Friday, July 30, 2010

' மைஸ்பேஸ் ' இன் அதிரடி நடவடிக்கை.

Virakesari.

' மை ஸ்பேஸ் ' என்பது பேஸ்புக் பிரபலமடையும் முன்னர் பலரின் விருப்பத்திற்குரிய சமூகவலைப்பின்னல் தளமாக இருந்தது.

எனினும் பேஸ்புக்கின் அபாரவளர்ச்சி ' மை ஸ்பேஸ் ' ஐ பின்தள்ளியது. மீண்டும் இழந்த தனது முதலிடத்தை அடைவதற்கு அத்தளமானது இவ் வருடம் மீள்வெளியீடு செய்யப்படவுள்ளது.

இத் தகவலை அதன் தற்போதைய உரிமையாளரான ' நியூஸ் கோர்ப் ' நிறுவனம் அறிவித்துள்ளது.

' நியூஸ் கோர்ப் ' என்பது உலகின் 2ஆவது மிகப் பெரிய ஊடக பல்கூட்டுத்தாபன நிறுவனமாகும். மேற்படி நிறுவனம் 2005ஆம் ஆண்டில் இச் சமூகவலைப்பின்னல் தளத்தினை 580 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்தது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ' நியூஸ் கோர்ப் ' நிறுவன உயர் அதிகாரியொருவர் பேஸ்புக் 500 மில்லியன் பாவனையளர் இலக்கினை எட்டியுள்ள போதிலும் ' மை ஸ்பேஸ் ' உலகளாவிய ரீதியில் தற்போதும் பிரபலமாகவுள்ளது.

மேலும் மாதமொன்றிற்கு அமெரிக்காவில் மாத்திரம் 65 மில்லியன் முதல் 70 மில்லியன் வரையிலான நிரந்தர பாவனையளர்களைக் கொண்டிருப்பதாகவும். இன்னும் அதன் பாவனையாளர்கள் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

' மைஸ்பேஸ் ' இனிமேல் புதிய இசைக்கலைஞர்களுக்கு தங்களின் படைப்புகளை பிரபலப்படுத்த வாய்ப்பளிக்கவுள்ளதாகவும், முற்றுமுழுதாக இளைஞர்களை குறிவைத்துள்ளதாகவும், இதன் புதிய வடிவம் இளமை ததும்பும் வகையில் காணப்படுமெனவும் , கணனி விளையாட்டுகளுக்கென அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந் நடவடிக்கையானது ' மைஸ்பேஸ் ' மற்றும் பேஸ்புக் இடையேயான போட்டித்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

Post Comment

இருபது 20 போட்டிகளில் யாசிர் அரபாத் சாதனை

Virakesari.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யாசிர் அரபாத் கழகங்களுக்கிடையிலான இருபது 20 போட்டிகளில் 100 விக்கட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து சசெக்ஸ் அணிக்காக தற்பொழுது விளையாடிவரும் அவர் நொட்டிங்கம்செயார் அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியதின் மூலமே அவர் அவ்விலக்கை எய்தினார்.

இவ் இலக்கை முதலில் எய்தியவர் அவுஸ்திரேலிய அணியின் டெர்க்னானிஸ் ஆவார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தான் இதனை எட்டிய முதல் பாகிஸ்தானிய வீரர் என்ற வகையில் பெருமையடைவதாகவும் கூடிய விரைவில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Post Comment

மன்மோகன் சிங், டேவிட் கெமரூன் சந்தித்து பேச்சு

Virakesari.

பிரிட்டிஷ் மற்றும் இந்தியாவிற்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்துவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் டேவிட் கெமரூன் முடிவெடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் இந்தியாவிற்கு இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான சந்திப்பின் போது மேற்படி முடிவெடுத்துள்ளனர்.

அதேவேளை காலாச்சார ரீதியாக இருநாடுகளும் நெருக்கமாக செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். கல்வி. பாதுகாப்பு, பருவநிலை தொடர்பாகவும் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலவரம், பயங்கரவாதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தனர்.

Post Comment

மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் கிறிஸ்ட்டினா தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

Kattankudi Web Community.


மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் கிறிஸ்ட்டினா தலைமையில் இன்று காலை (30.7.2010) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மன்முனைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை அத்து மீறும் நடவடிக்கையினை கண்டித்து மன்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் பொது மக்கள் சிலரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.


காத்தான்குடி நகர சபை மன்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் அத்து மீறி பல்வேறு காணி சுவீகரிப்பு நடவடிக்கைளை மேற்டிகாண்டு வருவதாக இவர்கள் குற்றம் சாட்டு கினறனர். இது தொடர்பான மஜரொன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கையளித்துள்ளனா.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வையிடம் கேட்ட போது அவ்வாறான அத்து மீறல்கள் எதையும் நாம் மேற்கொள்ள வில்லையெனவும் எமது காணியிலேயே அபிவிருத்தி நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் எங்களது காணியை இவர்களின் காணியென பொய்யாக உரிமைகூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Post Comment

Wednesday, July 28, 2010

மணவறைத் தூக்குக் கயிறு.....



முதல் இரவு முண்டியடித்து அறைக்குள்
முற்றுகையிட்டேன் முழுமனதுடன்
என்னை அந்நியனுக்கு ஒப்படைக்க
இறக்கப் போகும் என் வாழ்வு பற்றி அறியாமல்

கையில் ஒரு செம்பு, புதுப் புடவை
கொண்டையில் மல்லிகை, என் வாயில் புண்னகை
ஆயிரம் கனவுகள் என் மனதுக்குள்
ஏதோ செய்தது ஹோமோன்கள் என் உடலினுல்

அடைக்கப்பட்டது அறைக் கதவு
அப்போது தெரியவில்லை அது என்
வாழ்வின் வசந்தத்திற்கும் சேர்த்து
அடைக்கப்பட்டது என்று

முதல் இரவு தொடங்கும் முன்னே
என் வாழ்கையும் முற்றுப் பெற்றது
எழுதிய கடிதம் மெத்தை மேல் இருக்க
எழுதியவனோ எங்கே என்று தேடியவர்களுக்கு
பதில் இதுவரை கிடைக்கவில்லை

"உன்னோடு வாழ எனக்குப் பிடிக்கவில்லை
மன்னித்து விடு" என்ற வார்த்தை
வடிவமைக்கப்பட்டிருந்தது காகிதத்தில்
மன்னித்தேன் மனித சாதி என்பதால் என் விதியை எண்ணி

விடியப்போகும் ஒரு இரவில்
என் வாழ்வின் சூரியன் மறைந்தது
கண்ணீர் என்ற கடலில்

கனவுகள் சுமந்து சென்று
கண்ணீரை பரிசாய்ப் பெற்று
சிதறிய கண்ணாடிகள் போல்
சின்னாபின்னப்பட்டேன்

கொட்டிய மேல தாளங்கள் பறையானது
ஊதிய நாதஸ்வரம் சங்கானது
மணஊர்வலம் இருதி ஊர்வலமானது
முடங்கியது என் உடல் ஒரு ஓரத்தில் உயிரற்ற நிலையில்

மிகப் பெரிய பாரம் என்னை ஆட் கொண்டது
அறியாமல் தொட்டது என் கைகள் மஞ்சக் கயிற்றை
இல்லை என் கழுத்தில் மாட்டப்பட்ட
தூக்குக் கயிற்றை கண்ணீர் கசிய...

ஆனந்தமாய் ஆடிப்பாடியவள்
குறும்புகளால் குத்தாட்டம் போட்டவள்
சிறுமியாய் சிறகடித்தவள்
புண்னகையாலே புகழ் சேர்த்தவள்

அடங்கிவிட்டேன் அவமானத்தால்
குனிந்து கொண்டேன் குருடாகி
சிக்கிக் கொண்டேன் விதி வலையில்
புதைகுழிக்குள் புதைந்து கொண்டேன்

ஆறுதலாய் 4 வரி சொன்ன சொந்தங்கள்
6 நாட்களின் பின் காணாமல் போய் விட்டனர்.
கோபங் கொண்டு கொதித்த நண்பர்கள்
10 நாட்களில் அமைதியடைந்தனர்
பெத்தவங்களும் ஏங்கி ஏங்கி 30 நாட்களில்
முடியாமல் மூர்சையாயினர்.
6 திங்கள் ஆகியும் சமூகம் மட்டும் இன்றும்
சாக்கடைய் சாதித்துக் கொண்டிருக்கிறது.

சமூகமும் சம்பிரதாயமும் இன்றும்
வதைக்கிறது என்னை
மனவறை மாட்டிய தூக்குக் கயிற்றை
கழட்ட விடாமல்..

வதைக்கப்படுவதுதான் என் விதி என்றால்
வாழவைக்க யாரால் முடியும்
பழகிப்போனது என் பாழாப்போன இந்த வாழ்கை
நண்பன் மரணத்தை எதிர்பார்க்கும் எனக்கு.

ஒரு நாள் வதைத்த உணர்வற்றவனை விட
ஒவ்வொரு நாளும் வதைக்கும் இந்த மிருகச் சமூகத்தை எண்ணி
முடிக்கிறேன் இக் கவியோடு என் வாழ்வையும்

வாழத்தகுதியற்றவளாய்
அல்லது வாழ முடியாத கோளையாய்......

Post Comment

ஆமிர் மற்றும் ஆசிப் சிறந்த பந்து வீச்சாளர்கள்- சல்மான் பட்



பாக்கிஸ்தான் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாக்.அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. 15 வருடங்களின் பின் பாக்.அணி அவுஸ்.அணி எதிராக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நாளை இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில் அவ்வணியின் தற்போதய தலைவர் சல்மான் பட் கிரிகின்போ இனையதளத்துக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமது அணி பந்து வீச்சில் மிகச் சிறந்த பலத்துடன் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். மொஹமட் ஆசிப் ஆமிர் உமர் குல் போன்றோர் எமக்கு மிகப் பெரிய பலம் எனத் தெரிவித்த அவர் ஆசிப் மற்றும் ஆமிர் இருவரும் உலகில் சிறந்த பந்து வீச்சாளர்கள் எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன் முன்னால் அணித் தலைவரும் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளருமான வஸீம் அக்ரம் ஆமிர் என்னை விடக் கெட்டிக்காரர் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Post Comment

பாதுகாப்பற்ற மென்பொருள் வரிசையில் அப்பிள் முதலிடம் _


Virakesari

கணனி உலகில் அதிக பாதுகப்பு குறைபாடுகள்கொண்ட மென்பொருள்கள் அப்பிள் நிறுவனத்துடையதென கணனி மென்பொருள் பாதுகாப்புச் சேவை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. இவ்வளவு காலமாக மைக்ரோசொப்ட் நிறுவன மென்பொருள்களே அதிக பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளவையென கருதப்பட்டு வந்ததன.

' செக்கியுனியா ' எனும் மேற்படி நிறுவனமானது டென்மார்க் நாட்டை சேர்ந்த பிரபல கணனி மென் பொருள் பாதுகாப்புச் சேவை வழங்குனராக இயங்கி வருகிறது.

இந் நிறுவனத்தின் அறிக்கையின் படி அப்பிள் நிறுவனத்துடைய மென்பொருள்களே அதிக பாதுகாப்பற்றவையாக காணப்படுவதாகவும் அடுத்ததாக 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் முறையே ' ஒராக்கிள்' மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றது.

மேற்படி ஆய்வானது அப்பிளின் ' மெக் ஒஸ் ' இயங்கு தளத்தையும் அப்பிளின் இதர மென்பொருள்களான ' குயிக் டையிம்' , ' ஜ் டியூன் ' , ' சபாரி ' மற்றும் 3ஆம் நபர் மென்பொருள்களான ' பிளாஷ் ', ' ஜாவா ' உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.

அதன்படி குறைபாடுகள் அப்பிளின் இயங்குதளமான ' மெக் ஒஸ்' ஐ விட மற்றைய மென்பொருட்களினாலேயே உண்டாக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.

மேற்படி 3ம் நபர் மென்பொருள்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அந் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதிகபாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட மென்பொருட்கள்.

1.அப்பிள்

2. ஒராக்கிள்

3.மைக்ரோசொப்ட்

4. எச்பி

5. அடோப் சிஸ்டம்ஸ்

6. ஐபிம்

7. விம்வெயார்

8. ஸிஸ்கோ

9. கூகுள்

10. மொஸிலா

Post Comment

ஈரான் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி தடைகள்


Virakesari

ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி துறைகளை இலக்காகக்கொண்டு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. அண்மையில் அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்திருந்தது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகளானது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை விட அதிகமாகும்.

மேற்படி தடைகள் ஈரானை அதன் அணு உற்பத்தி தொடர்பாக உலக வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழுத்தம் கொடுக்கும் முகமாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து கனடாவும் பல்வேறு தடைகளை அமுல் அமுல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் இந்நடவடிக்கையானது வெற்றியளிக்க கூடியதள்ளவென்றும் இது மேற்குலக நாடுகளுடனான தமது உறவை மேலும் சீர்குலைக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமானது ஈரானின் வலு சக்தி துறை சார்ந்த எண்ணேய் அகழ்வு ,இயற்கை வாயு கண்டுபிடிப்பு, மற்றும் உற்பத்தி போன்றவற்றுக்கான தொழில்னுட்ப உபகரண விற்பனை மற்றும் சேவைகள் என்பனவற்றிற்கு தடை விதித்துள்ளது. ஈரானின் 40 தனிநபர்களின் மற்றும் 50 கம்பனிகளின் பெயர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கான 40,000 யூரோ விற்கு மேற்ப்பட்ட எந்தவொரு பணப்பரிமாற்றத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி பெறப்படவேண்டும் இதனால் ஈரானின் வங்கித்துறையும் பாதிக்கப்படவுள்ளது

Post Comment

Monday, July 26, 2010

பெண்னே!!!!!!!!!!

பெண்னே!!!!
எம் சமுதாயத்தின் கண்ணே!
உனை நோக்கிய என்
வேண்டுகோள்கள் இல்லை வேண்டுதல்கள்

'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'
இன்று நீ அதில் இரண்டாம் ரகம்
நீ ஆக்க மறந்தாலும் அழிக்கத் தயங்குவதில்லை

இன்று என் சமுதாயம் இருட்டில்
ஓளி தரும் அதன் கண்ணாகிய உனை
இழந்து விட்டதால்
இன்று நீ பெண்னாக இல்லை
நீ எப்போது பேயாகிப்போனாய்????;

அழகு உன்னில் இருக்கிறது
உன் ஆடை எனும் அச்சம்
இல்லை உன்னிடம்

மங்கிக் கிடக்கிறாய் நீ
உன் மடம் என்ற தோழியோடு

நாகரீகம் உன்னில் இருக்கிறது-ஆனால்
உனக்கே உரித்தான நாணம் எனும்
போர்வை இல்லை உன்னிடம்

பகைமை நோய் தொற்றியிருக்கிறது
உன்னில்-ஆனால்
பயிர்ப்பு இல்லை உன் உடலில்

பாரதி கண்ட புதுமைப் பெண் என்று
நீயே பேசிக் கொள்கிறாய்-இருப்பவற்றை
இழந்து விட்டு
இன்று மட்டும் பாரதி உன் நிலை கண்டால்
வெட்கப்படுவான் உனக்காக அன்று
குரல் கொடுத்ததற்கு

உன் எழுச்சியை இகழவில்லை நான்
உன் சாதனையை தடுக்கவில்லை நான்
ஆனால் நீ சாக்கடையாய்ப் போனதை
மிக வண்மையாகக் கண்டிக்கிறேன்

உன் வாழ்க்கை விலை பேசப்படுகிறது
உனக்குத் தெரிந்தே பல வீடுகளில்
உன் எழுச்சியை நீ காட்டவேண்டும்
அத் தருணங்களில்
ஆனால் நீயோ................

ஏமாற்றப்படுபவளும் நீதான்
ஏமாற்றுபவளும் நீதான்

பெண்னே!!!
நீ பூப் போன்றவள்
இன்று புயலாய் உருவெடுத்து
சமுதாயத்தை அழிக்கிறாய்
உன் புயலை நிறுத்தி
தென்றலாய் வீச வேண்டும் நீ....

இன்றய வீதியோரத்தில் மிகவும்
மலிவுப் பொருளும் நீதான்
உன் ஆடைகளில் தெரிகிறது
உன் அரை நிர்வாணம்
வெட்கித் தலை குனிகிறது
இந்த சமுதாயம்.....

பெண்னே!!!!
நீ சிறந்தவள் தான் ஆனால்
இன்று சீரழிந்து நிற்கிறாய்
உனக்கான பெருமை பணத்தில் அல்ல
உன் குணத்தில்
நீ மாற வேண்டும் எனக்காக அல்ல
உனக்காக.....

உன்னிடம் இன்று எதுவுமில்லை
நீயும் இழந்து விட்டாய்
உன் மென்மை,உன் பெண்மை
உன் வெட்கம், உன் மௌனம்
என்று எதுவுமில்லை உன்னில்

உன்னில் எத்தனை அவதாரம்
ஒரே பிறவியில்...
வியந்து நிற்கின்றேன்
தாயாய்,மனைவியாய்,மகளாய்,சக
ோதரியாய்,
நண்பியாய் காதலியாய் என்று நீண்டு செல்கிறது
உன் அவதாரப் பட்டியல்
ஆனால் இன்று அதில் தப்பிப்பிழைத்து நிற்பது
இல்லை தன்னை காத்து நிற்பது
தாய்மை மட்டுமே
மற்றவை எல்லாம் மறைந்துவிட்டன உன்னில்

உன் இந்த நிலைக்கு நானும் காரணம்
என்று என்னும் வேளை
இரத்தம் சொட்டுகிறது என் இதயத்தில்
மன்னிக்க வேண்டுகிறேன் இத் தருணத்தில்

ஒத்துக்கொள்கிறேன்
நான் திருந்த வேண்டியவன் தான்
ஆனால் நீயோ அடங்க வேண்டியவள்

நீ மாற வேண்டும் என்ற என்
கனவு ஒவ்வொரு விடியலோடும்
கலைந்து விடுகிறது...

மாறுவாயா?????? என்ற ஏக்கத்தோடு
விடை பெறும் இவன்......

Post Comment

35 டொலரில் ஒரு கணினி :இந்தியா புரட்சி _

Virakesari

அனைவருக்கும் கணினி எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலகின் மிகவும் மலிவான கணினியைத் தாம் தயாரித்து வருவதாக இந்திய ஊடகத் தகவல் நிலையம் தெரிவிக்கின்றது.

இதன் விலை வெறும் 35 டொலர் மட்டுமே எனவும் மாணவர் நலன் கருதி இவ்விலை 20 டொலர் முதல் 10 டொலர் வரை குறையலாமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கணினியானது தொடு திரையுடன் கூடியதாகக் காணப்படுமெனவும் இதனுள் பல மென்பொருட்கள் மற்றும் வசதிகள் உள்ளடங்கியிருக்குமெனவும் வெப் பிரவுசர், பிடிஎப் ரீடர், மீடியா பிளேயர், வீடியோ கொன்பிரன்ஸ் மற்றும் புகைப் படமெடுக்கும் வசதி என்பன இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இக்கணினி 2011ஆம் ஆண்டளவில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் முக்கிய நோக்கம் இந்திய கல்லூரி மாணவருக்கிடையில் பாடவிதான ரீதியில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதாகும்.

2,127 டொலர் நாநோ கார், 2000 டொலர் திறந்த இதய சத்திர சிகிச்சை மற்றும் 16 டொலர் நீர் சுத்தப்படுத்தும் கருவி போன்ற மலிவான இந்திய உற்பத்தி வரிசையில் இதுவும் இந்திய வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துமென அவதானிகள் கருத்து தெரிவிகின்றனர்.

Post Comment

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் 2ஆவது டெஸ்ட் போட்டி


Virakesari

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.3 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில், காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில்போட்டியில் இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க காயம் காரணமாக விளையாடவில்லை.இந்த நிலையில் இந்திய அணிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது.

இதே போல் காலி டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி 800 விக்கெட் சாதனையுடன் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு பதிலாக அஜந்த மென்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Post Comment

கனடாவில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி _

Virakesari

கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வார இறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்த வேளையில், அதற்கான பயிற்சியில் கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார். CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார்.

சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன்.

இயந்திரத்தில் 'பொப்... பொப்... பொப்...' என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது.

உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்.

Post Comment

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பள்ளிவாயல் றஹ்மானி ஹஸரத்தினால் திறப்பு

Kattankudi Web Community

மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலின் தலைவரும் மட்டக்களப்பு மஸ்லிம் வர்த்தகர் சங்கத் தலைவருமான பிலால் ஹாஜியாரின் வேண்டு கோளின் பேரில் கொழும்பிலுள்ள தனவந்தர் யாஸீன் பாய் என்பவரின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட இப்பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தினால் திறந்து வைக்கப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டது.


இவ்வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளன பிரதி நிதிகள், உலமாக்கள் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கித்சிறி பண்டார உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள மஸ்லிம் கைதிகள் தொழுவதற்கென இப்பள்ளவாயல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆறு இலட்சம் ரூபா செலவில் இப்பள்ளிவாயல் நிர்மானிக்கப்பட்டுட்டுள்ளதாக பிலால் ஹாஜியார் தெரிவித்தார்.

Post Comment

Sunday, July 25, 2010

கைத்தடி மனிதர்கள்....


பார்க்கும் போதே என் மனதில் கருனை,
அவர்களின் பெருந்தன்மையை.
அப்படியே வியந்தேன் அவர்களின் செயலை,
என் நாவு உச்சரித்தது இறைவனின் பெயரை
நன்றியுடன்.........

துனை வேண்டியவர்கள் அவர்களே-இன்று
துனை இல்லாமல் வீதி ஓரத்தில்........

அவர்களின் கருப்பு கண்ணாடி அடையாளப்படுத்தியது
அவர்களின் வாழ்கை இருளை...
அவர்களின் கையில் இருந்த சில்லறை
காட்டிக் கொடுத்தது அவர்களின் நிலையை-ஆனால்
அவர்களின் கைத்தடி தெளிவு படுத்தியது
அவர்களின் தன் நம்பிக்கையை

என் அவசர வாழ்கைப் பயணத்தில்
சற்று தரித்த தரிப்பிடம்
அந்த கைத்தடி மனிதர்கள் தான்
அவர்களுக்கு அருகில் நின்றே
நோட்டமிட்டேன்
அவர்களின் ஒவ்வொரு வினாடியையும்
என் நேரத்தில் அவர்களுக்காகவும்
சிறு நிமிடங்கள்......

நீர் இல்லாத கடல்,
மழை இல்லாத மண்,
முகில் இல்லாத வானம்,
நிலவு இல்லாத இரவு,
சூரியன் இல்லாத பகல்,
இப்படியே என் கற்பனை நீண்டது
கண் இல்லாத அந்த மனிதர்களை கண்டவுடன்

ஊனம் உடலில் இல்லை-என்று
வாயால் சொல்லி அமைதியடையும்
மனிதரிடையில்,
என் மனம் ஏற்க மறுத்தது இவர்களை
கண்டவுடன்

இவர்களை போலவே நானும் இருந்திருந்தால்.........
இன்று எனக்கு எந்த வலியும் இருந்திருக்காது
என்றும் என்னத் தோன்றியது அந்த தருனத்தில்.

இவர்கள் இழந்தது ஏராளம்.............
மழலையின் சிரிப்பு,
மலர்களின் நிறம்,
மங்கையின் அழகு,
மாலையின் வண்ணம்,
அருவியின் வளைவு,
சூரிய உதயம்................,
என்று என்னும் போது
இறைவனுக்கு மறுபடியும் நன்றி கூறியது
இவர்களை போல் என்னை படைக்காமல்
விட்டதற்கு..... சற்று இவர்களுக்கான
பரிவுடன்..........

5 ருபாய் போட்டுச் செல்லும் மனிதரிடையில்
500 ருபாய் தேடியது என் கண்கள்........
விழித்துக் கொண்டிருப்பவனையே ஏமாற்றும் இந்த உலகில்
இவர்களை.......
நினைத்தவுடன் சற்று தயங்கியது என் கைகள்

பேச வேண்டும் போலிருந்தது அவர்களுடன்
ஆனால் மொழி என்னை தடுத்தது....
ஆனால் என் உள்ளம் பேசியது வெயிலில்
நனைந்த அவர்களின் விழிகளோடு....

இதற்கு மேல் இங்கிருந்தால்- என்
விழி நனைந்து விடும் என்ற ஏக்கத்தில்
அங்கிருந்து புறப்பட்டேன்
நானும் 5 ருபாய் பட்டியலில் இணைந்தவனாக
கண் இருந்தும் கருனை இல்லாத ஊனமானவனாக......

என் பிராத்தனையில் இடம் பிடித்துக் கொண்டார்கள்
இந்த கைத்தடி மனிதர்கள்

Post Comment

பிலிப்பைன்சில் இன்று காலை நிலநடுக்கம் .

நன்றி:Virakeasri

பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான பிலிப்பைன்சில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிச்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 603 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தத் தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post Comment

15 வருடங்களின் பின் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு டெஸ்ட் வெற்றி


அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்றமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்தின் லீட்ஸ் நகரின் ஹெடிங்லே மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88 ஓட்டங்களுடன் சுருண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 258 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 349 ஓட்டங்களைக் குவித்தது. எனினும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களே தேவைப்பட்டன.

போட்டியின் மூன்றாவது நாளான நேற்று மாலை ஆட்டமுடிவின்போது பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மேலும் 40 ஓட்டங்களே தேவையான நிலையில் துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீரும் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வட்ஸனும் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

Post Comment

Friday, July 23, 2010

உன்னைக் கண்டதால்தான்...




கடலில் விழுந்த மழைநீர் போல்
கரைந்து விட்டேன் உன் நினைவுள் நானும்
தேடுகிறார்கள் தனியாய் என்னை
உன்னுல் நான் ஒளிந்து கொண்டது தெரியாமல்

காற்றோடு கலந்து விட்ட பூவின் வாசம் போல்
நீயும் ஒட்டிக் கொண்டாய் என் உயிருக்குள்
மாரிவிட்டேன் என்கிறார்கள்
நீ என்னுல் மறைந்திருப்பது தெரியாமல்;

என் தவிப்புகளின் தாயகம் நீதான்
என் இன்பங்களின் இருப்பிடம் நீ தான்
என் கனவுகளின் கண்னியம் நீ தான்
என் வாழ்கையின் வசந்தமும் நீ தான்.

இலேசாய் வருடிய தென்றலில் வலி உணர்கிறேன்
தாய் தொடும் ஸ்பரிசத்தில் தலை கவிழ்கிறேன்
என் உடலில் எறும்பு ஊரினாலும் மலைக்குன்று உருள்வதாய் பதைக்கிறேன்
இவையெல்லாம் உன்னைக் கண்டதால்தான்

மாலைப் பொழுதாகிறது என் ஒவ்வொரு காலைப் பொழுதும்
தூசு படிகிறது 6 மாதமாய் விரிக்கப் படாத என் பாடப் புத்தகம்
நிரம்பி வழிகிறது என் குப்பைத் தொட்டி காதல் கடிதம் சுமந்து
உன்னை நினைத்து என் ஒவ்வொரு இரவுகளும் தூங்காமல் விடிகிறது

வரிகளில் வழுக்கி என் காதல் கடிதம் உன்னைத் தீண்டும்
தருணம்.........

Post Comment

டெஸ்ட் போட்டியிலிருந்து முரளிதரன் ஓய்வு




டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் நேற்றுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனது இறுதிப் போட்டி யுடன் 800 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி சாதனை வீரராக முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று காலியில் முடிவுற்ற இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கடந்த 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்திருந்தார். அது வரை அவர் 792 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

800 டெஸ்ட் விக்கெட்களுடன் ஓய்வு பெற விரும்புவதாக அவர் அச்சமயம் குறிப்பிட்டிருந்தார். அது முதல் முரளிதரன் தனது 800 ஆவது டெஸ்ட் விக்கெட்டை இப்போட்டியில் கைப்பற்றுவாரா என்ற கேள்வி இலங்கை மற்றும் உலகளாவிய கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தொக்கி நின்ற கேள்வியாக இருந்தது.

நேற்றுடன் முடிவுற்ற இந்தியாவுக் கெதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520 ஓட்டங்களை பெற்றதும், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் தடைப்பட்டதும், இந்திய அணியை 4 நாட்களில் இரண்டு தடவை அவுட்டாக்க முடியுமா என்ற கேள்வியும் முரளியின் ஆதரவாளர்களையும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களையும் கேள்விக்குள்ளாக்கியது.

எனினும் 4 நாட்களில் இந்தியாவை தோற்கடித்ததுடன், தான் குறிப்பிட்ட இலக்கான 800 விக்கெட்களையும் கைப்பற்றி மிகப் பெரிய சாதனை வீரராக டெஸ்ட் கிரிக்கெட் உலகில் இருந்து முரளிதரன் நேற்றுடன் ஓய்வுபெறுகிறார்.

எனினும் ஒரு நாள் மற்றும் டுவெண்டி டுவெண்டி 20 ஓவர் போட்டிகளில் முரளி தொடர்ந்தும் விளையாடுவார். 2011 இல் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியுடனேயே தான் கிரிக்கெட் உலகில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக முரளிதரன் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

800 விக்கெட்கள் என்ற இந்த சாதனையை பெறுவதற்காக முரளிதரன் இந்திய வீரர் பி.பி. ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது முரளி விளையாடிய 133 வது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்களை அவர் கைப்பற்றினார். அவரது சாதனையைப் பற்றி ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் இந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காலியில் நடைபெற்ற இலங்கை – இந்தியா வீரர்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியின் 5வது நாளான நேற்று முரளிதரன் பெற்றுள்ள சாதனை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.

அதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளி தரனுக்கு இப்போட்டியில் வெற்றிபெற்று அந்த வெற்றியை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் தற்போது நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 18ம் திகதி தொடங்கிய போட்டியின் 2ம் நாள் மழை காரண மாக விளையாட்டு நடைபெறாத போதிலும், 3ம் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520-8 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த நிலையில், திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கி முரளியின் மகத்தான சாதனையை பாராட்டினார். போட்டி முடிந்த பின்னர் நேற்று மாலை அவருக்கு மாபெரும் விழா காலியில் எடுக்கப்பட்டது.

முரளிதரன் இது வரை 133 டெஸ்ட் போட்டிகளை ஆடி உள்ளார். அதே போல் 334 ஒருநாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெட்டு க்களையும் வீழ்த்தி உள்ளார்.

முரளிதரன் நேற்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

133 டெஸ்டில் விளையாடியுள்ள முரளி 51 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்களை கைப்பற்றியமை அவரது சிறந்த பந்து வீச்சு பெறுதி ஆகும். டெஸ்ட்டில் 22 முறை 10 விக்கெட்களுக்கு மேலும், 67 முறை 5 விக்கெட்களுக்கு மேலும் எடுத்துள்ளார்.

முரளிதரனுக்கு அடுத்தபடியாக வோர்ன் (அவுஸ்திரேலியா), 145 டெஸ்டில் 708 விக்கெட்களை கைப் பற்றி 2 வது இடத்தில் உள்ளார். கும்ளே (இந்தியா) 619 விக்கட் களும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) 563 விக்கெட்களும், வோல்ஸ் (மே. தீவு) 434 விக்கெட்டும் எடுத்துள்ள னர். 1992 ஆகஸ்ட் 28 ஆம் திகதி தனது 20 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொழும்பு கெத்தாராம விளை யாட்டரங்கில் நடைபெற்றது. முதரளிதரனின் அறிமுக டெஸ்ட் போட்டி இதுவாகும்.

அப்போட்டியில் “கிரெய்க் மெக்டர்மட்” இன் விக்கட்டே முரளிதரன் கைப்பற்றிய முதலாவது டெஸ்ட் விக்கெட் ஆகும். அப் போட்டியில் முரளி 141 ஓட்டங் களைக் கொடுத்து 3 விக்கெட்டு க்களை கைப்பற்றினார்.

அப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியின் விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றினார். மூடியை ஆட்டமிழக்கச் செய்ய முரளி வீசிய பந்து ஓப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து சுமார் 2 அடி தூரம் சுழன்று லெக் ஸ்டம்பை வீழ்த்தியது. அந்த பந்தின் மூலம் கிரிக்கெட் உலகுக்கு திறமையான ஒப் ஸ்பின் பந்து வீச்சாளரின் வருகையை முரளி உணர்த்தினார். பின்னாளில் டொம் மூடி இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் முரளிதரன் பந்து வீச்சு திறமை ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பரிணமித்தது.

1993 ஆகஸ்ட்டில் மொரட்டுவையில் தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை முரளி கைப்பற்றியமை அது முதலாவது தடவை யாகும். அந்த டெஸ்ட் போட்டியில் முரளி கைப்பற்றிய 5 விக்கெட்டுக்கள் கெப்லர் வெஸல்ஸ், ஹன்ஸி குரோஞ்ஞே, ஜொன்டிரோட்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளும் உள்ளடங்கியிருந்தது.

முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் கிரேக் மெக்மெட்டை எல்பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்ததால் தனது கன்னி விக் கெட்டைக் கைப்பற்றினார்.

50 வது விக்கெட்டுக்காக சித்து வையும், 100 வது விக்கெட்டுக்காக ஸ்டீபன் பிளமிங்கையும், 150 வது விக்கெட்டுக்காக கை விட்டலையும் 200 வது விக்கெட்டாக பென் ஹொலி ஹொக்கையும், 250 விக் கெட்டுக்காக நவிட் அஷ்ரப்பையும் 300 வது விக்கெட்டுக்காக ஷோன் பொலக்கையும் 350 விக்கெட்டாக முகம்மட் சரீப்பையும், 400 வது விக் கெட்டாக ஹென்ரி ஒலங்காவையும் 450 விக்கெட்டாக டரல் டபியையும் 500 வது விக்கெட்டாக மிச்சல் கஷ்பரொவிச்சையும் 550 விக்கெட் டாக காலிட் மசுட்டையும் 600 வது விக்கெட்டாக காலிட் மசுட்டையும் 650 விக்கெட்டாக மக்காயா நிட்டி னியையும் 700 வது விக்கெட்டாக செய்யட் ரஷலையும், முரளிதரனின் 709 வது விக்கெட்டாக போல் கொலிங்வூட்டை வீழ்த்தியதன் மூலம் ஷேன் வோனின் 708 விக்கெட் சாதனையை முறியடித்தார்.

750 விக்கெட்டாக கங்குலி யையும் 800 விக்கெட்டாக பிராக் கன் ஒஜா வையும் வீழ்த்தியே இச் சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.

Post Comment

500 மில்லியன் இலக்கினை எட்டும் பேஸ்புக்


நன்றி:Virakesari


பிரபல சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக் 500 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை அடையவுள்ளதாகவும் அவ்வறிவிப்பை பெரும்பாலும் இந்த வாரம் மேற்கொள்ளுமெனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத் தொகையானது உலக சனத்தொகையின் 8% வீதமாகும்.

இம் மைல்கல்லை கொண்டாடும் வகையில் " பேஸ்புக் கதைகள் " எனும் விசேட கதைத் தொகுப்பையும் அவ் வலையமைப்பு வெளியிடவுள்ளது. மேற்படி தொகுப்பானது பாவனையாளர்களின் வாழ்க்கையை பேஸ்புக் எவ்வாறு மாற்றியுள்ளது என்பது தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

அனைத்து பாவனையாளர்களும் தங்கள் கதைகளை சமர்ப்பிக்கமுடியும். பாவனையாளர்களால் விரும்பப்படும் அதிகமான கதைகள் இத்தொகுப்பினுள் உள்ளடக்கப்படும். பேஸ்புக் தனது வலையமைப்பினை 150 மில்லியன் பேர் கையடக்க தொலைபேசிகள் மூலம் உபயோகிப்பதாக சமீபத்தில்அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேஸ்புக் வலையமைப்பின் சந்தைப்படுதல் இயக்குனர், இது தாம் ஏற்கனவே எதிர்பார்த்தவொன்றெனவும் , இதை வேறு வேறுவிதமாக கொண்டாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பேஸ்புக் சமூகவலைப்பின்னல் தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஸுக்கர்பேர்க் என்பவரினால் அவரது சக மாணவர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

Post Comment

விமான 'கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம் _


நன்றி:Virakesari
விமான விபத்துக்களின் போது அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவரும் பிரபல அவுஸ்திரேலிய விஞ்ஞானியுமான டேவிட் வொரென் தனது 85ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

வொரென் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள பின்தங்கிய கிராமமொன்றில் 1925ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை 1934ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்தார்.

அந்நாட்டின் இராணுவ அறிவியல் தொழில்நுட்ப அமைப்பில் 1952 முதல் 1983 வரை விஞ்ஞானியாக இவர் செயற்பட்டார்

விமான கறுப்பு பெட்டி 1956ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்டது. இவர் 1953ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகின் முதலாவது 'ஜெட்' விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்த குழுவில் அங்கம் வகித்தார்.

விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் இதனைக் கண்டுபிடித்தார்.

1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி' பொருத்தப்பட்டது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Comment

Saturday, July 17, 2010

இரக்கமற்றவளே....



இரக்கமில்லாத இரவு
இனிமையான மெல்லிசை
தனிமையில் நான்
என் நினைவில் நீ

நீரில்லாத மீன்கள் போல்
உயிரிழந்து கிடக்கிறேன்
வெயிலில் அகப்பட்ட புழுப்போல
உன் நினைவு சூட்டால் தினம் துடிக்கிறேன்

நான் இன்னும் உயிருடனிருக்கிறேன்
நீ சுவாசிக்கும் காற்றையே நான்
சுவாசிக்கிறேன் என்பதால்

அறியாத வயதில் அப்பாவை பிரிந்த எனக்கு
6 வயதில் அம்மாவை பிரிந்த எனக்கு
விரும்பியே நண்பர்களையும் விட்டுக் கொடுத்த எனக்கு
நான் அறிந்தே நீ பிரிந்தது ஒன்றும் பெரிதில்லை

பிரிவின் வலிகள் பிடித்து விட்டது எனக்கு
என் வலியின் வரிகள் கவியானது உனக்கு

இருந்தும்....
நிலையற்றுக் கிடக்கிறேன் என் ஒவ்வொரு இரவிலும்
நினைவுகளால் நீ என்னைத் திருடுவதால்

இதயம் பொறிக்கப்பட்ட மட்டையை பரிசாய் தந்தவளே
அப்போதே புரிந்திருக்க வேண்டும் உன்
உணர்வற்ற ஊமை நடிப்பு
அறிய வில்லை இந்த முட்டால் காதல் மமதையால்

ஓங்கி அடித்துவிட்டாய் என் இதயத்தில்
பொருந்திக் கொள்கிறேன் அடித்தது நீ என்பதால்

Post Comment

ஓய்வை அறிவித்தார் அப்ரிடி


பாக்கிரிஸ்தான் அணியின் அதிரடி வீரர் அப்ரிடி டெஸட் ஓய்வை நேற்று அறிவித்தார். அவஸ்திரேலியாவுக்கிடையிலான 1 வது டெஸட் போட்டியில் பாக்.அணி தோல்வி அடைந்த நிலையிலயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த போட்டியின் போது அவர் அணியின் தலைவராக செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அப்ரிடி இந்தப் போட்டியிலயே டெஸட் போட்டியில் இனைந்தார்.

இவரின் இந்த திடீர் அறிவிப்பு அவரின் ரசிகச்களுக்கு பெறும் ஏமாற்றம் அளித்துள்ளது.

Post Comment

ஜப்பானில் 902 அமெ. குண்டுகள் கண்டுபிடிப்பு

நன்றி:Virakesari
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 902 குண்டுகள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் ஒகினாலா நகரின் ஒரு ஹோட்டலுக்கு அருகில், வீதி அபிவிருத்திப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மண்ணுக்குள் இரும்பு குண்டுகள் புதைந்து கிடந்ததை இவர்கள் கண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததும், அவர்கள் அவ்விடத்துக்கு வந்தனர். அவை வெடிகுண்டுகளாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகப்பட்டனர். எனவே மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த போது, அவை வெடி குண்டுகள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். மொத்தம் 902 குண்டுகள் பூமியில் இருந்து எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை.

அவை இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் என்றும் கண்டறியப்பட்டது.

இந்தக் குண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் கிடந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக இடோமன் நகர சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜியோடாகா மேடோமரி தெரிவித்தார்.

ஏற்கனவே ஜப்பானில் இது போன்று பல இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Post Comment

Friday, July 16, 2010

இதயம் பேசியது...



காரிருள் இரவு
சில்லென்ற பனிக் காற்று
அருகில் வெண்னிலவு
கற்பனையில் நான்
மனதில் உன் நினைவுடன்...

மெல்லிய இசை காதைத் துளைத்தது
இரவின் அமைதியை அது குலைத்தது
வசந்த காலத்தை நினைத்து நான்
ஒரு வெள்ளை காகிதத்தோடு...

ஊரின் உறவுகள், பழகிய நண்பர்கள்
என நினைக்க உறங்கிக் கொண்டிருந்த
என் நினைவுகளும் அலை மோதியது
அந்தப் பருவங்களை எண்ணி...

நிஜமாகவே அது வசந்த காலங்கள் தான்
இன்று என் மனம் தவியாய் தவிக்கிறது
அந்த நாட்களை மீண்டும் ஒரு முறை
வாழ்ந்து பார்க்க முடியுமா????????

பாடசாலை நாட்கள், பழகிய நண்பர்கள்,
சுற்றித் திரிந்த வீதிகள், வேட்டையாடிய வீதி மாங்காய்கள்,
வியர்வை சிந்த விளையாடிய மைதானங்கள்,
ஓர் இரவின் ஏக்கங்களாகிப் போனது.

பகிர்நது கொள்ள நண்பனுமில்லாமல்,
என்னை அரவனைக்க தாயுமில்லாமல்,
விடியப்போகும் இரவோடு என் இதயமும்
பேசியது என் பசுமைக் காலங்களை....

Post Comment

தோனி 200 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்


நன்றி:Virakesari


இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மகேந்திர சிங் தோனி ரூ.200 கோடிக்கு ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் மைன்ட்ஸ்கேப்ஸ் என்ற நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர் என்ற பெருமை தோனியை சார்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக ஐகானிக்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் 3 ஆண்டுகளுக்கு ரூ.180 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததே அதிகப்பட்ச தொகையாக இருந்தது.தோனியின் இந்த 200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் பாண்டே உறுதி செய்துள்ளார். ,

Post Comment

களுவாஞ்சிக்குடி வங்கியில் முப்பது லட்சம் கொள்ளை

நன்றி:Kattankudi

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று பிற்பகல் அரச வங்கியொன்றிற்கு மற்று மொரு அரச வங்கியிலிருந்து அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 30 லட்சம் பணம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்குரிய பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட வங்கி அதிகாரிகள் இருவர் சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள இலங்கை வங்கிக் கிளையிலிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருக்கையில் எதிர் கொண்’ட மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் துப்பாக்கி தாரிகளினால் வழி மறித்து பணம் பறித்துச் செல்லப்டப்டுள்ளதாக இச் சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

இச் சம்பவத்தையடுத்து களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொலிசார் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை மேற் கொண்டிருந்தாலும் இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைதாகவில்லை. சந்தேக நபர்களும் எவரும் கைதாகவில்லை என பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 20 வருடங்களின் பின்னர் வங்கிக் கொள்ளையொன்று இடம்பெற்ற சம்பவம் இது என கருதப்பட்டாலும் வடக்கு கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது வங்கிக் கொள்ளைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post Comment

ஈரானில் தற்கொலைத் தாக்குதல்:20 பேர் பலி


நன்றி:Virakesari.
ஈரானில் அமைந்துள்ள ஷியா மசூதியில் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஈரானின் ஷஹிதன் பகுதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இரு தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Post Comment

Thursday, July 15, 2010

மறந்து விட்டாயல்லவா? என்னை...........



வானில் உலா வரும் காற்றாடிகள் போல்
உன் நினைவுக் காற்றால் என் திசைக்கே
தலை சாய்கிறேன்.

இரும்பை கண்டு கொண்ட காந்தம் போல
உன் இருப்பிடத்தை நோக்கியே
ஈர்க்கப் படுகின்றேன்.

மன்டியிட்டு அழுகிறேன் என் மரத்த மனதிடம்
மறந்து விடு அவளை என்று
மாட்டேன் என்று தலை அசைக்கிறது
மன்னித்து விடு என்னை என்று

மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல்
நான் தவிக்கும் தவிப்பு..........
மரணப் படுக்கை வலியை விடக் கொடியது.

மணமாலை அணிந்து நீ மாற்றானின்
கை பிடித்து நடந்து சென்றதை பார்த்த வேளை....
என் நாடி நாளங்கள் வெடிப்பதை உணர்ந்தேன்.
உன் வானமே இடிந்து வீழ்ந்ததைக் கண்டேன்.
என் உயிர் பிரிவதைப் பார்த்தேன்.
என் இமைகள் சுருங்குவதை அறிந்தேன்.

மற்றவனின் உடமையாகிப் போன உன்னை
மறக்க நினைத்து மதுவுக்கு அடிமையானேன்
அப்போதும் முடியவில்லை ஒரு கணம் கூட....

ஏன் தற்கொலை? என்று கேட்ட என்னை
செய்து பாருடா என விதி வழி காட்ட
கால்கள் போன போக்கில் நடக்கிறேன்;
கடைசியாய் ஒரு மடலை உன்னிடம் சமர்பித்து விட்டு

நீ மறந்து விட்டாயல்லவா என்னை.....
என்னாலும் முடியும் உன்னை மறக்க
என் உயிரைத் தானும் துறந்து...................

Post Comment

சுதாகரித்தது அவுஸ்திரேலியா வழி வகுத்தார் வோட்ஸன்




1ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து 2ம் நாள் ஆட்டத்தில் அவுஸ்.அனியின் மற்றய விக்கட்டும் வீழ்த்தப்பட பாக்கி.அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத்தில் இருந்தே பாக்.அணிக்கு மிரட்டல் விடுத்தனர் அவுஸ். பந்து வீச்சாளர்கள்.அந்த வகையில் பாக்.அணி 148 ஓட்டங்களுக்குள் சுருன்டது.

2ம் இனிங்சில் விளையாட ஆரம்பித்த அவுஸ.அணி 100 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களை இழந்துள்ளது.இன்னும் 6 விக்கட்டுக்கள் 3 நாள் கைவசம் உள்ள நிலையில் 205 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள அவுஸ்.அணி வெற்றி பெருவது மிகவும் எளிதான விடயம் எனலாம். காரணம் பாக்.அணி பந்து வீச்சில் பலமாக காணப்பட்டாலும் துடுப்பாட்ட வரிசை சரிவடைந்ததை காண முடிகிறது. அணியின் பொருமையாக விளையாடக் கூடிய வீரர்களான சொஹைப் மலிக், யுனிஸ் கான், மிஸபாஉல் ஹக் போன்ற வீரர்கலின் இழப்பு அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

Post Comment

மும்பையில் குளோரின் வாயு கசிந்து 60 பேர் பாதிப்பு

நன்றி:Virakesari

மும்பை துறைமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், குளோரின் வாயு கசிந்த்ததில் 60 பேர் பாதிப்படைந்துள்ளனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சிலிண்டரில் அடைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு இன்று அதிகாலை 4.00 மணியளவில் கசிந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த மக்களுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, சுமார் 60 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள் துறைமுகம் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாயு கசியத் தொடங்கியதும் பணியில் இருந்தவர்கள் அதை உடனடியாக தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த சிலிண்டர் மீது ஏராளமான சிலிண்டர்கள் இருந்ததால் அதை கண்டறியும் முன்னர் பலர் பாதிக்கப்பட்டு விட்டனர் என்று துறைமுக தலைமை தீயணைப்பு அதிகாரி உதய் தாட்கரே தெரிவித்தார்.

Post Comment

காத்தான்குடி புதிய வைத்தியசாலை திறப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் நோர்வே நாட்டு செஞ்சிலுவை சங்கத்தின்
உதவியோடு புதிய வைத்தியசாலை ஒன்று நவீன வசதிகளுடன் கட்டி நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைத்தியசாலை கடந்த 26.12.2004 இல் ஏறடபட்ட சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந் நிகழவில் நோர்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நாயகம்,மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த பல பிரமுகர்களும் சுகாதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நோர்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நாயகம் போர்ச் பிறவுண்டி, மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர், இலங்கை செங்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் வசந்தராசா, காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவின் உப தலைவர் ராபி, காத்தான்குடி வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நசுறுதீன் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்வைபவம் இலங்கை செஞ்சிலுசை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் அப்துல்லா தலைமையில் நடை பெற்றது.இந்த வைத்தியசாலை நிர்மாணிப்பு பணிக்காக 616 மில்லியன் ருபா செலவிடப்பட்டதும் சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயம்.

Post Comment

Wednesday, July 14, 2010

மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய சோஷியல் நெட்வார்க்

நன்றி:Virakesari
கற்றுத்தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள். சரியான கருத்துரைகளை (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்துரையாடி, தங்களுக்கு தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com. இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம்.

இதில், பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லுõரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம்பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் அதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம். நமக்கு தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts)கட்டுரைகள், உரைக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம்பெற்றுள்ளன.

இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இதில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில்நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யுட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்புகளைக் காட்டுவது போல) கட்டுரைகளில் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.

இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றை தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து "எனி (any)' என்பதில் கிளிக் செய்தால் உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும்.

நிச்சயமாக, நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில் தேடுவதற்கு கொடுத்த பொருள் குறித்த பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம். நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவு என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் sign up செய்து உள்ளே நுழையலாம். நீங்கள் ஒரு பொருள் கற்றுக்கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவின் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம்.

கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும். கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக்கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒர் அருமையான இணையதளம் இது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

Post Comment

இப்படியும் சில காதல் கிறுக்கர்கள்....! _


நன்றி:Virakesari


பெண்ணாய் பிறந்தது தவறா? அல்லது அழகான பெண்ணாய்ப் பிறந்தது தவறா? அப்படியே பிறந்தாலும் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பது தான் தவறா?

இத்தகைய கேள்விகளுக்கு விடை காணத் துடிக்கின்றனர் இன்றைய இளம் பெண்கள்.

ஆம், இன்று இளம் பெண்களுக்குத் தொல்லை கொடுப்போர் பட்டியலில் 'ரீலோட்' முகவர்களும் இணந்து கொண்டமைதான் இவர்களின் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காரணம்.

தமது கையடக்கத் தொலைபேசிக்கு 'ரீலோட்' பண்ணச் செல்லும் இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை, இந்த முகவர்கள் குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

இரவானதும் அவர்களின் காதல் சில்மிஷங்கள் ஆரம்பாமாகி விடுகின்றன. அவர்கள் குறித்து வைத்திருக்கும் தொலைபேசி இலக்கங்களுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இவர்கள், காதல் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்து விடுகின்றனர்.

இரவில் மட்டும் அரங்கேறும் காதல் 'எஸ்எம்எஸ்' நாடகம் இது.

இது, கொழும்பிலுள்ள அநேகமான 'ரீலோட்' முகவர்களின் வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது.

கையடக்கத் தொலைபேசியில் இத்தகைய குறுஞ் செய்திகளைப் படிக்கும் இளம் பெண்கள் தவித்துப் போய்விடுகின்றனர். இது எப்படி...? யார் இதனை அனுப்புகின்றார்கள் என்று குழம்பிப் போகின்றார்கள்.

இப்படி இவர்களைத் தவிக்க வைப்பதில் இத்தகைய முகவர்களுக்கு அப்படி என்னதான் இன்பமோ தெரியவில்லை. எத்தனையோ காதல் கிறுக்கர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான 'கிறுக்கா'கத்தானே தோன்றுகின்றது?

இத்தகைய கிறுக்கர்களின் குறுஞ் செய்திகளையிட்டு நாம் அலட்டிக் கொள்ளவே தேவையில்லை. ஒருமுறை, இரண்டு முறை ஏன் பத்துத் தடவைகள் தான் அனுப்பட்டுமே, நாம் அவற்றை உடனுக்குடன் அழித்துவிட்டு, எதையுமே கண்டுகொள்ளாதது போன்று இருந்து விட்டால் போதும், காலப் போக்கில் இவர்களின் 'கிறுக்கு' தன்னாலேயே அடங்கிப் போய்விடும்.

இதனால் அனைத்து 'ரீலோட்' முகவர்களும் இப்படித்தான் என்பதல்ல... நல்லவர்களும் இருக்கத்தன் செய்கிறார்கள். இளம் பெண்களைக் கிண்டல் செய்வதையே பொழுதுபோக்காக ஏன் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் தான் இத்தகைய 'கிறுக்கு' த்தனத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மை.

இவர்களைக் 'காதல் கிறுக்கர்கள்' என்பதில் தவறில்லை அல்லவா?

Post Comment

மட்டு. - கல்முனைப் பாதையில் பாரிய போக்குவரத்துத் தடை


virakesari

மட்டக்களப்பு –கல்முனை நெடுஞ்சாலையில் பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. பாதையின் நடுவே பாரிய பாரந்தூக்கும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்துள்ளமையே இதற்குக் காரணம் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாதை அபிவிருத்திப் பணிகளுக்காக காத்தான்குடியில் 39 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வரவேற்பு நுழைவாயிலை உடைத்துக் கொண்டிருந்தபோதே மேற்படி இயந்திரம் உடைந்து விழுந்துள்ளது.

இதனால் பாரிய வாகனப் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனை - மட்டக்களப்பு பாதையில் மாற்று வழி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post Comment

சில்லென்ற உன் நினைவில்.....




சின்னச் சின்ன சிரிப்பால் என்னை சிலிர்தாய்
சிறுகச் சிறுக நகர்ந்து என் இதயத்துக்குள் இடம் பிடித்தாய்
தன்னந் தனியாய் நடாப்பாய் என்னை தவிக்கவிட்டு
திக்கித் திணரியே பேச வைத்தாய் என்னை குழப்பி விட்டு

ஒரு துளி விசம் போதும் என் உயிர் கொள்ள
உன் ஒரு நொடி விழிப் பார்வை போதும் என் உயிர் வாழ

என் தனிமையில் துனையாகிப் போனவன் நீ
என் விழி முடிய இரவுகளில் கனவானவன் நீ
என் உணர்வுகளின் உயிரோட்டமானவன் நீ
என் பெண்மையை ஆழப் பிறந்தவன் நீ

நீ என்னை கரம் பிடிக்கும் காலம் எப்போது
நான் நினைத்து சிலிக்கின்ற நேரம் இப்போது

உன் சேட்டைகள் பிடிக்கிறது என் இரவுகளில்
உன் கோபங்கள் வலிக்கிறது என் தனிமையில்
அரவனைப்பு தெரிகிறது உன் இருக்கிய அணைப்புக்களில்
விக்கி வியர்கிறது எனக்கு உன் இலேசான முத்தங்களில்

நீ என்னை கரம் பிடிக்கும் காலம் எப்போது
நான் நினைத்து சிலிக்கின்ற நேரம் இப்போது.....

Post Comment

சீனாவில் பெருவெள்ளம் : 107 பேர் பலி


virakesari

சீனாவில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவின் பத்து மாகாணங்களில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யங்டீஸ் ஆற்றுப்பகுதியை அண்டிய பகுதியில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தினால் 29 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒன்பது லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த மழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் நிறைந்துள்ளன எனவும், நேற்று செவ்வாய்க்கிழமை தென் சீனாவில் இடம்பெற்ற மண்சரிவினால் 17 பேர் பலியானதுடன் 44 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post Comment

ஆமிர், ஆசிபின் துல்லிய பந்து வீச்சில் சரிந்தது அவுஸ்திரேலியா




அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் லோட்ஸ் மைதானத்தில் இடம் பெற்று வரும் டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது.
2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கட்டுக்களை இழந்து
229 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆட்டக் களத்தில் மைக் ஹசி 39(75) பொலிங்கர் 0(10) ஆட்டமிலக்காமல் இருக்க ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஆரம்பம் முதலே அசத்திய பாக்கிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலியா அணியின் விக்கட்டுக்களை பதம் பார்த்தனர். ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா
தடுமாறினாலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைமன் கைட்ச் மற்றும் மைகள் கிளார்க் இருவரின் துடுப்பாட்டத்தால் சற்று நிமிர்ந்தாலும் இருவரும் ஆட்டமிழக்க
அடுத்தடுத்து விக்கட்டுக்கள் சரிந்தன.

பாக்கிஸ்தான அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவுஸ்திரேலியா திணரியது. இதற்கு பக்க பலமாக டினேஸ் கனேரியாவும் கை கொடுக்க
அவுஸ்திரேலியாவை நெறுக்கடிக்குள்ளாக்கியது பாக்கிஸ்தான்.இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.

Post Comment

Tuesday, July 13, 2010

வந்து விடு.....


ஒவ்வொரு ஊர் பயணத்தின் போதும்
ஓடி வந்து வரவேற்க நீயில்லை
என் காதலியாய் இன்று

ஆனால் நீ வீட்டை விட்டு வந்தாலும்
உன்னை வரவேற்க நான் இருந்தேன்
உன் வீதியோரத்தில் கால்கடுக்க
உன் காதலனாய் அன்று...

காலங்கள் மாறும் உலகில் நீயும் மாருவாய்
என்று எதிர்பார்க்கவில்லை நான்
கலங்கம் இல்லாமல் சந்தேகம் கொள்ளாமல்
உன்னை காதலித்ததால் தான்

என்னை வரவேற்பதற்குத்தான் என் காதலியாய் வரவில்லை
வழியனுப்ப வந்துவிடு என் ஊர் சனத்தோடு
எனக்காக வெட்டப்பட்டிருக்கும் மண்ணரைக்கு

Post Comment

காயம் காரணமாக ஸ்ரீசாந்த், இந்தியா திரும்பினார்


டெஸ் தொடரில் பங்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், காயம் காரணமாக உடனடியாக நாடு திரும்புகிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நட்சத்திர வீரர் ஜாகீர் கான் ஏற்கனவே காயம் காரணமாக விலகிய நிலையில், ஸ்ரீசாந்தும் காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது ,


Post Comment

தெ.கொரிய யுத்த கப்பல் மூழ்கடிப்பு : பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு


தென் கொரிய யுத்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை குறித்த ஐ.நா சபையுடனான பேச்சுவார்த்தையை வட கொரியா ஒத்தி வைத்துள்ளது.

தென்கொரியாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் கடந்த மார்ச் மாதம் வடகொரியாவால் மூழ்கடிக்கப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் 46 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான் பேச்சுவார்த்தை வடகொரிய தலைநகர் பியொன்ஜியங்கில் இடம்பெற இருந்தது. சில நிர்வாக காரணங்கள் காரணமாக இப்பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post Comment

Monday, July 12, 2010

சீனாவில் மீண்டும் 'கூகுள்'

உலகின் பிரபல தேடல் இணையத்தளமான கூகுள், சீனாவில் தொடர்ந்து இயங்குவதற்கான உரிமத்தை அந்நாட்டு அரசாங்கம் புதுப்பித்துள்ளது.

கூகுள் மூலமாக செயற்படும் செய்திகள் மற்றும் தகவல்களைச் சீன அரசு தணிக்கை செய்தமை தொடர்பாக கூகுள் நிறுவனம் கடும் ஆட்சேபம் தெவித்திருந்ததுடன் சீனாவை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்திருந்தது.

இதனையடுத்து இரு தரப்பினரும் இவ்விடயம் தொடர்பாக மௌனம் காத்து வந்தனர். கூகுள் நிறுவனத்தின் சேவை மற்றும் அவசியம் தொடர்பாக சீன வர்த்தக நிறுவனங்கள் சீன அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.

உலகின் அதிக இணைய பாவனையாளர்களைக் கொண்ட சீனச் சந்தையை கூகுள் இழக்க விரும்பவில்லை. இந்நிலையில் சீன அரசாங்கம் அந்நாட்டில் கூகுள் இயங்குவதற்கான உரிமத்தைப் புதுபித்துள்ளது.

இவ்வாய்ப்பை கூகுள் உறுதி செய்ததுடன் அந்நிறுவனத்தின் பங்கு விலை 2.8 வீதத்தினால் உயர்வடைந்தது. இந்நிலையானது தற்காலிகமானது எனவும் கூகுள் மற்றும் சீன அரசாங்கத்திற்கிடையிலான பணிப்போர் தொடர்ந்து நிலவி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Post Comment

ஸ்பெயினா? நெதர்லாந்தா? யுத்தத்தில் ஸ்பெயின் சாம்பியன்



உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ஸ்பெயினா? நெதர்லாந்தா? என்ற யுத்தத்தில் ஸ்பெயின் சாம்பியனானது.

உலக கிண்ணத்தில் இன்று நடைபெற்ற 64ஆவது போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது. ஸ்பெயின் உலக கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறை.மேலும் உலக கோப்பையை வென்ற 8ஆவது நாடு என்ற பெருமையையும் ஸ்பெயின் பெற்றது.

19ஆவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி கடந்த ஜுன் 11ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டன. இதற்கு முன் உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் (5முறை) இத்தாலி (4 முறை) ஜெர்மனி (3 முறை)அர்ஜென்டினா (2 முறை) உருகுவே (2 முறை) இங்கிலாந்து (ஒரு முறை) பிரான்ஸ் (ஒரு முறை)அணிகள் இந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. இவற்றுக்கு பதிலாக 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் முதல்முறையாக உலகக் கிண்ணத்துக்கு இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

ஸ்பெயின் அரைஇறுதியில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது, மறுமுனையில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த இரு அணிகளும் இதற்கு முன் உலகக் கிண்ணத்தை வென்றது இல்லை. நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவிடமும் இறுதி போட்டியில் தோல்வி கண்டு கிண்ணத்தை கோட்டை விட்ட அணி. எனவே இந்த முறை எப்படியாவது கிண்ணத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று அந்த அணி கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியது. ஸ்பெயின் அணி தனது இறுதி 32 ஆட்டங்களில் இரண்டில் மட்டும்தான் தோல்வி கண்டுள்ளது. அதுபோல் நெதர்லாந்து அணியும் இறுதியாக நடந்த 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பெயின் அணியின் ஸ்டிரைக்கர் பெர்னான்டோ டார்ரஸ் முதல் 11 அணி வீரர்களில் ஒருவராக களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஜெர்மனிக்கு எதிராக அசத்திய பெட்ரோ களம் இறங்கினார். நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்டம் துவங்கஆரம்பமாகி 5ஆவது நிமிடமே ஸ்பெயினுக்கு கோல் போட வாய்ப்பு கிடைத்தது. செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டிய பந்து மின்னல்வேகத்தில் கோல்கம்பத்தை நோக்கி சென்றது. ஆனால் அதனை நெதர்லாந்து கோல்கீப்பர் ஸ்டெக்லன்பர்க் பாய்ந்து தடுத்து விட்டார்.

