Tuesday, August 31, 2010

உன்னைத் திருத்து.


இரக்கமில்லா இரவில் தன்னந்தனியாய்
நடு வீதியில் நானிருக்க
நாணமில்லா நளினத்துடன் நடைபயின்றால்
நங்கையொருத்தி நானிருந்த திசைபார்த்து.....

அவளின் அழகான சிரிப்பில் ஆபத்தை உணர்தியது
என் மனம் சற்று ஒதுங்கினேன்.
வெறுப்புடன் நானிருக்க வெட்கமில்லா
வாய்ப் பேச்சால் என் எண்ணம் கலைத்தால்
'சார் காலையில சாப்பிட்டது ஏதாவது help பண்னுங்க?'

மனிதம் மங்காத என்னில் மனிதாபிமானத்தோடு
50 ருபாய் கொடுத்தது என் கரங்கள்
விசாரனைக் கேள்வி தொடுத்தது என் நாவு
யார் நீ? இந் நேரம் என்ன செய்கிறாய்?

மறு நிமிடம் நனைந்தது அவள் கண்கள்
சற்று தடுமாறியது என் இதயம்...

வெட்கமில்லாமல் சொன்னால் அவள் ஒரு
விடுதியில்லா விபச்சாரி என்று
ஏன் இப்படி? எதற்கு இந்த தொழில்?
மீண்டும் கேள்வி தொடுக்கப்பட்டது
என்னில் இருந்து.......

சொன்னால் செய்தி ...........
அவளின் சோகச் செய்தி...........

இறைவன் ஒருவன் இருந்திருந்தால்
அம்மா என்னை அரவனைத்திருந்தால்
என் அப்பா உழைத்திருந்தால்
காதலன் கரம் பிடித்திருந்தால்
கணவன் காப்பாற்றியிருந்தால்
இச் சமூகம் சாக்கடையாய் மாறாமல் இருந்திருந்தால்
என் வாழ்வும் மலர்ந்திருக்கும் என்றது அவள் நாவு

என் வார்தை வழுவிழக்க
என் உடம்பு படபடக்க
என் மனம் குழம்பி அழுதது
இப்படியும் ஒரு பிரச்சைனையா என்று
விடைகொடுத்தேன் சற்று பரிதாபத்துடன்

வலிகள் நிறைந்ததுதான் வாழ்கை என்று
சொன்ன நான் சோகத்தில் மூழ்கினேன்
சமுதாயத்தின் சில சாக்கடைகளை எண்ணி

என்ன செய்யலாம் என்ற யோசனையில் தத்தளித்த போது
'திருடுற கூட்டம் திட்டம் போட்டுத் திருடிக் கொண்டே இருக்குது
அதை தடுக்குற கூட்டம் சட்டம் போட்டுத் தடுத்துக் கொண்டேயிருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'என்ற
ஒரு கவிஞனின் வரி எனக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தது

'உன்னைத் திருத்து உலகம் தானாய் திருந்தும்'
என்ற எண்ணக் கருக்குள் அடங்கிப் போனேன்
என் எழுத்துக்களுடன்...........

Post Comment

புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்Virakesari.
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது.

முன்னைய தரவரிசை பட்டியலின் படி இலங்கை அணி ஆறாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த தொடரில் பெற்றுக்கொண்ட வெற்றிகளை அடுத்தே இலங்கை அணி, தரவரிசையில் முன்னேற்றம் பெற்றுள்ளது.

இந்த புதிய தரவரிசைப்படி தொடர்ந்தும் அவுஸ்ரேலியா முதலாவது இடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. நான்காம் இடத்தில் தென்னாபிரிக்க அணியும், 5 ஆம், 6 ஆம் இடங்களில் முறையே இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் பெற்றுள்ளன.

ஆறாம் இடத்தில் பாக்கிஸ்தானும் ஏழாம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பெற்றுள்ளன. இதேவேளை டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்க அணியும், மூன்றாம் இடத்தில் இலங்கை அணியும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

4 ஆம், 5 ஆம் மற்றும் ஆறாம் இடங்களில் முறையே, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான் ஆகிய அணிகள் பிடித்துள்ளன.

Post Comment

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்.Virakesari.
உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

Post Comment

ஒசாமா பின்லேடன் ஜோர்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்ட சி.ஐ.ஏ ஏஜென்ட்: காஸ்ட்ரோVirakesari.
ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அவரால் சிஐஏ ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன். இது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

லிதுவேனியாவைச் சேர்ந்த எழுத்தாளர் காஸ்ட்ரோவை சந்தித்தார். அப்போது உடன் இருந்த பத்திரிக்கையாளர்களிடம் காஸ்ட்ரோ பேசுகையில்,

சிஐஏவால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்தான் பின் லேடன். ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவே பின் லேடனை விலைக்கு வாங்கியது சிஐஏ. உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் புஷ்ஷின் பிரதான எண்ணம். அதற்கு வசதியாக அவர்கள் லேடனை பயன்படுத்திக் கொண்டார்.

தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை பின்லேடன் அறிவிப்பார். அவரைத் தொடர்ந்து புஷ் எச்சரிக்கும் வகையில் பேசுவார். இரண்டுமே திட்டமிட்ட நாடகங்கள். புஷ்ஷுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவர் லேடன். புஷ்ஷுக்குக் கீழ்ப்பட்டவராகவே அவர் இருந்து வந்தார்.

லேடன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்பது ஆப்கன் போர் ரகசியம் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன என்றார் காஸ்ட்ரோ.

84 வயதாகும் காஸ்ட்ரோ சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். தற்போது அவர் நலமடைந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கும் போக ஆரம்பித்துள்ளார். வழக்கமான முறையில் செயல்பட ஆரம்பித்தது முதல் பரபரப்பு பேச்சாக பேசி வருகிறார் காஸ்ட்ரோ.

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அணு ஆயுத யுத்தம் வரும் என்று சமீபத்தில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஒசாமா பின்லேடன்,அமெரிக்காவின் ஏஜென்ட் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post Comment

Monday, August 30, 2010

நரகத்தை கண்டதுன்டா?????


நாடிழந்து, நகரிழந்து, நடைபினமாய்
நாற்பக்க கம்பிவேலிக்குள் நடமாடுகிறது
ஒரு நாதியில்லாக் கூட்டம்.

ஒடுங்கியிருந்த என் கற்பனையை உடைக்கிறது
அவர்களின் நினைவு
உறங்கிக் கிடந்த என் கரங்களை தட்டி எழுப்பியது
அவர்கள் வாங்கும் வலிகள்.

நரகத்தை கண்டதுன்டா பூமியில்
சென்று பாருங்கள் அகதிமுகாம்களில்...........

முகம் இருந்தும் முண்டமாக,
கண் இருந்தும் குருடனாக,
காது இருந்தும் செவிடனாக,
வாய் இருந்தும் ஊமையாக,
கை,கால் இருந்தும் இயக்கமற்றவர்களாக,
இதயம் இருந்தும் இரத்த ஓட்டமற்றவர்களாக,
மொத்ததில் உயிர் இருந்தும் பிணமாக,
கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்
அகதி எனும் அழியாப் பெயருடன்............

யார் இவர்கள்??????????
சுதந்திரக் கூடு எனும் பெயரில்
மனிதமே அற்ற சிறைக்கூட்டில்
அமுக்கப்பட்ட வாயில்லாப் பூச்சிகள்.
சொந்த மண்னை விட்டு, வீட்டை விட்டு
ஊரை விட்டு, நாட்டை விட்டு
துரத்தியடிக்கப்பட்டவர்கள்.

தீவிரவாதம் எனும் கொடுர நெருப்பில்
காய வைத்து தீக்கிரையாக்கப்பட்டவர்கள்.

வெந்த மனதுடன், வழிந்தோடும் கண்ணீரோடு,
உடுத்த உடையுடன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு
இரத்தம் படிந்த ஓர் இரவில் போர் எனும் மிகக் கொடிய
இரக்கமற்ற அரக்கனால் தூக்கியெறியப்பட்டவர்கள்

உறவுகளை இழந்த வலி
உடைமைகளை தொலைத்த சோகம்
இன்றும் தெரிகிறது ஏக்கமும், எதிர்பார்ப்புகளும்
நிறைந்த இவர்களின் இரு கண்களிலும்


ஒரு நேரச் சாப்பாட்டை 9 பிள்ளைகளுக்கு
3 வேளை பிரித்துக் கொடுக்கும் ஒரு தாயின்
அபல நிலையை கண்ட நிமிடம் என் இதயம்
நின்று மறுபடி துடிப்பதை உணர்கிறேன்
எதுவும் செய்ய முடியாத கோழையாக.....

குழந்தைகள் குமுறி அழுகின்றன
சிறுவர்கள் சீரழிந்து நிற்கின்றனர்
வாலிபர்கள் வழுவிழந்து வாயடைத்து விட்டனர்
பெண்கள் தங்களை வெறும் பொம்மைகளாக்கி கொண்டனர்
முதியவர்கள் முழுமதியையும் இழந்து விட்டனர்
இந்த நரகத்தில்.......

இது கடவுளின் விதியா? இல்லை
மனிதனின் சதியா? என்று இன்றும்
பட்டி மன்றம் நடத்துகிறது
பகுத்தறிவில்லாக் கூட்டம் ஒன்று

அரசியல் இலாபங்களுக்காக
மேடைகளில் விருந்தாக்கப் படுகிறது
இவர்களின் அவல நிலை

அன்பால் அரவனைக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்
இன்று அகதி முகாம்களில் அங்கலாய்கின்றனர்.

மனிதர்களே!!!! மனிதம் உள்ளவர்களே!!!!!
மண்டியிடுகிறேன் உங்கள் முன்
என் அகதிக் கைதிகளுக்காக
அரவனையுங்கள் அவர்களையும் உங்கள்
அன்பாலும் பண்பாலும் உதவிக் கரம் கொண்டு....
24 மணி நேர ஒரு நாளில் சிந்தியுங்கள்
1 வினாடியாவது இந்த அரவனப்பற்றவர்களைப் பற்றி

தூக்கி வீசுங்கள் உங்கள் பகைமையை
போர் எனும் கொடிய அரக்கனை அனைவரும் சேர்ந்து
தீக்கிரையாக்குங்கள்
மனிதத்தை வளருங்கள், மன்னிப்பை பரிசளியுங்கள
மடிந்து போகும் வாழ்வில் மற்றவர்களுக்கும் சற்று மதிப்பளியுங்கள்

இனியும் வேண்டாம் இன்னொரு அகதிக் கூடம்
இதுதான் இந்த இயலாத எழுத்தாளனின் ஆக்ரோஷம்............


Post Comment

சூதாட்ட சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்கள்


Virakesari.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலண்டனில் வெளிவரும் பத்திரிகையான நியூஸ் ஆப் த வேல்ட் அதிரடி செய்தியை வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், லார்ட்ஸ் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வேண்டுமென்றே நோபால்களை வீசியதாகவும் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தான் அணியை சேர்ந்த 7 முக்கிய வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பான வீடியோ ஆதாரமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் அணி தலைவர் சல்மான் பட், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமீர் உள்ளிட்ட 7 வீரர்களிடம் ஸ்காட்லாந்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி உள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது

Post Comment

மோனலிசா ஒவியத்தின் புன்னகையின் இரசியம் அறியப்பட்டுள்ளது


Virakesari.
உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.

இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.

மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Post Comment

Sunday, August 29, 2010

'யூ டியூபில் இணையத்தள தியட்டர்' சேவை ஆரம்பம்


virakesari.
உலக மக்களை காணொளி வலைப்பின்னல் மூலம் கவர்ந்த இணையத்தள சேவையான 'யூ டியூப் யூகே'(YouTube UK )'யூ டியூப் தியேட்டர் ' என்ற சேவையை ஆரம்பித்துள்ளது.

இதில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக உள்ளது. இந்த சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைவாக பல திரைப்படங்களை யூ டியூப் இல் வெளியிடும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் ஹொலிவூட்,பொலிவூட் மற்றும் காட்டூன்களை இலவசமாக பார்வையிடலாம்.

Post Comment

இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்

Virakesari.
இந்தோனேசியாவின் தீவுப் பகுதியான சுமாத்ராவில் உள்ள எரிமலைக்குழம்பிலிருந்து பெருமளவிலான அக்கினிக் குழம்புகள் வெளியேறுவதன் காரணமாக 1000 இற்கும் அதிகமான இந்தோனேசிய மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

‘சினபங் என்ற இவ் எரிமலை 1,500 மீற்றர் உயரத்திற்கு நேற்று நடுநிசியில் வெடித்துள்ளது.400 வருடங்களுக்கு பிறகே சினபங் எரிமலை வெடித்துள்ளது’ என இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவர்நிலையம் தெரிவித்தது.

தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் இது குறித்து தெரிவிக்கையில்,

‘ எரிமலை வெடிப்பு முன்னெச்சரிக்கை அளவானது அதிகரித்தவண்ணம் உள்ளது. எரிமலையிலிருந்து வெளியேறும் புகையின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலை ஆபத்தானதாக உள்ளது’ எனத் தெரிவித்தார்.

Post Comment

பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள கட்டி

Virakesari.
ஆர்ஜென்டினாவில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்தில் உள்ள லோமாஸ்டி ஷமோரா என்ற நகரை சேர்ந்த 54 வயதான பெண்மணியின் வயிற்றிலிருந்தே இவ்வாறு பாரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

இவர் 18 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது வயிறு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

ஆர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் எர்ஸ் என்ற இடத்தில் உள்ள வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டார். 'ஸ்கேன்' செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் ஒரு கட்டி வளர்ந்திருப்பது தெரிய வந்தது. உடனே அவருக்கு டாக்டர்கள் சத்திர சிகிச்சை செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த சத்திரசிகிச்சை முடிவில் அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது.

இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனித உடலில் இருந்து இதுவரை அதிக பட்சமாக 4.3 கிலோ எடையுள்ள நோய்க் கட்டிதான் அகற்றப்பட்டுள்ளது. இது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு மிகப்பெரியது என 34 வருட அனுபவம் வாய்ந்த டாக்டர் ஆஸ்கார் லோபெஷ் தெரிவித்துள்ளார்.

Post Comment

காலடிச் சத்தம்....தென்றலாய் வந்து
வசந்தமாய் வீசி
புயலாய் உறுவெடுத்து

என் வாழ்வை-நீ
வருத்திவிட்டுப் போனாலும்
என் விழி மூடிய ஒவ்வொரு இரவிலும்

கனவின் கருவாய் ஒலிக்கிறது
நீ வருகிறாய் என்ற உன் காலடிச் சத்தம்.

Post Comment

டில்சானின் சதத்துடன் இலங்கை இறுதி போட்டியில் வெற்றி


Virakesari.
டில்சானின் அதிரடி சதத்தின் மூலம் முக்கோணத் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களல் அபார வெற்றிப் பெற்றது.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

புள்ளிகள் அடிப்படையில் இலங்கை, இந்தியா முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய-இலங்கை அணிகளுக்கிடையே போட்டியில் இலங்கை இலகுவாக வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் சங்ககர முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டில்சானும், ஜயவர்தனவும் சிறப்பான இனைப்பாட்டத்தை ஏற்படுத்தினர். முதல் ஓவரை பிரவின் குமார் வீசினார்.

முதல் ஓவரில் 3 ஓட்டம் பெறப்பட்டது. 3 ஆவது ஓவரில் தில்சான் 2 பவுண்டரி விளாசினார். அதன்பின் இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். இதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது, 9.1 ஓவரில் இலங்கை அணி 50 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக விளையாடிய தில்சான் அரைசதம் அடித்தார், அவர் 36 பந்தில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றார்.

மறுமுனையில் இருந்த ஜயவர்தன 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கை மூலம் ஜயவர்தன தனது ஒரு நாள் போட்டியில் 9000 ஓட்டங்களை கடந்தார். ஜயவர்தன இந்த ஓட்ட எண்ணிக்கையை கடந்ததன் மூலம் 9000 ஓட்டங்களை பெற்ற மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய தரங்க 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய சங்ககார டில்சானுடன் இனைந்து சிறப்பான இனைப்பாட்டத்தை ஏற்படுத்தினார்.

இந்நேரத்தில் டில்சான் 100 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தனது ஒரு நாள் போட்டியில் 8 ஆவது சதத்தைப் பெற்றார்.

மறுமுனையில் இருந்த சங்ககார 71 ஓட்டங்களை பெற்று தனது ஒருநாள் போட்டியில் 58 ஆவது அரைச் சதத்தைப் பெற்றார்.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய இடை நிலை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கு இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது. இந்நிய அணியின் பந்து வீச்சில் பட்டேல் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 300 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் செவாக் 28 ஓட்டங்களையும், கார்திக் ஓட்டம் எதுவும் பெறாதும், ஹோலி 37 ஓட்டங்களையும், யுவராஜ் 26 ஓட்டங்களையும், ரெய்னா 29 ஓட்டங்களையும், தோனி 67 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

எனவே இந்திய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பந்து வீச்சில் பெரேரா மற்றும் ரன்தீவ் தலா 03 விக்கெட்டுகளையும், மாலிங்க 2 விக்கெட்டுகளையும் மெத்தியுஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் அடிப்படையில் முக்கோணத் தொடர் இலங்கை வசமானது.

Post Comment

சீனாவின் நவீன 'ஸ்ட்ரட்லிங் பஸ்'

Virakesari.
போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது.

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Post Comment

அமெ.தூதரகம் மீது இன்று பாகிஸ்தானில் துப்பாக்கித் தாக்குதல்

Virakesari.
பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகத்தை குறிவைத்து இன்று மர்ம நபர்கள் துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்டனர். 4 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் கூடிய அந்தப் பகுதியில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள், திடீரென அமெரிக்கத் துணை தூதரகத்தைச் நோக்கி சுட்டனர்.

தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

4 மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ம நபர்களைப் பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பெஷாவர் நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Post Comment

Saturday, August 28, 2010

வழி மேல் விழி வைக்கிறேன்காவியம் படைக்க நீ வருவாய்
என நினைத்தேன்.
காலத்தின் சோகத்தில் கலங்குகிறாய்
என்றரிந்து துடித்தேன்.

மறைவு என்பது சூரியனின்
மரணம் இல்லை காதலா,
மீண்டும் கிழக்கில் பிறக்கும்
என் நம்பி நடடா என் காவலா.

குடும்பங்களை, நண்பர்களை பிரிந்த
வலியின் வடு தெரிகிறது உன் கண்ணில்....
"காலங்கலே மாறும் உலகில் என் கவலை மட்டும்
நிரந்தரமில்லை" என்ற நினைப்பு உன் நெஞ்சில்...

நாளை உன்னை எதிர்பார்கிறது,
தளர்வில்லா தன் நம்பிக்கை உன்னை தாங்கிப் பிடிக்கிறது,
உன்னை நினைத்து என் பேனா காகிதத்தில் அழுகிறது,
உன் வலி கொண்ட அழுகை என் நெஞ்சை துளைக்கிறது.

நடைபிணமாய் நீ வெளிநாட்டில்,
உன் நினைவாய் உன் குடும்பம் உள்நாட்டில்,
நாதியற்று நானும் நம் நாட்டில்,
வெறித்த பார்வையோடு விடியாத இரவில்...

தொலைபேசியில் தொல்லை கொடுத்தவன்
என்று சொன்ன எனக்கு
இன்று தொலைபேசி கேட்கிறது
"இனி தொல்லை கொடுப்பவன் யார் உனக்கு????"

காலத்தின் நிர்பந்தத்தால் கடல் கடந்து சென்று
கஷ்டப்படுகிறாய் போர்வை போர்திய போலிப் புண்னகையோடு.
விடியலை எதிர்பார்த்து வெறுத்துப் போன உன் விழிகளுக்கு
விருந்தாகிறது சில இரவு நேரவிளக்குகள் மட்டுமே உன் வாழ்வோடு.

உன் பயணச் சேதி கேட்டுத் திகைத்தவள் நான்
இன்றும் திரும்பவில்லை இயல்பு வாழ்கைக்கு.
அடிமையாகிப் போனது என் அத்தனை நினைவுகளும்
நீ பிரிந்து சென்ற அந்த விமான ஓசைக்கு...

உன்னைப் பற்றிய கனவில் வாழ்ந்த நான்,
இப்போது உன்னை எண்ணி கற்பனையில் வாழ்கிறேன்.
விடிய விடிய பேசிய இரவுகள் எல்லாம்
இன்று என் விழிகள் நனைத்தே விடிகிறது.

நலமா? என்று கேட்டு கொச்சைப் படுத்தவில்லை
உன் உணர்வுகளை நான்
உன் வாழ்வைத் தேடி நீ சென்ற பயணம்
வசந்தமாய் மலர 5வேளை வேண்டுகின்றேன் நான்

நம் காதலை, பாசத்தை, நேசத்தை,
கருனையை, அன்பை, நட்பையெல்லாம்
விட்டு பிரிக்கப் பட்டிருக்கிறாய்,
பொருளாதாரம் எனும் பிசாசால்.

அரபிக் கடலோடும், வரண்ட பாலைவனத்தோடும்
பொருமை அடைந்து கொள் சில காலம்.
'பிரிவுகள் நிரந்தரமில்லை' என்ற வலியின்
வரியோடு அமைதி அடைகிறேன் நான் மிகுதி நேரம்.

கலங்காதே என் கண்ணாளனே....
நம் காதல் கைப்பிடிக்கும்.
காலங்கள் கை கூடும்.
வசந்தம் வழி சமைக்கும்.
உறவுகளும் உன்னோடினையும்.
வருங்காலம் உன்னை வாழ்த்தும்.

என் பெண்மையின் மென்மையை உணர்த்தியவனே.....
உன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழி வைக்கிறேன்
தாயைப் பிரிந்து ஏங்கும் ஒரு கைக்குழந்தை போல....

Post Comment

Friday, August 27, 2010

அறிந்ததுன்டா நீங்கள்????நாம் இந்தப் பகுதியினூடாக உங்களை சந்திப்பது இது 3வது தடவை. ஏற்கனவே கடல் மற்றும் சுத்தம் சம்மந்தமான தகவல்களை பகிர்ந்த நாம் இன்று சற்று வித்தியாசமாக மனிதர்களின் உல்லாசப் பிரயாணங்களுக்கு முக்கியம் கொடுத்திருக்கிறோம். இந்த தகவல்கள் உங்களுக்கு மிகவும் தேவையுடயதாக இருக்கும்.

பிரயாணங்கள் எனும் போது அவை பல காலகட்டங்களில் பல விதமாக மேற்கொள்ளப்பட்டாலும் காலத்தால் அழியாமல் இன்று வரைக்கும் நிலைத்து நிற்பது ஒரு பிரயாணம் மாத்திரமே(கொஞ்சம் யோசிங்க). தரையில் மேற்கொள்ளப்படுகின்ற பிரயாணங்கள் மாறலாம் ஆனால் ஆகாயம் கடல் மார்க்கம் என்பன மாறுபடாது. இவற்றில் மிகவும் பழமை வாய்ந்தது கடல் பிரயாணங்கள்.

ஆமாங்க இந்தப் பகுதியில் நாம் உங்களுக்காக பகிரப்போகும் விடயம் மக்களால் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக நடைமுறைப் படுத்தப்படும் உள்ளாச கடல் பிரயாணங்கள் பற்றித்தான். ஆம் மக்கள் தங்கள் உள்ளாச கடல் பிரயாணங்களுக்காக தேர்ந்தெடுக்கும் இடங்களில் முதல் பத்து இடங்கள் பற்றிய தகவல்கள் தான் நாம் இன்று உங்களுக்காக கொண்டுவந்திருக்கும் தகவல்

வாங்க போகலாம்......

1. கரீபியன்(Caribbean)
2. அலஸ்கா(Alaska)
3. தென் அமெரிக்கா(South America)
4. பெல்டிக் கடல்(The Baltic Sea)
5. பணாமா கால்வாய்(Panama Canal)
6. ஹவாய் தீவுகள்(Hawaii)
7. மேடிட்டேரியன்(Mediterranean)
8. கெல்பேஜஸ் தீவுகள்(The Galpages islands)
9. த டிஸ்னி எக்ஸ்பீரியன்ஸ்(The disney Experience)
10. தகிட்டி,ஆவுஸ்திரேலியா,ஆசியா,நியுஸிலாந்து(Tahiti, Australiya, Asia, Newzeland)

இந்தப் பெயர்களில் தோன்றும் link கை கிளிக் செய்வதன் மூலம் அந்த இடங்கள் பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவைதான் அந்த முதல் பத்து இடங்களைப் பிடித்த இடங்கள். இது தான் நாம் இன்றைக்கு உங்களுக்கு சொன்ன தகவல்கள். அடுத்த பகுதியில் மற்றுமொரு சுவையான தலைப்புடன் சந்திப்போம்.

Post Comment

மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் அன்னை தெரெசா


Virakesari.
கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை திரேசாவின் 100 ஆவது பிறந்த தினம் நேற்றாகும். 1910 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி மசிடோனியா கோஜிப்லில் பிறந்த அன்னை தெரேசா, அக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார்.

இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத் ரத்னா விருதும் பெற்றார்.

அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது.

இவர், அல்பேனியா ஷ்கோடரில் வாழ்ந்து வந்த நிக்கல் - டிரானா போஜாக்சியு தம்பதியரின் இளைய புத்திரியாவார். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதபோதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார்.

1929 ஆம் வருடம் அவர் இந்தியா சென்று, டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24,1931 இல் வாக்குத்தத்தம் எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். மத போதகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார்.

1950 ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மிஷனரி ஒப் செரிட்டி இல்லம் ஸ்தாபிக்கப்பட்டது.தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார்.

அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஷினிக்கு தனது இயற்பெயரைச் சூட்டினார். இவரது பணிக்குத் தலைவணங்கிய பிரிட்டிஷ் மகாராணி 1980 ஆம் ஆண்டு கௌரவ விருது வழங்கிக் கௌரவைத்தார்.1997 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் கௌரவ பிரஜா உரிமை வழங்கினார்.

1997 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அன்னை தெரெசா இறைவனடிசேர்ந்தார்.

அவரது மறைவையடுத்து சகோதரி நிர்மலா மிஷனரி ஒப் செரிட்டியின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்னை இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் உலக மாந்தர் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.

அன்னைக்குப் புனித பட்டம் அளிக்கும் அந்நன்னாளை முழு உலகும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அதற்கான இறை ஆசீரை வேண்டிப் பிரார்த்திப்போம்

Post Comment

காத்தான்குடியில் காலாவதியான பொருட்கள் கண்டு பிடிப்பு.

Virakesari.
காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த பெருந்தொகையான காலாவதியான பொருட்களை காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வியாழக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

பொது மக்கள் சிலர் வழங்கிய தகவலையடுத்து காத்தான்குடி பொதுச்சுகாதர வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான பசீர் மற்றும் றஹ்மத்துல்லா ஆகியோர் ஸத்தனத்திற்கு சென்று இப்பொருட்களை கண்டெடுத்து கைப்பற்றியுள்ளனர்.

காலாவதியான பெருந்தொபை;பொருட்களான சிறுவர்களுக்கான பிஸ்கட் வகைகள் மற்றும் கேக், பால்மா பக்கட்டுக்கள் மற்றும் சில மருந்துப்பொருட்கள் என்பவற்றை இதன் போது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் மினி கோப் சிற்றியின் முகாமையாளின் வீட்டிலேயே இக்காலாவதியான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Post Comment

இந்திய அணியின் நன்மைக்காக கருத்து கூறினேன்: அக்ரம்.


Virakesari.
சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான வசிம் அக்ரம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். வசிமின் இத்தகைய கருத்திற்கு இந்திய அணி தலைவர் டோனி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வசிம் தற்போது இந்தியாவின் நன்மைக்காகவே அக்கருத்தைக் கூறியதாக பேட்டியளித்துள்ளார். சமீப கால இந்திய பந்து வீச்சாளர்கள் நீண்ட நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் நிலைக்க முடியவில்லை வரும் போது உள்ள திறன் 5 ஆண்டுகளுக்கப் பிறகு காணாமல் போய்விடுகிறது.

அவர்கள் மிகுந்த பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் 10, 15 ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியும் இதை அவர்களின் நன்மைக்காகவே கூறினேன் என்றும் இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Post Comment

'ஸ்கைப்'புக்கு போட்டியாக 'கூகுள்'


Virakesari.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தேடல் பொறி நிறுவனமான கூகுள், கணினியிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் (பிசி டூ போன்) சேவையை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தது.

ஜீ-மெயில் எனப்படும் கூகுளின் மின்னஞ்சல் கணக்கினை பேணுவதன் மூலம், அதனூடாக எந்தவொரு தொலைபேசிக்கும் இந் அழைப்பினை மேற்கொள்ள முடியும். கூகுளின் வொயிஸ் சேவைப் பாவனையாளர்கள் தங்கள் வொயிஸ் கணக்கினை ஜீ-மெயிலுடன் இணைப்பதன் மூலம் இவ்வசதியை பெறமுடியும்.

மேற்படி சேவையானது கூகுளின் ஜீமெயில் மற்றும் கூகுள் வொயிஸ் போன்ற சேவைகளின் கலவையாக கருதப்படுகின்றது.

ஏற்கனவே இச்சேவையை ஸ்கைப் உட்பட பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கான அழைப்புக்கள் மேற்படி சேவை மூலம் 2011 ஜனவரி வரை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேற்படி சேவைக்காக ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த கட்டணத்தையே கூகுள் அறவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கென ஜீமெயில் பாவனையாளர்கள் இலவசமாக தமக்கான பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏற்கனவே இச்சேவையில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஸ்கைப் நிறுவனம் உலகளாவிய ரீதியில் 560 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

பிரஸ்தாப சேவையானது ஜீ-மெயிலுடன் இணைக்கப்படுவதால் யாஹூ மற்றும் மைக்ரோசொப்ட் மின்னஞ்சல் கணக்குகளுக்குச் சிறந்த போட்டியாகத் திகழும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இணையமூல தொடர்பாடலுக்கான உயர்ரக ஓடியோ மற்றும் வீடியோ மென்பொருட்களை உருவாக்கும் ஜீஐபிஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய அண்மையில் கூகுள் மேற்கொண்ட ஒப்பந்தமும் 'கிஸ்மோ5' வை கையகப்படுத்தியமையும் கூகுளின் போட்டியாளர்களை அதிர வைத்துள்ளமையை எவரும் மறுக்க முடியாது.

Post Comment

21 நாட்களாக சுரங்கத்தினுள் 33 பேர் தவிப்பு : சிலியில் அவலம்.Virakesari.
தென் அமெரிக்க சிலி நாட்டின் காபியாபோவிலுள்ள சுரங்கம் ஒன்றில் சிக்கி 21 நாட்களாக 33 தொழிலாளர்கள் இன்னமும் போராடி கொண்டிருக்கின்றனர்.

சுரங்கத்தின் 3 ஆயிரம் அடி ஆழத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 5ஆம் திகதி சுரங்க பாதை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி நடந்தது. 'ட்ரில்' இயந்திரம் மூலம் துளை போட்டு அவர்கள் இருக்கும் இடத்தை 17 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்த போது அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது தெரிய வந்தது.

சிறிய அளவிலேயே இந்தத் துளை போடப்பட்டுள்ளதால், அதன் வழியாக அவர்களை மீட்க முடியவில்லை. எனினும் தகவல் தொடர்பு, வெளிச்சம் வசதிகள் அதன் மூலம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக குளுக்கோஸ் மற்றும் மாத்திரைகள் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன.

21 நாட்களாக அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அதுவரை அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டும் சுரங்க குழாய் வழியாக அனுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் அடிக்கடி பூகம்பமும் ஏற்பட்டு வருகிறது. விபத்து நடந்ததற்கு பிறகு இரு தடவை பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் மேலும் இடிந்து அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

Post Comment

Thursday, August 26, 2010

என்னவளே............ஒவ்வொறு நொடியும் உன்னைத் தேடும்
என் கண்கள் ஏமாற்றத்துடன்
உன்னைக் காணாமலே களைப்படைகிறது

உன்னைப் பார்க்கும் போது உன்னுடன்
பேசத்துடிக்கும் என் நாவு தயக்கத்தால்
அடக்கப்பட்ட காளையாக என் வாய்க்குள் சிறைப்படுகிறது

பார்க்கும் போதே என்னைப் பரவசப் படுத்தியவள்
பார்வையாளே என்னை பற்றியெரிய வைத்தவள்
என் கவிக்கு முகமானவள்
என் வலிக்கும் கருவானவள்

அன்பே............
என் பூமியில் பேய்ந்து கொண்டிருக்கும்
அடை மழை நீ
உன்னைப் பிரியாமல் உன்னோடு நனைகின்ற
உன் பித்தப் பிரியன் நான்
என் மூச்சில் என்னோடு கலந்து விட்ட
காற்று நீ
உன்னை எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கும்
சுற்றமற்றவன் நான்
என் கடலில் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும்
அலை நீ
உன்னைச் சேர ஒவ்வொரு அலைக்கும் ஓடோடி வரும்
உன்னவன் நான்
சேர்ந்து விடு இன்று என்னோடு........ நான் வாழ வேண்டும் உன்னோடு.....

அவள் என்னை நெருங்கி வரும் தருணம்
தளர்கிறது என் நாடி
அவள் என்னை கடந்து செல்லும் நிமிடம்
உடைகிறது என் மனக் கண்ணாடி
சொல்லப்படா ஒரு வார்த்தைக்குள் சிக்கித் தவிக்கிறது
என் காதல்
சொல்லத்தான் வேண்டும் என்ற ஆசையில் உன்னை
விரட்டுகிறது என் கால்கள்
மங்கையவள் வரவேண்டும் என் மனங்கவரும்-பூ
மாலையாக...........
மங்கிவிட்ட என் வாழ்வை மாற்றியமைக்கும்-என்
மனைவியாக.......
வந்து விடு இன்றே என்னோடு........... நாம் வாழ்வோம் நல்ல நட்போடு

Post Comment

சற்று சிந்திப்போம் (சுவைக்க ஒரு சூடான பகுதி)


வாழ்கை என்ற பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனைதாங்க மணவாழ்கை. இதை நாம் சரியான பாதையில் அமைத்துக் கொண்டால் நம் வாழ்கைப் பயணம் மிகவும் அமைதியாகவும் தடுமாற்றம் இல்லாமலும் அமையும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதாவது மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு மனிதனின் வாழ்கையின் சந்தோசத்தை தீர்மானிக்கின்ற சக்தி இந்தக் கல்யாணம். அப்படிப்பட்ட கல்யாணத்தில் இடம் பெரும் சமூகச் சீரழிவான சீதனம் பற்றிய பார்வைதான் எனது இவ்வெழுத்துக்களின் நோக்கம்.

வாங்க நுழையலாம்.

இந்த சீதனம் இன்று பல ஏழைகளின் கண்ணீருக்கும், பலரின் வாழ்கை பிரச்சினைக்கும், கணவன் மனைவியின் அமைதியின்மைக்கும் காரணங்களாய் திகழ்கிறது. இன்றய நம் சமூகத்தில் இச் சீதனம் பாரிய ஒரு சமூக நோயாகக் கருதப்பட்டு இதை தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தும் இதன் வளர்ச்சி மட்டும் மறையவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் இதை எதிர்பவர்களும் கூட சில வேளை அதற்குள் உள் வாங்கப்படுவதுதான். அதாவது இச் சீதனம் இன்று பழ வழிகளில் மனிதனை சீர் கெடுத்துக் கொண்டிருக்கிறது அப்படின்னு தான் சொல்லனும். அந்த வழிமுறைகளை சற்று விரிவாக விளக்குவது என் கடமை கூட.

அவற்றை இங்கு 2 முறையாகப் பிரிக்கலாம்.
1. வெளிப்படையாக.
2. மறைமுகமாக.

1.வெளிப்படையாக
நேரடியாக பெண் வீட்டாரால் பணம் நகை வீடு வாகனம் போன்றவைகள் கொடுக்கப்படுவது.(மணமக்கள் அறிந்து)

இதிலும் இரண்டு வகை உண்டு
1. ஆண் வீட்டாரின் வற்புறுத்தலில் பெருவது
2. பெண் வீட்டாரால் தாமாக விரும்பிக் கொடுப்பது.

இதில் முதல் வகையில் நேரடியாகவே பிரச்சினை தோற்றமெடுக்கும். ஆண் வீட்டார் பெண் வீட்டாரிடம் கேட்கும் தருணமே பெண் வீட்டாருடைய மனதில் ஆண் வீட்டார் பற்றிய தப்பெண்ணம் உருவாக ஆரம்பிக்கிறது. பெண் வீட்டாரால் அது வெளியில் சந்தோசமாக கொடுக்கப்பட்டாலும் இவர்களின் உள் மனதில் இவை சம்மந்தமாக மறைமுக கருத்துக்கள் தோற்றமெடுக்கிறது என்பது தான் யதார்த்தம். எனவே ஆரம்பத்திலயே மனதில் தப்பெண்ணம் தோன்றும் போது அவை போகப் போக பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்து இரண்டு குடும்பங்களுக்கும் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

இரண்டாவது வகையில் பெண் வீட்டாரின் விருப்பத்தில் இது வழங்கப்படால் இங்கு எழும் பிரச்சினை மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது பெண் வீட்டாருக்கு நாங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறோம் என்ற ஒரு வித பெருமை தொற்றிக் கொள்ளும். இதனால் அவர்களின் செயல்கள் சற்று வித்தியாசமான நடத்தையை பிரதிபலிப்பதோடு மணமகனின் தன்மானத்துக்கும் மட்டுமல்லாமல் அவனின் குடும்பத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் ஆண் வீட்டாருக்கு அவர்களைப் பற்றிய சற்று தாழ்வுப் பிரச்சினை ஏற்பட காரணமாயிருக்கும். எனவே இதுவும் திருமணத்தை நிறுத்திவிடவோ அல்லது திருமணத்தின் பின் வாழமுடியாமல் தடுக்கவோ காரணமாயிருக்கும். இவற்றை தடுக்க அந்த ஆண் மகனால் மட்டுமே முடியும்.


2.மறைமுகமாக

மறைமுகமாக எனும் போது மணமக்கள் அறியாமல் இரு குடும்ப பெரியவர்கள் மட்டும் பேசி கொடுப்பது எடுப்பது. இது மிகப் பெரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மேலே சொல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் இதனுல் அடங்கினாலும் இந்த விடயங்கள் வெளியில் வரும் போது ஏற்படும் பாதிப்பு அந்தக் குடும்பங்களின் மீது சமூகம் தொடுக்கும் பார்வைகள் என்பன இன்னும் அதிகம் ஆதிக்கம் செலுத்தும். பெரியவர்கள் விட்ட தவறுக்காக இங்கு பாதிக்கப்படுவது இரண்டு அன்பான கணவன் மனைவியின் வாழ்கை என்பது இங்கு சுட்டிக்காட்டப் பட வேண்டும். எனவே இந்த விடயங்களில் அனைவரும் கவனமாய் இருக்கவேண்டும் என்பதுடன் கணவன் அல்லது மனைவி இச் சந்தர்பத்தில் சற்று ஆறுதலாய் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

எனவே இப்படியான பல வழிகள் இருந்தும் வெளிப்படை மறைமுகம் என்ற வரையறைக்குள் முடித்திருக்கிறேன் சுருக்கத்துக்காக. இங்கு ஒரு விடயத்தை அவதானித்திருப்பீர்கள். நாம் நம் இலேசுக்காக வெளிப்படை மறைமுகம் என்று பிரித்தாலும் எழும் பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுதான்.

அடுத்து நாம் நோக்க வேண்டியது இந்த சீதனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொருப்பு கூற வேண்டியது யார். என்னைப் பொருத்தவரை 80% ஆண்கள் (மன்னிச்சுடுங்கப்பா ஆண்களே). ஆமாங்க இதற்கு பொருப்பெடுக்க வேண்டியவர்கள் ஆண்கள் தான் குறிப்பாக அந்த மணமகன் தான்.(வெளிப்படையான சீதனத்தில் மட்டும்)இந்த விடயத்தில் ஒரு மிகப் பெரும் தவறான கூற்று ஒன்று நிலவி வருகின்றது. அதை தகர்க்க வேண்டியது என் கடமை கூட. அதாவது சீதனம் கேட்கப்படுவது அந்த ஆண்மகனின் தாயின் மூலமாக என்று சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகிறது. வாங்கப்டும் மொத்த சீதனத்துக்கும் தன் தாய் மேல் பழி போடும் மகன்களை நினைத்து வெட்கப்படத்தான் முடிகிறது.

சரிங்க நம்ம அவங்க விவாதத்துக்கே வரலாம். உன் தாய்தான் சீதனம் கேட்கிறாங்க என்று வைத்துக் கொள்ளுவோம். நீ என்ன ஊமையா? எங்கே போனது உன் வாய்ப் பேச்சுக்கள். தன் தாயிடம் அழகான முறையில் சொல்லி இது தவறு என்று புரியவைக்க கூட உன்னால் முடியவில்லை என்றால் நீ ஆண் மகன் என்று மார்தட்டிக் கொள்ளும் உரிமை உனக்கில்லை. உன் உள் மனதில் ஆசையை வைத்துக் கொண்டு தன் தாயை தூண்டிவிட்டு பிறகு அவள் மேலயே பழிபோடும் நீயெல்லாம் ஒரு மனிதனா? என்று கேட்கத் தோன்றுகிறது அவர்களை நோக்கி. இப்ப யோசிங்க யார் பொருப்பு? என்று. இந்த விடயங்களை சம்மந்தப்பட்ட அந்த மணமகன் நினைத்தால் தடுக்கலாம். ஆனால் இன்று அதுசரி இவர்கள் எல்லாம் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற ஜாதி போல....

என்னிடம் சீதனத்துக்கு வரைவிலக்கனம் கேட்டால் 'குடும்பம் எனும் நாடு செல்ல பெண்னுக்கு ஆண் விதிக்கும் ஆகாத வரி' அப்படின்னு சொல்லலாம். இதற்கு முழுப் பொருப்பெடுக்க வேண்டியவர்கள் ஆண்களே.

உலகில் நாம் ஒரு விடயத்தை பற்றி யோசிப்போம். அந்த விடயத்தில் ஏதாவது நன்மையும் இருக்கலாம் தீமையும் இருக்கலாம். ஆனால் சில விடயங்களில் மட்டும் தீமை மட்டுமே இருக்கும் அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் இந்த சீதனம். சற்று யோசிப்போம் இந்த சீதனத்தால் ஏற்பட்ட நன்மை எது? கிடையாது. அதற்கு மாற்றமாக வெறும் பிரச்சினைகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட ஒரு சமூகச் சீரழிவைத்தான் நாம் இன்னும் அனைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது தான் வெட்கப்பட வேண்டிய விடயம். நாம் எல்லாம் 6 அறிவுள்ள மனிதர்கள் என்று பெருமைப் படுகிறோம் ஆனால் நடப்பது 5 அறிவுள்ள மிருகங்களை விட கேவலமாக... சிந்தியுங்கள் (கொஞ்சம் over ரா போயிட்டனோ?).

இளைஞர்களே, ஆண்களே சற்று சிந்தியுங்கள் நீங்கள் நினைத்தால் மாத்திரம் தான் தடுக்க முடியும். நான் சீதனம் வாங்குவதில்லை கொடுப்பதில்லை என்ற முடிவுடன் உங்கள் சொந்தங்களில் நடைபெரும் திருமணத்திலும் அவற்றை தடுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆண்மைக்கு அழகு சேருங்கள். நடந்ததை விட்டுவிடுங்கள். இனி நடப்பதை மட்டும் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் துணிந்தால் இவற்றை தடுக்க முடியும். துணிவீர்கள் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்.

இது என் தனிப்பட்ட கருத்துக்கள் தான், வாழத்தி வரவேற்பதா? இல்லை தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார் நீங்கள்?????

Post Comment

காத்தான்குடி விவசாயிக்கு தேசிய மகுடம்

Kattankudi Web Community.
THE CEYLON CHAMBER OF COMMERCE இன் NATIONAL AGRIBUSINESS COUNCIL இனால் நடாத்தப்பட்ட 2010ம் ஆண்டிற்கான AG-BIZ2010 கண்காட்சிக்கு இணைவாக நடைபெறும் விவசாய பெருமக்களுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் நிகழ்வு கடந்த 22.08.2010 அன்று பி.ப.3.00மணிக்கு சிறிமாவோ பண்டார நாயக்க நாபகார்த்த மாணாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 2010க்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய விருதுக்கான போட்டியில் முதலாவது இடத்தினை எமது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் ஷரீப் பெற்றுக்கொண்டார்.

இதற்கான சான்றிதழையும், விஷேட விருதிணையும் விவசாய பிரதி அமைச்சர் கௌரவ J.புஷ்பகுமார அவர்கள் வழங்கி வைத்தார்.

காத்தான்குடி பாலமுனை கிராமத்தில் பொறியியலாளர் M.M. பளுலுல் ஹக் அவர்களின் முழுமையான பங்களிப்புடனும் ஆலோசனைகளுடனும் மேற்கொள்ளப்பட்டு வரும் ”றையான் பார்ம்” செயற்த்திட்டத்திற்கூடாகவே இக்கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இச்செயற் திட்டத்தின் பிரதான இயக்குனர்களாக சகோதரர் ஷரீப் அவர்களும் சகோதரர் றிபாய்தீன் அவர்களும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Comment

செவாக்கின் சதத்துடன் இந்தியாவுக்கு இலகு வெற்றி


Virakesari.

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக்கின் சதத்துடன் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்றது.

இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டி தம்புளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதின.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் கார்த்திக் ஓட்டம் எதுவும் பெறாது முதல் ஓவரிலேயே வெளியேறினார். இதனையடுத்து, கொஹ்லி, யுவராஜ், ரெய்னா ஆகியோர் முறையே 8, 6, 1 ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும் மறு முனையில் ஆரம்ப ஆட்டக்காரரான செவாக் அதிரடியாக ஓட்டங்களை பெற்றார். இவருடன் ஜோடி சேர்ந்த அணி தலைவர் தோனி நிதானமாக ஆடினார். 93 பந்துகளைச் சந்தித்த செவாக் 110 ஓட்டங்களை எடுத்த நிலையில் மெக்லம் பந்துவீச்சில் வாட்லிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 223 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

224 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்தின் ஆரம்ப வீரர்கள் ஓட்டங்களை பெற திணறினர். பின் வரிசையில் வந்த கேடி மில்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 52 ஓட்டங்களை சேர்த்தார்.

பந்துவீச்சில் மிரட்டிய பிரவின் குமார் நியூசிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். முனாப் படேல் 3 விக்கெட்களையும், ஆஷிஷ் நெஹ்ரா 2 விக்கெட்களையும், ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணியால் 118 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இறுதியில் இந்திய அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது. ,

Post Comment

இந்தியாவின் முதலாவது 'டெப்லட்' கணினி


Virakeasri.
'ஒலிவ் டெலிகொம்' என்பது இந்தியாவில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும்.

'ஒலிவ் ஸிப்புக்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3ஜி தொழிநுட்பத்துடன் கூடிய ' நெட் புக்' மற்றும் 'ஒலிவ் விஸ்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3 'சிம்'களைக் கொண்டு இயங்கக் கூடிய கையடக்கத் தொலைபேசி என்பன இதன் முக்கிய தயாரிப்புக்களாகும்.

இந்நிலையில் அந்நிறுவனம் இந்தியாவின் முதல் 3.5 ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் 'டெப்லட்' ரக கணினியை அண்மையில் அறிமுகம் செய்தது. கையடக்கத் தொலைபேசியாகவும் உபயோகிக்க முடியுமென்பதே அதன் சிறப்பம்சமாகும்.

'ஒலிவ் பேட் விடி 100' என இவ்வுபகரணம் அழைக்கப்படுகிறது. இது 7 அங்குல தொடுந் திரையைக் கொண்டுள்ளது.

'கூகுளி'ன் 'அண்ட்ரோயிட்' இயங்கு தளத்தினைக் கொண்டு இயங்குகின்றமை இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

'ஜிபிஎஸ்', 'புளூடூத்', 'வை-பை', 'டீவி டியூனர்' ஆகிய வசதிகளையும் 3 'மெகாபிக்ஸல்' கெமரா வசதியையும் இந்த உபகரணம் உள்ளடக்கியுள்ளது.

'512 எம்பி' + '512 எம்பி' உள்ளக நினைவாற்றலை இது கொண்டுள்ளதுடன் இதனை '32 ஜிபி' வரை 'மைக்ரோ எஸ்டி' இன் மூலம் அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

இதன் விலை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் 500 அமெரிக்க டொலர் வரை விலை மதிப்பிடப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.

Post Comment

ஹிட்லர் மூதாதையர்கள் ஆப்ரிக்கர்களா ? புதிய சர்ச்சை


Virakesari.
நாசி கொள்கை கொண்ட சர்வாதிகாரி ஹிட்லரின் மூதாதையர்கள் ஆப்ரிக்கர்களாக இருக்கக் கூடும் என ஒரு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது.

ஹிட்லரின் நெருங்கிய உறவினர்கள் 39 பேரது உமிழ் நீர் மாதிரி‌களை எடுத்து அவற்றை டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவரது மூதாதையர்களில் சீலர் வடக்கு ஆப்ரிக்கா, மொராக்கோவைச் சேர்ந்த பெர்பெர் இனத்தவராக இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

பெர்பர் இனத்தை ஹிட்லர் மிகவும் வெறுத்தார் என்பதும், அவர்களை அழித்தே தீருவேன் என கங்கனம் கட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லண்டனைச் சேர்ந்தவர் நடத்தியுள்ள இந்த ஆய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post Comment

Wednesday, August 25, 2010

என்ன பதில்? ??மனிதா!!
வாழப்பிறந்தவனா நீ?
கேள் உன் சிந்தனையிடம்.
என்ன பதில்?

காதல் கொண்டு மிதக்கிறாயா வானில்?
தேவையில்லை உன் கால்கள்
வெட்டி விடு அவற்றை-காதல்
உன்னை கைவிடும் வரை.

கோபம் கொண்டு கொதிக்கிறாயா?
சிந்தித்தாயா ஒன்றை
வானமும் பூமியும் நம்முடன் கோபம் கொண்டால்......
கண்கள் காட்டுகிறதா உன் கல்லரையை

பெருமை கொண்டு தலைக்கணமா உனக்கு?
மறந்து விட்டாயா வயிற்றில் நீ சுமக்கும்
மலத்தையும் சலத்தையும்
குனிந்து கொள் தலையை 2 கேவலம்
உன்னுல்லும் இருக்கிறது.

கொடுப்பதில்லையா நீ எவருக்கும்?
மடிந்து பார்
உன் செல்வங்கள் செலவழிக்கப்படும்
தோரனைகளை
பிறந்த மேனியாவே பிரிவாய்
எதற்கும் உபயோகம் இல்லாமல்.

பொறாமை உன் நெஞ்சை பிழிகிறதா?
திரும்பிப்பார் நீ வந்த வழிகளை
தெரிகிறதா உன் வாழ்வின் சுவடுகள்-தெரியாது
எரித்து விட்டது உன் பொறாமை அவைகளை

இப்போது சொல் என்ன பதில்?

Post Comment

ஆரையம்பதி-காத்தான்குடி எல்லைப் பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்துக்கும் பாதகமின்றித் தீர்வு

Kattankudi Web Community.
கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக்களும் கெளரவத்துடன் வாழும் நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் வள நிலையத்தினை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நெக்டப் திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபா செலவில் மேற்படி நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சமூக ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே சமூக ஒற்றுமை மேம்பாட்டை பாதிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது. இதில் விழிப்பாக அனைவரும் நடந்துகொள்ளவேண்டும். சமூக வன்முறைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆரையம்பதி, காத்தான்குடி எல்லைப் பிரச்சினை சுமார் 60 வருடங்கள் தொடர்ச்சியாக இருந்துவரும் பிரச்சினையாகும். இந்த எல்லைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளேன். எந்தவொரு சமூகத்துக்கும் பாதக மில்லாமலும் இரு சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் தீர்த்து வைக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

Post Comment

சார்ஜா வெற்றி தான் சிறந்தது: குமார் சங்ககார


Virakesari.

முத்தரப்பு தொடரில் வென்றதை விட, சார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக பெற்ற வெற்றிதான் சிறந்தது என, இலங்கை அணி தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுகின்றது. இதில் நேற்று முன்தினம் இந்திய அணி, இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மிகப்பெரிய அளவிலான இந்த வெற்றிக்கு, இலங்கை அணி தலைவர் சங்ககார இரண்டாவது இடம் தான் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறியது:

இந்திய அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி என்றால், அது சார்ஜாவில் பெற்றது வெற்றி தான். கடந்த 2000, ஒக்டோபரில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணிக்கு 300 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் 54 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. மிகப்பெரிய அணிக்கு எதிராக பெற்ற, இந்த மிகப்பெரிய வெற்றிதான் சிறந்தது.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற இந்த வெற்றி மறக்க முடியாது. அணியின் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த வெற்றி, எங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இருப்பினும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவது தான் முக்கியம்.

இந்திய வீரர்களுக்கு எதிராக தவறான அவுட் கொடுக்கப்பட்டது போன்று இனி வரும் போட்டிகளில் நடந்தவிடக் கூடாது. என சங்ககார தெரிவித்தார்.

Post Comment

நேபாளத்தில் விமான விபத்து; 14 பேர் பலி


Virakesari.
நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 14 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிது. மோசமான வானிலையே இவ்விபத்துக்கு காரணம்.

நேபாளத்தின் கிழக்குப் பிராந்தியமான லுக்லாவிற்குச் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் தலைநகர் கத்மண்டுவுக்கு திரும்பிவந்து கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சிறிய விமானத்தில் 11 பயணிகளும் 3 விமான உத்தியோகஸ்தர்களும் இருந்தனர். பலியானவர்களில் 6 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக, விமானம் விழுந்த இடத்தை மீட்புப் பணியாளர்கள் அடைவது சிரமமாகவுள்ளதாக நேபாள அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர்களை அனுப்பியபோதிலும் கடும் மழை காரணமாக விபத்து நடந்த இடத்தை அவை அடையவில்லை என காத்மண்டு விமான நிலைய அதிகாரி திரிரட்ணா மனாதர் கூறியுள்ளார்.

Post Comment

Tuesday, August 24, 2010

அறிந்ததுன்டா நீங்கள்????நம்ம அறிந்ததுன்டா நீங்கள்???? பகுதியின் 2வது பதிப்பு இது. இந்தப் பதிப்பில் நாம் பார்க்க இருப்பது சுத்தம் பற்றிய தகவல்கள். சுத்தம் சுகம் தரும் இது எல்லோரும் கேட்ட ஒரு விடயம் தான். ஆனால் செயலில் உள்ளவைகள் மிகவும் குறைவு. நாம் இன்று நம்முடைய சுகம் பற்றி அலட்டிக் கொள்ளமல் வாழ்ந்து வருகிறோம். இதனால் நாம் பல நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உட்தள்ளப்பட்டிருக்கிறோம்.(டெங்கு போன்றவைகள்).

ஏதோ நம்முடைய வீட்டை மட்டும் நம்முடைய பொருட்களை மட்டும் சுத்தம் செய்கின்ற நாம் நம் சுற்றுச் சூழலிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அது நமக்கும் பயனுள்;ளதாக அமையும்.
இன்று நாம் பார்க்கப்போகும் விடயம் இன்றய உலகில் தங்கள் நாடுகளை சுத்தப்படுத்தி வைத்திருக்கும் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள் பற்றித்தான். ஆனால் இதை அந்த நாட்டு அரசாங்கங்கள் மட்டும் செய்யவில்லை. அந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுடைய பொருப்புணர்சிதான் அவர்களின் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம்.

சரி வாங்க அந்த நாடுகளை பார்ப்போம்.

1. பின்லாந்து(Finland)
2. நோர்வே (Norway)
3. கனடா (Canada)
4. சுவீடன்(Sweedan)
5. சுவிர்ஸலாந்து (Switzerland)
6. நியுஸிலாந்து (Newzeland)
7. அவுஸ்திரேலியா (Australia)
8. அவுஸ்ரியா (Austria)
9. ஐஸ்லாந்து (Iceland)
10. டென்மார்க் (Denmark)

இது தான் அந்தப் பட்டியல். அந்த நாடுகளின் அரசாங்கத்திற்கும் அங்கு வாழும் மக்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு நாமும் பொருப்புடன் வாழ்ந்தால் நம் நாடும் சுத்தமாகும்(எல்லா விடயங்களிலும்) என்ற தகவலோடு முடிக்கிறோம்.

Post Comment

காத்தான்குடி படுகொலைகளுக்காக சம்பந்தன் மன்னிப்புக் கோருகிறார்

Kattankudi Web Community.
காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட் டிருந்த 103 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப் பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ் லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

இது ஒரு தவறுதான். 20 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருவதில் எமக்கு எவ்வித தயக்க மும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை. அப்படியான ஒன்றாகத்தான் இப்படு கொலை உள்ளது.

Post Comment

செய்திகள் வெளியிட இங்கிலாந்து வீரர்களுக்கு தடை


Virakesari.

"டுவிட்டர்` அல்லது "பேஸ் புக்கில்` செய்திகள் வெளியிட, இங்கிலாந்து வீரர்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் "டுவிட்டர்`, "பேஸ் புக்` போன்ற இணையதள சேவை, சமீபத்தில் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவில் சச்சின், சேவக் போன்ற முக்கிய வீரர்கள் இதில் இணைந்துள்ளனர்.

இதேபோல, இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் அஜீம் ரபிக். இவர் சமீபத்தில் "டுவிட்டரில்` வெளியிட்ட செய்தியில், தனது பயிற்சியாளரை "ஒன்றுக்கும் உதவாதவர்` என கடும் வார்த்தையால் திட்டியிருந்தார். இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்ட இவர், அபராதம் மற்றும் ஒருமாத தடையை எதிர்நோக்கியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் பீட்டர்சன், ஆண்டர்சன், சுவான், ஸ்டீவன் பின் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் "டிரசிங் ரூமில்` மற்றும் களத்தில் நடக்கும் முக்கிய விஷயங்கள், "டுவிட்டரில்` வெளியாக வாய்ப்புள்ளது என அணி நிர்வாகம் நினைக்கிறது.

இதுகுறித்து "டெய்லி மெயில்` என்ற பத்திரிகையில் வெளியான செய்தியில், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு இணைந்து, 2010-11ல் வீரர்களுக்கு புதிய ஒப்பந்த விதியை அறிமுகம் செய்கிறது. இதன் படி கிரிக்கெட் தொடர்கள் நடந்து கொண்டிருக்கும் போது, வீரர்கள் "டுவிட்டர்`, "பேஸ் புக்` போன்றவற்றில் தகவல்களை பரிமாறிக்கொள்ள தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கு அணியின் கேப்டன் ஸ்டிராஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Post Comment

ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாக தோன்றினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு


Virakesari.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள்; எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட், எனும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த இணையத்தளம் வேடிக்கையான செயல்களுக்காக மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்களை பரிசாக வழங்கி; வருகிறது. இச்செயற்பாடுகள் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.

நடிகராகவும் விளங்கும் அல்கி டேவிட், ஒபாமாவின் முன் நிர்வாணமாக தோன்றுபவர்களுக்கு ஒரு லட்சம் டொலர் வழங்குவதாக முதலில் அறிவித்ததாக டெய்லி டெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

எனினும், பின்னர் இந்த துணிச்சல் மிகுந்த வேடிக்கைக்கு இப்பணம் போதுமானது அல்ல என்று அவர் கூறியுள்ளதுடன் அத்தொகையை ஒரு மில்லியன் டொலராக அதிகரித்துள்ளார்.

ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றி பரிசு பெற விரும்பும் நபர் தனது வயிற்றில் மேற்படி இணையத்தளத்தின் பெயரை எழுதியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மக்களை தான் கோபமூட்டுகிறார் என்ற கருத்தை அல்கி டேவிட் நிராகரித்துள்ளார்.

'இரகசியப் பாதுகாப்புச் சேவைப் பிரிவினர் என்னை அப்புறப்படுத்திக்கொண்டு வெள்ளை மாளிகையின் துவிச்சக்கரவண்டி தரிப்பிடத்தின் பின்னால் வைத்திருப்பது போல் எண்ணிப் பார்த்தேன். ஆனால் எல்லாமே வேடிக்கைதான்' என்கிறார் அவர்.

Post Comment

Monday, August 23, 2010

என்னவளின் பிறந்த நாள்......வருடத்தின் ஒரு நாள்
எனக்கே எனக்கான ஒரு நாள்
என்னவள் எனக்காய் பிறந்த நாள்

பத்து நாள் முன்னாடியே பத்திரமாய் கவி வடித்து
பார்ப்பவர்கள் அனைவரையும் பரவசப்படுத்த புது ஆடை எடுத்து
அனு அனுவாய் நகரும் வினாடிகளை அனுபவித்து
எதிர் பார்த்திருக்கும் என் இனிய நாள்

பண்டிகைக்கு காத்திருக்கும் குழந்தைகள் போல்
பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவர்கள் போல்
தண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளிகள் போல்
சந்தோசம் பதற்றம் பயம் கலந்த எண்ணங்களோடு
நானும் காத்திருக்கிறேன் என்னவளின் பிறந்த நாளை

"இந்த மாதம் வந்தால் ஏன் இவன் இப்படி மாறுகிறான்"-பெற்றோர்
"இதெல்லாம் உனக்கு கொஞ்சம் too much மச்சான்"-நண்பர்கள்
"நல்ல ஒரு டொக்டர்ட கொண்டு போய் செக் பன்னனும்"-என்னை வீதியில் பார்ப்பவர்கள்
என்று சொல்பவர்களை நோக்கி சிரிக்கும் வேளை
சிந்திக்கவும் செய்கிறேன்
ஏனெனில் நீ இல்லாத நான் என்பதால்

என்னுடன் நீ இருந்த காலங்களில்
வரவேற்ற உன் பிறந்த நாளை நீ பிரிந்த போது
உன்னோடு வழியனுப்பவில்லை நான்
பிடித்ததை மாற்றும் பழக்கம் எனக்கில்லை என்பதால்

மனைவியாய் உன்னை ஏற்ற என் மனதுக்கு
விளங்கவில்லை நீ இப்போது மாற்றானின் மனைவி என்று
நீ தந்த வடுக்களை வாங்கிய எனக்கு
சற்று ஆறுதலாய் உன் பிறந்த நாள் மட்டுமே

தினம் என்னை உன் நினைவுச் சூட்டால் தீண்டும் நீ
என்னை குளிர் கொண்டு வருடும் வருடத்தின் ஒரு நாள்....

பரிதாபம் வேண்டாம் என்னை நோக்கி
என்னவள் என்றும் என்னுடன் இருக்கிறாள்
நினைவுகளாக என்னுல் புதைந்து கொண்டு

இன்று அவள் பிறந்த நாள்
வாழ்த்துங்கள் என்னுடன் சேர்ந்து
அவள் வாழ என்னோடு நினைவுகளாக

Post Comment

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை.

Virakesari.
பெரேராவின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. தம்புலாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்திய- இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டித் தொடரில் முதன் முறையாக நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணிமுதலில் துடுப்பாடியது. இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கையும், இறுதிச் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இந்தியாவும் களமிறங்கின. தொடக்க வீரர்களாக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், சேவாக் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடி, இலங்கை பந்துவீச்சாளர்களைத் திணறடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சேவாக், 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார்.

குலசேகரவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ.வாகி அவர் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் 9 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார்.

இதை அடுத்து ரோஹித் சர்மாவும், யுவராஜ் சிங்கும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டெங்கு காய்ச்சலால் கடந்த போட்டியில் விளையாடாத யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். இது இந்தியா ஓரளவுக்கு சொல்லும்படியான ஸ்கோரை எட்டுவதற்கு உதவியது.11 ஓட்ட்ங்கள் எடுத்திருந்த போது சர்மா ஆட்டமிழந்தார்.

50 ஓட்ட்ங்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இதை அடுத்து, களம் புகுந்த ரெய்னாவும் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய டோனி, ஒரே ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசினார். எனினும், சிறிது நேரத்துக்குள்ளேயே ஆட்டமிழந்தார். 10ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பெரேரா பந்துவீச்சில் சங்ககராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டோனி.

பெரேரா, குலசேகர மேத்யூஸ், மலிங்கா ஆகிய நால்வர் கூட்டணியின் தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஜடேஜா, பிரவீண் குமார் ஆகியோர் ஓட்ட்ங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்., இந்திய வீரர்கள் சரியாக விளையாடாததன் காரணம் என்னவென்று புரியவில்லை!

மறுமுனையில் அதிரடியாக விளையாடும் யுவராஜ் சிங், தொடர்ச்சியான விக்கெட் வீழ்ச்சி காரணமாக அடித்து ஆடுவதை விடுத்து மிகவும் பொறுமையாக விளையாடினார். எனினும், 38 ஓட்ட்ங்களில் அவர் ஆட்டமிழந்தார். இந்தியா அணி103ஓட்டங்களை மட்டும் பெற்றது.

அதிரடியான தொடக்கம்: 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜெயவர்த்தனேவும், தில்ஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35 பந்துகளைச் சந்தித்த ஜெயவர்த்தனே 6 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்களை எடுத்தார். தில்ஷன் 35 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

இதை அடுத்து தரங்காவும், சங்ககராவும் ஜோடி சேர்ந்தனர். மேலும், விக்கெட் வீழ்ச்சி அடைவதைத் தவிர்த்து நிதானத்துடன் ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Post Comment

சிலி சுரங்க விபத்து:17 பேர் உயிருடன் இருப்பதாகத் தகவல்

Virakesari.

லி நாட்டில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய 33 பேரும் உயிருடன் இருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலத்துக்குக் கீழ் சுமார் 700 மீற்றர் ஆழத்தில் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள், அங்கு இடம்பெற்ற விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும் வெளியாகாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

நேற்றைய தினம் மீட்புப் பணியாளர்களினால் அனுப்பப்பட்ட ஒலிப்பதிவு கருவி, தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது பதிவாகியுள்ளது.

நிலத்துக்கு அடியில் உள்ள 33 பேரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட குறிப்பு ஒன்றும் அந்த கருவியுடன் இணைக்கப்பட்டு வந்துள்ளது.

இவர்களை மீட்க மேலும் சில மாதங்களேனும் தேவைப்படும் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Comment

Sunday, August 22, 2010

எது காதல் (சுவைக்க ஒரு சூடான பகுதி)கேள்விகள் பல தொடுத்தும் விடை கிடைக்காத ஒரு விடயத்தை அறிந்ததுன்டா நீங்கள் அதுதான் காதல். காதல் என்றால் என்னவென்று கேட்ட போது விடைகொடுக்க முடியாமல் திண்டாடியவர்களை நினைக்கிறேன் நானும் தடுமாறியவனாக. இருவர் சேர்ந்து ஒருவராய் வாழுவது, ஈருடலில் ஓர் உயிர், என்றெல்லாம் பல விளக்கங்கள் இருந்தாலும் இருதி வரை எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம் தான் கவர்சியை அடிப்படையாக கொண்டுதான் காதல் தோன்றுகிறது என்பது.

விடிய விடிய பேசினாலும் விளக்கம் ஒன்றைதான் குறித்து நிற்கிறது இந்தக் காதல். ஒரு ஆணுக்கு, பெண்ணின் மீதும் பெண்ணுக்கு, ஆணின் மீதும் ஏற்படும் கவர்சிக்கு மறு பெயர் தாங்க காதல். கவர்சி என்பது அழகில் மட்டுமல்ல பல விடயங்களிலும் இருக்கலாம். குறிப்பிட்ட அந்த ஆண்/பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட அந்த பெண்/ஆணின் மீது ஏற்படுகின்ற ஈர்ப்பு அழகாலோ, அறிவாலோ, அல்லது நல்ல குணங்களாலோ உள் வாங்கப்படுகிறது என்பதுதான் யதார்தம். இந்த காதல் என்பது மனிதனுக்கு அன்றாடம் எழக்கூடிய உணர்வுகளில் ஒன்றே தவிர வேறு எதுவும் இல்லை. அழுகை, வெட்கம், மகிழ்ச்சி, கோபம் இது போன்றுதான் காதலும். ஆனால் இந்தக் காதல் இன்று உலகில் மற்றய உணர்வுகளை விட முக்கியமானதற்கு என்ன காரணம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.....

முதன்மை காரணியாக நாம் சொல்லலாம் யதார்தம் அற்ற சினிமாக்கள் தான். இன்றய சினிமாக்கள் இந்த காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வேறு ஏதாவது ஒரு விடயத்துக்கு கொடுத்திருந்தால் அந்த விடயத்தில் அச் சமூகம் சாதித்திருக்கும் என்றால் மிகையாகாது. ஏனெனில் ஒரே காதல் என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு எத்தனை 3மணி நேரங்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை யாரும் மறைக்கவோ மறக்கவோமுடியாது. காதல் உயிரை விட மேலானது அதற்கு இவ்வுலகில் இணையில்லை அது இல்லை என்றால் வாழ்வில்லை என்றெல்லாம் இன்றய இளைஞர், யுவதிகளை பித்துப்பிடிக்க வைத்த இந்த சினிமாவை பேசியே தீரவேண்டும். காதல் இல்லை என்றால் வாழ்கையில்லை என்று தீர்மானம் எடுக்கும் அளவுக்கு இன்றய இளைஞர், யுவதிகள் மாறியிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுப் பொருப்பெடுக்க வேண்டியது இந்த சினிமாக்கள் தான். ஆனால் அவ்வப்போது வரும் ஓர் இரு சினிமாக்கள் மட்டும் விதிவிளக்காக காணப்படுகிறது. அப்படிப்பட்ட சினிமாக்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் பெரும்பான்மையான சினிமாக்கள் அதே பல்லவியை மட்டும் தான் பாடிக் கொண்டிருக்கிறது.

சரிங்க நம்ம விஷயத்துக்கு வருவோம். நாம் அடுத்து யோசிக்க வேண்டிய விஷயம் இந்த சினிமாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாம் எவ்வாறு விடுபடுவது என்பதுதான். அத பார்ப்போம் வாங்க.


அவள்/அவன் தான் என் உயிர் என்று புழம்பும் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்தக் காதலுக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கனங்கள், விதிகள் யாரால், அல்லது எச் சமூகத்தால் இங்கு கொடுக்கப்பட்டது என்பதுதான். இதற்கு எச் சமூகமும் எந்த தனி நபரோ பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் இதெல்லாம் கவிஞர்களாலும், சினிமா கதையமைப்பாளர்களாலும். இயக்குனர்களாலும் ரசனைக்காக, காட்சியமைப்புக்காக, சினிமாவின் சுவாரஸ்யங்களை அதிகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட சில்லறை வார்த்தைகளே தவிர வேறென்றுமில்லை என்ற முடிவுக்குதான் வரமுடியும். (தெளிவாக சிந்தியுங்கோ.) எனவே வெறும் யதார்தம் அற்ற சினிமாக்கல் போல் நீங்களும் வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை பல பிரச்சினைகளையும் இனைத்துக் கொள்ளும்.

இந்தக் காதல் ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் தேவையற்றது என்பதுதான் என் வாதம்.

இன்னொரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டிய பொருப்பு எனக்கிருக்றது. அதாவது அம்மா, அப்பா இப்படி இரத்த உறவுகளுக்காக விடாத உயிரை மனிதன் காதலுக்காக தியாகம் செய்கிறானே இது தான் காதலின் புனிதம் என்று சில வாதங்கள் முன் வைக்கப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். இப்படியான வாதங்கள் எவ்வளவு பெரிய முட்டாள் தனமான வாதம் என்று நீங்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. இந்த வாதத்தை முட்டாள்தனம் என்று சொன்ன நான் அந்த விடயத்தை முட்டாள்தனம் என்று சொல்ல வரவில்லை. அது ஒரு வழமைக்கு மாற்றமான செயல் என்று சொல்கிறேன். நான் மட்டுமல்ல மன நோய் வைத்திய நிபுணர்களின் அறிக்கை கூட இதைத்தான் குறித்து நிற்கிறது. ஆங்கிலத்தில் இவர்களை Abnormal என்று அழைப்பார்கள். உதாரணமாக ஒரு மனிதர் ஒரு விடயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவனாய் இருக்கிறான். அவனால் அவ்விடயத்தை விட்டு வாழ முடியாது என்று ஒரு நிலை தோன்றும் வேளை இப்படியான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பு உண்டு. அதாவது அவனால் அந்த இழப்பை ஏற்க முடியாத ஒரு மனநிலை, தோல்விகளை தாங்கமுடியாத இலகிய மனம், எதிர்பாரதா விடயங்கள் ஏற்படும் போது அதை ஏற்க மறுக்கும் வியப்பான மனநிலை கொண்ட மனிதர்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். காதல் தோல்வியால் மட்டுமல்ல பல விடயங்களிலும் இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

வீட்டில் பிரச்சினை பரீட்சைமுடிவுகள் திருப்தியில்லை கடன் தொல்லை போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம். இப்படிப்பட்ட மனிதர்கள் காதல் தோல்வியால் மட்டுமல்ல அவர்களின் எந்த தோல்வியான நிலைகளிலும் இப்படியான மோசமான முடிவுக்குத்தான் உள்வாங்கப்படுவார்கள் என்பது இன்றய மனநோய் வைத்திய நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. (நம்ம லொஜிக் படி பார்த்தாலும் ஒரு வேளை சினிமாக்கள் சொந்தங்களின் பிரிவுக்கும் தற்கொலை என்று காட்டியிருந்தால் நம்ம பசங்க அதற்கும் துணிஞ்சிருப்பாங்க போல)

ஆகவே காதல் தோல்வியில் ஒரு மனிதன் தற்கொலை என்பதை விட அவனின் மன வலிமை போதாத நிலையில் தற்கொலை செய்கிறான் என்பது தான் உண்மை. அவனுக்கு காதல் என்பதை விட தோல்வி என்ற ஒரு விடயம் தான் முன்னிலை வகிக்கிறது என்பது தான் இங்கு கோடிட்டு காட்டப்பட வேண்டிய விடயம். (மன்னிச்சுக்குங்க லிட்டில் சுப்பர் ஸ்டார்).

இந்தக் காதலை எவ்வாறு விளங்குவது என்ற சந்தேகம் உங்க மனதில் இப்ப வரலாம். இலேசான ஒரு வழி இருக்குதுங்க.ஒரு கேள்விய உங்க மனதில் ஓடவிடுங்க. அதாவது சராசரியான ஒரு ஆணையும் சராசரியான ஒரு பெண்ணையும் கற்பனைபன்னுங்க. இவங்க இரண்டு பேரும் ஒத்துப் போகும் ஒரு விடயத்தை தேர்ந்தெடுங்க பார்க்கலாம். மிகக் குறைவு அல்லது உங்களால் முடியாது. ஆகவே இவங்க இரண்டு பிரிவினைரையும் ஒன்றாய் சேர்ப்பதற்காக இயற்கை செய்த மாயம் தான் இந்தக் காதல் எனும் உணர்வு. இந்தக் காதல் வருவதற்கு முன் இவர்கள் பாம்பும் கீரியையும் போல (ஏன் அதை விட கொடுமை). ஆனால் காதல் என்ற உணர்வு இவர்களுக்குள் வந்தவுடன் விட்டுக்கொடுப்பு கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் ஒற்றுமை போன்ற நற் குணங்கள் இவர்களை ஆட்கொள்கின்றது. இயற்கையின் சமநிலை பேணப்படனும் மனிதன் பூமியில் மனிதனாக வாழனும் என்ற விதிக்காக இயற்கை ஏற்படுத்திய இயல்பான உணர்வுதான் காதல்.

எனவே எந்த ஒரு சராசரியான மனிதனும் ஒரு உணர்வை இழந்ததற்காக அவனின் முழு வாழ்கையையும் முடிக்கமாட்டான். சாதிக்க வேண்டிய பல விடயங்கள் அவன் முன்னே இருக்கும் போது காதலை ஒரு விடயமாக கருதி அவனால் செயற்பட முடியாது. இந்த இடத்தில் நான் கேட்ட ஒரு கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "இலட்சியங்கள் நிறைந்த ஒரு மனிதனுக்கு காதல் ஒரு வழிகாட்டியே தவிர வாழ்கையல்ல". ஆகவே இலட்சியம் இல்லாமல் வெறுமனே வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களால் இன்று காதல் அதன் தன்மை இழந்து விட்டது என்று சொல்லலாம்.

வைரமுத்து தொடக்கம் பா.விஜய் வரை காதலை பாடாத கவிஞர்கள் இல்லை என்கிறீங்களா. ஆமாங்க ஆனால் அவர்களின் நிஜ வாழ்கை????? உங்களை போன்று வலிகள் நிறைந்ததுதான். அவர்கள் வலிகளை வரிகளாக்கினர் அதனால் கவிஞர்கள். நீங்கள் வடுக்கலாக்கி நீங்களே உங்களை வதைக்கிறீர்கள். சேர்ந்து வாழ்வதுதான் காதல் செத்து மடிவதல்ல என்ற ஒரு வசனமும் எனக்கு இவ்விடத்தே நினைவு வருகிறது.
காதலுக்கு நான் எதிரியில்லை ஆனால் அதே நேரம் அந்தக் காதல் என்ற பெயரில் செய்யப்படுகின்ற முட்டாள் தனமான செயலுக்கும் படு மோசமான செயல்களுக்கும் நான் தான் முதல் எதிரி.

காதலுக்கு இன்றய இளைஞர் யுவதிகளிடத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளை நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சிக்கனும் என்ற நிலை இன்று இல்லை.
இந்தக் காதல் இல்லாவிட்டால் உலகில் உயிரினமே மங்கியிருக்கும் என்ற உண்மையை நாம் மறக்க கூடாது. காதல் அது மதிப்பளிக்கப் பட வேண்டியது, அதுவும் மனிதனின் உணர்வுகளுள் ஒன்று என்பதால். எனவே அதற்குரிய மரியாதை கொடுப்போம். அதற்காக அது உயிரை விட மேலானது என்றெல்லாம் முடிவெடுப்பது எல்லாம் முட்டாள்தனம்.

இன்று காதல் என்ற பெயரில் பல சீரழிவுகளும் நடைபெற்று வருகிறது. அவற்றையெல்லாம் கலைந்து மனித வாழ்கையின் ஓர் அங்கமாக மனித உணர்வுகளில் ஓர் உணர்வாக அதை ஏற்று ஆதரிப்போம்.

இது என் தனிப்பட்ட கருத்துதான் இதை வாழ்த்தி வரவேற்பதா? இல்லை தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார் நீங்கள்....


Post Comment

மட்டக்களப்பு நகரில் பாரிய டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம்

Kattankudi Web Community (Photo also attached).

மட்டக்களப்பு நகரில் 21.8.2010 பாரிய டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானம் என்பன இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு பொலிசார் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை மட்டக்களப்பு சுகாதார அலுவலகம் மட்டக்களப்பு சிறைச்சாலை என்பன இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தனர்.

டெங்கு விழிப்புனர்வு ஊர்வலம் மட்டக்களப்பு மாநகர சபை முனபாக ஆரம்பமாகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைவரை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை மேயர் மற்றும் பிரதி மேயர் பதில் ஆணையாளர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் தாதி மாணவர்கள் இவ்விலப்புனர்வு ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.

Post Comment

பாக்கிஸ்தான் பந்து வீச்சில் சரிந்தது இங்கிலாந்துபாக்கிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் பாக்.அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட பாக்.அணி பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை ஆரம்பத்தில் இருந்தே மிரட்டி வந்தனர்.

இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 223 ஓட்டங்களை பெற்றுசகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முதல் இனிங்ஸில் ஆடிய பாக்.அணி 308 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்துக்கு சவால் விடுக்க தமது 2வது இனிங்ஸை அரம்பித்த இங்கிலாந்து அணி வெறும் 222 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனடிப்படையில் பாக்.அணிக்கு 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக தீர்மானி;க்கப்பட பாக்.அணி 6 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

Post Comment

ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் : வெள்ளை மாளிகை விளக்கம்


Virakesari.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் எந்த்விதச் சந்தேகமும் இல்லை என வெள்ளை மாளிகை உறுதிபட தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு துணைச் செயலர் பில் பர்டன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து மக்களிடையே சந்தேகம் நிலவி வந்தது. இதுகுறித்து அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், 18 சதவீத அமெரிக்கர்கள், ஒபாமா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தனர். 34 சதவீதம் பேர், ஒபாமா கிறிஸ்தவர் என்று தெரிவித்தனர். 43 சதவீதம் பேர், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்று கூறினர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் போது, 11 சதவீதம் பேர் ஒபாமா முஸ்லிம் என்றும், 48 சதவீதம் பேர் அவர் கிறிஸ்தவர் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான் என்று வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு துணைச் செயலர் பில் பர்டன் கூறுகையில்,

"பெரும்பாலான அமெரிக்கர்கள் பொருளாதாரம் சீரடையுமா, ஈரான், ஆப்கானிஸ்தான் போர் எந்த நிலையில் உள்ளது என்பன குறித்து யோசித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர், ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

இது தேவையற்ற வேலை. இருப்பினும், ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆர்வமாக இருப்பதால், அதை தெளிவுபடுத்த வேண்டியது எங்கள் கடமை.

அதிபர் ஒபாமா நிச்சயமாக ஒரு கிறிஸ்தவர்தான். அவர் தினமும் பிரார்த்தனை செய்கிறார். போதகர்களைச் சந்தித்து ஆன்மிகம் தொடர்பாக உரையாடுகிறார். அவர்களது வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்கிறார்.

மதம் தொடர்பான அவரது நம்பிக்கைகள் அவரது தனிப்பட்ட விவகாரம். அதை விவாதப் பொருளாக மாற்ற வேண்டியதில்லை.

நாட்டில், எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் அதில், கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் பொருளாதாரத்தை சீரமைப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பணிகளில் ஒபாமா கவனம் செலுத்தி வருகிறார்" என்றார்.

Post Comment

Saturday, August 21, 2010

அறிந்ததுன்டா நீங்கள்????


ஆண்டவனின் படைப்புக்களில் எதுதான் அதிசயம் இல்லை. எல்லாவற்றையும் வியப்படையும் படியாகவே உருவாக்கியிருக்கிறான். (கடவுள் நம்பிக்கை இல்லென்னா விட்டிடுங்க.) ஆமாங்க இந்த உலகத்தில் அனைத்தும் நாம் அதிசயிக்கதக்க விஷயமாகதான் இருக்கிறது. அப்படி அதிசயப் பட்டியலில் நம்ம பக்கத்துல இன்னைக்கு இடம் பிடித்தது கடல்கள்தான். (ஏதோ தெரிஞ்சத உளருவேன் சமாளிக்கங்கப்பா.)

என்ன அதிசயம் அப்படின்னு பார்க்கிரீன்களா (அடபாவிகளா இது தெரியாதாடா உங்களுக்கு) கடலை மேலால் பார்க்கும் போது வெறும் நீர் மட்டும் தான் விளங்கும் ஆனால் நாம் இருக்கம் இந்த நிலப்பரப்வை விட மிகப் பெரியதொரு பங்கு இதனுல் அடங்கிப்போய் விட்டது. இன்றைக்கு நம்ம பகுதியில கடல்களின் ஆழங்களில் முதல் 10 இடத்தை பிடித்த கடல்கள் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

வாங்க போகலாம்....

கடல்
1. பசுபிக் சமுத்திரம் 3939M
2. இந்து சமுத்திரம் 3840M
3. அட்லான்டிக் சமுத்திரம் 3575M
4. கரீபியன் கடல் 2575M
5. ஜப்பான் கடல் 1666M
6. மெக்சிகோ குடா 1614M
7. மெடி டிரெனியன் கடல் 1501M
8. பெனிங் கடல் 1491M
9. தென் சீனக் கடல் 1463M
10. கருங் கடல் 1190M

இதுதான் இன்றய முதல் பத்து பகுதியில் நாம் கொண்டு வந்த தகவல். இது போன்று இன்னும் பல விடயங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் மற்றுமொரு பகுதியில் சந்திப்போம். (இப் பகுதி இன்றுதான் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது உங்கள் கமெண்டுகளும் எமக்கு பலம் சேர்க்கட்டும்.)

Post Comment

இலங்கை - நியுசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

Sooriyan

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டி மழை காரணமாக முற்றாக கைவிடப்பட்டது.


நேற்றைய தினம் நடைபெறவிருந்த இந்த போட்டி மழை காரணமாக பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, அது இன்று நடத்தப்பட்டது.

எனினும் இலங்கை அணி துடுப்பாடிய வேளையில், மீண்டும் மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து, போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 43.4 ஓவர்கள் நிறைவில் 203 ஒட்டங்களை பெற்றுள்ளது.
மஹெல ஜெயவர்தன 59 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

Post Comment

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கையிலுள்ள வதிவிட பிரதி நிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

Kattankudi Web Community (Photo also attached)

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கையிலுள்ள வதிவிட பிரதி நிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (20.8.2010) மாலை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்கள் சம்மேளனக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பு சம்மேளன காரியாலயத்தில் அதன் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் இன்று மாலை 4.30மணிக்கு இடம்பெற்றது.


சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி அலி நறாக்கி மற்றும் அதன் வெளிக்கள இணைப்பாளர் திருமதி டினின் முறான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

யுத்தத்திற்கு பின்னரான தற்போதய நிலை மற்றும் காணிப்பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகள் பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகளிடம் இச்சந்திப்பின் போது கேட்டறிந்து கொண்டனர்.

காத்தான்குடி மக்களுக்குள்ள காணிப்பிரச்சினையுடன் குப்பைகள் கொட்டுவதிலுள்ள பிரச்சினை மற்றும் அன்மைக்காலமாக எதிர் நோக்கும் சிக்கல்கள் என்பவற்றையும் சம்மேளன பிரதி நிதிகள் இதன்போது தெனிவாக எடுத்துக்கூறினர்.

மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள காணி தொடர்பான பிரச்சினைகளை புள்ளிவிபரங்களுடன் அறிந்துகொண்டு அது தொடர்பாக அரசாங்கத்துடனும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இந்த விடயங்களை ஆராய்ந்து வெளிக்கொண்டு வருவதே தமது முதல்கட்ட நடவடிக்கை என பிரதி வதிவிட பிரதிநிதி அலி நராஜ் தெரிவித்தார்.

சம்மேளன தலைவர் இஸ்மாயில் ஹாஜியார்ருடன் சம்மேளன செயலாளர் சபீல் நழீமி மற்றும் அதன் அவசர குழு உறுப்பினர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.

Post Comment

90ஆவது பிறந்த தினத்தன்று பரசூட்டில் குதித்து ஒருவர் சாதனை

Virakesari.

90ஆவது பிறந்த தினத்தன்று 1000 மீட்டர் உயரத்திலிருந்து பரசூட்டில்ல் குதித்து சாதனை படைத்துளார் ஒருவர்.

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கார்லோஸ் ரோகு பெல்ட்ரான் (90) என்பவரே இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.

இவர் ஆர்ஜென்டினாவில் நடந்த சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றவர். மேலும் அந்நாட்டு இராணுவத்தில் உள்ள பரசூட் வீரர்கள் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

இவர் தனது 90ஆவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அன்று விமானத்தில் பறந்தபடி 1000 மீட்டர் உயரத்தில் இருந்து பரசூட் மூலம் குதிக்கத் திட்டமிட்டார். அதன்படி அவர் பரசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்தார்.

இது தனது வாழ்க்கையில் மிகவும் வியக்கத்தக்க பிரமாண்டமான நாள் என்று அவர் தெரிவித்தார். அவர் தனது வாழ்நாளில் இதுவரை 1200 தடவை பரசூட்டிலிருந்து குதித்துள்ளார்.

Post Comment

ஈராக்கிலிருந்து கடைசி அமெ. படைப்பிரிவும் வெளியேற்றம்


Virakesari.
ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி தாக்குதல் படைப்பிரிவும் நேற்று வெளியேறியது.

ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க இராணுவம் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து நெருக்கடி எழுந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என, அறிவித்தார். இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின.

அமெரிக்க இராணுவத்தின் நான்காவது ஸ்ட்ரைக்கர் பிரிகேட், இரண்டாவது இன்பன்ட்ரி டிவிஷன் ஆகிய கடைசி தாக்குதல் படைப் பிரிவுகள் நேற்று காலை வெளியேறின. குவைத் வழியாக இந்த படைப்பிரிவினர் நேற்று வெளியேறினர்.

தாங்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல் படைப் பிரிவினர் வெளியேறினாலும், வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தங்கியுள்ளனர்.

ஈராக் இராணுவத்துக்கு ஆலோசனை கூறுவதற்காகவும், அமெரிக்காவின் நலன் கருதியும் இந்த படைப் பிரிவினர் அடுத்தாண்டு இறுதி வரை அங்கு இருப்பர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தாலும், சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவற்றை அவர்கள் பயன்படுத்துவர் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க இராணுவம், ஈராக்கில் முகாமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Comment

Friday, August 20, 2010

கடற்கரையில் சில நிமிடங்கள்......அமைதி வேண்டும் என்று நான்
அலையோடு கால் நனைக்க
எங்கிருந்தோ வந்து என்னுடன்
ஒட்டிக் கொண்டது உன் நினைவு

உருவமாய் மட்டும் நான் இருக்க
என்னுல் உயிராய் நீயிருக்க
நினைவு மட்டும் விளக்கப்பட்டதா?
நீயில்லை என்பதுதான் குறை.....

ஏக்கம் நிறைந்த பார்வைகளால்
கடலை வெறித்து ஏனோ என் கைகள்
கடல் மணலில் உன் பெயர் கிருக்க
சிலையாகிப் போனேன் சில நிமிடங்கள்

உன் நினைவுச் சிறைக்குள் நான் சிறைபிடிக்கப்பட்டு
பல காலம் உருண்டோடிட்டு...
இரவும் தெரியாமல் பகலும் தெரியாமல் ஆயுள் கைதியானேன்
அந்த இருட்டுச் சிறைக்குள்...

பெண்ணே....
உன் நினைவுகள் என்னில் நிலைநிற்க
நீ எங்கயோ மறைந்திருக்க
உன்னை தேடியே நடை போடுகிறது
என் உயிரும் என் உணர்வும்....

Post Comment

தங்கத்தில் ஒக்டோபஸ் : கொல்கொத்தா நிறுவனம் உருவாக்கம்


Virakesari.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது உலகப் புகழ்பெற்ற ஒக்டோபசை கொல்கத்த்தாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தில் உருவாக்கியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது, இறுதி முடிவை ஜெர்மனி மியூசியத்தில் இருந்த 'போல்' எனும் ஒக்டோபஸ் முன்கூட்டியே கணித்துக் கூறியது. இதன் மூலம் 'போல்' உலகம் முழுவதும் பிரபலமாகியது.

போட்டி முடிந்த பின்னர் அதன் உரிமையாளர் 'போல்' ஓய்வு பெற்று விட்டதாகவும், இனிமேல் எந்த முடிவையும் அது கணிக்காது என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் ஒக்டோபசின் உருவத்தை கொல்கொத்தாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தில் வடித்துள்ளது. 22 கெரட் தங்கத்தில் செதுக்கப்பட்டுள்ள இதன் மொத்த எடை 3.3 கிலோவாகும்.

30 கலைஞர்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். இதன் விலை 80 லட்ச ரூபா என மதிப்பிடப்படுகிறது.

Post Comment

Thursday, August 19, 2010

காத்தான்குடி இமாம்கள் முஅல்லிம்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு உலர் உணவு

Kattankudi Web Community (photo also attached)
இலங்கைக்கான குவைத் நாட்டின் முன்னால் தூதுவரின் துணைவியார் பத்ரியா இஜ்ஜி அவர்களிடம் சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்த வேண்டுகோளிற்கமைய காத்தான்குடி இமாம்கள் முஅல்லிம்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு உலர் உணவு நேற்று (18.08.2010) வழங்கப்பட்டது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஊடாக இந்த உலர் உணவு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் அனாதைகள் இல்ல மஸ்ஜித்தில் நேற்று மாலை 5.00 மணிக்கு இடம் பெற்ற இந் நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் மௌலவி வாஜித் உட்பட பிரதி அமைச்சரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Post Comment

ரோஜர் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிய முறே

virakesari.
டொரண்டோ ரோஜர் சம்பியன் கிண்ண டெனிஸ் போட்டியில் அண்டி முறே சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்..

சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரை 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிக்கொண்டு அண்டி முறே சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.

இதேவேளை காலிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் ரோஜர் பெடரை அண்டி முறே வெற்றிகொண்டார்.

சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ஸ்பெயினின் ரிப்பில் நடால் ஆகியோரை நான் வெற்றிக்கொண்டது இதுவே முதல் தடவையாகும் என அண்டி முறே கருத்து தெரிவித்துள்ளார்

Post Comment