Thursday, June 23, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்?-I

நம்முடைய வாழ்கையில் நாம் சந்திக்கின்ற விடயங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. எத்தனையோ பிரச்சினைகள் எத்தனையோ சந்தோசங்கள் என நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

பூமி என்ற கோளம் பலவகையான விடயங்களை அதற்குள் உள்ளடக்கியிருக்கிறது. எத்தனையோ அதிசயங்கள்,அபூர்வங்கள் எல்லாம் இந்தப் பூமிக்கு மேலும்/கீழும்,உள்ளேயும்/வெளியேயும் இருந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் இந்தப் பூமியின் மேல் வாழும் மனிதன்தான் இந்த பூமியின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணமானவனாக இருக்கிறான். பிரிக்கப்பட்டே எல்லாவிடயங்களும் இங்கு நோக்கப்படுவதால் நாமும் அதனுடன் ஒட்டி உறவாட வேண்டியுள்ளது. அதுதான் நிதர்சனமும். ஆகவே மனிதனை அடிப்படையாக 2 வகையாக பிரிக்கமுடியும். ஆண்கள்,பெண்கள் என்பதுதான் அவை.

இந்தக் கட்டுரையின் சாராம்சம் பெண்கள் பற்றியதாகவே அமையப் போகிறது. அதுவும் ஒரு வித்தியாசமான பார்வையை செலுத்தப் போகிறது. அதாவது பெண் என்பவள் இன்று அவளுடைய பாதையில் இருந்து விலகிச்செல்கிறால் எனும் ஒரு கருத்து நம்மிடையே நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. இது என்னால் மட்டுமல்ல உங்களால் மட்டுமல்ல இன்று சர்வ சாதாரணமாக நாம் பாவிக்கும் வார்தைகளில் ஒன்றாகிப் போனது. இது பற்றிய ஒரு பார்வையை தான் நாம் இங்கு செலுத்த இருக்கின்றோம்.

ஆரம்ப கட்டங்களில் பெண் என்பவள் வீட்டுக்குள் அடங்கியிருக்கின்ற ஒரு பொருளாகவே அடையாளப்படுத்தப்பட்டாள். அவளுடைய சகல உரிமைகளும் மறுக்கப்ட்டு இந்த சமூகம் அவளை ஒரு அடிமையாகவே நடத்தியது என்றால் அது மிகையாகாது.

அதன் பிறகு பெண்களுக்கு அவர்களுடைய உரிமைகள் கொடுக்கப்பட்டு அவளும் இச் சமூகத்தில் ஒரு மனித இனமாக மதிக்கப்பட்டாள். அவளுடைய வாழ்கை முறை பற்றி குரல் கொடுக்காத சமூக அமைப்புக்களே இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு பெண்கள் உரிமைகள் பற்றி பல மேடைப் பேச்சுக்கள், விவாதங்கள், கருத்துக்கள், புத்தகங்கள் என ஒரு சமூகப் புரட்சியே நடந்தேறியது. ஏன் ஐ.நா சபை கூட பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க சட்டங்களளை இயற்றி அவர்களுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கியது.

அதன் பிறகு பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சவால் விடுக்கின்ற அளவுக்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க பாராட்டப்படக்கூடிய விடயம் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்தப் பெண் வளர வளர கூட பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன என்பது தான் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். (தொடரும்...)


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment