
வர்ணங்களின் வடிவால் ஈரக்கப்படும்
கைக்குழந்தைப் போல,
வாழ்வின் வண்ணங்களில் ஒன்றான
காதலால் கவரப்பட்ட
இளம் குழந்தைகள் ஆயிரம்.
வெற்றி,தோல்வி இரண்டிலும் தான் உலகமே.
காதல் மட்டும் என்ன விதி விலக்கா?
எத்தனை தடை இந்தக் காதலில்?
எத்தனை நிலை இந்தக் காதலில்?
கடந்த நாட்களின் நினைவுகள்,
வரும் காலத்தின் கனவுகள்,
இவை உருவாக்கப் போகும் விளைவுகள்,
இது தான் காதலர் தினம்.
கண்களால் மட்டும்
ஜாடைக் கவிபாடியவர்கள் எல்லாம்,
தமக்குத் தாமே இட்டிருந்த
தயக்கச் சிறையை தகர்க்க,
காலம் இயற்றிய ஒரு கருணைத் தினம்.
ஓராண்டை ஒரு தலைக் காதலுடன்
நடமாடிய ஒரு கூட்டமே,
துனைக்கு கையில் ரோஜாவை
ஏந்திக் கொண்டு,
காதல் பிச்சைக்காய் காத்திருக்கும்
பதட்டனமான ஒரு தினம்.
கரம் பிடித்த காதலர்கள் எல்லாம்,
கவலைகள் மறந்து குதூகலமாய்
கொண்டாடி மகிழ,
காலம் கொடுத்த கா(த)வலர் தினம்.
மனமோடு மனம் உறவாடி,
மனமேடையில் கைகள் உறவாடி,
இணைந்திட்ட காதலர்களுக்கு,
இது ஒரு அழகிய சந்தோச தினம்.
வாழ்கையை நேசிக்க மறந்து,
காதலை மட்டும் சுவாசிக்கும்
சில காதல் பித்தர்களுக்கு,
இது தான் பிறந்த தினம்.
காதலால் இணைந்து பிரிந்து,
மீண்டும் இணைய துடிக்கும்,
அனுபவ காதலர்களுக்கு
இது ஒரு பரிதாப எதிர்பார்ப்பு தினம்.
சூழ் நிலையால் துடி துடிக்க,
படு கொலை செய்யப்பட்ட
காதல் கொண்ட இதயங்கள்,
கண்ணீரால் கரையும் ஒரு துக்க தினம்.
உடல்கள் தான் பிரிந்தது,
உணர்வுகள் அல்ல என்று
உயிர் வாழும் சில உறவுகளுக்கு,
இது ஒரு அவஸ்தயான வசந்த தினம்.
காதல் தந்த வலியால் வாழமுடியாமல்,
கல்லரைக்குள் இருந்து கவிவடிக்கும்
காதல் காவியங்களுக்கு, அவர்களின்
அனுபவ நினைவு தினம்.
காதல் என்ற பெயரில் ஏமாற்றம் வாங்கி
கண்ணீரில் கவி படிப்போருக்கு,
அவர்களின் நினைவுகளை,
காற்றும் சுமக்கும் ஒரு ஆறுதல் தினம்.
வெற்றியோ,தோல்வியோ காதலியுங்கள்.
காதலை மட்டுமல்ல கொஞ்சம் வாழ்வையும்,
என்ற செய்தியோடு கவிப்பிரியன்.
No comments:
Post a Comment