Tuesday, August 10, 2010

அமெரிக்காவில் கடந்த மாதம் வேலையை இழந்தவர்கள் 1,31,000 பேர்

Virakesari.
தொடர்ச்சியாக இரண்டாவது மாதமும் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பணி இழப்புத் தொடர்கிறது.

அமெரிக்க தொழில்துறை வெளியிட்ட புள்ளிவிபரப்படி கடந்த ஜூலை மாதம் மட்டும் 131000 பேர் பணி இழந்துள்ளனர். அதேவேளையில்,தனியார் துறையில் 71000 பேருக்கு தொழில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானதாகும். பணி இழப்பு தொடர்ந்த போதிலும் வேலைவாய்ப்பின்மையின் எண்ணிக்கை 9.5 சதவீதமாக தொடர்கிறது.

பணி இழப்பு அமெரிக்காவின் பங்குச் சந்தையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பணி இழப்பு பொருளாதார நெருக்கடியிலிருந்து கரை ஏறுவதற்கு சவாலாக விளங்குகிறது என அமெரிக்க சொத்து கட்டமைப்பு கருதுகிறது


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment