சிறகடித்துப் பறந்தன சின்னச் சிட்டுக்கள்
மனதில் மகிழ்வூட்டின அவைகளின் மழலைச் சிரிப்புகள்
அவர்கள் வட்டமிட்டு என்னைச் சுற்ற
துக்கம் தூக்கம் மறந்து இனைந்தேன் மழலையாக அவர்களோடு
மானிடத்தின் பூக்கள் இவர்கள்- ஆனால்
ஆதரவற்ற அன்பான அனாதைகள்
தெய்வங்களின் மறு வடிவம் இவர்கள்- ஆனால்
ஒதுக்கப்பட்ட அழகான ஓவியங்கள்
ஓய்வில்லாக் குறும்பால் என் உள்ளம் கவர்ந்தனர்
ஒப்பற்ற சிரிப்பால் என்னோடினைந்தனர்.....
கண்கானிப்பாளர் என் கவனம் கலைக்க
நான் அவரிடம் வந்த விடயத்தை உரைக்க
வாழ்த்தி வழி நடத்தினார் பொருப்பாளர் அரைக்கு
பெரியதோர் நன்றி சொல்லி ஒப்படைத்தேன் என் பொதிகளை
மறுமொழியில் திரும்பிப்பெற்றேன் அந்நன்றிகளை
விடயத்தை சொல்லி அனுமதி பெற்றேன்
இனிதே தொடங்கியது என் காதலியின் கனவு
ஆம் அவள் சொன்ன வார்த்தையில் மகிழ்ந்தது
ஒரு அனாதை இல்லம் அவளின் நினைவுகளோடு
என் கண்ணில் நீர் வடிய மனதில் அவள் முகம் உதிக்க
இனிதே நடக்கிறது அவளின் இறப்பு நாள் விஷேசம்....
குனிந்து சாக்லேட் கொடுத்த என்னை அருகில் அழைத்து
வருடியது என் கண்ணீர் துடைக்க அந்த குழந்தையின் கைகள்
அமைதியாய் அவளின் தலை தடவி எழுந்து நின்றேன்
மீண்டும் கண்ணீர் சொறியும் என் கண்களோடு...
நான் காதல் கொண்ட நீ இறக்க
உணர்வுகள் ஊமையாகி என் மனம் இறக்க
துனைகள் அற்ற என் வாழ்வில் தனித்து விட்டேன்
உன் நினைவு எனும் தோழியோடு
திடீர் என்று மதிவிளிக்க
என் வாயில் வார்த்தை பிறக்க
ஓடினேன் உரியவரிடம்
என் தனிமை போக்க உதவும்படி...
என் நிலை உணர்ந்து சாடையால்
அளித்தார் அனுமதி
விழி துடைத்த பிஞ்சுக் கரங்களை எட்டிப்பிடித்து
உன் நினைவுப்பரிசாய் எண்ணிக் கொண்டு
அனைவரிடமும் விடை பெற்றேன்
என் சின்னவளோடு அங்கிருந்து
இனி வாழ்கை இவளுக்காக என்று
No comments:
Post a Comment