ஸ்பெயின் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தது. முதல் 20 நிமிடங்கள் ஸ்பெயின் வீரர்கள் நெதர்லாந்து வீரர்களை விளையாடவே விடவில்லை. கிடைத்த இடைவெளியில் நெதர்லாந்தின் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஒருவழியாக நெதர்லாந்தும் தனது பலத்தை காட்ட ஆரம்பித்தது. பம்மி பதுங்கியபடி இருந்த நெதர்லாந்து கோல் அடிக்கும் முனைப்புடன் விளையாட ஆட்டம் சூடு பிடித்தது.

இதனால் ஆட்டத்துக்கும் பஞ்சம் இல்லை. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.ஆனால் 14 ஆவது நிமிடத்தில் வான்பார்சி,16ஆவது நிமிடத்தில் கார்லஸ் புயால்,21ஆவது நிமிடத்தில் மார்க் வான் பொம்மல்,23ஆவது நிமிடத்தில் செர்ஜியோ ரமோஸ்,28ஆவது நிமிடத்தில் நைஜல் டி ஜோங் ஆகியோர் மஞ்சள் அட்டைகளை பெற்றனர்.

தொடர்ந்து பிற்பாதியிலும் மஞ்சள் அட்டை பெறும் படலம் தொடர்ந்தது. இந்த முறை நெதர்லாந்து அணியின் தலைவர் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் 53ஆவது நிமிடத்திலும் 55ஆவது நிமிடத்தில் ஹெட்டிங்காவும் முரட்டு ஆட்டத்திற்காக மஞ்சள் அட்டை பெற்றனர்.ஆனால் ஆட்டத்தில் சூடு குறையவில்லை. இரு அணி வீரர்ளும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சித்து வந்தனர். 62ஆவதுநிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனுக்கு கோல் போட நல்ல வாய்ப்பு கிடைத்தது. குயித்திடம் இருந்து வந்த பந்தை பெற்ற ராபன் ஸ்பெயினின் இரு தடுப்பாட்டக்காரர்களை கடந்து கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்.பந்தை பிடிக்க பாய்ந்த ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாசின் காலில் பட்டு பந்து வெளியேறி விட்டது.இதனால் ஸ்பெயின் மயிரிழையில் தப்பித்தது.

அடுத்த 7ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட்வில்லாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.ஜீசஸ் நவாஸ் கிராஸ் செய்த பந்து நெதர்லாந்து பெனால்டி பகுதிக்குள் அங்கும் இங்கும் சென்றது.எதிர்பாராமல் அது டேவிட் வில்லாவுக்கு கிடைக்க நிச்சயம் இது கோல்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் நெதர்லாந்து கோல்கீப்பர் மேலேயே டேவிட் வில்லா அடிக்க ஸ்பெயினுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு பறி போனது.

தொடர்ந்து ஸ்பெயினுக்கு பல வாய்ப்பு கிடைத்தன. செர்ஜியோ ரமோஸ் நல்ல பல வாய்ப்புகளை உருவாக்கினார். அவ்வப்போது நெதர்லாந்து வீரர்களின் பின்கள அரணை உடைக்கவும் அவர் தவறவில்லை. நெதர்லாந்து வீரர்களின் தடுப்பாட்டம் அபாரமாக இருந்ததால் ஸ்பெயின் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை.

கோல் அடிக்கும் ஆர்வத்தில் ஜெர்மனிக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி செய்த தவறை ஸ்பெயின் வீரர்களும் இந்த ஆட்டத்தில் செய்தனர். இதனால் 82ஆவது நிமிடத்தில் ராபனுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து வீணானது. ஸ்பெயின் தடுப்பாட்டக்காரர்கள் அனைவரும் முன்களத்திற்கு சென்றிருந்த சமயத்தில் ராபனுக்கு ஒரு திடீர் பாஸ் கிடைத்தது.பந்தை கடத்தி வந்து கடைசியில் கோட்டை விட்டார் ராபன். மீண்டும் ஸ்பெயின் தப்பித்தது.நிர்ணயிக்கப்பட்ட 90 ஆவது நிமிட ஆட்டமும் கோல் எதுவும் விழாமல் சமநிலையில் முடிந்ததால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் 5ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெப்ரிகாஸ் தனக்கு கிடைத்த எளிதான வாய்ப்பை நெதர்லாந்து கோல்கீப்பர் ஸ்டெக்லைன்பர்க் மேல் அடித்து வீணடித்தார்.18ஆவது நிமிடத்தில் பெனால்டி பகுதி அருகே ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை கீழே தள்ளி விட்ட ஹெட்டிங்கா இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றதால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் அவர் களத்தை விட்டு வெளியேறினார்.

இறுதி 10 நிமிடங்கள் நெதர்லாந்து 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கூடுதல் நேரத்தில் 116ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரஸ் இனியஸ்டா அட்டகாசமாக ஒரு கோல் அடித்து ஸ்பெயினுக்கு முன்னிலை தேடி கொடுத்தார்.பெப்ரிகாஸ் கொடுத்த பாசை பயன்படுத்தி இந்த கோலை இனியஸ்டா அடித்தார். இந்த ஒரே ஒரு கோலால் ஸ்பெயின் 1-0 என்று வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

Post Comment

ப்ரியமான நண்பனுக்கு...............

என்னோடு நீ இருக்கும் காலங்கள் தான்
என் பசுமை நிமிடங்கள்......
என்னோடு நீ இல்லாத நேரங்கள் தான்
என் கொடிய வருடங்கள்....

என்னோடு நீ இருக்கும் காலம்
அது என் வசந்த காலம்

பக்குவ பாசறையாம் பாடசாலையிலும்,
பணத்தின் கேந்திரமாம் கடைத்தெருக்களிலும்,
ஏழையின் வீடாம் ஓதுக்கப்பட்ட தெருக்களிலும்,
விளையாட்டு வீரர்களின் விடுதியாம் மைதானங்களிலும்,
சூரியனின் ஆதிக்கமும் சந்திரனின் சாந்தமும் நிறைந்த
மொட்டை மாடியிலும்,
நம் கேந்திர நிலையம் கடல் மணலிலும்,
நம் வாகனம் உன் மோட்டார் வண்டியிலும்,
என்று உன்னோடு இருந்த காலம்
அவை தான் என்றும் என் வாழ்வின் பொற்காலம்

உன் காதலியின் வீடு தேடி நான் அலைந்த காலங்கள்,
நம் சேட்டையில் ஆசிரியரின் கண்டிப்புக்கு இலக்காகிய தருணங்கள்,
நீ என் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு திணறிய நிமிடங்கள்,
நாம் சைட் அடித்த பெண்கள்,
நாம் அடிக்கடி போடும் சண்டைகள்,
night out இல் செய்யும் குறும்புகள்,
நாம் சாப்பிட்ட hotel கள், கிழங்கு சாப்பிட்ட குடிசைகள்
நாம் பார்த்து ரசித்த படங்கள்...................
.........
என்னும் போதே கண்ணீர் நனைக்கிறது
என் காகிதங்களை

இன்று நீயில்லை என்னுடன்
காலம் எனும் அரக்கன் உன் வாழ்வில்
தனிமை எனும் புதிய நண்பன் என் வாழ்வில்
நான் உன்னை தொலைக்கவுமில்லை
நீ என்னை பிரியவுமில்லை

தொலை தூரத்தில் இருந்து வரும் உன் குரலைக் கேட்க
காத்துக் கிடக்கிறேன் என் விழி மூடாமல்

அவ்வப்போது என் இருளுக்கு வெளிச்சம் தந்தவன் நீ,
என்னிடம் எதுவுமில்லை உனக்குத் தருவதற்கு
ஏன் நட்பைத் தவிர......

நண்பனே.........
நீ சாப்பிடும் போதும்,
நீ தூங்கும் போதும்,
நீ சிரிக்கும் போதும்,
நீ அழும் போதும்,
எல்லா நிலைகளிலும் என்னையும் நினைத்துக் கொள்
உன்னுடன் என்றும் நான் இருப்பேன் நினைவலைகளாக.........

ஏனெனில் நான் இருக்கமாட்டேன் உனை நினைக்க........... :(

Post Comment