிமிடம் எனக்குள் குளிர்வதால்...
உன் நினைவுகள் இன்று எனக்கு கசப்பாயில்லை.
காரணம் இன்றும் அது அழகாய் இனிப்பதால்...

நான் உன்னை என்றும் வெறுக்கவில்லை.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்பதால்...

நீ சொன்ன வார்த்தைதான் எனக்கு வாழ்வானது.
நீ தந்த காதல்தான் எனக்கு பலமானது.
நீ தந்த நினைவுகள் எனக்கு ஒளியானது.
நீ தந்த கண்ணீரே என்னுடைய கவியானது.

உன்னை நினைந்து எரிந்த இரவுகள் கடந்து,
இதமாய் உறங்கும் உறவுகள் தொடர்கின்றன.
இன்று என் கனவுக்குள் உன் அழகிய நினைவுகளே...

என்னை நேசிப்பதை நிறுத்திவிடு என்றாய்.
நிறுத்திவிட்டேன். நீ சொன்ன அடுத்த நொடியிலயே,
ஆனால் உனை தான் சுவாசமாய் சுவாசிக்கிறேன்
என் அடுத்த நொடியில் இருந்து...

நேசிப்பது மட்டுமல்ல,
சுவாசிப்பதும் காதல்தானே,
சொன்னவளும் நீதானே.

உன்னோடு வாழ்ந்த நான்,
உன்னை நினைத்து வாழப் பழகிக் கொண்டேன்.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்தால்...
என் உயிருக்குள்ளும் நீ வாழ்வதால்...

Post Comment