Virakesari.
இந்தியாவின் 64ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில் இன்று காலை ஏழு மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார்.
விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்திருந்தது.
சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில் இன்று உச்சகட்ட பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியாவின் சுதந்திர தின விழா நடைபெற்றதாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment