Wednesday, January 04, 2012

இரவுச் சத்தம்.

"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....."

அழகான மௌனத்துக்குள் அலாரமாய் மாறி விட்டது அந்த சத்தம். இரவின் திடீர் விழிப்பு எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்து கொண்டேன். என் அறை திறந்து வெளியே வந்தேன். நடந்தது என்னவென்று தெரியாமல் என் மொத்த குடும்பமும் விழி பிதுங்கி நின்றது. ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வீட்டு வாசல் கதவைத் திறந்தோம்.

ஒரே ஆச்சரியம்!!! ஊரே ஒன்று கூடி என்ன மாநாடு நடத்துகிறது இந்த நடு இரவில்??

எல்லாரும் எங்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவர்கள் பேச்சோடு பிஸியாகிவிட்டார்கள். அம்மா பெண்கள் பக்கமும், அப்பா ஆண்கள் பக்ககமும் செல்ல என் தம்பி திரும்பவும் அவன் அறைல போய் கதவ சாத்திக்கிட்டான். என் வீட்டுத் திண்ணையில் நான் தனித்து தூக்கக் கலக்கத்தோடு நின்றிருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அவர்களை கவனிக்கும் அளவுக்கு என் கண்கள் விழித்து இருக்கவில்லை.
"வட் த ஹெல் ஆர் தீஸ் பீப்பில் டூஇங் திஸ் டைம்?" எண்டு கோபம்தான் வந்தது. ஒரு வழியா அப்பா வந்து சேந்தாரு. அப்புறம் அம்மாவும் வந்தாங்க.

செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் வந்த பின்பு நானும் அவர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றேன். மாநாடு முடிந்து விட்டது என்றும் தோன்றியது.

"அம்மா என்ன பிரச்சினை?"

"யாருக்கும் தெரியல்லடா, எல்லாரும் நாம கேட்டத போல சத்தம் ஒண்ட கேட்டாங்கலாம்" என்றார்.

"அட பாவிகளா என்ன விஷயம் என தெரியாமலே மாநாடா?" என நினைத்துக் கொண்டு நான் என் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டேன். என்ன நடந்தது என்று யோசிக்க தூக்கம் இடம் கொடுக்கவில்லை எனக்கு. எத்துனை மணிக்கு தூங்கினேன் எண்டு தெரியாது.

6.30 மணிக்கு எழும்பி மொபைல் எடுத்து பார்த்தேன். எழும்பும் போது உடல் சோம்பலாகத்தான் இருந்தது. அதுக்கு மேல தூங்க முடியாது. என் வீட்டு நிலைமை அப்படி. நேத்து அக்டிவ் பண்ணின சைலன்ட் மூட் அப்படியே இருந்தது. 25 மெசேஜ், 11 மிஸ்ட்டு கால். நமக்கு என்ன பில்கேட்ஸ்ட இருந்தா கால் வந்திருக்கப் போகுது? எல்லாம் நம்ம பசங்கதான். மெசேஜ் ரீட் பண்ண டைம் இருக்கல்ல. அப்போதான் என் மைண்ட்ல ஓடிச்சு. டுடே ஈவினிங் மேட்ச் இருக்கு எண்ட விஷயம். வெட்டிப் பசங்க காலைலயே ஆரம்பிச்சிடாங்க எண்டு மொபைல் தூக்கி சார்ஜ்ல போட்டுட்டு வெளிய வந்தேன்.

வீதியில் கிசு கிசுக்கும் சத்தம் கேட்டது. அது வரைக்கும் இரவு நடந்த விடயம் என் ஞாபகத்தில் இல்ல. "என்ன மறுபடியும் மாநாடா?" எண்டு அப்பா கிட்ட கிண்டலா கேட்டுட்டு சோபால இருந்தேன். அப்பா ஏதோ யோசனைல இருந்திருப்பார் போல பதிலே வரல.அப்படியே எழும்பி அவரும் கீழ போயிட்டாரு "அம்மா!!! அம்மா!!!!!" எந்த பதிலும் இல்ல. "ஒரு வேல இவங்களும் மாநாடு நடக்கும் இடத்தில் இருக்காங்களோ?" எண்டு நினச்சிட்டு வாஷ் ரூம் போயிட்டு வந்து காலை காபிக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தேன்.பெண்களுக்கே உரித்தான மாநாடு போடும் பழக்கம் என் அம்மாவுக்கு மட்டும் இல்லாமலா இருக்கும்.என் தம்பி இன்னும் அசந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தான். அவன் தூங்கினா என் வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க பிகோஸ் அவன் சின்ன பாப்பாவாம். நான் அவன் வயசில் அதிகமா தூங்கினப்போ உதை வாங்கின சம்பவங்கள் உண்டு.

என் வீட்டு வானொலி படித்துக் கொண்டிருந்தது. 6 .45 செய்தி சொல்லும் நேரம் எண்டு கொஞ்சம் கூட்டி வச்சிட்டு மேட்ச்க்குத் தேவையான பொருட்களை எடுப்பதற்கு என் ஸ்டோர் ரூமுக்கு சென்றேன்.வானொலி செய்தி என் காதுகளுக்குள் இடியாய் ஒலித்தது.

"நேற்று நள்ளிரவு இலங்கையின் தெற்கு பிரதேசத்தில் சிறிய அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையெனவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது....."

நடுங்கிய கைகள் என் மொபைலை தேட கால்கள் அதை நோக்கி ஓடியது...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

5 comments:

  1. nice da, keep it up

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே உங்கள் விமர்சனங்களுக்கும் கருத்துக்களும். என்னுடைய வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு நிச்சயம் தேவை...

    தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை வரவேற்கிறேன்

    ReplyDelete
  3. எளிமையாக அழகாக உள்ளது... உன் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. #Minhaj KM said...
    எளிமையாக அழகாக உள்ளது... உன் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்...#

    நன்றி தோழா உன் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும். தொடர்ந்தும் உன் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன்.

    ReplyDelete