கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராம பௌத்த விகாரையையும் உடனடியாக புனரமைத்து தருமாறு கேட்டு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பியிட்டிய சுமணரத்தின தேரோ இன்று (5.8.2010 வியாழக்கிழமை) காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரத்தை ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை 6 மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இவரது உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளை புனரமைத்து தருமாறு அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டும் கோரிக்கைள் விடுத்தும் இன்னும் அரசாங்கம் அவற்றை செய்யாததால் நான் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தெரிவித்தார்.
இவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment