Thursday, December 02, 2010

அறிந்ததுன்டா நீங்கள் (சனத்தொகை-I)



மிகவும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எமது தளம் உங்களுக்காக பகிர கொண்டு வந்திருக்கும் தகவல் 2005ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு தகவலாகும்... சில தனிப்பட்ட வேளைகள் காரணமாக எம்மால் இந்த தகவலை உரிய நேரத்துக்கு வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொண்டு அதற்கான மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு விடயத்துக்குள் நுழைவோம்.

அதாவது உலகின் சனத்தொகை பற்றி நாம் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். இச் சனத் தொகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமான இரு விடயங்கள் சம்பந்தமாக நாம் இங்கு ஒரு பார்வையை செலுத்துகின்றோம். காரணம் இன்று உலகம் எதிர் நோக்கும் சவால்களில் மிகவும் முக்கியமான ஒரு சாவாலாக இந்த சனத் தொகை காணப்படுகிறது.

அதற்காக நாம் இங்கு ஒன்றும் தீர்வுகள் எதுவும் முன்வைக்கப் போவதில்லை.. காரணம் இயற்கையோடு விளையாடும் சக்தி யாருக்குமில்லை..இயற்கையின் மாறுபாடுகளுக்கு நாம் தீர்மானம் எடுத்து அதை மாற்ற நினைக்கும் போது மீண்டும் ஒரு பாரிய சவாலுக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்பது தான் அதன் யதார்தம்.

எங்களுடைய நோக்கம் பயனுள்ள தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

பிறப்பு

எனவே நாம் இங்கு கொண்டு வந்திருக்கும் விடயம் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தியகபூர்வ அறிக்கையின் படி ஒரு வருடத்தில் பிறப்பு அதிகமாகவுள்ள நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்... (நினைவில் நிறுத்துங்கள் மொத்த சனத் தொகை அல்ல. தரப்பட்டுள்ள நாடுகளில் ஒரு வருடத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை)

(எண்ணிக்கை மில்லியன்களில்
உ-ம்:- இந்தியா 24.1 மில்லியன்)

1. இந்தியா 24.1
2. சீனா 16.7
3. நைஜீரியா 5.3
4. இந்தனேஷியா 5.0
5. பாக்கிஸ்தான் 4.4
6. பங்களாதேஷ் 4.3
7. அமெரிக்கா 4.1
8. பிரேஸில் 3.1
9. கொங்கோ 2.7
10.எத்தியோப்பியா 2.7

(இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் 2005ம் ஆண்டு திரட்டப்பட்டதாயினும் அதன் பிறகு இது வரை இப்படியொரு தகவல் உத்தியகபூர்வமாக வெளியிடப்படவில்லை)

இங்கு மற்றுமொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் அதவாது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டப் பிராந்தியத்தின் நாடுகளாகும்.....
(தொடரும்...)


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment