Monday, August 23, 2010

என்னவளின் பிறந்த நாள்......



வருடத்தின் ஒரு நாள்
எனக்கே எனக்கான ஒரு நாள்
என்னவள் எனக்காய் பிறந்த நாள்

பத்து நாள் முன்னாடியே பத்திரமாய் கவி வடித்து
பார்ப்பவர்கள் அனைவரையும் பரவசப்படுத்த புது ஆடை எடுத்து
அனு அனுவாய் நகரும் வினாடிகளை அனுபவித்து
எதிர் பார்த்திருக்கும் என் இனிய நாள்

பண்டிகைக்கு காத்திருக்கும் குழந்தைகள் போல்
பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவர்கள் போல்
தண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளிகள் போல்
சந்தோசம் பதற்றம் பயம் கலந்த எண்ணங்களோடு
நானும் காத்திருக்கிறேன் என்னவளின் பிறந்த நாளை

"இந்த மாதம் வந்தால் ஏன் இவன் இப்படி மாறுகிறான்"-பெற்றோர்
"இதெல்லாம் உனக்கு கொஞ்சம் too much மச்சான்"-நண்பர்கள்
"நல்ல ஒரு டொக்டர்ட கொண்டு போய் செக் பன்னனும்"-என்னை வீதியில் பார்ப்பவர்கள்
என்று சொல்பவர்களை நோக்கி சிரிக்கும் வேளை
சிந்திக்கவும் செய்கிறேன்
ஏனெனில் நீ இல்லாத நான் என்பதால்

என்னுடன் நீ இருந்த காலங்களில்
வரவேற்ற உன் பிறந்த நாளை நீ பிரிந்த போது
உன்னோடு வழியனுப்பவில்லை நான்
பிடித்ததை மாற்றும் பழக்கம் எனக்கில்லை என்பதால்

மனைவியாய் உன்னை ஏற்ற என் மனதுக்கு
விளங்கவில்லை நீ இப்போது மாற்றானின் மனைவி என்று
நீ தந்த வடுக்களை வாங்கிய எனக்கு
சற்று ஆறுதலாய் உன் பிறந்த நாள் மட்டுமே

தினம் என்னை உன் நினைவுச் சூட்டால் தீண்டும் நீ
என்னை குளிர் கொண்டு வருடும் வருடத்தின் ஒரு நாள்....

பரிதாபம் வேண்டாம் என்னை நோக்கி
என்னவள் என்றும் என்னுடன் இருக்கிறாள்
நினைவுகளாக என்னுல் புதைந்து கொண்டு

இன்று அவள் பிறந்த நாள்
வாழ்த்துங்கள் என்னுடன் சேர்ந்து
அவள் வாழ என்னோடு நினைவுகளாக


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. நைஸ்... அருமையாய் இருக்கிறது...
    //எனக்கே எனக்கான ஒரு நாள் //
    அருமையான வார்த்தை

    ReplyDelete
  2. நன்றி காதலனே இக் கவியில் வரும் வார்த்தைகள் வலியுடன் பினைக்கப்பட்டவைகள்

    ReplyDelete