Tuesday, April 12, 2011

உணரவில்லை உன் காதலை...



கல்லரைக்குள் நான் இருந்து,
என் காதலியின் கரம் பிடித்த,
கணவனுக்காய் நான் எழுதும்,
காலம் கடந்த கடைசி மடல் இது.

என் உணர்வுகளை கவியாக்கி,
வரைகிறேன் ஒரு வாழ்த்து மடல்,
உங்கள் வாழ்கை மலர வாழ்த்துச் சொல்லி.

உணரவில்லை உன் காதலை
என்று சொன்னவளே!!!!!
நலமா நீ???
நான் நலம் இக் கல்லரைக்குள்
இன்றும் உன் அழகிய நினைவுகளுடன்....

என்னவளின் கரம் தொட்டவனே
என்ன தவம் செய்தாய் நீ???
எதற்காக உனக்கிந்த வரம்???
அழகுக்கே சவால் விடும் அழகியை
மணக்கும் பாக்கியம்!!!

60 மாதமாய் என்னால் முடியாத ஒன்று
உன்னால் எப்படி???
வியக்கிறேன் சில விநாடிகள்....

உன்னவள் பற்றி நானறிந்த சில நிஜங்கள்
உங்கள் வாழ்கைக்காக...

பௌர்ணமி இரவில்;
அவளைத் தனிமையில் விடு,
அவள் தோழி நிலவோடு.
தனிமையில் இருக்க பிடிக்கும் அவளுக்கு.

பசிதாங்கமாட்டாள், பசிக்கவிடாதே;
என் காதலியை, மன்னித்துவிடு உன் மனைவியை.
பாவம் பதறிவிடுவாள்.
பசியிலும் நான் இப்போது சொன்ன வரியிலும்.

அநாதையான பூக்கள் பிடிக்கும் அவளுக்கு.
புரியவில்லையா? உதிர்ந்த பூக்கள்.
முடிந்தால் எடுத்துக் கொடு.
மலருக்கும் உனக்கும் மாறி மாறி முத்தம் கிடைக்கும்.

மனிதம் மரணிக்க காரணமான
பணம் பிடிக்காது அவளுக்கு.
அதன் பெருமைகள்,அருமைகள் பற்றி
அவளிடம் மூச்சும் விடாதே.

கனவுகள் பிடிக்கும் அவளுக்கு,
சற்று அதிக நேரம் தூங்க விடு.

பொய் சொல்வது பிடிக்காது அவளுக்கு,
அவளிடம் மட்டும் உண்மையைச் சொல்லி விடு.

மழையோடு நனைய மிகப் பிடிக்கும் அவளுக்கு,
அதில் குளிக்க அவளுக்கு அனுமதி கொடு.

ஆண்களின் ஆதிக்கம் பிடிக்காது அவளுக்கு,
அன்போடு நடந்து கொள் அவளிடம்.

வைரமுத்துவின் வரி பிடிக்கும்,
மழழையின் குரல் பிடிக்கும்,
நட்சத்திரக் குவியல் பிடிக்கும்,
நண்பனாய் என்னை மிகவும் பிடிக்கும்.

கருப்பு மேகம் பிடிக்காது,
சோகம் சுத்தமாய் பிடிக்காது,
நான் காதல் சொன்ன நாளில் இருந்து,
என்னைப் பிடிக்கவே பிடிக்காது அவளுக்கு.

நீரில்லாமல் மீனில்லை.
அவள் இல்லாமல் நான் இல்லை.

கும்மிடப் போனவனுக்கு, குறுக்கே வந்த தெய்வம் போன்று
சாவைத் தேடியவனுக்கு, சாவே தேடி வந்தது.

முடிந்த என் வாழ்கையில்,
முளைத்தது உங்கள் வாழ்கை.

என் காதலியின் காதலனே,
என்னவள் பத்திரம்.
கவனமாய் பார்த்துக் கொள்,
கண்ணியமாய் நடந்து கொள்.

இனிமையான அவளோடு,
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்கை.

என்னைப் பற்றி கவலை வேண்டாம்.
என் மௌனத்தின் சப்தம் கூட எட்டாது,
உங்கள் காதுகளுக்கு.

காற்றுக்கும் வழியில்லை,
என் உணர்வை உங்களிடம் சொல்ல.
அதனால் தான் இந்நக் கவிஞனின்
எழுத்தில்....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment