Saturday, August 21, 2010

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கையிலுள்ள வதிவிட பிரதி நிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

Kattankudi Web Community (Photo also attached)

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கையிலுள்ள வதிவிட பிரதி நிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (20.8.2010) மாலை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்கள் சம்மேளனக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பு சம்மேளன காரியாலயத்தில் அதன் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் இன்று மாலை 4.30மணிக்கு இடம்பெற்றது.


சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி அலி நறாக்கி மற்றும் அதன் வெளிக்கள இணைப்பாளர் திருமதி டினின் முறான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

யுத்தத்திற்கு பின்னரான தற்போதய நிலை மற்றும் காணிப்பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகள் பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகளிடம் இச்சந்திப்பின் போது கேட்டறிந்து கொண்டனர்.

காத்தான்குடி மக்களுக்குள்ள காணிப்பிரச்சினையுடன் குப்பைகள் கொட்டுவதிலுள்ள பிரச்சினை மற்றும் அன்மைக்காலமாக எதிர் நோக்கும் சிக்கல்கள் என்பவற்றையும் சம்மேளன பிரதி நிதிகள் இதன்போது தெனிவாக எடுத்துக்கூறினர்.

மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள காணி தொடர்பான பிரச்சினைகளை புள்ளிவிபரங்களுடன் அறிந்துகொண்டு அது தொடர்பாக அரசாங்கத்துடனும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இந்த விடயங்களை ஆராய்ந்து வெளிக்கொண்டு வருவதே தமது முதல்கட்ட நடவடிக்கை என பிரதி வதிவிட பிரதிநிதி அலி நராஜ் தெரிவித்தார்.

சம்மேளன தலைவர் இஸ்மாயில் ஹாஜியார்ருடன் சம்மேளன செயலாளர் சபீல் நழீமி மற்றும் அதன் அவசர குழு உறுப்பினர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment