Saturday, July 17, 2010

ஜப்பானில் 902 அமெ. குண்டுகள் கண்டுபிடிப்பு

நன்றி:Virakesari
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 902 குண்டுகள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் ஒகினாலா நகரின் ஒரு ஹோட்டலுக்கு அருகில், வீதி அபிவிருத்திப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மண்ணுக்குள் இரும்பு குண்டுகள் புதைந்து கிடந்ததை இவர்கள் கண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததும், அவர்கள் அவ்விடத்துக்கு வந்தனர். அவை வெடிகுண்டுகளாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகப்பட்டனர். எனவே மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த போது, அவை வெடி குண்டுகள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். மொத்தம் 902 குண்டுகள் பூமியில் இருந்து எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை.

அவை இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் என்றும் கண்டறியப்பட்டது.

இந்தக் குண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் கிடந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக இடோமன் நகர சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜியோடாகா மேடோமரி தெரிவித்தார்.

ஏற்கனவே ஜப்பானில் இது போன்று பல இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment