
அற்புத நீரோட்டம்,
மாலையின் மங்காத மஞ்சல்,
மங்கயே மயங்கும் அழகின் தோற்றம்,
மயங்கிய என் இரு விழிகள்.
இயற்கையின் வனப்புக்குள் நான்,
அவ்விடத்தை விட்டு அகலவே முடியவில்லை.
மாலைத் தென்றல் அள்ளி சொறிந்தது;
அந்த அற்றின் அமுத நீரை.
ஒரு கனம் கண் மூடி மறுகனம் திறக்க,
ஆற்றில் இருந்த நானோ!!!!
அபூதாபியில் என் அறையில்????
புரிந்து கொண்டேன்!!!
என் கண்கள் கட்டுண்டு கிடந்தது,
கனவுக்குள் என்று.
ஆம் என் கிராமத்தின்
மாலைக் காட்சிகள் அவை.
என் விடியலின் காலைக் காட்சிகளாய்,
தினமும் என் கனவுக்குள்.
விழிக்கவே பிடிக்கவில்லை,
தொடர்ந்து உறங்கவும் தெரியவில்லை....
சுகமான சுமைகளை சுமந்து கொண்டு,
சுகங்களை தொலைத்து விட்டு,
வந்திருக்கிறேன் வாழ்வின் சுவை தேடி.
வழிப்போக்கனுக்கு நிழல் தரும் மரமாய் நான்.
மரத்தை நம்பி வரும் வழிப்போக்கனாய் என்குடும்பம்.
பாசம், நேசம், காதல், அன்பு, நட்பு,
எல்லாம் காதால் கேட்டு,
கண்களால் பார்த்து,
வாயால் பேசிக் கழியும், பொழுது போக்காகிப்போனது.
பக்கத்தில் இருந்து உணர, பழகியவர் யாரும் இல்லை.
என் மண் வாசனைக்கே மதிப்பாகாது இவர்களின் திர்கம்.
என் மக்களின் இயல்புக்கு ஈடாகாது இந்த பணம்.
வந்து விடவா? என்று கேட்டால்,
அம்மா- "உடனே வா"- அன்பு.
அப்பா- "யோசித்து நடந்து கொள்"- அறிவு
மனைவி- "ஏன் அவிசரப்பரீங்க???"- தேவை
குழந்தை- "என்ன வாங்கி வருவீங்க அப்பா???"- எதிர்பார்ப்பு
நண்பன்- "அப்ப எதுக்குடா போனாய்???"- நகைப்பு
என் மனம்- "ஏன் யோசிக்கிறாய்???"- தவிப்பு
உயிரோட்டமான உணர்வுகள் கூட
உணரவில்லை என் வலியை.
உறவுகள் உணர்வது
எங்கனம்?????
கண்ட கனவினை சொல்வதற்கு கூட
தனிமையில் இடம் இல்லை.
என் முகம் காட்டும் கண்ணாடி கூட
பல வேளை அழுகிறது,
என் அவல நிலை பார்த்து.
பாலைவன மணல் சுழழுக்கு
ஈடு கொடுக்கும் என்
மனச் சுழல்.
அடிமை வாழ்கை;
ஒரு முறை வெளி நாடு என்று
உச்சரித்து விட்டால் மீளவே முடியாது போல்,
"இது ஒரு போதைதான்".
தனிமை தந்த பயம்,
தவறுக்காய் வருந்தும் நிமிடம்,
இவைகளில் தளரும் மனதில்
நம்பிக்கை தரும் ஆறுதலோடு
சுழள்கிறது என் வாழ்கைச் சக்கரம்.