Tuesday, August 03, 2010

தமிழச்சி தங்கையே......

தமிழச்சி தங்கையே
தாறுமாறாக பேசுகிறீர்களே
இரண்டு கேள்விகள் எனச் சொல்லி
இரட்டிப்பாக்கும் போதே தவறுகிறதே
உங்கள் வாக்கு கண்டீங்களா உங்கள் கவிதையில்

பர்தாவுக்குள் சிறைப்பட்டிருக்கும் பரிதாபப் பெண்ணே
என்ற உங்கள் வரியில் நீங்கள் நிஜமாகவே பரிதாபப்படுகிறீர்களா?
இல்லை பகையை ஏற்படுத்துகிறீர்களா? விளங்கவில்லை
இந்தச் சின்னவன் சற்று விளக்கமளியுங்கள்

விலங்கிடும் மார்க்கமில்லை இஸ்லாம் என்ற உண்மை
அதை விளங்கியவர்களுக்குத் தெரியும்
விளக்கமில்லா உங்கள் வாதத்தை விட்டு விடுங்கள்

ஆழமான சிந்தனையுடயவள் நீ என நான் எண்ணியிருக்க
இப்படி அர்தமில்லா கேள்விகளா?
ஆண் என்ற பொது மொழிக்குள் எந்த மதத்தின் ஆண்?
சிரிக்கின்ற வேளையில் சிந்திக்கிறேன் உங்கள்
அறிவின் கூர்மையை இல்லை அறியாமையின் தன்மையை எண்ணி...

இதற்கு மேலும் விடை வேண்டுமா? உங்கள் கேள்வி 1 க்கு?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும்
ஈர்புணர்சி அறியாத முட்டாளா நீங்கள்?
கட்டுப்பாடுகள் தவறை தடுப்பதற்குத்தான் எனும்
எண்ணக்கரு உணராதவளா நீங்கள்?
மனிதர்கள் யாவரும் தவறு செய்யக் கூடியவர்கள் எனும்
உண்மை புலப்படாதவளா நீங்கள்?

நீதி சமமாய் வேண்டும் என்கிறீர்களா?
சற்று யோசியுங்கள் அதன் பின் விளைவை
தூர நோக்குச் சிந்தனை கொண்டு
நியாயம் அற்ற ஒரு விடயத்தை நியாயப்படுத்தும்
உங்கள் நீதி எங்கே போனது?

ஆண்டவனின் முன்னிலையில் இருபாலாரும்
அடிமை என்பதுதானே இஸ்லாத்தின் அத்திவாரம்
இது அறியாமல் ஏன் இப்படியொறு உப்புச் சப்பற்ற வாதம்?

விடைகிடைத்ததா? உங்கள் கேள்வி 2 க்கு

ஆண்கள் பர்தா அணியுங்கள் என
அறிவிப்பு வர இனி வழிகள் இல்லை.
அப்படி வந்திருந்தால் அது எமக்கு பாரம் அல்லவே..
ரமலான் மட்டுமல்ல வருடத்தின் 365 நாட்களும் நாம் தயார்
நானும் ஆண் என்பதால்....

தன் கடமையை கஷ்டத்துடன்
பேணிவரும் இஸ்லாமிய பெண்களை
ஏளனப்படுத்துவதா உங்கள் கவியின் நோக்கம்?
இதுவும் விளங்கவில்லை இவனுக்கு....

வாதங்கள் ஏற்படும் போது வார்த்தைகள் கவனம்
ஏனெனில் வார்தைகள் சறுக்கும் போது மற்றவனின்
மார்பில் பாயும் ஈட்டிகள் அவை

இனி மேலாவது சற்று கவனத்துடன் கையாளுங்கள்
மற்றவர்களின் மனதுக்கும் சுதந்திரத்துக்கும்
மரியாதை கொடுத்து

இருதியாய் 3 கேள்வி உங்களிடம்
ஒரு மாலைப் பொழுது
இஸ்லாமிய பர்தா அணிந்த ஒரு பெண்
தன் அங்கங்களை மறைத்தவளாக
மறு முனையில் ஒரு சாதாரண பெண்
கவர்சியான ஆடைகள் அணிந்தவளாக
எண்ணங்களின் பரினாமத்தை நகர்துங்கள்
அங்கிருக்கும் ஒரு ஆணின் பார்வையில் அவனுக்கு
காமத்தை ஏற்படுத்துவது யார்?

தன் முகத்தையே காட்டாத ஒரு பெண்ணா?
அல்லது தன் அங்கங்களை பகுதியாய் காட்டும்
ஒரு பெண்ணா?
சிந்தித்து விடையளியுங்கள்



(குறிப்பு: இந்தக் கவிதை "இஸ்லாமியச் சகோதரியிடம் இரண்டே கேள்விகள்??"
(http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=03&article=2164)
இக் கவிதைக்கு பதில் அளிப்பதற்காக எழுதப்பட்டது)


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. Well done n congrats for ur thoughts...but u were caught on saying "தன் கடமையை கஷ்டத்துடன்" thats what i think its wrong...a girl is compelled to wear...u itself said கஷ்டத்துடன்
    compelling is wrong....its my view
    @gunatweets

    ReplyDelete
  2. hmmmmm u got the point ya that's my wrong word... any tx for ur comments guna keep touch with me :)

    ReplyDelete