Monday, August 09, 2010

கிரீன்லாந்தில் உருகும் பனிப்பாறைகளால் அபாயம்

Virakesari.
வட அமெரிக்காவில் அமைந்துள்ள கிரீன்லாந்து பகுதியில் உருகும் பனிப்பாறைகளால் வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளதாக நெலாவர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்ட்ரூவ் மியூன்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது அங்குள்ள பீட்டர்மேன் என்ற பனிப்பாறை உடைந்துள்ளது. இதில் இருந்து பிரிந்த அந்த ராட்சதபாறை உருக தொடங்கியுள்ளது.

அது 100 சதுர மைல் பரப்பளவு கொண்டது. அமெரிக்காவின் எம்பயர் கட்டிட அளவு உயரமாக உள்ளது. ஒரு சிறிய ஐஸ்தீவு போன்று இது காட்சி அளிக்கிறது. அமெரிக்காவின் மேன்காட்டன் நகரை போன்று 4 மடங்கு பெரியது. இதிலிருந்து உருகி ஓடி வரும் தண்ணீரினால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது நாசா செயற்கை கோள்மூலமும் இது தெரியவந்தது.

கிரீன்லாந்து பனியாற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஐஸ்கட்டிகள் உருகு கின்றன. தற்போதுதான் ராட்சத அளவிலான பனிக்கட்டி உருகியுள்ளது.

உலக வெப்பமயமாதல் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment