Friday, December 09, 2011

கருவி ஒன்றை கண்டுபிடி!

(சூரியன் fm இன் ரீங்காரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதப்பட்டு 23 /11 /2011 அன்று வாசிக்கப்பட்ட கவிதை)


கரைந்து விட்டது
நேற்றைய பொழுதுகள்.
கருகிக்கொண்டிருக்கிறது
இன்றைய நிஜங்கள்.
முன்நோக்கி நகர்கிறது
நாளைய நிகழ்வுகள்.

உலகம் இயங்கும் வேகத்திற்கு,
ராகட் கூட இரண்டாம் பட்சம்தான்.

உலகின் சுழலுக்கு ஈடுகொடுத்து,
பசுமை நினைவுகளை
எனக்குப் படம் போட்டுக் காட்ட,
கண்டுபிடி ஒரு கருவி.

இழந்தது எனக்கு
வேண்டும்,
மீண்டும்...

என் காதோரம் கதை சொல்லும் பாட்டி,
நான் தூங்கிய தாய்மடி,
பசுமையான பாடசாலை நாட்கள்,
பழகிப் பிரிந்துபோன நண்பர்கள்,
பாசமாய் அரவணைத்த உறவுகள்......
இவ்வாறு இழந்தவை ஏராளம்.

"எமக்குக் கிடைக்கும் அனைத்தும்
எம்மை விட்டுப் பிரியும்
" எனும் வாழ்வின்
நியதி உடைத்தெறிய,
கருவி ஒன்றைக் கண்டுபிடி.

உன் புதிதான கருவி பிறக்கட்டும்.
இழந்ததால் வலி சுமக்கும் உள்ளங்கள்,
வலி நீங்கட்டும்.

இழந்ததை மீண்டும் இயக்க
கருவி ஒன்றைக் கண்டுபிடி.


Post Comment

Wednesday, December 07, 2011

சரியாகச் செல்கிறாளா இன்றய பெண்? IV

(இதன் முதற் பகுதியை வாசிக்காத வாசகர்கள் இங்கு கிளிக் செய்யவும்)

பகுதி-I
பகுதி-II
பகுதி-III


பெண்களைப் பற்றி பேச ஆரம்பித்தாலே முடியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது. இத் தொடரை இதனுடன் முடிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கிருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இந்த பகுதியை எழுதுகின்றேன். பெண்கள் பற்றிய நிறைய விடயங்களை எமது முதல் பதிவுகளில் அலசிவிட்டடதால் நேரடியாக விடயத்துக்கு வருவோம்.

பெண்கள் விடும் தவறுகள் எவ்வாறு அந்த சமூகத்தை பாதிக்கிறது?

முதலில் பெண்களும், ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம், பெண்களுக்கு இருக்கும் தாய்மை பற்றி. இந்த தாய்மை குழந்தைகளை சுமப்பதற்கு மட்டும் அல்ல, அவர்களை சரியான வழியில் வளர்பதற்கும்தான்.
ஆகவே ஒரு மனிதனே பின்னாளில் ஒரு சமூகமாகிறான் என்பது விதி. இதை வைத்து பார்க்கும் போது அம்மனிதனை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் தாய் (ஒப்பிடுகையில் கூடுதலான பொறுப்பு தாய்க்கே உண்டு.) அதாவது பெண் அங்கு சரியாக இருக்கும் போதுதான் அந்த பிள்ளையும் சரியான வழியில் வளர்க்கப்படுகிறான்.
ஒரு பிள்ளையின் முதல் பள்ளிக்கூடம் தாய்மடி எனும் கருத்தையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன். சமூகத்தில் அவன் ஒரு நிலையை அடையும் போது தன் தாயால் இவன் தவறான முறையில் வழிநடத்தப்பட்டிருந்தால் அங்கு பிரச்சினைகள் மிகக் கூடுதலாக காணப்படும். இந்த விடயத்தில் தாய்மார்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும். இது ஒன்றே போதும் பெண்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதற்கு.

ஆனாலும் நாம் இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டி காட்ட விரும்புகின்றோம்.
அதாவது பெண்கள் பொதுவாகவே தங்கள் பக்கம் யாரையும் மயக்கி விட கூடியவர்கள். அந்த வகையில் மணமுடித்த சில ஆண்கள் மனைவியிடம் மயங்கி போவதுமுண்டு. அதாவது மனைவிமார்களின் பேச்சை கேட்டு நடக்கும் ஆண்களும் உண்டு. (இது இயற்கை.) இப்படியான நேரத்தில் மனைவிமார்கள் தவறானவர்களாக இருந்து அவர்கள் சொல் படி இந்த கணவன் வழிநடத்தப்படும் போது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக தோன்றுகின்றன. இதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.ஆகவே பெண் என்பவள் ஆணை விட சமூகத்தில் அதிகம் முக்கியம் பெறுகிறாள்.(ஆண்களை வளர்ப்பதும் பெண்கள்தானே). இதனால்தான் பெண் என்பவள் சமூகத்தின் கண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். ஆகவே பெண்கள் எப்போதும் சரியான வழிநடத்தலில் சரியான வழியில் இருக்க வேண்டும்.

பெண்கள் எப்பவும் எந்த நேரத்திலும் நிதானம் உள்ளவர்களாவும் சரியான முறையிலும் இருக்க வேண்டும் என்ற செய்தியோடு நாம் இந்த தொடரில் பேசிய விடயங்கள் பெண்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பை வேண்டியவனாக விடை பெறுகிறேன்.என்னால் முடிந்த அளவு விடயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்துக்களே. வாழ்த்தி வரவேற்பதா? அல்லது தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார். நீங்கள்...?(முற்றும்)

Post Comment

Monday, December 05, 2011

மரணித்து விட்டது மனிதம்



காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?

எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?

நான்?
நீங்கள்?
நம் குடும்பம்?
மனித உயிர்?
பணம்?
பாசம்?
ஆசை?
காதல்?
இதில் எது நிலையானது?

வானம்?
அதில் தோன்றும் நிலவு?
கடலை பிழக்கும் சூரியன்?
ஓயாமல் அடிக்கும் அலை?
அந்த அலை தந்த நுரை?
இதில் எதை சொல்ல முடியும்
நிலையானது என்று?

பணத்தை நோக்கி ஒரு கூட்டம்,
பாசத்தை நோக்கி ஒரு கூட்டம்,
அறிவை தேடி ஒரு கூட்டம்,
ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்..

இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது
நம் வாழ்வும் வாழ்நாளும்...

வாழப் பிறந்துவிட்ட மனிதனுக்கு
மரணம் மட்டுமே நிதர்சனம்.
மற்றவையெல்லாம் மாயமாய்
மறைந்து போகும் அதிசயம்.

என் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குச் சொல்லும் சேதி
தெரியுமா உங்களுக்கு?

"மரணத்தை சந்திக்க
நீ ஒரு வருடம்
முன் வந்து விட்டாய்" என்பதுதான்.

மாற்றம் மட்டும் அல்ல,
மரணமும் மாற்றா முடியாததுதான்...

நம் ஓடும் பாதையின் முடிவு மரணம்.
அதை மறந்து விட்டதால்தான்,
இன்று மரணித்து விட்டது மனிதம்.

மரணத்தை நினைப்போம்,
மனிதத்தை வளர்ப்போம்.

Post Comment