Viarkesari.
இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய இன்றை நாள் ஆட்டமுடிவின் போது 11 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரா மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் முதல் இன்னிங்சிற்காக இரண்டாவது நாளான நேற்று தனது முதல் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவின் போது 35 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது. களத்தில் விரேந்த nஷவாக் 97 ஓட்டங்களுடனும், சச்சின் டெண்டுல்கர் 40 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
எனவே இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி வீரர்களான 109 ஓட்டங்களுடனும், nஷவாக் 109 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய லக்ஸ்மன் 56 ஓட்டங்களுடனும், ரெய்னா 62 ஓட்டங்களுடனும், அணி தலைவர் தோனி 15 ஓட்டங்களுடனும், மித்துன் 46 ஓட்டங்களுடனும், மிஸ்ரா 40 ஓட்டங்களுடனும், சர்மா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
எனவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்சில் 11 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
பந்து வீச்சில் ரன்திவ் 4 விக்கெட்டுகளையும், மாலிங்க 3 விக்கெட்டுகளையும், மெண்டிஸ் 2 விக்கெட்டுகளையும் கைபற்றினர்.
இந்நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சிற்காக ஆட்டத்தை தொடங்கியது.
இதில் ஆட்டநிறைவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பரனவிதான 16 ஓட்டங்களுடனும், டில்சான் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க சங்ககார 12 ஓட்டங்களுடனும், ரன்திவ் ஓட்டம் எதுவும் பெறாது களத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment