vurakesari.
இந்திய, இலங்கை அணிகளிடையே இடம்பெற்ற போட்டியில் சேவாக் சதம் அடிப்பதைத் தடுக்க, இலங்கை அணித் தலைவர் சங்ககாராவின் அறிவுறுத்தலின்படி ரந்திவ் 'நோ-போல்' வீசியுள்ளதாக பலவாறான குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இதனையடுத்து இப்பிரச்சினையில் இந்தியாவிடம், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில்ஆறு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று, இந்த சர்ச்சை குறித்து அணியின் முகாமையாளர் அனுர தென்னக்கோன் தலைமையில் உடனடி விசாரணை மேற்கொண்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment