Sunday, August 08, 2010

டெஸ்ட் அணி தரவரிசை: இலங்கை 3 ஆம் இடம்


Virakesari.
டெஸ்ட் கிரிக்கெட் அணி தரவரிசையில் இலங்கை அணி 115 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணிக்கெதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் ஊடாக இந்திய அணி தமது முதலாவது இடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டெஸ்ட் அணி தரவரிசையில் 119 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் ,113 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா நான்காம் இடத்திலும் ,111 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஐந்தாம் இடங்திலும் உள்ளன.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment