Monday, July 26, 2010

பெண்னே!!!!!!!!!!

பெண்னே!!!!
எம் சமுதாயத்தின் கண்ணே!
உனை நோக்கிய என்
வேண்டுகோள்கள் இல்லை வேண்டுதல்கள்

'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'
இன்று நீ அதில் இரண்டாம் ரகம்
நீ ஆக்க மறந்தாலும் அழிக்கத் தயங்குவதில்லை

இன்று என் சமுதாயம் இருட்டில்
ஓளி தரும் அதன் கண்ணாகிய உனை
இழந்து விட்டதால்
இன்று நீ பெண்னாக இல்லை
நீ எப்போது பேயாகிப்போனாய்????;

அழகு உன்னில் இருக்கிறது
உன் ஆடை எனும் அச்சம்
இல்லை உன்னிடம்

மங்கிக் கிடக்கிறாய் நீ
உன் மடம் என்ற தோழியோடு

நாகரீகம் உன்னில் இருக்கிறது-ஆனால்
உனக்கே உரித்தான நாணம் எனும்
போர்வை இல்லை உன்னிடம்

பகைமை நோய் தொற்றியிருக்கிறது
உன்னில்-ஆனால்
பயிர்ப்பு இல்லை உன் உடலில்

பாரதி கண்ட புதுமைப் பெண் என்று
நீயே பேசிக் கொள்கிறாய்-இருப்பவற்றை
இழந்து விட்டு
இன்று மட்டும் பாரதி உன் நிலை கண்டால்
வெட்கப்படுவான் உனக்காக அன்று
குரல் கொடுத்ததற்கு

உன் எழுச்சியை இகழவில்லை நான்
உன் சாதனையை தடுக்கவில்லை நான்
ஆனால் நீ சாக்கடையாய்ப் போனதை
மிக வண்மையாகக் கண்டிக்கிறேன்

உன் வாழ்க்கை விலை பேசப்படுகிறது
உனக்குத் தெரிந்தே பல வீடுகளில்
உன் எழுச்சியை நீ காட்டவேண்டும்
அத் தருணங்களில்
ஆனால் நீயோ................

ஏமாற்றப்படுபவளும் நீதான்
ஏமாற்றுபவளும் நீதான்

பெண்னே!!!
நீ பூப் போன்றவள்
இன்று புயலாய் உருவெடுத்து
சமுதாயத்தை அழிக்கிறாய்
உன் புயலை நிறுத்தி
தென்றலாய் வீச வேண்டும் நீ....

இன்றய வீதியோரத்தில் மிகவும்
மலிவுப் பொருளும் நீதான்
உன் ஆடைகளில் தெரிகிறது
உன் அரை நிர்வாணம்
வெட்கித் தலை குனிகிறது
இந்த சமுதாயம்.....

பெண்னே!!!!
நீ சிறந்தவள் தான் ஆனால்
இன்று சீரழிந்து நிற்கிறாய்
உனக்கான பெருமை பணத்தில் அல்ல
உன் குணத்தில்
நீ மாற வேண்டும் எனக்காக அல்ல
உனக்காக.....

உன்னிடம் இன்று எதுவுமில்லை
நீயும் இழந்து விட்டாய்
உன் மென்மை,உன் பெண்மை
உன் வெட்கம், உன் மௌனம்
என்று எதுவுமில்லை உன்னில்

உன்னில் எத்தனை அவதாரம்
ஒரே பிறவியில்...
வியந்து நிற்கின்றேன்
தாயாய்,மனைவியாய்,மகளாய்,சக
ோதரியாய்,
நண்பியாய் காதலியாய் என்று நீண்டு செல்கிறது
உன் அவதாரப் பட்டியல்
ஆனால் இன்று அதில் தப்பிப்பிழைத்து நிற்பது
இல்லை தன்னை காத்து நிற்பது
தாய்மை மட்டுமே
மற்றவை எல்லாம் மறைந்துவிட்டன உன்னில்

உன் இந்த நிலைக்கு நானும் காரணம்
என்று என்னும் வேளை
இரத்தம் சொட்டுகிறது என் இதயத்தில்
மன்னிக்க வேண்டுகிறேன் இத் தருணத்தில்

ஒத்துக்கொள்கிறேன்
நான் திருந்த வேண்டியவன் தான்
ஆனால் நீயோ அடங்க வேண்டியவள்

நீ மாற வேண்டும் என்ற என்
கனவு ஒவ்வொரு விடியலோடும்
கலைந்து விடுகிறது...

மாறுவாயா?????? என்ற ஏக்கத்தோடு
விடை பெறும் இவன்......


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment