Monday, August 23, 2010

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை.

Virakesari.
பெரேராவின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. தம்புலாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்திய- இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டித் தொடரில் முதன் முறையாக நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணிமுதலில் துடுப்பாடியது. இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கையும், இறுதிச் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இந்தியாவும் களமிறங்கின. தொடக்க வீரர்களாக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், சேவாக் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடி, இலங்கை பந்துவீச்சாளர்களைத் திணறடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சேவாக், 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார்.

குலசேகரவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ.வாகி அவர் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் 9 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார்.

இதை அடுத்து ரோஹித் சர்மாவும், யுவராஜ் சிங்கும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டெங்கு காய்ச்சலால் கடந்த போட்டியில் விளையாடாத யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். இது இந்தியா ஓரளவுக்கு சொல்லும்படியான ஸ்கோரை எட்டுவதற்கு உதவியது.11 ஓட்ட்ங்கள் எடுத்திருந்த போது சர்மா ஆட்டமிழந்தார்.

50 ஓட்ட்ங்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இதை அடுத்து, களம் புகுந்த ரெய்னாவும் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய டோனி, ஒரே ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசினார். எனினும், சிறிது நேரத்துக்குள்ளேயே ஆட்டமிழந்தார். 10ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பெரேரா பந்துவீச்சில் சங்ககராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டோனி.

பெரேரா, குலசேகர மேத்யூஸ், மலிங்கா ஆகிய நால்வர் கூட்டணியின் தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஜடேஜா, பிரவீண் குமார் ஆகியோர் ஓட்ட்ங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்., இந்திய வீரர்கள் சரியாக விளையாடாததன் காரணம் என்னவென்று புரியவில்லை!

மறுமுனையில் அதிரடியாக விளையாடும் யுவராஜ் சிங், தொடர்ச்சியான விக்கெட் வீழ்ச்சி காரணமாக அடித்து ஆடுவதை விடுத்து மிகவும் பொறுமையாக விளையாடினார். எனினும், 38 ஓட்ட்ங்களில் அவர் ஆட்டமிழந்தார். இந்தியா அணி103ஓட்டங்களை மட்டும் பெற்றது.

அதிரடியான தொடக்கம்: 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜெயவர்த்தனேவும், தில்ஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35 பந்துகளைச் சந்தித்த ஜெயவர்த்தனே 6 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்களை எடுத்தார். தில்ஷன் 35 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

இதை அடுத்து தரங்காவும், சங்ககராவும் ஜோடி சேர்ந்தனர். மேலும், விக்கெட் வீழ்ச்சி அடைவதைத் தவிர்த்து நிதானத்துடன் ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment