Wednesday, August 11, 2010

இந்தியா 200 ஒட்ட வித்தியாசத்தில் படு தோல்வி


virakesari.
இந்திய மற்றும் நியூ சிலாந்து அணிகளுக்கிடயில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் முதலாவது போட்டியில் இந்திய அணி 200 ஓட்ட வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

தம்புளையில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப் பெடுத் தாடிய நியூ சிலாந்து அணி 48.5 ஒவர் களில் சகல விக் கட்டுக் களையும் இழந்து 288 ஒட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணித் தலைவர் ரோஸ் டெய்லர் 95 ஒட்டங்களையும், ஸ்கொட் ஸ்டைரிஸ் 89 ஒட்டங் களையும் பெற்று கொடுத் தனர்.

பந்து வீச்சில் அசிஸ் நெஹரா 45 ஒட்டங்களுக்கு நான்கு விக்கட்டுக் களையும் பிரவீன் குமார் 43 ஒட்டங் களுக்கு மூன்று விக்கட் டுக் களையும் கைப் பற்றினர்.

சற்று கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, செவாக், தினேஷ் கார்த்திக் ஜோடி திறமையான துவக்கம் தந்தது. எனினும் 3 பவுண்டரிகள் உட்பட 19 ஓட்டங்கள் சேர்த்த செவாக், மில்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே தினேஷ் கார்த்திக்கும் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்தார் யுவராஜ் சிங். இதேவேளை டபி பந்து வீச்சில் சிறப்பாக காணப்பட்டது. எனவே இவரது பந்து வீச்சு வேகத்தில் ரோகித் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரெய்னா வையும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார் டபி. அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்புடன் களமிறங்கிய தோனிக்கு, யுவராஜ் "வில்லனாக' மாறினார். டபி வீசிய பந்தை தட்டி விட்டார் தோனி. மறுமுனையில் தேவையில்லாமல், ரன் ஓட துவக்கம் தந்தார் யுவ ராஜ். இதனால் அவசரப் பட்ட தோனி 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

25 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் பிரவீண் 1 மிதுன் 4, நெஹ்ரா 4, ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 29.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி வெறும் 88 ஓட்டங்களுக்கு படுதோல்வி அடைந்தது. நியூசிலாந்து தரப்பில் டபி 3, மில்ஸ், ஓரம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இவ்வெற்றி யின் மூலம் நியூசிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்றது. தவிர, மேலதிகமாகவும் ஒரு புள்ளி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று 88 ஓட்டங்களை பெற்ற இந்திய அணி, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தனது 5 ஆவது குறைந்த பட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. போட்டியில் 58 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களை எட்டிய 7 ஆவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார் ஸ்டைரிஸ். இவர், 166 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கு முன், பிளமிங் 8007, ஆஸ்லே 7090, கிறிஸ் கெய்ர்ன்ஸ் 4881, மெக்கலன் 4707, குரோவ் 4704, ஹாரிஸ் 4379 ஆகியோர் நியூசிலாந்து தரப்பில் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர்.

தனது முதல் ஒரு நாள் போட்டியில், நேற்று களமிறங்கிய நியூசிலாந்து வீரர் வில்லியம்சன், டக்-அவுட்டானார். இதன் மூலம் அறிமுக போட்டியில், களமிறங்கி "டக்-அவுட்டான' 15 வது நியூசிலாந்து வீரரானார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment