Wednesday, August 04, 2010

மீண்டும் முகமது யூசுப்


Kattankudi Web Community.
இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டியில் விளையாட, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இளம் வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில், 354 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட, சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) முடிவு செய்தது. இதனை அடுத்து முன்னாள் கேப்டன் முகமது யூசுப் மீண்டும் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஆண்டு இவரது தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்தபோது, பாகிஸ்தான் அணி மோசமான தோல்வி அடைந்தது. இதனால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால், சர்வதேச போட்டியில் விளையாட காலவரையற்ற தடைவிதிக்கப்பட்டிருந்தார். தவிர, இவர் கடந்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங் வரிசையை கருத்தில் கொண்டு இவர், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பவுலிங்கில் சொதப்பிய, அனுபவ சுழற்பந்துவீச்சாளர் கனேரியா அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ரசா ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணியில் சீனியர் வீரர்களை சேர்ப்பதால், எவ்வித மாற்றமும் இருக்காது, என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “”தற்போது உள்ள இளம் பாகிஸ்தான் அணி, இதுவரை 2 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது. இதில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது. இதே அணிதான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. தற்போது தோல்வி அடைந்ததன்மூலம் பயனற்ற அணி என்று கருதிவிடக் கூடாது. இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏனெனில் இவர்கள்தான் வரும் காலங்களில் அணியில் விளையாடுவார்கள். சீனியர் வீரர்களின் வருகையால், எவ்வித மாற்றமும் இருக்காது. அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடும் பட்சத்தில் சுலப வெற்றி பெற முடியும்,“ என்றார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment