Friday, August 13, 2010

சாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு


Virakesari.

சாம்பியன் லீக் இருபது-20 தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகள், நேற்று அறிவிக்கப்பட்டன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது சாம்பியன் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப். 10 ஆம் திகதி முதல் 26 வரை நடைபெற உள்ளது. இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சபைகள் இணைந்து இத்தொடரை நடத்தி வருகின்றன. உள்ளூர் இருபது-20 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற கழக அணிகள் இதில் பங்கேற்கின்றன.

இதன் பரிசுத் தொகை சுமார் 200 கோடி ரூபாய். இந்த முறை மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தரப்பில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளும், நேற்று 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டன.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இங்கிலாந்து வீரர் பிளின்டொப் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டார்.

ஐ.பி.எல் தொடரில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் இடம் பெற்றிருந்த கெமரூன் ஒயிட், விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணியில் உள்ளார். ஆனால் சாம்பியன் லீக் விதிமுறைப் படி, ரூ. 1 கோடியை விக்டோரியா அணிக்கு நஷ்ட ஈடாக வழங்கிய, பெங்களுர் அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துக் கொண்டது.

இதே போல, வாரியஸ் அணியில் இடம் பெற்ற காலிஸ், சென்டிரல் ஸ்டாக்ஸ் அணியில் உள்ள ரோஸ் டெய்லர் ஆகியோரையும் பெங்களுர் அணி தங்கள் அணியில் வைத்துக் கொண்டது.

சாம்பியன் இருபது-20 தொடரில் பங்கேற்க உள்ள அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா): தோனி (தலைவர்), ஹெய்டன், பத்ரிநாத், முரளி விஜய், ரெய்னா, அஷ்வின், ஜகாதி, அனிருத் ஸ்ரீகாந்த், பாலாஜி, முரளிதரன், மைக்கல் ஹசி, பொலிஞ்சர், துஷாரா, அல்பி மார்கல் மற்றும் ஜோகிந்தர் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் (இந்தியா): சச்சின் (தலைவர்), தவான், ராயுடு, சவுரப் திவாரி, ஹர்பஜன், ஜாகிர், சதீஷ், அலி முர்டசா, குல்கர்னி, டாரே, போலார்டு, பிராவோ, டுமினி, மலிங்க மற்றும் மெக்லாரன்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் (இந்தியா): அனில் கும்ளே (தலைவர்), டிராவிட், உத்தப்பா, மனீஷ் பாண்டே, பிரவீண் குமார், வினய் குமார், விராட் கோஹ்லி, ஒயிட், ரோஸ் டெய்லர், ஸ்டைன், காலிஸ், டு பிரீஸ், அகில், மிதுன் மற்றும் நயன் டோஷி.

விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,): டேவிட் ஹசி (தலைவர்), கார்டர்ஸ், பின்ச், ஹார்வுட், ஹாஸ்டிங்ஸ், பிராட் ஹாட்ஜ், மெக்டொனால்டு, மெக்கெய்ன், மெக்கேய், மேக்ஸ்வெல், நானஸ், பட்டிசன், குய்னே, சிடில் மற்றும் மாத்யூ வேட்.

சதர்ன் ரெட்பேக்ஸ் (ஆஸி.,): மைக்கெல் கிளிங்கர் (தலைவர்), பெய்லி, டேனியல் ஹாரிஸ், கிரஹாம் மானோ, கிறிஸ்டியன், புட்லேண்ட், பீட்டர் ஜியார்ஜ், பெர்குசன், ஹேபர்பீல்டு, லூட் மேன், டெய்ட், கூப்பர், கிறிஸ் டூவல், போர்கஸ் மற்றும் ஆரோன் ஓ பிரைன்.

வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா): டேவி ஜேக்கப்ஸ் (தலைவர்), பிரின்ஸ், இங்ராம், பவுச்சர், போத்தா, போயே, கிரைக் திசன், திரான், நிடினி, சோட்சோபே, ஜஸ்டின் கிரஸ்க், கார்னட் கிரகர், ஜேக்கப்ஸ், லியால் மேயர் மற்றும் ஜான் ஸ்மட்ஸ்.

ஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா): அல்விரோ பீட்டர்சன் (தலைவர்), தமி சோல்கிலி, அலெக்சாண்டர், ஷேன் பர்கர், ரிச்சர்ட் கேமரான், கோட்சி, கிளிப் டெகான், ஜேன்டர், பிரைலிங்க், மெக்கன்சி, ஈத்தன், பாங்கிசோ, ஜீன் சைம்ஸ், ஜோனதான் மற்றும் ஜார்ஸ்வெல்டு.

சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து): ஜேமி ஹவ் (தலைவர்), மில்னே, கிரிக்ஸ், பிராட் பேட்டன், டயமன்டி, பிரேஸ்வெல், ஜியார்ஜ் ஒர்கர், ஓரம், பர்னட், சின்கிளைர், மைக்கேல் மேசன், மெக்கிளேனகன், பீட்டர் இங்ராம், ரான்ஸ் மற்றும் வெஸ்டன்.

கயானா (வெஸ்ட் இண்டீஸ்): சர்வான் (தலைவர்), கிராண்டன், லெனாக்ஸ், டவ்லின், சாட்டர்கூன், டியோனரைன், ஜோனதான், டெர்வின் கிறிஸ்டியன், பார்ன்வெல், இசான் கிராண்டன், தேவேந்திரா, புடாடின், பால் வின்ட்ஸ், ஸ்டீபன் ஜேக்கப்ஸ் மற்றும் ரிச்சர்ட் ராம்தின்.

வயம்ப லெவன்ஸ் (இலங்கை): ஜெகன் முபாரக் (தலைவர்), உதாவட்டே, ஜயவர்தன, குலதுங்க, லொக்குராச்சி, ஜனித் பெரேரா, ஹெராத், வெலகெதர, மெண்டிஸ், மப்ரூப், திசரா பெரேரா, ஹனுகும்பர, கருணநாயகே, உதானா மற்றும் சொய்சா. ,


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment