Virakesari.
சட்டங்களை மதிக்காதவர்கள், வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் தான் இருக்கின்றனர் என அண்மைய ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.
அவர்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்ட போதே இது விவரம் வெளிவந்துள்ளது.
சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழும் 3 லட்சம் அமெரிக்கர் அரசின் சட்ட திட்டங்களை மதிப்பதில்லை எனத் தெரிய வந்துள்ளது. அவர்கள் அரசு கொண்டுவந்துள்ள மிக முக்கிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிறப்பு குறித்த தகவலை அவர்கள் பதிவு செய்வதில்லை. வாகனம் ஓட்டுவதற்கான அத்தாட்சி பெறுவதில்லை. நீதிமன்ற நடைமுறைகளை மதித்து நடப்பதில்லை. சிக்கினால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து தப்பி விடுகின்றனர்.
இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவர்கள் வன்முறையில் நாட்டம் உள்ளவர்களாக இருக்கின்றனர். கடந்த மே மாதத்தில் ஆர்கன் சாஸ் பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஒரியோவைச் சேர்ந்த உயர் அந்தஸ்து குடிமகனும் அவரது மகனும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுபோன்று அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment