Thursday, July 15, 2010

மறந்து விட்டாயல்லவா? என்னை...........



வானில் உலா வரும் காற்றாடிகள் போல்
உன் நினைவுக் காற்றால் என் திசைக்கே
தலை சாய்கிறேன்.

இரும்பை கண்டு கொண்ட காந்தம் போல
உன் இருப்பிடத்தை நோக்கியே
ஈர்க்கப் படுகின்றேன்.

மன்டியிட்டு அழுகிறேன் என் மரத்த மனதிடம்
மறந்து விடு அவளை என்று
மாட்டேன் என்று தலை அசைக்கிறது
மன்னித்து விடு என்னை என்று

மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல்
நான் தவிக்கும் தவிப்பு..........
மரணப் படுக்கை வலியை விடக் கொடியது.

மணமாலை அணிந்து நீ மாற்றானின்
கை பிடித்து நடந்து சென்றதை பார்த்த வேளை....
என் நாடி நாளங்கள் வெடிப்பதை உணர்ந்தேன்.
உன் வானமே இடிந்து வீழ்ந்ததைக் கண்டேன்.
என் உயிர் பிரிவதைப் பார்த்தேன்.
என் இமைகள் சுருங்குவதை அறிந்தேன்.

மற்றவனின் உடமையாகிப் போன உன்னை
மறக்க நினைத்து மதுவுக்கு அடிமையானேன்
அப்போதும் முடியவில்லை ஒரு கணம் கூட....

ஏன் தற்கொலை? என்று கேட்ட என்னை
செய்து பாருடா என விதி வழி காட்ட
கால்கள் போன போக்கில் நடக்கிறேன்;
கடைசியாய் ஒரு மடலை உன்னிடம் சமர்பித்து விட்டு

நீ மறந்து விட்டாயல்லவா என்னை.....
என்னாலும் முடியும் உன்னை மறக்க
என் உயிரைத் தானும் துறந்து...................


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. அருமை... ஆழ்மனத்தின் அனர்த்தங்களின் தொகுப்பு...

    ReplyDelete
  2. ஆம் ஆழ்மனத்தில் எரியும் சில அக்கினிகளின் தொகுப்பு

    ReplyDelete