
Virakesari.
சந்திரனில் போதுமான அளவு தண்ணீர் இல்லை; அது மிகவும் வறட்சியான கோள் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சந்திரனில் நீர் உள்ளது என அண்மைக் கால ஆய்வுகள் சில தெரிவித்திருந்தன. இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 செயற்கை கோள் நடத்திய ஆய்வில் சந்திரனின் வட துருவத்தில் தடிப்பான பனிப்பாறைப் படிவங்கள் இருப்பது தெரிய வந்தது.
அங்கு போதியளவு நீர், கனிய வளங்கள் என்பன இருப்பதாகவும் பல ஆய்வுகள் தெரிவித்து வந்தன.
தற்போது, சந்திரனில் போதுமான அளவு தண்ணீர் இல்லை எனவும் அது மிகவும் வறட்சியான கோள் எனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதன்போது, சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட குளோரின் ஓரக கனிமங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் சிறிதளவு கூட ஐதரசன் இல்லை. எனவே அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு நிச்சயம் இல்லை. இதனால் அங்கு மக்கள் வாழ கூடிய சூழ்நிலை இல்லை என்று அவர்கள் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment