
Virakesari.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 354 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வியாழக்கிழமை ஆரம்பமாகியது . முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 104.1 ஓவர்களில் 354 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 182 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ஐபின் 3 விக்கெட்டுகளையும், பிராடு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதை அடுத்து இங்கிலாந்து அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் பிரையர் சதம் அடித்தார். தனது 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதை அடுத்து பாகிஸ்தான் அணி தனது 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 15 ஓட்டங்களை எடுத்திருந்தது.
சல்மான் பட் 10 ஓட்டங்களுக்கும், அசார் அலி ஓட்டம் ஏதும் எடுக்காமலும், உமர் அமீன் 1 ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர்.
இங்கிலாந்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையான 617-ஐ எட்ட மேலும் 435 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் களமிறங்கியது இலக்கை எட்ட மேலும் 420 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது பாகிஸ்தான்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தடுமாறிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 29 ஓவர்களில் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான் அணி. இதை அடுத்து 354 ஓட்டங்கல் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment