Friday, July 16, 2010

களுவாஞ்சிக்குடி வங்கியில் முப்பது லட்சம் கொள்ளை

நன்றி:Kattankudi

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று பிற்பகல் அரச வங்கியொன்றிற்கு மற்று மொரு அரச வங்கியிலிருந்து அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 30 லட்சம் பணம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்குரிய பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட வங்கி அதிகாரிகள் இருவர் சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள இலங்கை வங்கிக் கிளையிலிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருக்கையில் எதிர் கொண்’ட மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் துப்பாக்கி தாரிகளினால் வழி மறித்து பணம் பறித்துச் செல்லப்டப்டுள்ளதாக இச் சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

இச் சம்பவத்தையடுத்து களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொலிசார் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை மேற் கொண்டிருந்தாலும் இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைதாகவில்லை. சந்தேக நபர்களும் எவரும் கைதாகவில்லை என பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 20 வருடங்களின் பின்னர் வங்கிக் கொள்ளையொன்று இடம்பெற்ற சம்பவம் இது என கருதப்பட்டாலும் வடக்கு கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது வங்கிக் கொள்ளைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment