Wednesday, July 14, 2010

இப்படியும் சில காதல் கிறுக்கர்கள்....! _


நன்றி:Virakesari


பெண்ணாய் பிறந்தது தவறா? அல்லது அழகான பெண்ணாய்ப் பிறந்தது தவறா? அப்படியே பிறந்தாலும் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பது தான் தவறா?

இத்தகைய கேள்விகளுக்கு விடை காணத் துடிக்கின்றனர் இன்றைய இளம் பெண்கள்.

ஆம், இன்று இளம் பெண்களுக்குத் தொல்லை கொடுப்போர் பட்டியலில் 'ரீலோட்' முகவர்களும் இணந்து கொண்டமைதான் இவர்களின் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காரணம்.

தமது கையடக்கத் தொலைபேசிக்கு 'ரீலோட்' பண்ணச் செல்லும் இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை, இந்த முகவர்கள் குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

இரவானதும் அவர்களின் காதல் சில்மிஷங்கள் ஆரம்பாமாகி விடுகின்றன. அவர்கள் குறித்து வைத்திருக்கும் தொலைபேசி இலக்கங்களுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இவர்கள், காதல் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்து விடுகின்றனர்.

இரவில் மட்டும் அரங்கேறும் காதல் 'எஸ்எம்எஸ்' நாடகம் இது.

இது, கொழும்பிலுள்ள அநேகமான 'ரீலோட்' முகவர்களின் வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது.

கையடக்கத் தொலைபேசியில் இத்தகைய குறுஞ் செய்திகளைப் படிக்கும் இளம் பெண்கள் தவித்துப் போய்விடுகின்றனர். இது எப்படி...? யார் இதனை அனுப்புகின்றார்கள் என்று குழம்பிப் போகின்றார்கள்.

இப்படி இவர்களைத் தவிக்க வைப்பதில் இத்தகைய முகவர்களுக்கு அப்படி என்னதான் இன்பமோ தெரியவில்லை. எத்தனையோ காதல் கிறுக்கர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான 'கிறுக்கா'கத்தானே தோன்றுகின்றது?

இத்தகைய கிறுக்கர்களின் குறுஞ் செய்திகளையிட்டு நாம் அலட்டிக் கொள்ளவே தேவையில்லை. ஒருமுறை, இரண்டு முறை ஏன் பத்துத் தடவைகள் தான் அனுப்பட்டுமே, நாம் அவற்றை உடனுக்குடன் அழித்துவிட்டு, எதையுமே கண்டுகொள்ளாதது போன்று இருந்து விட்டால் போதும், காலப் போக்கில் இவர்களின் 'கிறுக்கு' தன்னாலேயே அடங்கிப் போய்விடும்.

இதனால் அனைத்து 'ரீலோட்' முகவர்களும் இப்படித்தான் என்பதல்ல... நல்லவர்களும் இருக்கத்தன் செய்கிறார்கள். இளம் பெண்களைக் கிண்டல் செய்வதையே பொழுதுபோக்காக ஏன் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் தான் இத்தகைய 'கிறுக்கு' த்தனத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மை.

இவர்களைக் 'காதல் கிறுக்கர்கள்' என்பதில் தவறில்லை அல்லவா?


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment