Friday, November 23, 2012

"அழாதே தாயே.."


"அழாதே தாயே.."
ஒரு உவமை தேடுகிறேன்
உன் கண்ணீர் வலி சொல்ல.
ஒன்று கூட கிடைக்கவில்லை
இந்த கவிப் பிரியனுக்கு.

கோடிக் கண்கள் அழுகிறது
உன் நிலை கண்டு.
குருதியும் உறைந்து கிடக்கிறது
உன் மண்ணின் துயர் கண்டு.

"உன் தேசம் அழிகிறது என்று அழுகிறாயோ?"
கண்ணீர் நிறுத்திக் கொள்.
கடைசி வரை நிலைக்கும் அது
உன் மனதில் எழுதிக் கொள்.

"வழியனுப்பி வைத்த மகன்
வரவில்லை என்று அழுகிறாயோ?"
துயர் துடைத்துக் கொள்,
பல இலட்சம் உயிர்கள்;
இன்று உன் மகனாய்,
நினைத்துக் கொள்.


உன் மகன் இரத்தம் படிந்த
பூமி இது.
உன் கண்ணின் ஈரம் கசிந்து
அதை கரைக்கக் கூடாது.

வரலாறு சொல்லப் போகும்
உன் வீர மகனின்
தியாகச் சான்று அது.

நீ அழுவதால் நானும் அழுகிறேன்.
உன்னுடன் இருக்க உயிர் துடிக்கிறேன்.
காரணம் நானும், உன் மகன் தான்...

"அழாதே தாயே.."
சுவன வாசலில் உன் மகன், என் சோதரன்
நமக்காய் காத்திருக்கிறான்.
"அழாதே..."


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கற்பனைகள் நிஜமாகின்றன உன் கவிதை மூலம், நண்பா தொடர்ந்தும் நீ எழுது கவிதைகள் ஏராளம். இந்த உலகம் அதன் வரலாற்றில் உன்னை பதிந்துகொள்ளட்டும்.

    ReplyDelete