
நாலு பகக்கமும் என்னைச்சுற்றி கம்பிவேலி
அடைக்கப்பட்டிருக்கிறேன் சுவாசிக்க முடியாத பறவையாக
ஒரு நேர உப்புச்சப்பற்ற சாப்பாட்டை
முண்டியடித்து முகர்கின்ற வேளை
விக்கித் தடைவிதித்தது என் தொண்டை.
அருகில் நின்ற வயதான பாட்டி சொன்னால்
"யாரோ நினைக்கிறார்கள் தம்பி"
உறவுகளையும் உணர்வுகளையும் இழந்த
என் வாழ்வில் யார் இருக்கிறார்கள் என்னை நினைக்க
என நான் நினைத்துக் கொண்டு தண்ணீர் பருகிறேன்
விழிகளில் வலி(க்)கின்ற கண்ணீரை கையால் துடைத்துக் கொண்டு....
No comments:
Post a Comment