Friday, December 09, 2011

கருவி ஒன்றை கண்டுபிடி!

(சூரியன் fm இன் ரீங்காரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதப்பட்டு 23 /11 /2011 அன்று வாசிக்கப்பட்ட கவிதை)


கரைந்து விட்டது
நேற்றைய பொழுதுகள்.
கருகிக்கொண்டிருக்கிறது
இன்றைய நிஜங்கள்.
முன்நோக்கி நகர்கிறது
நாளைய நிகழ்வுகள்.

உலகம் இயங்கும் வேகத்திற்கு,
ராகட் கூட இரண்டாம் பட்சம்தான்.

உலகின் சுழலுக்கு ஈடுகொடுத்து,
பசுமை நினைவுகளை
எனக்குப் படம் போட்டுக் காட்ட,
கண்டுபிடி ஒரு கருவி.

இழந்தது எனக்கு
வேண்டும்,
மீண்டும்...

என் காதோரம் கதை சொல்லும் பாட்டி,
நான் தூங்கிய தாய்மடி,
பசுமையான பாடசாலை நாட்கள்,
பழகிப் பிரிந்துபோன நண்பர்கள்,
பாசமாய் அரவணைத்த உறவுகள்......
இவ்வாறு இழந்தவை ஏராளம்.

"எமக்குக் கிடைக்கும் அனைத்தும்
எம்மை விட்டுப் பிரியும்
" எனும் வாழ்வின்
நியதி உடைத்தெறிய,
கருவி ஒன்றைக் கண்டுபிடி.

உன் புதிதான கருவி பிறக்கட்டும்.
இழந்ததால் வலி சுமக்கும் உள்ளங்கள்,
வலி நீங்கட்டும்.

இழந்ததை மீண்டும் இயக்க
கருவி ஒன்றைக் கண்டுபிடி.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. சரியான தேடலை நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. #வே.சுப்ரமணியன்.#
    உங்கள் தேடலுக்கு விடை கிடைக்கட்டும். உங்கள் கருத்துரைக்கு நன்றி.
    தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete